என்னமா படம் காட்றாங்க!
எனக்கு முன் சீட்ல இருந்த நண்பன்கிட்ட "என்னய்யா இது. கிங்க்பிஷர் சீட் பின்னாடி டி.வி. இருக்குற மாதிரி நான் எங்க வீட்டு டி.வி.ல பாத்து இருக்கேன். இங்க ஒண்ணுமே காணுமே?"ன்னு கேட்டதுக்கு "அதெல்லாம் ஸ்பெஷல் சாதா பளைட்லதான் இருக்கும். இது சாதா டைப்"ன்னு சொல்லி என்னை ஆப் பண்ணான். அதுவும் போச்சா. எனக்கு லெப்ட் ரைட் ரெண்டு பக்கமும் இருந்த மவராசனுங்க கைல ஒரு புக்கை வச்சி படம் பாத்துகிட்டு இருந்தாங்க. சுத்தி முத்தி பாத்தா நெறைய பேரு கைல புக்கு. நம்மளும் ஒரு புக்கை வாங்கிட்டு வந்துருக்கலாம். ரெண்டு மணிநேரம் எப்படி ஓட்டுவேன்?
ஆனது ஆகட்டும். நமக்கு பொழுது போகணும். மாநிறத்துல இருந்த ஏர் ஹோஸ்டசை வச்ச கண் வாங்காம பாத்துகிட்டே இருந்தேன். அவ அதுக்கு மேல. பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி முன்பக்கம் இருந்த செவப்பு ஸ்க்ரீனை மூடி மூடி திறந்துகிட்டே இருந்தா. கொஞ்ச நேரத்துல என் சீட்கிட்ட இருந்த லெப்ட்,ரைட் பார்ட்டிங்க ரெண்டு பேரும் லைட்ட ஆப் பண்ணிட்டு அவங்க AIR - ஐ (கொறட்டை) டேக் ஆப் செஞ்சாங்க. அடப்பாவிங்களா. தானும் படுக்காம (படுத்து), தள்ளியும் படுக்காம (படுத்து) கெடக்குறீங்களே... உங்களுக்கு எதுக்குடா ஓர சீட்டு?
உள்மண்டை உக்கிரம் ஆன நேரத்துல முன் சீட்டோட பின் பக்கத்தை பாத்தேன். என்னத்தையோ சொருகி வச்சி இருக்காங்களேன்னு எடுத்து பாத்தா..புக்கு. இந்த ஓசி புக்கைத்தான் அத்தனை பேரும் படிச்சாங்களா? ரைட்டு. "நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லா (ஓசி புக்) படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க".
புக்கை புரட்ட ஆரம்பிச்சேன். இருட்டா இருந்ததால படம் மட்டும் பாத்துகிட்டு இருந்தேன். வெளிச்சத்துக்காக எசகுபிசகா ஏதாவது சுவிட்சை போட்டு தூங்குறவங்கள எழுப்பி உண்டைக்கட்டி வாங்க விரும்பல. ஆனா ஜன்னலோர மவராசு என் தலைக்கு மேல இருந்த நடு லைட்டை போட்டு விட்டாரு. வெளிச்சம் கரெக்டா என் மேல மட்டும் விழுந்துச்சி. வாட் எ டெக்னாலஜி வாத்யாரே!
கைல காசு. வாய்ல சாண்ட்விச்சு.
நேரம் ஆக ஆக வயிறு 'கிய்யா மிய்யான்னு கத்த ஆரம்பிச்சது. பசி. நாலாயிரம் ரூவா குடுத்து டிக்கட் எடுத்துருக்கோம். கண்டிப்பா ஓசி சோறுதான்னு நம்பி இருந்தேன். ஆனா வெம்ப வச்சிட்டாளுங்க அழகிய ராட்சசிங்க. எல்லாரும் கைல இருந்த 100, 500 ரூவா நோட்டை புரணிவித்தைக்காரன்கிட்ட குடுக்கற மாதிரி தந்தாத்தான் சாண்ட்விச்சு, 'கோக்'னு தள்ளுவண்டில இருந்து எடுத்து தருவாங்களாம். தீர்த்தத்துக்கு தெளிக்கிற தண்ணிய விட கம்மியா இருந்த ஒரு வாட்டர் பாட்டில் மட்டும் ப்ரீயாம். "எசுகுச்மீ. டூ வான்ட் எனிதிங்"னு என்னை கேட்டா ஒருத்தி. 'ஒரு வெங்காயமும் வேண்டாம். போய்டு'ன்னு மனசுல வச்சிக்கிட்டு சைலண்டா சைகை காட்டினேன். யோவ் விஜய் மல்லையா.. என் சாபம் உன்னை சும்மா விடாது!
