வால்பேஷினுடன் மணிக்கணக்கில் மல்லுக்கட்டு நடத்தி ஒரு வழியாக சோதனையை தாண்டி வெளியே வந்ததும் 'மதியம் 2 மணி விமானத்தில் சென்னை செல்ல வேண்டும். தயாராக இருக்கவும்' என உயர் அதிகாரிகள் அறிவித்தனர். இன்னும் சிலமணிநேரமே இருப்பதால் ஜுஹு பீச்சுக்கு மட்டும் விசிட் அடித்துவிட்டு வரலாம் என முடிவு செய்தோம். காலை 6.30 மணிக்கு ஆட்டோ பறக்க ஆரம்பித்தது. அந்நேரத்திலேயே மும்பை மக்கள் பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள்.
அதுதான் அமிதாப் பச்சன் வீடு என்று கைகாட்டியவாறு பறந்துகொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுனர். திடீரென பெய்த மழை அந்தேரி தெருக்களின் அழுக்கை போக்கிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ஜுஹுவை வந்து அடைந்தோம். அங்கே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் எங்களை வரவேற்றது. சினிமாக்களில் வரும் மும்பை பீச் போல் இல்லாமல் படு கேவலமாக இருந்தது அந்த இடம். கிலோமீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள். அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் எல்லா வயதினரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். சிலர் வெறும் காலுடனும்.அதில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்(சுத்தம்!). மேலும் ஒரு அடி எடுத்து வைக்கவே எங்களுக்கு மனம் ஒப்பவில்லை. இதை தூரத்தில் இருந்து பார்த்த பெரியவர் ஒருவர் என்னருகே வந்தார்.
நானும் அவரும்
"இங்கே இப்படித்தான். மாலை நேரங்களில் மக்கள் அனைவரும் பொழுதை போக்கிவிட்டு பிளாஸ்டிக் கவர்கள், சோளம் போன்றவற்றை குப்பைத்தொட்டியில் போடாமல் செல்கின்றனர். நித்தமும் காலையில் குப்பை அள்ளுபவர்கள் வந்து மணிக்கணக்கில் சுத்தம் செய்கிறார்கள் பாவம். இம்மக்களை திருத்த இயலாது" என்றார். அருகிலேயே பெரிய குப்பைத்தொட்டி இருந்தும் பலர் உபயோகிக்கவில்லை. "நாங்கள் எதிர்பார்த்து வந்த ஜுஹூ இதுவல்லவே" என்றேன். அதற்கு அவர் "ஆம். அந்த இடம் இன்னும் தொலைவில் உள்ளது. அது சற்று சுத்தமாக இருக்கும். இது குப்பைகளின் நிரந்தர குடியிருப்பு. காலை 7 மணிக்கே இளம்ஜோடிகள் நடமாட்டம் அதிகமா இருக்கும்" என்றார்.
கண்களை வலம் -இடம் திருப்பினால் ஜோடிப்புறாக்கள் ஆங்காங்கு அமர்ந்திருந்தன. சிறிய உணவகம் முன் ஒரு ஜோடி உலகை மறந்து பேசிக்கொண்டிருக்க இரண்டு படிகளுக்கு மேலே ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞன் ஒருவன் BARE பாடியுடன் கொட்டாவி விட்டபடி முதுகை சொறிந்து கொண்டிருந்தான், தொடை தெரிய சார்ட்ஸ் போட்டுக்கொண்டு. அந்த இளம்பெண்ணை விட அவன் குடுத்த போஸ் அட்டகாசம்!!
நன்றி மறவா நண்பர்கள்
பல நிமிடங்கள் மும்பை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் பெரியவர். கையில் இருந்த ஒரு கவரைப்பிரித்து தன் இளம்வயது புகைப்படங்களை காட்டினார். மும்பையின் தாதாக்கள் சிலருடன் அவர் இருந்த படங்களும் அதில் அடக்கம். மணலில் மல்லாக்க படுத்து தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்றை எழுப்பியவாறு சொன்னார் "2004 ஆம் ஆண்டில் இருந்து எனது நண்பனாக இருக்கிறான் இவன்". தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து மேலும் சில நாய்களுக்கு நண்பர்களுக்கு பசியாற்றினார். மும்பை வந்துவிட்டு சுற்றிப்பார்க்காமல் செல்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த எனக்கு அவர் தந்த பல தகவல்கள் மகிழ்ச்சியை தந்தது.
