CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, September 11, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(11/09/11)


கலர் அப்பளம்: 


"எவருடா அதி..ராமராஜுலு. எனக்கே போட்டியா? சவுத் இந்தியாலோ ராமனும் நானே. ராஜனும் நானே. மைன்ட் இட்"
.............................................................

பால் பாயசம்:

                                                                 
இன்று நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி  பாகிஸ்தானை 4 -2 எனும் கோல்கணக்கில் பம்ப் அடித்து கோப்பையை வென்று உள்ளது. ரெகுலர் டைமில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்ததால் பெனால்டி முறையில் பலத்தை நிரூபிக்க வேண்டியதாயிற்று. நம்ம ஆளுங்க சும்மா வீடு கட்டி அடிச்சிட்டாங்கப்போய்!
.......................................................................... 

இடியாப்பம்:  

தாய்க்குலங்க மெகாசீரியல் பாக்கும்போது கணவன்மாருங்களுக்கு ஏதோ கால் வயித்து கஞ்சியாவது குத்துமதிப்பா தட்டுல விழும். இப்ப அரசு கேபிள் வந்ததுக்கு அப்பறம் மெகா எல்லாம் மாயமா போனதால கொந்தளிச்சி போயி இருக்காங்க நம்ம லேடீஸ். தயவு செஞ்சி இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க ஜெ மேடம். பாவம் ஆம்பளைஸ். பசி பொறுக்க மாட்டாங்க. 
...............................................................

அதிரசம்:

நம்மள பாக்குற இந்நாட்டு மன்னர்கள் எல்லாம் "என்னப்பா சாப்டியா"ன்னு பொதுவா கேக்குறது வழக்கம். எந்திரன் படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சி, ஆளாளுக்கு "எந்திரன் பாத்தியா? இன்னுமா பாக்கல?" அப்டின்னு சொல்லி கொலையா கொன்னாங்க. கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். இப்ப என்னடான்னா வேல செய்ற எடம், கேண்டீன், பாத்ரூம்னு எங்க பாத்தாலும் 'மங்காத்தா பாத்தியா? மங்காத்தா பாத்தியா?". முடியல. நான் இன்னும் அந்த படத்த பாக்கல. பாக்கல. பாக்கல. "டேய்..நீ விஜய் ரசிகனா?" அப்டின்னு யாரும் டேக் ஆப் ஆயிடாதீங்க. டிக்கட் வாங்க காசு இல்லப்பா...!
.................................................................

காரக்கொழம்பு: 

                                                பெடரர் -    நடால் -  டோஜோவிக் 

ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறந்தது. உலக நம்பர் 3 பெடரர் vs நம்பர் 1 டோஜோவிக் ஆடிய ஆட்டம் 5 செட்வரை நீண்டு இறுதியில் டோஜோவிக் வெற்றி பெற்றார். முதல் இரண்டு செட்டை வென்ற பிறகு அடுத்த 3 செட்டை கோட்டை விட்ட பெடரருக்கு இது அரிய அனுபவம். இதற்கு முன் இதே போல் பெடரர் ஒருமுறைதான் தோற்றுள்ளார்(சாங்கோ எனும் பிரெஞ்ச் வீரரிடம்). வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆடியன்சுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஒன்றை ஆடி அசத்தினார் டோஜோவிக்.

இன்னொரு அரை இறுதியில் இங்கிலாந்தின் முர்ரேவை ஸ்பெயினின் நடால் பேக் அப் செய்தார். கஷ்டப்பட்டு அரை இறுதி வந்து நடாலிடம் உதை வாங்குவதையே முர்ரே இம்முறையும் தொடர்ந்ததுதான் பரிதாபம். இதற்கு முன் இங்கிலாந்தின் டிம் ஹென்மன் விம்பிள்டன் அரை இறுதிக்கு வருடா வருடம் முன்னேறி வந்து அப்போதைய 'தல' பீட் சாம்ப்ராசிடம் உதைபடுவார். இங்கிலாந்தின் ராசி அப்படி. பட்டையை கிளப்பப்போகும் இறுதிப்போட்டியில் நடாலும், டோஜோவிக்கும் நாளை மோதப்போவது டென்னிஸ் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும். நேற்று இரவு முழுக்க என்னை தூங்கவிடாமல் விறுவிறுப்பான போட்டியை ஒளிபரப்பிய டென் ஸ்போர்ட்சுக்கு  சலாம்!
.........................................................................