என்னோட லெப்டும் ரைட்டும் செமகட்டு கட்டிட்டு இருந்தானுங்க. வெறுங்கையா இருந்த என்னப்பாத்து லுக்கு வேற. 'பொத்திக்கிட்டு தின்னுட்டு போத்திக்கிட்டு தூங்குங்கடா' மனசாட்சி உருமிச்சி. ஜன்னல் ஓரத்தை எட்டிப்பாத்தா மும்பை நெருங்க ஆரம்பிச்சது. சாரி நாங்க மும்பைய நெருங்கினோம். நீளமான மெயின்ரோட் லைட் வெளிச்சத்தை மேல இருந்து பாத்தா அனகோண்டா பாம்பு டிஸ்கோ ட்ரெஸ் போட்ட மாதிரி தக தகன்னு ஒளிருச்சி. டக்கர் பீலிங். இறங்குரப்ப கூட சீட் பெல்ட் மக்கர் பண்ண, முதல்ல ஹெல்ப் பண்ண லெப்ட் சைட் அண்ணன் முறச்சிகிட்டே கழட்டி விட்டாரு..பெல்ட்டையும் என்னையும். ஒரு வழியா மும்பை வந்தாச்சி!
மும்பை அனுபவங்கள்...அடுத்து வரும் பதிவில்.
............................................................................
My other site:
............................................................................
சமீபத்தில் எழுதியது:
............................................................................
12 comments:
மாப்ள நல்ல அனுபவம்யா...அதுவும் சோறு போடுவாங்கன்னு நெனச்சி இருந்த எனக்கு முட்ட கலந்த ஒரு சோத்த கொடுத்து கொன்னா பாரு தாய் ப்ளைட்ல இன்னமும் @@@ வருத்துய்யா....நல்லா சொல்லி இருக்க உன் அனுபவத்தை நன்றி!
முன்னாடி சோறு போட்டாங்க மாப்ள..போன ரிசசன் டைம்ல தான் நிப்பாட்டிட்டாங்க..சில நேரம் அந்த சாண்ட்விட்ச் உவ்வே ரகமாத்தான் இருக்கும்..அதனால கவலைப்படாதீங்க.
மாப்ள.. நெறைய பல்பு போல..அப்புறம் எங்கதான் பொய் சாப்ட்ட?
@ விக்கி உலகம்
தாய் ப்ளைட்ல தாய் பாசத்தோட நல்லசோறு போடாதது ரொம்ப தப்பு மாம்ஸ்!
@ செங்கோவி
மல்லையாவை மல்லாக்க போட்டு அடிக்கணும்.
@ "தீவிர தி.மு.க. விசுவாசி" கருன்
தல, நீங்க இன்னும் நில அபகரிப்பு கேஸ்ல உள்ள போகாம வெளிலதான் இருக்கீங்களா. சிங்கம்லே!!
வாட் நெக்ஸ்ட்?
தெரிஞ்சிருந்தா கையில் ஒரு புளியோதரைப் பொட்டலம் எடுத்துப் போயிருக்கலாம்!
சுவாரஸ்யம்!
தீர்த்தத்துக்கு தெளிக்கிற தண்ணிய விட கம்மியா இருந்த ஒரு வாட்டர் பாட்டில் மட்டும் ப்ரீயாம். "எசுகுச்மீ. டூ வான்ட் எனிதிங்"னு என்னை கேட்டா ஒருத்தி. 'ஒரு வெங்காயமும் வேண்டாம். போய்டு'ன்னு மனசுல வச்சிக்கிட்டு சைலண்டா சைகை காட்டினேன். யோவ் விஜய் மல்லையா.. என் சாபம் உன்னை சும்மா விடாது!
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....சிரிச்சு முடியல.
வணக்கம் நண்பா இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதல் வருகின்றேன் உங்கள் வலைப்பதிவு தலைப்பு மற்றும் அதன் விளக்கங்கள் அட்டகாசம்.அதிலும் ”வந்தாரை வாழவைக்கும் சென்னை”
உண்மையான வரிகள்
இனி தொடர்ந்து வருவேன் உங்கள் தளத்திற்கு.
///நேரம் ஆக ஆக வயிறு 'கிய்யா மிய்யான்னு கத்த ஆரம்பிச்சது. பசி. நாலாயிரம் ரூவா குடுத்து டிக்கட் எடுத்துருக்கோம். கண்டிப்பா ஓசி சோறுதான்னு நம்பி இருந்தேன். ஆனா வெம்ப வச்சிட்டாளுங்க அழகிய ராட்சசிங்க. எல்லாரும் கைல இருந்த 100, 500 ரூவா நோட்டை புரணிவித்தைக்காரன்கிட்ட குடுக்கற மாதிரி தந்தாத்தான் சாண்ட்விச்சு, 'கோக்'னு தள்ளுவண்டில இருந்து எடுத்து தருவாங்களாம். தீர்த்தத்துக்கு தெளிக்கிற தண்ணிய விட கம்மியா இருந்த ஒரு வாட்டர் பாட்டில் மட்டும் ப்ரீயாம். "எசுகுச்மீ. டூ வான்ட் எனிதிங்"னு என்னை கேட்டா ஒருத்தி. 'ஒரு வெங்காயமும் வேண்டாம். போய்டு'ன்னு மனசுல வச்சிக்கிட்டு சைலண்டா சைகை காட்டினேன். யோவ் விஜய் மல்லையா.. என் சாபம் உன்னை சும்மா விடாது! //
சிரிச்சு சிரிச்சு தாங்கமுடியவில்லை
முதல் அனுபவம் மறக்க முடியாது...
muthal muraiyaga virundhil pankerkiren vazhthukkal arumaiyan virundhu. tamil typing katrukollathatharku ippothu than varutha padukiren.
Post a Comment