CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, September 6, 2011

வினவு/ஐ.டி/மங்காத்தா


      
'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பது போல சிலருக்கு கணினித்துறையில் இருப்பவர்களை கிண்டிப்பார்ப்பதில் அப்படி ஒரு சுகம். அதிலும் வினவு சமீபத்தில் எழுதிய பதிவில் சட்டி ஓட்டை ஆகும் வரை அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கிண்டி இருக்கிறார்கள். சமூகம் சார்ந்த விசயங்களில் கணினித்துறையினருக்கு எந்தப்புரிதலும், அறிதலும் இல்லையாம். மங்காத்தா பற்றி திரைப்பட ரசிகனை விட பல மைல் நீளத்திற்கு சமீபத்தில் அவர்கள் எழுதிய பதிவில் மீண்டும் அந்த மேட்டரை மீட்டருக்கு மேலே/உள்ளே சூடு கிளப்பி உள்ளனர்.

இந்தப்பதிவை அவர்கள் எழுதியது கல்வெட்டிலோ, ஓலைச்சுவடியிலோ, கரும்பலகையிலோ அல்ல. கணினியில்தான் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறோம் யுவர் ஆனர். சாப்ட்வேர் ஆட்கள் மீது அம்புட்டு காண்டு இருந்தால் என்ன வெளக்கெண்ணைக்கு அவர்கள் கண்டுபிடித்த  சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டும்? இதைப்பார்க்கையில் விவேக் ஒரு படத்தில் சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது. சாப்பாட்டு இலையை ஒருவர் எடுத்துக்கொண்டு போவார். அவரைப்பார்த்து விவேக் "ஏம்பா, சாப்புட்ட இலைய எங்க கொண்டு போறீங்க?". அதற்கு அந்த இலைதூக்கி "ஆட்டுக்கு போடப்போறோம்" என்று சொல்வார். விவேக் "அடப்பாவீங்களா..ஆட்டை கொன்னு பிரியாணியை இலைல போட்டு திம்பீங்க. அப்புறம் அதே இலைய கொண்டு போயி ஆட்டுக்கே போடுவீங்க. உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா" என்பார்.
 
ஐ.டி. நண்பர்கள் எதிரிகள் மீது இருக்கும் கோபத்தை காட்ட அவர்கள் கண்டுபிடித்த மென்பொருட்கள் உதவியுடன் செய்யாமல் கல்வெட்டு அல்லது ஓலைச்சுவடி வாயிலாக காட்டினால் மகிழ்வோம். "ஐ.டி. பசங்களா...சனிக்கிழமை ஆனா பாரு. அளவுக்கு மீறுன பீரு. எல்லாம் அளவுக்கு மீறுன சம்பளம் செய்ற வேலை" என்று பிந்தைய தலைமுறை பிதாமகர்களின் அங்கலாய்ப்பு. தினக்கூலி செய்றவன் சம்பளத்த டாஸ்மாக்ல குடுத்துட்டு செக்சியா ரோட்ல படுத்து உருள்றான். ராயல் க்ரூப்ல பலபேரு   ஸ்டார் ஓட்டல்ல ஊத்திக்கிட்டு கார்ல போயி கவுந்துக்கறான். எவன்தான் குடிக்கல? என்னமோ நீங்கல்லாம் முதல்ல வாங்குன சம்பளத்த கடைசி வரைக்கும் வாங்குன மாதிரி சிலுப்பு காட்டறீங்களே தலைவா. சாப்ட்வேர் ஆளுங்க மேல அவ்வளோ வெறுப்பு இருந்தா "இனிமே நாங்களோ, அடுத்து வர்ற எங்க தலைமுறையோ கணினி உதவி இல்லாமலே எல்லாத்தையும் செஞ்சிக்குவோம்"னு பகிரங்கமா அறிவிக்க தயாரா?

