CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, August 28, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(28/08/11)விண்ணைத்தாண்டி வருவாயா?


"யுவராசா..இப்படியே என்னை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டுடுடா மவராசா. இங்லான்ட் கிட்ட வாங்குன அடியை கூட தாங்கிக்கலாம். நம்ம ஜனங்க குடுக்கப்போற அடியை நினைச்சாலே பீதி பிளிறிக்கிட்டு வருது!"
........................................................................................

நீதிதேவன் மயக்கம்:
சமீபத்தில் நண்பர் நிரூபனின் வலைத்தளத்தில் படித்ததும்தான் தெரிந்து கொண்டேன்.. மரணத்தின் நிழலுக்கு அருகில் இருக்கும் மூவரில் ஒருவரான  ம.தி. சாந்தன் நம் சக பதிவர் ம.தி. சுதாவின் அண்ணன் என்று. இதுகுறித்து தன் அண்ணனுக்கு சுதா எழுதிய பதிவிற்கான லிங்க்:

அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

நிரூபன் விரிவாக எழுதியுள்ள பதிவைப்படிக்க:

தமிழ் நாற்று 

தமிழக முதல்வர் மனது வைத்தால் இந்த தண்டனையை தடுத்து நிறுத்த முடியும் என்று சொல்கிறார்கள். நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றன. முதல்வர் முடிவு எப்படி இருக்கும் என்று விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் நான் கேட்டு அறிந்தபோது அவர்கள் இருவேறான கருத்துக்களையும்,அதற்கான காரணங்களையும் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறைவாசத்தையும் அனுபவித்து விட்டு பிறகு மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டும் எனச்சொல்வது சரியாகப்படவில்லை.  இதற்கு முதலிலேயே ஏதேனும் ஒரு தண்டனையை (அவர்கள் தவறு செய்து இருந்தால் மட்டும்) அறிவித்து இருந்தால் இத்தனை மன உளைச்சலுக்கு குடும்பத்தினர் ஆளாகி இருக்க மாட்டார்கள். முதல்வர் கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்பது எனது நம்பிக்கை. காத்திருப்போம்.

என் சிற்றவிற்கு எட்டியவரையில் கொலைகளை திட்டமிட்டு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது தவறல்ல. அதேசமயம் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் போன்றவர்களைப்போல் துரதிர்ஷ்டவசமாக வழக்கில் சிக்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் மரணதண்டனை என இரண்டையும் அளிப்பது எந்த விதத்திலும் நியாயமாக படவில்லை.

'விந்தைமனிதன்' ராஜாராமின் Buzz-இல் ஒரு செய்தியை பார்த்தேன். பேரறிவாளன் கூட நம்மைப்போல் பதிவராக இருந்தது தெரிய வந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு வலைப்பூவில் அவர் எழுதிய பதிவை படிக்க:

http://perarivalan.blogspot.com

சிறைக்கொடுமைகள் எத்தனை விதமாக, எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை அவர் எழுத்துக்கள் விளக்குகின்றன. இளம் வயதினர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. அந்த அளவிற்கு ரணங்களை அனுபவித்து இருக்கிறார் 19 வயதில் சிறை சென்ற இளைஞர். 
...........................................................................................

மக்கள் என் பக்கம்: 
லோக்பால். அன்னா. லோக்பால். அன்னா. எந்த டி.வி.ய திருப்புனாலும். ஒரு வழியா சூடு தணிஞ்சிருச்சி. ஆனா அன்னா விட்றதா இல்லை. தேர்தல் முறையில் நடக்கும் குளறுபடிகளை தட்டிக்கேட்பேன்னு சொல்லி இருக்கார். குறிப்பா மக்கள் தேர்ந்தெடுத்த கலர் துண்டுங்க சரியா ஆட்சி செய்யலைன்னா 'ரீகால்' முறையை கொண்டு வரணுமாம். நல்ல மேட்டர்தான். ஆனா இதை பத்தி 'தென்னவன்' படத்துல கேப்டன் தெளிவா சொல்லிட்டாரே? "நான் சொன்னதை நீங்க எப்பிடி காப்பி அடிக்கலாம்"னு அன்னா முன்னாடி நின்னு ரெட் ஜெயன்ட்  கண்ணோட குறுகுறுன்னு கேப்டன் முறைக்கிற காட்சியை கற்பனை பண்ணி பாத்தா நமக்கே மெட்ராஸ் ஐ வந்துடும் போல இருக்கே!
..............................................................................................