பிறகு என்னிடம் விடைபெற்று சென்று கொண்டிருந்த பெரியவர் திடீரென ஓடத்துவங்கினார் ஒரு பிளாஸ்டிக் கவரை துரத்திக்கொண்டு. பெரிய போராட்டத்திற்கு பின் அந்த கவரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தன் நன்றியுள்ள நண்பர்களுடன் நடக்கத்தொடங்கினார். இப்படி ஓர் மனிதரை சந்திக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. கடற்கரையை ஓரமாக நடையை தொடர்ந்தோம். அங்கே மேலும் ஒரு பரவசம் காத்திருந்தது.
1000 புறாக்களும் சிங்கிள் சிங்கமும்
நூற்றுக்கணக்கான புறாக்களுக்கு தானியங்களை தந்துகொண்டு இருந்தனர் சிலர். சென்னையில் நான் அதிகமுறை பார்த்தது காகத்தை மட்டும்தான். செல்போன் டவர்கள் கோலோச்ச ஆரம்பித்த நாள் முதல் ஒரு சில சிட்டுக்குருவிகளை காணும் வாய்ப்பும் காணாமல் போனது. வண்டலூர் ஜூவில் ஓரிரு முறை கூண்டுகள் கைதான பறவைகள் பார்த்திருக்கிறேன். அவ்வளவே! எனவே இந்தக்காட்சி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல அப்புறாக்களின் பக்கம் நெருங்கினேன். அப்போது பையில் இருந்த தானியங்களை வேகமான வீசினார் ஒருவர். அடுத்த நொடி புறாக்கள் அனைத்தும் சிறகுகள் படபடக்க என்னைச்சுற்றி பறக்க ஆரம்பித்தன. அற்புதமான அனுபவம்! திரைப்படங்களில் மட்டுமே பார்த்த இது போன்ற நிகழ்வுகள் இன்று நிஜத்தில். என்றும் மறக்க முடியாத நொடிகள் அது.
அடுத்த சில மணிநேரத்தில் முடிந்தது மும்பை சகவாசம். சென்னை - மும்பை பயணத்தில் ஜன்னலோர சீட்டை கோட்டை விட்ட நான் மும்பை - சென்னை ரூட்டில் எப்படியோ பிடித்துவிட்டேன். விதவிதமான மேகக்கூட்டங்களை கண்டு அதிசயித்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. சென்னையை நெருங்குகையில் பரவசம் அதிகமானது. சேப்பாக்கம் ஸ்டேடியம், புழல் எரி போன்ற பல இடங்களை விண்ணில் இருந்து பார்த்தது வித்யாசமான அனுபவம். குறிப்பாக மெரீனா கடற்கரைக்கு மேல் விமானம் பறக்கையில் கீழே கண்ட காட்சி மகிழ்ச்சியின் உச்சம். என்றும் மறக்க இயலாது முதல் விமான அனுபவத்தை.
என்னைப்போல் வசதியில் சுமாராக இருக்கும் நண்பர்களே, நம் பெற்றோர்களின் முந்தைய தலைமுறைக்கு விமானம் என்பது ஒரு அதிசயப்பொருளாக இருந்திருக்கும். நம் தாய் தந்தையர் நம்மை படித்து ஆளாக்க அவர்களின் வாழ்நாளை தொலைத்து இருப்பார்கள். அவர்களுக்கு விமான அனுபவம் என்பது வெறும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அல்லது
புகைப்படங்கள் மூலம்தான் கிடைத்திருக்கும். தன் பிள்ளை விமானத்தில் சென்று வந்த அனுபவங்களை கேட்டு சந்தோசத்தில் மிதந்த என் தாயைப்போல தங்கள் பெற்றோரும் மகிழும் நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.