                                                                 
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ட்ரைன்/சினிமா டிக்கட் ரிசர்வ் பண்ண, கரண்ட்/போன் பில் கட்ட, அப்ளிகேஷன் வாங்க, பிறப்பு/இறப்பு சான்றிதழ் வாங்க இப்பிடி எல்லாத்துக்கும் சீனா வால் மாதிரி க்யூவுல நின்னதை கொஞ்சம் யோசிச்சி பாருங்க 'தல'. அவசரத்துக்கு பாத்ரூம் வந்தாக்கூட நகர முடியாது.அப்ப இடுப்ப வளச்சி நமிதா மாதிரி டான்ஸ் ஆடுவீங்களே..அதெல்லாம் மறந்து போச்சா? இப்ப நோகாம வீட்ல இருந்துகிட்டே ஆன்லைன்ல எல்லாத்தையும் செஞ்சி நோம்பி கும்புட வச்சது  சாப்ட்வேர் பசங்கதான். அது புரிஞ்சா சரி(பாவம் அந்த பிள்ளையார் வாகனம்(மவுஸ்) உங்க கிட்ட அந்த பாடு படுது).

ஊழல் எதிர்ப்புக்கு மெழுகுவர்த்தி ஏந்துதல், அது முடிந்தவுடன் மங்காத்தாவுக்கு படையெடுத்தல் போன்றவை எல்லாம் சாப்ட்வேர் துறையினரின் 'சென்சேஷன்' என்பது இவர்களின் அரிய கண்டுபிடிப்பு. சும்மா இருந்தா 'ஏண்டா உங்களுக்கு சமூக பொறுப்பே இல்லையா'ன்னு கெளப்பி விடுறது. 'சரி பெரியவங்க சொன்னதை கேப்போம்'னு போராட்டத்துல போயி நின்னா 'இன்னும் எத்தனை நாள் வருவீங்க. சும்மா ஒருநாள் சீன் மட்டும் போடுறது'ன்னு எகத்தாளம் பண்றது. என்னடா இது வம்பா போச்சின்னு மங்காத்தா போனா 'அய்யய்யோ..இங்க பாருங்க HR எல்லாம் சேந்து சாப்ட்வேர் பசங்கள கும்பல் கும்பலா மங்காத்தாவுக்கு இஸ்துக்குனு போறாங்க"ன்னு கூரைல ஏறி கூவுறது. இப்ப என்னதாய்யா ஒங்க பிரச்சன?  

சாப்ட்வேர்ல இருக்குற அம்புட்டு பயலும் உத்தமனுங்கன்னு எவனும் சொல்லல. எல்லா துறைலயும் மன்மத ராசாக்கள், பணம் சுருட்டிகள், ஜாதி வெறியர்கள் இருக்காங்கன்றதுதான உண்மை. ஆனா இந்த துறைல அது ரொம்ப கம்மி. அதை நீங்க எப்படி திரிச்சி எழுதுனாலும் மறைக்க முடியாது சாரே. மத்தவங்க மாதிரி கோயிலுக்கு ட்யூப்லைட் வாங்கி குடுத்தாக்கூட 'உபயம்: உத்தம ராசா' அப்டின்னு விளம்பரம் செய்றது, போஸ்டர் அடிச்சி செவுத்த நாற வக்கிறது எல்லாம் ஐ.டி. பீல்டுல ரொம்ப ரொம்ப கொறச்சல். சாப்ட்வேர் கூட்டத்துல இருக்குறவங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம் எல்லாம் நெறைய ஸ்டாக் இருக்கத்தான் செய்யுது. அவங்களும் சமூகத்துக்கு முடிஞ்சத செஞ்சிட்டுதான் இருக்காங்க. வேணும்னா கீழ இருக்குற சாம்பிளை பாருங்க. தல என்ன சொல்றார்னு காதை சாணை பிடிச்சிட்டு கேளுங்க:
எனவே.. பார்ப்பனீயம், பாசிசம், பேட் ஐ.டி. க்ரூப், பகுத்தறிவுன்னு உங்க ஹோட்டலோட ஸ்பெஷல்(!?) மசாலா உணவுகளை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.  வாசனை திருவான்மியூர் டைடல் பார்க் வரை கும்முன்னு தூக்க வாழ்த்துகள். 

அப்புறம் பாஸ்... மங்காத்தா பாத்தோம்னு சொன்னீங்களே..அது எப்பிடி தியேட்டருக்கே போயி க்யூல நின்னு டிக்கட் வாங்குனீங்களா இல்ல வூட்ல குந்திக்கினே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணீங்களா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ...!!

