CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 3, 2011

எனது முதல் விமான அனுபவங்கள் - 1


யுவர் அட்டென்சன்  ப்ளீஸ்:

இதுவரை ப்ளைட்ல போகாத மக்களை மனதில் கொண்டு எழுதியதுதான் இந்தப்பதிவு. அடிக்கடி சரக் சரக்னு வெளிநாடு போன நண்பர்களுக்கு இது வெகு சுமாரான பதிவாக இருக்குமென அபாய சங்கு ஊதுகிறேன்!
  

பொறந்துல இருந்து நமக்கு சென்னைதான் உலகமே. மிஞ்சிப்போனா நாலஞ்சி தரம் திருப்பதி போயிருப்பேன். கூட சுத்துன பயலுவ எல்லாம் வேலை கெடச்சதும் ஏகப்பட்ட நாட்டுக்கு போயி சுத்திட்டு வந்து போட்டோவை காட்டி காண்டு ஏத்துவானுங்க. போன வருஷம் அமெரிக்கா போக கெடச்ச சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸு. 'இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். ஆபீஸ்ல அனுப்பாட்டியும் சொந்த காசுல ஏரோப்ளேன் ஏறி வெளிநாடுக்கு போயி தீரணும்'னு முடிவோட இருந்தப்ப போன வருஷம் உயர் அதிகாரி என்கிட்டே வந்து "பெங்களூர் போவ ரெடியா இருங்க"ன்னு சொன்னாரு. சகலைங்க எல்லாம் "நம்ம கம்பெனில ப்ளைட்லதான் அனுப்புவாங்க"ன்னு டெவெலப் செஞ்சானுங்க. மீனம்பாக்கம் போற ப்ளைட்டை அண்ணாந்து பாத்த நமக்கு அடிச்சதுடா யோகம்னு பாத்தா 'பஸ்லதான் போறோம்'னு சொல்லி நெனைப்புல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டாங்க. 

போனவாரம் ஒரு அதிகாரி வந்து "ப்ளைட்ல மும்பை போவ ரெடியா இருங்க"ன்னு சொன்னாரு.  பப்பரப்பேனு பறக்கப்போறோம்னு மனசுல லேசா ஒரு சந்தோஷம். கூட இருந்த தோஸ்து "நம்ம ஆபீஸ்ல ஏர் இந்தியா ப்ளைட்தான் மாப்பு. ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் ஒன்லி ஆண்டீஸ்" ன்னு வவுத்த கலக்குனான். கிங்க்பிஷர்ல போறவன்தான் கொடுத்து வச்சவன். சிலை மாதிரி பொண்ணுங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். நமக்கு அந்த வாய்ப்பு இல்லையேன்னு கண்கலங்கி இருந்தப்ப ஒரு வாரம் கழிச்சி அதிகாரி வந்து சொன்னாரு பாருங்க ஒரு சேதி.."கிங்க்பிஷர்"ல போறோம்னு அப்பதான் கண்ணு பிரகாசமா தெரிஞ்சுது.

பிளைட் அனுபவம் நமக்கு சுத்தமா இல்லாததால, கூட வந்த 5 பேரோட கைப்புள்ள மாதிரி பவ்யமா கார்ல ஏறி மீனம்பாக்கம் போய்ட்டு  இருந்தேன். "காமராஜ் ஏர்போர்ட் போங்க"ன்னு நண்பர் டிரைவர் கிட்ட சொன்னார். "சென்னைல அண்ணா ஏர்போர்ட்தான..இது என்ன புதுசா"ன்னு கேட்டேன். "உள்நாட்டு விமானம் வந்து போற இடம்"ன்னு சொன்னார். முதல் பல்ப். ப்ளைட்டை நெருங்கும்போது NDTV மேடம் பர்கா தத் கண்ல பட்டாங்க. கூட வந்த அதிகாரி அடுத்த குண்டை போட்டாரு. "ஜன்னல் பக்கத்துலதான் உக்காருவேன்னு ஸ்கூல் பசங்க மாதிரி யாரும் அடம் பிடிக்கப்படாது". ஆனா நான் மல்லுக்கு நின்னேன்: "சாரிங்க. நீங்க எல்லாம் ஒலகம் புல்லா சுத்தி இருக்கீங்க. எனக்கு இதுதான் முதல் அனுபவம். வெட்டுகுத்தே நடந்தாலும் சரி நான் ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன்"ன்னு சொல்லிட்டேன். அவங்களும் என் கோரிக்கைய ஏத்துகிட்டாங்க. ஆனா விதி செஞ்ச சதி இருக்கே...........