பாவக்காய் கூட்டு: 

வெள்ளி அன்று ரிலீஸ் ஆன மேரி ப்ரதர் கீ துல்ஹன் எனும் ஹிந்திப்படத்தை இன்று பார்த்தேன். காமடி எனும் பெயரில் சிரிப்பே வராத படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஜிந்தகி நா மிலேகி தோபாரா போன்ற கலக்கலான படத்தை   சில வாரங்களுக்கு முன் தந்த பாலிவுட், அரதப்பழசான கதை மற்றும் நகைச்சுவை களத்தை கொண்ட  மேரி ப்ரதர் கீ துல்ஹன் போன்ற படங்களையும் தருவது கொடுமை. (என்னைப்போன்ற) தீவிர காத்ரீனா கைப் ரசிகர்கள் மட்டுமே பொறுமையுடன் பார்க்கலாம். மத்தவங்க எஸ்கேப் ஆகிடுங்க.
.........................................................................

பொங்கல்: 

டில்லி நீதிமன்ற குண்டுவெடிப்பிற்கு எதிர்பார்த்த பஞ்ச் டயலாக்கை மீண்டும் உதிர்த்து இருக்கிறார் பன்மோகன். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கணுமாம். ஒற்றுமையா மார்க்கெட், தியேட்டர் மாதிரி பொது இடங்கள்ள கூடுனதுக்குதான் வக்கிறாங்களே வெட்டு. அய்யா.. சாமி உங்கள மாதிரி ஒசந்த அதிகாரிங்க எல்லாம் வாரம் ஒரு தரம் ஒத்துமையா போலீஸ் துணை இல்லாம மக்கள் புழங்குற இடத்துக்கு வந்துட்டு போங்க. அப்பறம் விடலாம் அறிக்கை, கண்டனம் எல்லாம்.
...........................................................................

சுடுதண்ணி:

டெல்லி குண்டுவெடிப்பில் பலியான மக்கள் சிலரின் வீட்டிற்கு அவசர அவசரமாக நுழைந்திருக்கிறது மீடியா. கணவரை இழந்து தேற்ற முடியாமல் அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் மைக்கை நீட்டி பேச சொன்னதும் அவர் கடும் கோபத்தில் "தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள். இந்நிலையில் நான் என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று கத்தி விட்டார். அப்படி என்னங்கடா உங்களுக்கு அவசரம்? கொஞ்சம் பொறுத்துதான் போறது.  
..............................................................................

பிரசாதம்: 

உழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு மிகக்குறைந்த விலையில் பல்லாண்டு காலமாக உணவளித்து வரும் ராமு சேர்வை - பூர்ணத்தம்மாள் தம்பதிகளுக்கு கோடான கோடி நன்றி..............................................................
My other site:
nanbendaa.blogspot.com
............................................................

சமீபத்தில் எழுதியது:

..............................................................

           

27 comments:

செங்கோவி said...

சுடு தண்ணி........அநியாயம்யா..இப்படியுமா இருப்பாங்க மனுசங்க..

ஹிட்ஸ்ன்னாலே அப்படித் தானோ.....

MANO நாஞ்சில் மனோ said...

இப்ப என்னடான்னா வேல செய்ற எடம், கேண்டீன், பாத்ரூம்னு எங்க பாத்தாலும் 'மங்காத்தா பாத்தியா? மங்காத்தா பாத்தியா?". முடியல. நான் இன்னும் அந்த படத்த பாக்கல. பாக்கல. பாக்கல. "டேய்..நீ விஜய் ரசிகனா?" அப்டின்னு யாரும் டேக் ஆப் ஆயிடாதீங்க. டிக்கட் வாங்க காசு இல்லப்பா//

ஆமாய்யா ஆமாய்யா என்னையும் விக்கி பய போட்டு தாளிச்சிட்டு இருக்கான் ராஸ்கல்...

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

அவனுங்க வீட்ல இப்படி செஞ்சா தெரியும் அந்த வலி.

! சிவகுமார் ! said...