................................................
My other site:
...............................................54 comments:

Unknown said...

மாப்ள நச் ஹிஹி!

சென்னை பித்தன் said...

சூப்பர் காரச் சட்னி!

கவி அழகன் said...

காரசாரமா இருக்கு

தமிழ்வாசி பிரகாஷ் said...

சொல்லிய கருத்துகள் செம....

Katz said...

வினவு ஒரு குறை கூறும் மன்றம். உலகத்திலேயே நல்லவங்க நாலு பேர் தான் இருக்காங்க. அது வினவுல எழுதுற நாலு பேர் தான்.

ஆமினா said...

//சாப்ட்வேர் ஆட்கள் மீது அம்புட்டு காண்டு இருந்தால் என்ன வெளக்கெண்ணைக்கு அவர்கள் கண்டுபிடித்த சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டும்? ///

சரியான பதிலடி.......

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
மாப்ள நச் ஹிஹி!//

வாங்க மாம்ஸ்!!

! சிவகுமார் ! said...

//சென்னை பித்தன் said...
சூப்பர் காரச் சட்னி//

பதிவர் சந்திப்பிற்கு வந்து இளைஞர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்!

! சிவகுமார் ! said...

//கவி அழகன் said...
காரசாரமா இருக்கு//

நன்றி கவி அழகன்!

! சிவகுமார் ! said...

//Katz said...
வினவு ஒரு குறை கூறும் மன்றம். உலகத்திலேயே நல்லவங்க நாலு பேர் தான் இருக்காங்க. அது வினவுல எழுதுற நாலு பேர் தான்//

வினவு மீது முழுமையான எதிர்ப்புத்தன்மை என்னிடம் இல்லை. ஆனால் ஐ.டி. போன்ற விஷயங்களை எழுதுகையில் முழுமை இல்லை. நேரடி விவாதம் செய்யவும் தயார்னு சவுண்டு விட்டும் பயன் இல்லை. பாப்போம் எப்ப வர்றாங்கன்னு..

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி

நன்றி பிரகாஷ். சென்னையில் தங்களை சந்திக்காதது வருத்தமே. போனில் பேசியதில் மகிழ்ச்சி.

! சிவகுமார் ! said...

@ ஆமினா

நன்றி ஆமினா. ரம்ஜான் பிரியாணி தராம எஸ்கேப் ஆயிட்டீங்க..அட்லீஸ்ட் பணத்தை மணி ஆர்டர் செஞ்சிருந்தாலாவது..மவுண்ட் ரோட் புகாரி ஹோட்டல்ல சாப்புட்டு இருப்பேன்..

MANO நாஞ்சில் மனோ said...

சாப்ட்வேர்ல இருக்குற அம்புட்டு பயலும் உத்தமனுங்கன்னு எவனும் சொல்லல. எல்லா துறைலயும் மன்மத ராசாக்கள், பணம் சுருட்டிகள், ஜாதி வெறியர்கள் இருக்காங்கன்றதுதான உண்மை. //

சரியான சாட்டையடி சுளீர்னு....

MANO நாஞ்சில் மனோ said...

சிவகுமார் ! said...
@ ஆமினா

நன்றி ஆமினா. ரம்ஜான் பிரியாணி தராம எஸ்கேப் ஆயிட்டீங்க..அட்லீஸ்ட் பணத்தை மணி ஆர்டர் செஞ்சிருந்தாலாவது..மவுண்ட் ரோட் புகாரி ஹோட்டல்ல சாப்புட்டு இருப்பேன்..//

பயபுள்ள திங்குறதிலையே குறியா இருக்கு பாரு ம்ஹும்...

செங்கோவி said...

என்னய்யா இது..நல்ல புள்ள இவரே காண்டாயிட்டாரு...

சக்தி கல்வி மையம் said...

கடைசியா கேட்டீங்கப் பாரு ஒரு கேள்வி?

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

மனித புத்திரன் said...