                                                 என்னுடன் பறந்த தேவதைகள் 

ப்ளைட் உள்ள போயி நம்பரை பாத்தா எனக்கு நடு சீட். கிங்க்பிஷர் சிகப்பை விட அடர்த்தியா என் ரத்தம் கொதிச்சது. மத்த அஞ்சி பேர்ல யாராவது ஒருத்தர் கண்டிப்பா ஓர சீட்ல இருந்தா அவங்களை கிளப்பிட்டு நாம உக்காரலாம்னு பாத்தா அவங்க எல்லாருக்கும் அதே நடு சீட். இதுக்கு நான் பாதயாத்திரையாவே மும்பைக்கு போயிருப்பனே பரம்பொருளே. உச்ச கட்ட வெறில  சீட்ல குந்துனேன். அப்பதான் மேல இருக்குற படத்துல லெப்ட் ஓரம் இருக்குற ஆண்ட்டி வந்து வணக்கம் சொன்னாங்க. (இந்தப்படம் கூட கூகுள்ள தேடுனப்ப லக்குல கெடச்சது). விஜய் மல்லையா சாச்சிபுட்டாறேன்னு டென்சன் ஆனப்ப ரைட் ஓரத்துல இருக்கே அந்த பொண்ணு எட்டிப்பாத்தா.  'பளீர்'னு ஒரு பொண்ணும் கூட இல்லையான்னு இறைவன ஜ(ச)பிச்ச அடுத்த நிமிஷம் போட்டோ நடுவுல இருக்கற பொண்ணு என்ட்ரி குடுத்துச்சி. அப்பாடா!!

சினிமால பாக்குற மாதிரி சீட்பெல்ட் போடத்தெரியாம அசடு வழியவே கூடாதுன்னு சபதம் எடுத்து இருந்தேன். முடியல. பக்கத்துல இருந்தவர் ஹெல்ப்போட அதை மாட்டிக்கிட்டேன். லெப்ட் சைட் ஆண்ட்டி வந்து சைகையால கைய அசைக்க அவங்களுக்கு யாரோ டப்பிங் குடுத்தாங்க. ப்ளைட் தண்ணில விழுந்தா (உங்க நாக்கை நாலு அஞ்சி தரம் ஷேவ் பண்ணி தொலைங்கடா)  எப்புடி எஸ்கேப் ஆவணும், மூச்சு நின்னு போனா(அடங்கோ) எப்படி சமாளிக்கனும்னு டிப்ஸ் குடுத்தாங்க. 

ப்ளைட் ஸ்டார்ட் ஆகி  கொஞ்ச நேரம் தரைலயே கோலம் போட்டுட்டு இருந்துச்சி.  நைட் எட்டே முக்கா ஆனதும் ஜொய்யுனு பறக்க ஆரம்பிச்சது. ஜன்னல் ஓரம் இருந்தா இயற்கையை வேடிக்கை பாக்கலாம்.   இடது ஓரம் இருந்தா ஏர் ஹோஸ்டசை பாத்து பரவசம் அடையலாம். ரெண்டும் இல்லாம இப்படி நடுவுல மாட்டிக்கிட்டனே...எவன் வச்ச செப்புத்தகடோ?


ப்ளைட்டில்  பல்ப் வாங்கிய அனுபவங்கள் தொடரும்...  

...........................................................

My other site:

............................................................
  
சமீபத்தில் எழுதியது:

..............................................................


                                                                  

32 comments:

idroos said...

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள.. கலகிட்டரா,,

செங்கோவி said...

இதுவரை ப்ளைட்ல போகாத மக்களை மனதில் கொண்டு எழுதியதுதான் இந்தப்பதிவு.

//அடிக்கடி சரக் சரக்னு வெளிநாடு போன நண்பர்களுக்கு இது வெகு சுமாரான பதிவாக இருக்குமென..//

அப்படில்லாம் இல்லைய்யா..சூப்பரா இருக்கு.

செங்கோவி said...

//"நம்ம ஆபீஸ்ல ஏர் இந்தியா ப்ளைட்தான் மாப்பு. ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் ஒன்லி ஆண்டீஸ்" ன்னு வவுத்த கலக்குனான். //

ஆண்டிங்க கூடஒப் பரவாயில்லையே..பாட்டிய்யா..பாட்டி!

! சிவகுமார் ! said...

//ஐத்ருஸ் said...

அடுத்த பகுதியை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்//

விரைவில் பதிவிடுகிறேன் ஐத்ருஸ்.

! சிவகுமார் ! said...

@கருன்

நன்றி வாத்யாரே!

! சிவகுமார் ! said...

@செங்கோவி

பாட்டியா.. நல்லவேளை நான் எஸ்கேப்!!

Chitra said...

ப்ளைட் தண்ணில விழுந்தா (உங்க நாக்கை நாலு அஞ்சி தரம் ஷேவ் பண்ணி தொலைங்கடா) எப்புடி எஸ்கேப் ஆவணும், மூச்சு நின்னு போனா(அடங்கோ) எப்படி சமாளிக்கனும்னு டிப்ஸ் குடுத்தாங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

rajamelaiyur said...

Good post

Katz said...

haa haa nice.

Anonymous said...