மண்ணுக்கேத்த பொண்ணு: 

                                                             
தென் கொரியாவின் டேகுவில் நடக்கும் உலக தடகள போட்டிக்கு எட்டு பேர் கொண்ட இந்திய அணி சென்றிருந்தது. பெரும்பாலானோர் மண்ணை கவ்வ, நீளம் தாண்டுதலில் நன்றாக மண்ணில்  தவ்வி இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளார் மயூகா. சிஸ்டர் கேரளாவாம். தடகளம் என்றாலே பின்னி பெடல் எடுப்பது கேரள வீராங்கனைகள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கென ஒரு தனி சிறப்பு உண்டு. உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற ஒரே நபர் இவர்தான்.  2003 பாரீசில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வாரா என்பது அவர் தவ்வுவதை பொறுத்தே அமையும். பார்ப்போம்!!
...............................................................................................                                                        

மதராசப்பட்டினம்: 
ஆசியாவின் பதிவுலக பிரத(ம)ர் கேபிள் சங்கர் மற்றும் சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் நிரந்தர தலைவர் கே.ஆர்.பி. செந்தில் இருவரும் இணைந்து மிரட்டும் 'சென்னை (யூத்) பதிவர் சந்திப்பு' அதிபிரம்மாண்டமாக வரும் ஞாயிறு (செப்  4) அன்று நடைபெற உள்ளது. லீவ் போடாமல் வருபவர்களுக்கு நடராஜ் ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் இனிப்பு பல்பம் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறோம். மேலும் விவரம் அறிய அடம் பிடிப்பவர்கள் கீழே உள்ள லிங்க்கை அழுத்தவும்:
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 'மனதளவில் யூத்' ஆக இருக்கும் சீனியர் பதிவர்களும் வருமாறு அன்புடன் கேட்டு கேட்டு கொல்கிறோம். நல்லா கேட்டுக்கங்க.
..........................................................................................

கடலோரக்கவிதைகள்: 
சமீபத்தில் மும்பை சென்றபோது ஜுஹு பீச்சில் நான் கண்ட கண்றாவி காட்சி. இந்த கப்படிக்கும் குப்பை மீது சர்வசாதரணமாக வாக்கிங் செல்லும் மும்பை மக்களின் துணிச்சலுக்கு சலாம். குப்பையை க்ளோஸ் அப்பில் பார்க்க மூக்கை பிடித்துக்கொண்டு படத்தை க்ளிக் செய்யவும்.

                                                               
..................................................................................

புது வசந்தம்: 

புதிதாக தோன்றி இருக்கும் 'புதிய தலைமுறை' செய்தி சேனல் நன்றாகத்தான் இருக்கிறது. எழுத்து டிசைனிங் போன்றவை நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் இளையவர்கள் படையுடன் இயங்கும் இந்த சேனல் நடுநிலை செய்திகளை தொடர்ந்து வழங்கினால் மகிழ்ச்சிதான். யூத் நிருபர்கள் ஆர்வத்தில் சற்று அவசரமாக பேசுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். கட்சி சார்ந்த செய்தி சேனல்களிடம் நாம் படும் பாட்டுக்கு இப்படி சில புதுவரவுகள் வந்தால்தான் சரிப்படும். மேடம் ஆட்சிக்கு வந்தா உச்சந்தலைக்கு மேல தங்கக்காசு கொட்டுதுன்னு அவங்க டி.வி.யும்,  இன்னும் கொஞ்ச நேரத்துல தமிழ்நாடு தண்ணிக்குள்ள போயிடும்னு எதிர்கட்சி டி.வி.யும் நம்மள வெறி பிடிக்க வைக்கிறதுக்கு முடிவு கட்ட ஏதோ ஒரு வழி பிறந்தா சரிடாங்கப்பா!!
...........................................................................................

இந்தியன்: (sms)

"மச்சி..சின்ன வயசுல சுதந்திர தினம் அன்னிக்கு கொடி வாங்க போனப்ப கடைல நீ ஒரு கேள்வி கேட்டியே..ஞாபகம் இருக்கா?"

"இல்லையே. என்ன கேட்டேன்?"

"இது வேண்டாம். வேற கலர் குடுங்க"
.....................................................................................