ஒ நீயும் ஐ டி *ருப்பா?ஊருல வீட்டு வாடகை எகுருனதுக்கு யாரு ராசா காரணம்?ரியல் எஸ்டேட் பொழக்குரதே ஐ டி ஆளுங்கலால்தான்!!கேட்ட விலைக்கு காசு கொடுப்பதால் மத்த மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் தெரியுமா?உங்களுக்கேங்க தெரிய போகுது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர் சிவா

பல்பு பலவேசம் said...

இந்த ஐ டி காரனுங்க இல்லைன்னா நாடு இன்னும் நல்லா இருக்கும்!!விலைவாசி எகுருனதுக்கு காரணமே இவுங்கதான்!

சதீஷ் மாஸ் said...

நீங்க இவ்ளோ சூடாயி நா பார்த்தது இல்லை.... ஒரு சிறு எழுத்து பிழை கூட இல்லாமல் நீங்க எழுதியிருப்பது ஆச்சரியமாக உள்ளது (டவுட்)....

Philosophy Prabhakaran said...

// சட்டி ஓட்டை ஆகும் வரை //

ஸ்பெல்லிங் மிஸ்டேக்...???

Philosophy Prabhakaran said...

ஐடி மக்கள் அளவுக்கு மீறி சம்பாதிக்கிறார்கள் என்பது நிறைய பேரின் வயிற்றெரிச்சல் / ஆதங்கம்... அதாவது நாம் மட்டும் ஏதோ சும்மா உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்குகிறோம் என்பது அவர்களின் நினைப்பு... கூலித்தொழிலாளி உடலளவில் உழைக்கிறான் என்றால் நாம் மூளையை பயன்படுத்தி உழைக்கிறோம்... அவ்வளவுதான் வித்தியாசம்...

muthukumaran said...

வெட்டி பசங்க அவனுங்க தான். இவனுங்க இப்ப போய் நோகாம பணம் எடுக்கரானுன்களே ATM, Netbanking எல்லாமே சாப்ட்வேர் பண்றது தான் அப்படிங்கறத வசதியா மறந்துடுவானுங்க. இவனுங்க வெப்சைட் ஐயும் சப்போர்ட் செய்றான் பாருங்க அந்த சாப்ட்வேர் எஞ்சிநியர் அவன அடிச்சா எல்லாம் சரியா போயிடும். மூன்று வருடங்களுக்கு முன்பே நான் இதைப்பற்றி நான் எழுதிய பதிவு http://devamuthukumaran.blogspot.com/2008/07/blog-post_23.html

Philosophy Prabhakaran said...

@ மனித புத்திரன்
பின்னூட்டங்களை தற்காலிகமாக நான்தான் வெளியிடுகிறேன்... உங்களது பின்னூட்டத்தை வெளியிடுவதா வேண்டாமா என்று சிவா தான் முடிவு செய்யவேண்டும்... அதனால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

Philosophy Prabhakaran said...

அப்புறம், நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சனைன்னா யாரும் சினிமா பார்க்கக் கூடாது... யாரும் சந்தோஷமா இருக்கக் கூடாது... எல்லோரும் கையில அறிவாளையும், சுத்தியலையும் தூக்கிக்கொண்டு அலையனும்ன்னு சொல்வார்கள் போல...

Philosophy Prabhakaran said...

@ முத்து குமரன்
இப்போது தான் உங்கள் பதிவையும் படித்தேன்... சேம் ஃபீலிங்...

muthukumaran said...

நன்றி பிரபா.

இதுக்கு பேரு பொறாமை அப்படினா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன்னா இவங்க தான் நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷர்கள். அதே போல நாம வெளிநாட்டுல இருந்துட்டோம்,. அவ்ளோ தான். வாயவே திறக்கக் கூடாது. என்ன நாம வெளிநாட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நமக்கு தேச பக்தி எல்லாம் இருக்காது. ஜடம்.

நிரூபன் said...

வணக்கம் சகோ,
ஐடி பற்றிப் புரிந்துணர்வற்றோருக்குப் புரிந்துணர்வினை வர வைக்கும்,
சாப்ட்வேர் பற்றிய தெளிவற்றோருக்கு நல்லதோர் தெளிவினை உருவாக்கும் பதிவு.