என்றேனும் ஒருநாள் போதுமான அளவு பணம் சேர்ந்தால் என் தாயை விமானத்தில் அழைத்துச்செல்ல இதயம் துடிக்கிறது. தங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தயவு செய்து பெற்றோரை அழைத்துச்செல்லுங்கள். குறிப்பாக தாயை. உலகை நமக்கு அறிமுகம் செய்த அந்த தேவதைக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து பாருங்கள். அந்த மகிழ்ச்சிக்கு அளவேது!!
.......................................................
My other site:
......................................................
41 comments:
//1000 புறாக்களும் சிங்கிள் சிங்கமும் //
முடியலை..உஸ்ஸ்ஸ்..
//குறிப்பாக தாயை. உலகை நமக்கு அறிமுகம் செய்த அந்த தேவதைக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து பாருங்கள்.//
அதைச் செய்துவிட்ட திருப்தி எனக்கு உண்டு!
நல்ல அனுபவம்
/// நம் பெற்றோர்களின் முந்தைய தலைமுறைக்கு விமானம் என்பது ஒரு அதிசயப்பொருளாக இருந்திருக்கும். நம் தாய் தந்தையர் நம்மை படித்து ஆளாக்க அவர்களின் வாழ்நாளை தொலைத்து இருப்பார்கள். அவர்களுக்கு விமான அனுபவம் என்பது வெறும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அல்லது
புகைப்படங்கள் மூலம்தான் கிடைத்திருக்கும். தன் பிள்ளை விமானத்தில் சென்று வந்த அனுபவங்களை கேட்டு சந்தோசத்தில் மிதந்த என் தாயைப்போல தங்கள் பெற்றோரும் மகிழும் நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்.
/// இந்த வரிகளில் நானும் அனுபவப்பட்டிருக்கேன் பாஸ்.
நல்ல அனுபவம்... சிங்கம் சிங்கிளா நிக்குதே... ஆபத்தாச்சே...
பில்ட் அப்பு தூக்குது பாஸ் !!
நல்ல அனுபவங்கள்!!
Enjoy boss . .enjoy. .
@ செங்கோவி
//முடியலை..உஸ்ஸ்ஸ்..//
அவ்வளவு டெர்ரர் ஆவா இருக்கேன்.
//அதைச் செய்துவிட்ட திருப்தி எனக்கு உண்டு!//
மிக்க மகிழ்ச்சி நண்பரே!
@ கந்தசாமி
நன்றி கந்தசாமி
@ தமிழ்வாசி
அந்த பீதியை வெளில காட்டாமே இருக்கறதே பெரிய விஷயம் பிரகாஷ்!!
@ மைந்தன் சிவா
கருத்துக்கு நன்றி சிவா!
@ ராஜா
Thanks King!
ஐயய்யோ எங்கள் மும்பை பீச்சை கேவல படுத்திட்டார், ரெண்டு வெடிகுண்டு பார்சல் டூ சென்னை.....
மும்பை மக்கள் பொருப்பில்லாதவர்கள் என்பது என்னவோ உண்மைதான்....!!!
என்னாது சிங்கமா...???
ஹி ஹி அ"சிங்கம் நிறைந்த இடத்தில் ஹி ஹி...
நான் என்னவோ உம்மை பலூன் மாதிரி இருப்பீர்னு பார்த்தா, இப்பிடி மனோபாலா மாதிரி இருக்கீங்க ஹே ஹே ஹே [[கலாயிச்சிட்டேன்]]
ஜுஹுவை வந்து அடைந்தோம். அங்கே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் எங்களை வரவேற்றது. சினிமாக்களில் வரும் மும்பை பீச் போல் இல்லாமல் படு கேவலமாக இருந்தது அந்த இடம்./
உணமைதான். இந்த இடத்திலா டூயட் காட்சிகள் என்று அதிர்ச்சியாக இருந்தது.
//1000 புறாக்களும் சிங்கிள் சிங்கமும் //
ஆயிரம் புறா இருக்குன்னு உக்கார்துகிட்டே எண்ணுனீங்களா??????