தீபாவளி:  
ஓம் ஷாந்தி ஓம் படத்தின் இந்த பாடலுக்கு ஒட்டுமொத்த ஹிந்தி திரை உலகமும் சேர்ந்து நிகழ்த்திய வானவேடிக்கை. இனிமையான இசை மற்றும் குரல்வளத்தில் அசத்தும் இந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்:http://youtu.be/VzLG6OqOcn8
................................................................

My other site:
nanbendaa.blogspot.com
.................................................................

சமீபத்தில் எழுதியது:

அடிவாங்குனது நாங்க. கோப்பை எங்களுக்குதான் சொந்தம்!
.................................................................................

           
                                         

19 comments:

vinhvishali said...

மாப்ள மீல்ஸ் சூப்பரு....நடத்துயா!

Unknown said...

கலக்கல் பாஸ்..ஒரே நாளில் இரு தளங்களிலும் போட்டு தாக்கி இருக்கீங்க!!வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் said...

@@@கலக்கல் பாஸ்..ஒரே நாளில் இரு தளங்களிலும் போட்டு தாக்கி இருக்கீங்க!!வாழ்த்துக்கள்!


I SAY THE SAME

http://naai-nakks.blogspot.com/2011/08/48.html

சதீஷ் மாஸ் said...

//*ஆசியாவின் பதிவுலக பிரத(ம)ர் கேபிள் சங்கர் மற்றம் சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் நிரந்தர தலைவர் கே.ஆர்.பி. செந்தில் *//

இதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super siva

! சிவகுமார் ! said...

//vinhvishali said...
மாப்ள மீல்ஸ் சூப்பரு....நடத்துயா!

தெய்வமே.. நீங்க யாரு. வியட்நாம் விக்கியோட பினாமியா?

! சிவகுமார் ! said...

@ மைந்தன் சிவா

நன்றி மைந்தன்!!

! சிவகுமார் ! said...

//@ நாய் நக்ஸ்//

தேங்க்ஸ் நக்ஸ்!!

! சிவகுமார் ! said...

//சதீஷ் மாஸ் said...
//*ஆசியாவின் பதிவுலக பிரத(ம)ர் கேபிள் சங்கர் மற்றம் சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் நிரந்தர தலைவர் கே.ஆர்.பி. செந்தில் *//

இதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா...//

இவங்க ரெண்டு பேரும் பயங்கர முரட்டுத்தனமான சீனியர் பதிவர்கள். தெரியாம அவங்க நிழலை உரசுனா கூட சொழட்டி சொழட்டி அடிப்பாங்க. பதிவர் சந்திப்புல பாக்கதான போறீங்க!!

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

Thanks Ramesh!

செங்கோவி said...

அன்னா கலக்கி விட்டார்.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
அன்னா கலக்கி விட்டார்.//

மன்மோகன் மட்டும் கலங்காமல் ஒரே மாதிரி போஸ் குடுக்கிறாரே..

Anonymous said...

நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

RVS said...

கொடி வேற கலர்ல கேட்டது ரொம்ப அநியாயம். ஜோக்கா இருந்தாலும் அந்தாளை நாடு கடத்துங்க பாஸ்!

இன்னிக்கி காலையிலேயே மீல்ஸ் சாப்ட்டாச்சு... நன்றி.. :-)

Philosophy Prabhakaran said...

சிவா... உங்க வலைப்பூவில் ஒரு பத்து நிமிடத்தை செலவிட வைத்துவிட்டது அந்த பாடல்...

Unknown said...

நல்ல அலசல், எல்லாத்துலயும் பூந்து விளையாடிட்டிங்க

சதீஷ் மாஸ் said...

/சதீஷ் மாஸ் said...
//*ஆசியாவின் பதிவுலக பிரத(ம)ர் கேபிள் சங்கர் மற்றம் சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் நிரந்தர தலைவர் கே.ஆர்.பி. செந்தில் *//

இதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா...//

இவங்க ரெண்டு பேரும் பயங்கர முரட்டுத்தனமான சீனியர் பதிவர்கள். தெரியாம அவங்க நிழலை உரசுனா கூட சொழட்டி சொழட்டி அடிப்பாங்க. பதிவர் சந்திப்புல பாக்கதான போறீங்க!!

இந்த மாறிலாம் பயமுறுத்தின நா வரமட்டேன்.. i m paavam...

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!

Prabu Krishna said...

முதல் வருகை இனி தொடர் வருகை.

Related Posts Plugin for WordPress, Blogger...