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
சாப்ட்வேர்ல இருக்குற அம்புட்டு பயலும் உத்தமனுங்கன்னு எவனும் சொல்லல. எல்லா துறைலயும் மன்மத ராசாக்கள், பணம் சுருட்டிகள், ஜாதி வெறியர்கள் இருக்காங்கன்றதுதான உண்மை. //

சரியான சாட்டையடி சுளீர்னு...//

தலைவா, அடுத்த மாசம் உங்க நாட்டுக்கு வந்து உங்கள சாட்டையால அடிக்கப்போறேன். அப்ப சுளீர்னு சத்தம் வருதான்னு பாக்கறேன். யாரு இந்த சவுண்டை கண்டுபுடிச்சா..சுளீர், பகீர், திடீர்.... அவனை பாத்தே தீரனும்.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
என்னய்யா இது..நல்ல புள்ள இவரே காண்டாயிட்டாரு..//

பல நாள் காண்டு. அதான் டேக் ஆப் ஆயிட்டேன்.

! சிவகுமார் ! said...

//!* வேடந்தாங்கல் - கருன் *!said...
கடைசியா கேட்டீங்கப் பாரு ஒரு கேள்வி?.//

என்னங்க பாதிலையா நிறுத்திடீங்க.

! சிவகுமார் ! said...

//Rathnavel said...
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.//

நன்றி ரத்னவேல் அய்யா.

! சிவகுமார் ! said...

//மனித புத்திரன் said...
ஒ நீயும் ஐ டி *ருப்பா?ஊருல வீட்டு வாடகை எகுருனதுக்கு யாரு ராசா காரணம்?ரியல் எஸ்டேட் பொழக்குரதே ஐ டி ஆளுங்கலால்தான்!!கேட்ட விலைக்கு காசு கொடுப்பதால் மத்த மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் தெரியுமா?உங்களுக்கேங்க தெரிய போகுது.//

ஐ.டி.க்கு சப்போர்ட் பண்ணா ஐ.டி.க்ரூப்பு.. தன் ரத்த சம்மந்த உறவுகளுக்கு சப்போர்ட் பண்ணா பிளாட் க்ரூப்புன்றது உங்க கண்டுபிடிப்பு. ரைட்டு. அப்படியே இருந்தாலும் என்ன தப்பு. பஞ்சு மிட்டாய் விக்கிறவங்கள இருந்து பன்னாட்டு பாப்கார்ன் விக்கிறவங்க வரை க்ரூப்பா சங்கம் வைக்கலாம். ஆனா நாங்க கூடுனா மட்டும் தப்பா? வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட்.. ஸ்ஸ்..அப்பா. இதெல்லாம் பழைய பஞ்ச் டயலாக் நண்பா. நாந்தான் தெளிவா எழுதி இருக்கனே..ஐ.டி.ல இருக்குற எல்லாருமே உத்தமனுங்க இல்லன்னு. மறுக்கா படிங்க. ஆட்டோக்காரன் கேட்ட விலைக்கு காசு குடுப்பது ஐ.டி.ஆளுங்க வந்த பின்னாடிதானா? அதுக்கு முன்ன எல்லாம் ஆட்டோக்காரங்க கரெக்டா மீட்டர் போட்டா ஓட்டுனாங்க. இல்ல மத்த எல்லாரும் நியாயம் பேசி போராட்டம் பண்ணீங்களா?

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சூப்பர் சிவா//

நன்றி ரமேஷ்!!

! சிவகுமார் ! said...

//விடுதலை கரடி said...
இந்த ஐ டி காரனுங்க இல்லைன்னா நாடு இன்னும் நல்லா இருக்கும்!!விலைவாசி எகுருனதுக்கு காரணமே இவுங்கதான்//

நண்பரே எனது இந்தப்பதிவு வினவின் பதிவிற்கான எனது தனிப்பட்ட பதில் மட்டுமே ஆகும். ஐ.டி.யினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுத்தல் என்பது மடத்தனம் என்பதை நன்றாக அறிவேன். அந்தத்துறையில் இருப்பவர்கள் எல்லாரும் யோக்கியர்கள் என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. அதை தெளிவாக உணர்ந்து கொள்ளாதது உங்கள் தவறு.