ஹிஹி எனக்கும் உந்த அனுபவம் உண்டு, அதோட ஜன்னல் பக்கமாக இருப்பது பிளைட் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு எழும்பும் மட்டும் ரசனையை இருக்கும். அதன் பின்னர் எல்லாமே வெள்ளையாய் தான் தெரியும் ))
முக்கியமா பிளைட் வெளிக்கிட முன்னர் ஒரு தற்காப்பு அறிவுப்பு விட்டு அந்த கழுத்தில கொளுவுறதெல்லாம் செய்து காட்டுவார்களே, அப்பவே எனக்கு வயித்த கலக்க வெளிக்கிட்டுவிடும் ஆனா இப்ப எல்லாம் பழகிப்போச்சு))

Unknown said...

மாப்ள பிளைட் ஜிவ்வுன்னு எழும்பும்போது கீழ இருந்து ஒரு பல்பு மேல வருமே...அத விட்டுட்டியே ஹிஹி!...இங்கயும் வந்துடுசிய்யா இந்த கம்பெனி பிளைட்டு ஹிஹி!

! சிவகுமார் ! said...

@சித்ரா

பக்கத்து தெருவுக்கு ஷாப்பிங் போற மாதிரி அடிக்கடி ஏரோப்ளேன்ல போற சித்ரா மேடம். வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ en rajapattai

Thanks Raja.

! சிவகுமார் ! said...

@ Katz.

Thank you Katz!

! சிவகுமார் ! said...

கந்தசாமி. said...

//அப்பவே எனக்கு வயித்த கலக்க வெளிக்கிட்டுவிடும் ஆனா இப்ப எல்லாம் பழகிப்போச்சு)//

வயித்த கலக்குறது பழகிப்போச்சா? அய்யய்யோ!!

! சிவகுமார் ! said...

@ விக்கி

நானே நடு சீட்ல குந்திக்கிட்டு வந்தேன். பல்ப் எரியறதை எப்படி பாக்க மாம்ஸ்!

சுதர்ஷன் said...

//கிங்க்பிஷர் சிகப்பை விட அடர்த்தியா என் ரத்தம் கொதிச்சது.// ஹ ஹ . அனுபவம் அழகானது :)

ஆமினா said...

செம கலக்கல் பதிவு

அங்கே நான் வாங்கிய பல்ப் ஞாபகப்படுத்துச்சு :)

MANO நாஞ்சில் மனோ said...

என்ன மக்கா நீர், நான் மும்பை ஏர்போர்ட் பக்கத்துலையே இருக்கேன்னு எத்தனை முறை சொல்றது, நான் ஏர்போர்ட் வந்து உம்மை பாத்துருப்பேன்ல...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் சாப்பிடும் போதாவது பெல்ட்டை கழற்றுநீங்களா......?

MANO நாஞ்சில் மனோ said...

நடுவுல உக்காந்து சொம்பு பலமா நசுங்கிருச்சோ ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது குத்திட்டோம்ல....

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யம்!தொடருங்கள்!

! சிவகுமார் ! said...

S.Sudharshan said...

//கிங்க்பிஷர் சிகப்பை விட அடர்த்தியா என் ரத்தம் கொதிச்சது.// ஹ ஹ . அனுபவம் அழகானது :)

நன்றி சுதர்சன்!

! சிவகுமார் ! said...

@ ஆமினா

குட்டி ஹீரோ போட்டோவை மாத்திட்டீங்களா..

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ஏழாவது குத்திட்டோம்ல.//

குத்துன கத்தில இருக்குற ரத்தத்தை உடனே துடைச்சிடுங்க தலைவா!!

! சிவகுமார் ! said...

MANO நாஞ்சில் மனோ said...

//என்ன மக்கா நீர், நான் மும்பை ஏர்போர்ட் பக்கத்துலையே இருக்கேன்னு எத்தனை முறை சொல்றது, நான் ஏர்போர்ட் வந்து உம்மை பாத்துருப்பேன்ல//

அவசர வேலை. ஒரு நாள் மட்டும்தான் அங்க இருந்தேன். சீக்கிரம் மீட் பண்ணுவோம் BOSS!!

! சிவகுமார் ! said...

// MANO நாஞ்சில் மனோ said...
யோவ் சாப்பிடும் போதாவது பெல்ட்டை கழற்றுநீங்களா......//

சாப்பிடும்போது ஒரு கைல எப்பிடிங்க பெல்ட்ட கழட்ட முடியும்?

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
நடுவுல உக்காந்து சொம்பு பலமா நசுங்கிருச்சோ ஹி ஹி..//

ப்ளைட்ல ஏதுங்க சோம்பு? வாட்டர் பாட்டில்தான்...ஹே..ஹே..

! சிவகுமார் ! said...

@ சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி சார்!

! சிவகுமார் ! said...

This comment has been removed by the author.

Related Posts Plugin for WordPress, Blogger...