//உலகை நமக்கு அறிமுகம் செய்த அந்த தேவதைக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்து பாருங்கள். அந்த மகிழ்ச்சிக்கு அளவேது!!//
கலக்கல் மெசேஜ்....
மும்பைக்கு போறதுக்கு ஏன் மெரினா பீச் பக்கம் போனீங்கோ???? :))
ரூட் தப்பாயிருக்கே......
ஹி...ஹி...ஹி.....
தமிழ்மணம் ஓக்கே.....
இண்ட்லி இருந்துச்சா? என் கண்ணுக்கு மாட்டலையே....
முடித்திருக்கும் விதம் சூப்பர்!
nice article
@ நாஞ்சில் மனோ
//ஐயய்யோ எங்கள் மும்பை பீச்சை கேவல படுத்திட்டார், ரெண்டு வெடிகுண்டு பார்சல் டூ சென்னை//
டூ சென்னையா? இன்னொரு சென்னை எங்க இருக்கு தல?
@ நாஞ்சில் மனோ
//நான் என்னவோ உம்மை பலூன் மாதிரி இருப்பீர்னு பார்த்தா//
உம்மை பலூனா? அது எங்க விக்குது?
@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கு நன்றி!!
@ ஆமினா
////1000 புறாக்களும் சிங்கிள் சிங்கமும் //
ஆயிரம் புறா இருக்குன்னு உக்கார்துகிட்டே எண்ணுனீங்களா????? //
சகோ, படத்தை பாருங்க..நின்னுக்கிட்டுதான் எண்ணுனேன் :)
@ ஆமினா
// மும்பைக்கு போறதுக்கு ஏன் மெரினா பீச் பக்கம் போனீங்கோ?? :))
ரூட் தப்பாயிருக்கே......
ஹி...ஹி...ஹி... //
மெரீனா வழியா போன மும்பை தாஜ் ஹோட்டல் வரும்னு சொன்னாங்க...அதான்...
@ ஆமினா
//தமிழ்மணம் ஓக்கே.....
இண்ட்லி இருந்துச்சா? என் கண்ணுக்கு மாட்டலையே.//
இன்ட்லி இருக்கே. ta.indli.com
@ சென்னை பித்தன்
நன்றி சார்!
@ கஸாலி
Thanks Kasaali.
நல்லா இருக்குது...........
அந்த இடத்தில் ஒரு நல்ல மனிதராவது இருக்குரார் சந்தோஷம்...
அருமையான கதை உணர்வுகளும் கொட்டிக்கிடக்குது
நல்ல அனுபவம்.
இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்
நல்லதோர் பயண கட்டுரை. மும்பை சென்றாலும் அங்கும் உங்களது தேடல் அருமை. கடைசியில் சொன்ன வார்த்தைகள் நிச்சயம் ஒவ்வொருவரும்(கொஞ்சம் சம்பாரிக்க ஆரம்பித்தவர்கள்) தங்கள் பெற்றோர்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி. நிச்சயம் நான் செய்யப் போகிறேன்.
நல்ல அனுபவம். கடந்த 20 வருடங்க
ளாக மும்பை வாசி நான்.விமானப்பய
நமும் பலதடவை சென்று வந்திருக்
கேன். நீங்க ரசிச்சு எழுதி இருக்கீங்க
நல்லா இருக்கு.
அனுபவம் புதுமை, சூப்பர் சிவ்வா
நல்ல அனுபவங்கள்!!
வணக்கம் பாஸ்,
உலகை மறந்திருந்தவர்களை ரசித்த அனுபவத்தையும், இலக்கியத் தரத்தோடு இனிமையாக எழுதியிருக்கிறீங்க.
மாப்ள கலக்கலா சொல்லி இருக்கய்யா....அதுவும் அம்மாவை கூட்டி செல்வதை எல்லோரும் விரும்பவேண்டும் என்பதை அழுத்தி சொன்னதை நினைத்து பெருமைப்படுகிறேனய்யா....!
Post a Comment