! சிவகுமார் ! said...

//சதீஷ் மாஸ் said...
நீங்க இவ்ளோ சூடாயி நா பார்த்தது இல்லை.... ஒரு சிறு எழுத்து பிழை கூட இல்லாமல் நீங்க எழுதியிருப்பது ஆச்சரியமாக உள்ளது (டவுட்).//

இந்த கலவரத்துலயும் எழுத்துப்பிழையை நோட் பண்ணி டவுட் கேக்கற நண்பனே..உன்கிட்ட உஷாரா இருக்கணும்!!

! சிவகுமார் ! said...

/Philosophy Prabhakaran said...
// சட்டி ஓட்டை ஆகும் வரை //


ஸ்பெல்லிங் மிஸ்டேக்...??//

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது. நான் 100% வெஜ். தெரிஞ்சுமா...

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
ஐடி மக்கள் அளவுக்கு மீறி சம்பாதிக்கிறார்கள் என்பது நிறைய பேரின் வயிற்றெரிச்சல் / ஆதங்கம்... அதாவது நாம் மட்டும் ஏதோ சும்மா உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்குகிறோம் என்பது அவர்களின் நினைப்பு... கூலித்தொழிலாளி உடலளவில் உழைக்கிறான் என்றால் நாம் மூளையை பயன்படுத்தி உழைக்கிறோம்... அவ்வளவுதான் வித்தியாசம்.//

சும்மா உக்காந்து வேலை பாக்குறவனுக்கு சம்பளம் குடுக்க சாப்ட்வேர் முதலாளிங்க என்ன இளிச்சவாயங்களா? அது சிலருக்கு புரியல. பேக்குல அங்கங்க பொறிஞ்சி போயி கெடக்கு. இதுல கிண்டல் வேற பண்றாங்க.!!

! சிவகுமார் ! said...

//
முத்து குமரன் said...
வெட்டி பசங்க அவனுங்க தான். இவனுங்க இப்ப போய் நோகாம பணம் எடுக்கரானுன்களே ATM, Netbanking எல்லாமே சாப்ட்வேர் பண்றது தான் அப்படிங்கறத வசதியா மறந்துடுவானுங்க. இவனுங்க வெப்சைட் ஐயும் சப்போர்ட் செய்றான் பாருங்க அந்த சாப்ட்வேர் எஞ்சிநியர் அவன அடிச்சா எல்லாம் சரியா போயிடும். மூன்று வருடங்களுக்கு முன்பே நான் இதைப்பற்றி நான் எழுதிய பதிவு http://devamuthukumaran.blogspot.com/2008/07/blog-post_23.html //

நம்ம இதையெல்லாம் லூசுல விட்டதால கொஞ்சம் ஓவரா எகுற ஆரம்பிச்சிட்டாங்க.. அவ்ளோதான். சாப்ட்வேர் துறைல நடக்குற தப்பை நியாயமா சொன்னா அதை ஏத்துக்கறதுல தப்பே இல்ல. அதுக்காக அர்த்தம் இல்லாம சீண்டுறதுதான் சகிக்கல!! உங்க பதிவை கண்டிப்பா படிக்கறேன் முத்து.

! சிவகுமார் ! said...

/Philosophy Prabhakaran said...
@ மனித புத்திரன்

பின்னூட்டங்களை தற்காலிகமாக நான்தான் வெளியிடுகிறேன்... உங்களது பின்னூட்டத்தை வெளியிடுவதா வேண்டாமா என்று சிவா தான் முடிவு செய்யவேண்டும்... அதனால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..//

பிரபாகர், கெட்ட வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டத்தையும் நீங்க என் ப்ளாக்ல பப்ளிஷ் செய்யலாம். அதுக்கு என் அனுமதி தேவையில்லை. மத்தபடி ஆரோக்யமான விவாதம் இருக்குற கருத்தை எப்பவுமே எதிர்கொள்ள தயார். அதன் மூலம் பிற நண்பர்களிடம் இருந்து எனக்கு ஒரு புதிய தகவல் கிடைத்தால் சந்தோஷமே!!

