CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 17, 2011

மும்பையில் ஓர் நாள் - 1


டம்ளர் சிறுசா போச்சி:

                                                   மும்பை விமான நிலையம்   
                                                                    
மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் நண்பர்கள் சிலர் தங்கள் பைகளை இன்னொரு நண்பனிடம் தந்துவிட்டு முகம் கழுவ ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தனர். நானும் என்னிடம் இருந்த பையை கீழே வைத்துவிட்டு உள்ளே செல்ல முற்படுகையில் இரு கைகளில் பல பைகளை தாங்கிய நண்பன் அலறினான். "இங்க குண்டு வச்சி ஒரு வாரம் கூட ஆகல. இப்படி தனியா பைய வச்சிட்டு போறியே" என்று அலெர்ட் செய்தான். எல்லா ஊரும் நம்ம ஊரு மாதிரி என்று நினைத்த என் ட்யூப் லைட் மூளை அப்போதுதான் சுதாரித்தது. பையுடனே முகம் கழுவ சென்றேன்.  

அலுவல் விஷயமாக ஒருநாள் மட்டுமே தங்க வேண்டி இருந்ததால் உடனே ஆட்டோ பிடித்து அலுவலகம் உள்ள இடம் நோக்கி விரைந்தோம். மும்பையிலும் ஆட்டோ கட்டணம் சென்னை போல் அநியாயமாக இல்லை. சில மணிநேரத்தில் வேலை முடிந்ததும், வாசலில் இருந்த செக்யூரிட்டிகளிடம் பேச்சு குடுத்த என் நண்பன் அவர்களுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட, கடைசி வரை அவர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை. அனைவரையும் சந்தேகிக்கும் நிலைக்கு மும்பை மக்கள் வந்துவிட்டனரென அவர்கள் கூறினார்கள். காலை 4 மணிக்கே தெருவோரத்தில் பஜ்ஜி போட்டுக்கொண்டு இருந்தனர். 6 ரூபாய்க்கு மெகா சைசில் சுவையான பஜ்ஜி. வாழ்க!!

சுற்றிப்பார்க்க நேரம் குறைவாக இருப்பதால் ஜூஹு கடற்கரைக்கு மட்டும் செல்லலாம் என்று முடிவு செய்தோம். (துர்) அதிர்ஷ்டவசமாக 4 ஸ்டார் ஹோட்டலை புக் செய்து இருந்தது அலுவலக நிர்வாகம்.  என்னுடன் தங்கிய அதிகாரி கதவை திறக்க சாவியை உபயோகிக்காமல் கிரெடிட் கார்ட் மாதிரி ஒன்றை ஒரு இடுக்கில் சொருகினார். கதவு திறந்தது. என்னடா இது அதிசயம் என்று பார்த்தவாறு உள்ளே சென்றேன். ஏன்னா,  நான் சாதா ஹோட்டல்ல சாதா தோசை சாப்புடறதே வருசத்துக்கு ஒரு தரம்தான்.

                                              எவன்டா உன்ன கண்டுபிடிச்சான்

"சீக்கிரம் குளித்து விட்டு வா" என்றார் உயர் அதிகாரி. அங்குதான் விதி என் முன் கதக்களி ஆடியது. குளியல் அறைக்குள் நுழைந்ததும் தண்ணீருக்காக வாஷ் பேசின் அருகே இருந்த எவர்சில்வர் பிடியை திருகினேன். பருப்பு வேகவில்லை. அதனருகில் இன்னொரு பிடி இருக்க அதையும் திருகிப்பார்த்தேன். ம்ஹூம். என்னடா கொடுமை இது என்று சற்று தள்ளி இருந்த இடத்தை பார்த்தால் பாத் டப் இருந்தது. இதில் குளிக்க முயற்சிப்போம் என்று அங்கிருந்த குழாயை திருகினால் வெந்நீர் வெகு வேகமாக கொட்டியது.

நல்லவேளை இதில் குளித்திருந்தால் தோல் வெந்து உரிந்த கோழி போல் ஆகி இருப்பேன். என்னுள் இருந்த எரிமலை எகிற ஆரம்பித்தது. என்னங்கடா உங்க ஸ்டார் ஹோட்டலு. இந்த லேட்டஸ்ட் டெக்குனாலஜியை எல்லாம் எவன்டா கேட்டான். ஒரு பக்கெட்டு, ஒரு மக், சாதாரண குழாய வச்சா உங்க லட்சியத்துக்கு எதுனா இழுக்கு வந்துருமா என வெம்பியவாறு மீண்டும் ஒருமுறை குழாயை திருகினேன்.அப்பாடா! மிதமான குளிர்நீர் வாஷ்பேஷினில் கொட்டியது. நான் 'தலைவர் ரித்தீஷ்' சைசில் இருந்தால் கூட வாஷ்பேஷினில் உட்கார்ந்து குளித்து விடலாம். அதற்கும் வழி இல்லை. என்ன செய்யலாம். மக் இல்லையே...

அப்போதுதான் 'மக்'கின் ஒன்று விட்ட தம்பி உருவில் இருந்த கண்ணாடி டம்ளர் கண்ணில் பட்டது. வாஷ்பேஷினை திறந்து அந்த டம்ளரில் தண்ணியைப்பிடித்து குளிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளானேன். குறைந்தது அறுபது டம்ளர் தண்ணீரை பிடித்து.. பிடித்து...பிடித்து நீராடுவதற்குள் மண்டை காய்ந்தது நனைந்தது. பல்வேறு வகையான வாசனை  புஷ்பங்களை கொண்ட அரண்மனை குளியல் அறையில் ஒரு இளவரசி குளித்தால் கூட சீக்கிரம் வந்துவிடுவாள். அதைவிட பல நிமிடங்கள் தாண்டி குளிக்க வேண்டிய நிலை. நான் என்ன செய்வேன்..டம்ளர் சிறுசா போச்சி!!