@ 'தி கிரேட்' நாஞ்சில் மனோ

அப்ப நிஜமாவே நீங்க மங்காத்தா பாக்கலியா 'தல'?

NAAI-NAKKS said...

yes....great....

மதுரை சரவணன் said...

maduraikku vaangka ticket eduththu padam paarkka vaiththu anuppukiren.. ithanaala naan thala rasikannu mudivedukka vendaam... arumai anaiththum arputham.vaalththukkal

Philosophy Prabhakaran said...

டிவிட்டரில் படித்தது:
மங்காத்தாவை இன்னும் பாக்கலைடானு சொன்ன என்னை ஒரு மாதிரியா பாக்குறான் 2 மாசமா அவங்காத்தாவை பாக்காதவன்!

Philosophy Prabhakaran said...

// டிக்கட் வாங்க காசு இல்லப்பா...! //

இதெல்லாம் நொண்டி சாக்கு... உங்களுக்கு பார்க்க பிடிக்கலைன்னு நேரடியாவே சொல்லிடலாமே...

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்துல உங்க ப்ளாக்கே இல்லைன்னு சொல்லுது...

நிரூபன் said...

ஸ்பெசல் மீல்ஸ் கலக்கல் நண்பா,

பிரசாதம்..உண்மையில் உழைக்கும் மக்களுக்கு ஏற்ற அருமையான மலிவு விலையிலான பகிர்வு.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

கலக்கல் பதிவு ....
வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
yes....great....//

Thanks!

! சிவகுமார் ! said...

@ மதுரை சரவணன்

மதுரைக்கு சீக்கிரம் வரப்பாக்கறேன். நன்றி!

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

என் ப்ளாக்கை .com டொமைனுக்கு மாற்றி உள்ளேன். விரைவில் madrasbhavan.com எனும் பெயருடன் வெளிவரும்.

! சிவகுமார் ! said...

@நிரூபன்

நன்றி நிரூபன்.

! சிவகுமார் ! said...

@ஞானேந்திரன்

தங்கள் வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சுவராஸ்யம். சப் டைட்டில்கள் அழகு

தம்பி கூர்மதியன் said...

ஓவரு சாப்பாடு உடம்புக்கு ஆகாது..

அஞ்சா சிங்கம் said...

என் ப்ளாக்கை .com டொமைனுக்கு மாற்றி உள்ளேன். விரைவில் madrasbhavan.com எனும் பெயருடன் வெளிவரும்.
///////////////////

பாருங்கையா இவருக்கு மங்காத்தா பார்க்க காசு இல்லையாம் ......
அஜித் ரசிகர்கள் எல்லாம் லைன் கட்டி வரவும் .....மணி எங்கயா போனே ....?

thalir said...

அருமையான விருந்து! சுடுதண்ணி! இந்தமீடீயா காரங்க திருந்தவே மாட்டாங்க என்று உணர்த்தியது.

ஆமினா said...

பொங்கல் சூப்பர்

N.H.பிரசாத் said...

அருமையா எழுதியிருக்கிங்க. பகிர்வுக்கு நன்றி.

விடுதலை கரடி said...

விசாகபட்னம் வெங்கட்ரமண ரெட்டிகாருலு இந்த அண்டர் கிரவுண்டு ஆதிகேஷவலு கிட்ட வச்சிகாதீங்க வம்பு!!மர்டர் பண்ணிடுவண்டா டான்க்ரே!!

வைரை சதிஷ் said...

அசத்தல் பதிவு

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

வைரை சதிஷ் said...

அருமை....... அருமை.........
பதிவு அருமை.........


இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

மோகன் குமார் said...

ஸ்டான்லி பட விமர்சனத்தில் பசங்க படம் பற்றி பின் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். தேடினேன். கிடைக்கலை அது(வும்) எனக்கு பிடித்த படம். எழுதி இருந்தால் அதன் லிங்க் தாருங்கள் (என் மெயிலுக்கு)

மீ தி 142!

விடுதலை கரடி said...

கழக கண்மணிகள் ஆடும் மங்காத்தா!!
http://www.youtube.com/watch?v=0XE23Snz8Ew&feature=player_embedded

Related Posts Plugin for WordPress, Blogger...