! சிவகுமார் ! said...

// Philosophy Prabhakaran said...
அப்புறம், நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சனைன்னா யாரும் சினிமா பார்க்கக் கூடாது... யாரும் சந்தோஷமா இருக்கக் கூடாது... எல்லோரும் கையில அறிவாளையும், சுத்தியலையும் தூக்கிக்கொண்டு அலையனும்ன்னு சொல்வார்கள் போல..//

கோவம் வந்தா தப்பு செய்யுறவங்களை வெட்ட வீச்சருவாளை தூக்குறது, நாட்ல பெரிய பிரச்னை நடந்தாலும் சிப்ஸ் சாப்புட்டுக்கிட்டு 20/20 பாக்குறது.. இந்த ரெண்டு க்ரூப்லயும் நம்ம இல்லைன்னு போஸ்டர் அடிச்சா ஒட்ட முடியும்..!!

! சிவகுமார் ! said...

//முத்து குமரன் said...

நன்றி பிரபா.
இதுக்கு பேரு பொறாமை அப்படினா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன்னா இவங்க தான் நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷர்கள். அதே போல நாம வெளிநாட்டுல இருந்துட்டோம்,. அவ்ளோ தான். வாயவே திறக்கக் கூடாது. என்ன நாம வெளிநாட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நமக்கு தேச பக்தி எல்லாம் இருக்காது. ஜடம்//

இதையெல்லாம் பெரியவங்க புரிஞ்சிக்காம அடம் பிடிக்கறதுதான் கொடுமையே.

! சிவகுமார் ! said...

//நிரூபன் said...
வணக்கம் சகோ,
ஐடி பற்றிப் புரிந்துணர்வற்றோருக்குப் புரிந்துணர்வினை வர வைக்கும்,
சாப்ட்வேர் பற்றிய தெளிவற்றோருக்கு நல்லதோர் தெளிவினை உருவாக்கும் பதிவு//

நன்றி நிரூபன். ஏதோ ஏன் மனதில் பட்டதை எழுதினேன்.

No Nonsense said...

வயத்தெரிச்சல் புடிச்ச கூட்டம் சார் அவங்க. ஐ.டி ல இருக்கறவங்க எல்லாம் நல்லா சம்பளம் வாங்கறாங்க அதனால இவனுங்க காண்டுல திரியறாங்க.
இதே ஐ.டி ல வேலை கிடைச்சா, வேணாம்னு மூடிகிட்டு சும்மா இருப்பாங்களா?. நாளைக்கு இவங்க புள்ளைங்கள விவசாயம் படிச்சிட்டு, புரட்சி பண்ண
அனுப்புவாங்களா இவங்க?.

அடுத்தவன் வளருத பாத்து நாம எப்படி அவன மாதிரி வளரலாம்னு யோசிச்சா உருப்படலாம், குத்தம் சொல்லிட்டு திரிஞ்சா அப்புறம் உருபடாமதான் போகணும்.
ஐ.டில இருக்கறவங்க எல்லாரும் எதோ ஒரு வழில சோசியல் சர்வீஸ், நன்கொடை எல்லாம் பண்ணறாங்க, இவனுங்க மாதிரி காண்டு புடிச்சவங்க எல்லாம்
எச்சை கையால காக்கா ஓட்டாத ஆளுங்க. பேச்சு மட்டும் எதோ இந்தியா சுதந்திரம் வாங்கினதே இவங்கலாலதான்னு பேசுவாங்க.

ஐ.டி வரதுக்கு முன்னாடிலாம் எவனும் குடிக்கவே இல்லையா?, நாங்க பார்ல குடிக்கறோம், இவனுங்க டாஸ்மாக்ல குடிச்சிட்டு ரோட்டுல வாந்தி எடுத்திட்டு திரியறாங்க.

கேரளாக்காரன் said...

Intha vinavu.com komaali kootatha serupa saanila mukki adikkanum boss. Velevetti illama pitchai eduthutrukkanuga athula vaaram fulla work panraanugala paathaa avanugalukku kaduppu vera potta pasangaki adikkanum boss. Velevetti illama pitchai eduthutrukkanuga athula vaaram fulla work panraanugala paathaa avanugalukku kaduppu vera potta pasanga

Naran said...