நீதி:

முதல் முறை நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் அன்பர்கள் 'டேய் டேய் செகப்பு சட்ட' 
என்று கத்தாமல் அங்கு வேலை செய்யும் ஆளை அழைத்து எப்பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என அறிந்து கொள்ளுதல்/கொல்லுதல் நலம்.


எப்பொருள் ஸ்டார் ஹோட்டலில் தென்படினும் அப்பொருள்
எப்படி வேலை செய்யும் எனக்கேட்பதே அறிவு!

                                                               
மும்பை அந்தேரி பகுதியின் பிரதான ரோடுகள் அழுக்காகத்தான் இருந்தன. சென்னை எவ்வளவோ மேல். மும்பையில் இருந்து எப்படி இவ்வளவு அழகான பெண்களை நம் ஊர் இயக்குனர்கள் பிடித்து வருகிறார்கள் என்பதற்கு விடை எனக்கு அன்றுதான் கிடைத்தது. ஆட்டோவில் பயணம் செய்கையில் பேருந்து  நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்களை (தற்செயலாக) பார்த்தபடி சென்று கொண்டிருந்தேன்). சென்னையில் 10 - க்கு 2 இளம்பெண்கள் என்றால் மும்பையில் 10 - க்கு 7 பேர் ஹீரோயின் போல தகதகவென மின்னினார்கள்.

அந்த (நல்ல) நேரம் பார்த்து நண்பன் விடுத்த எச்சரிக்கை ஒன்று நினைவிற்கு வந்தது: "டேய். நம்ம ஊர் மாதிரி கிண்டல் பண்ணா மும்பை பொண்ணுங்க கண்டுக்காம இருப்பாங்கன்னு நினச்சிடாத(அடப்பாவி. நான் பரம யோக்யண்டா). செம (விவ)காரமான பொண்ணுங்க. போன வருஷம் இப்படித்தான் ஒரு நாள் நான் மும்பை பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். ரவுடி பசங்க ஒரு பொண்ணை நக்கல் பண்ணிட்டு இருந்தானுங்க. அதுல ஒருத்தன் நல்ல ஹைட். இந்த பொண்ணு குள்ளமா இருந்தாலும் அவளுக்கு வந்த கோவத்துக்கு அவனை எகிறி எகிறி கன்னத்துல அறைஞ்சா. அவனுக்கு செவுலு அவுலு உட்டுக்கிச்சி" என்றான். மும்பைக்கு முதல் தரம் போற இளந்தாரிங்க உஷாருப்போய். சொல்லிப்புட்டேன்!!
............................................................................................................

அடுத்த பதிவில்:

ஜுஹூ கடற்கரையில் நான் சந்தித்த மும்பைவாசி..
..................................................................

தொடர்புடைய பதிவுகள்:


எனது முதல் விமான அனுபவங்கள் - 1


எனது முதல் விமான அனுபவங்கள் - 2
..................................................................


My other site:
nanbendaa.blogspot.com
................................................................

சமீபத்தில் எழுதியது:

அன்னாவிடம் காங்கிரஸ் இன்னிங்க்ஸ் தோல்வி!?
.............................................................


                

15 comments:

கவி அழகன் said...

சுவாரசியமா இருக்கு மச்சி

Unknown said...

ஹிஹி அனுபவம் களை கட்டுது!!

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவி எங்க ஏரியாவுக்கு வந்துட்டு என்னை பார்க்காம [[பயந்து ஹி ஹி]] போனதுக்கு எனது மிக மெகா கண்டனங்கள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மும்பை ரோடு ஒரு நாளும் உருப்படாமதான் இருக்கும் ஹி ஹி...ஹைவே சூப்பரா இருக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

செமையா பல்பு வாங்கியிருக்கார் ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

உலக பதிவுலக வரலாற்றில் டம்ளரில் குளித்த ஒரே பதிவர் நீதான்யா...ஹே ஹே ஹே ஹே ஹே....

நிரூபன் said...

மும்பைக்குப் போய், நவீன தொழில்நுட்பக் குளியலறையின் மூலம் நொந்து நூலாகிய அனுபவங்கள்..எமக்கும் ஓர் பாடமாக இருக்கட்டும்,
நவீன குறள் விளக்கம் சூப்பர் மச்சி,

அனுபவப் பதிவினை அசத்தலாக எழுதியிருக்கிறீங்க.

ஆமினா said...

//செம (விவ)காரமான பொண்ணுங்க. //
உண்மை தான்...
பஸ்ஸில் பயணப்படும் போது யாராவது பசங்க லேடிஸ் சீட்ல உக்காந்தா போதும் பயப்படாமலேயே கத்த ஆரம்பிச்சுட்டுறாங்க...

RVS said...

சென்னைக்கு 2/10 ம் மும்பைக்கு 7/10 ம் மார்க் போட்ட உங்களுக்கு சென்னையில் எந்த பிகரும் மாட்டாமல் போகக்கடவது என்று சாபமிடுகிறேன்!!

தாய் மண்ணே வணக்கம். :-))

Unknown said...

ஹி ஹி அப்புறம் ???

Anonymous said...

மும்பை சென்றதில்லை...அடுத்த பதிவில்...படங்கள் இணைப்பீர்கள் தானே...

rajamelaiyur said...

அருமையான எழுத்து நடை

rajamelaiyur said...

அருமை

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

@ ஆமினா

நன்றி சகோ!!

Related Posts Plugin for WordPress, Blogger...