ஐடி மக்கள் அளவுக்கு மீறி சம்பாதிக்கிறார்கள் என்பது நிறைய பேரின் வயிற்றெரிச்சல் / ஆதங்கம்... அதாவது நாம் மட்டும் ஏதோ சும்மா உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்குகிறோம் என்பது அவர்களின் நினைப்பு... கூலித்தொழிலாளி உடலளவில் உழைக்கிறான் என்றால் நாம் மூளையை பயன்படுத்தி உழைக்கிறோம்... அவ்வளவுதான் வித்தியாசம்...///
.
.
அதே அளவு மூலைய பயன்படுத்துகிற வேலைகள் செய்யுற எல்லாருக்கும் அதே அளவு சம்பளம் கேடைக்குதா?பல லட்சம் கொடுத்து பிளாட் சிஸ்டத்துல வீடு வான்கிடுராங்களா எண்ண?இல்லையே!!ஐ.டி ராசாக்கள் மட்டும்தானே வாங்குறாங்க!அப்புறம் அரசியல்வாதிங்க சினிமா காரனுங்க

! சிவகுமார் ! said...

@ No Nonsense

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ கேரளாக்காரன்

நண்பரே..செருப்பு..சாணி எல்லாம் எதற்கு. அந்த வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களை சமூக அக்கறை இல்லாத கூட்டம்போல் சித்தரிப்பதுதான் பிடிக்கவில்லை. தங்கள் வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

//@ நரன்

அதே அளவு மூலைய பயன்படுத்துகிற வேலைகள் செய்யுற எல்லாருக்கும் அதே அளவு சம்பளம் கேடைக்குதா?பல லட்சம் கொடுத்து பிளாட் சிஸ்டத்துல வீடு வான்கிடுராங்களா எண்ண?இல்லையே!! ஐ.டி ராசாக்கள் மட்டும்தானே வாங்குறாங்க!அப்புறம் அரசியல்வாதிங்க சினிமா காரனுங்க//

சொல்ல வந்த விஷயத்தை டேக் டைவர்சன் போட்டு எங்கயோ கொண்டு போறீங்களே...ஊரான் சொத்தை கொள்ளை அடிச்சோ...இல்லை லஞ்சம் வாங்கியோ இந்தப்பணத்தை ஐ.டி.ராசாக்கள் பெறவில்லை. நாங்க அந்த ராசா இல்லை. எந்தத்தொழில்தான் அளவுக்கு மீறிய வருவாய் இல்லை . தனியார் மருத்துவமனையில் அதிக பீஸ், அரசு மருத்துவமனையில் கையூட்டு, பணக்கார தாதாக்களுக்கு மனசாட்சியே இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தவறான கேசுக்கு வாதாடும் சில வக்கீல்கள்.....சும்மா காமடி பண்ணாதீங்க பாஸ்!

muthukumaran said...

//@ நரன்: ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி ங்கற மாதிரி உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? உங்க புள்ளை குட்டிங்களை கம்ப்யூட்டர் வாடையே படாம டாக்டர் IPS அதுவும் இல்லன்னா ஒரு அரசியல்வாதியாக்கிடுங்க. நாங்க என்ன ஊரை அடிச்சா பணம் பண்றோம். ராப்பகலா உழைக்கிறோம். Mental Stress னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு? போங்க போய் உங்க புள்ளை குட்டிங்கள படிக்க வைங்க. உங்க வயித்தெரிச்சல் அடங்க ஒரு டம்ளர் மோர் பார்சல்..

Sundar said...

நான் வினவை படித்து விட்டு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். என் மனக்குமுறலை அப்படியே எழுதிவிட்டீர்கள்.

சீனு said...

அருமையான பதிவு சிவா.. ரசித்துப் படித்தேன்

Vijayan Durai said...

சூப்பரா சொன்னீங்க பாஸ்,இந்த பதிவில் உங்க கோபம் தெரிகிறது.இருக்காதா பின்ன?

Related Posts Plugin for WordPress, Blogger...