Zoya, Javed and Farhan Akthar
ரோட் ட்ரிப் படம் என்பதால் ஜாலியாக மட்டும் இருக்கும். லாஜிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பொழுதுபோக்குக்கு கியாரண்டி தந்தாலே போதும் என்று எண்ணினால், அதையும் தாண்டி சென்சிபில் ஆகவும் படம் ஆக்கி உள்ளார் (பெண்) இயக்குனர் ஜோயா அக்தர். இந்தியாவின் தலைசிறந்த கதை மற்றும் பாடலாசிரியரான ஜாவெத் அக்தரின் புதல்வி. அது மட்டுமல்ல. பாலிவுட்டில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என சகலகலா வல்லவராக இருக்கும் பரான் அக்தருடன் பிறந்த ட்வின் சிஸ்டர். இப்படத்தின் பாடல் மற்றும் கவிதைகளை எழுதி இருப்பவர் ஜாவெத் அக்தர். தயாரிப்பும் இவர்களுடையதுதான்.
கபீர்(அப்பே தியோல்), இம்ரான் (பரான் அக்தர்), அர்ஜுன் (ஹ்ரித்திக் ரோஷன்) மூவரும் நண்பர்கள். திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சியை கொண்டாட ஸ்பெயினில் ரோட் ட்ரிப் செல்ல முடிவெடுக்கிறான் கபீர். தன் தாயை விட்டுப்பிரிந்த தந்தை(நஸ்ருதீன் ஷா) ஸ்பெயினில் இருப்பதால் இம்ரான் ஸ்பெயின் செல்ல சரி என்கிறான். பொருள் ஈட்டுவதே வாழ்வில் பிரதானம் என எண்ணும் அர்ஜுன் முதலில் தயங்கினாலும் பிறகு ரோட் ட்ரிப்புக்கு சம்மதிக்கிறான். அங்கே அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்டர் ஆக அறிமுகம் ஆகிறார் கத்ரீனா கைப். ட்ரிப் முடிகையில் மூவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதே கதை.
ஸ்பெயின் தேசத்து நவீன கட்டிடங்கள் மற்றும் நகரங்களை தவிர்த்து விட்டு, ரோட் ட்ரிப் படத்திற்கு தேவையான இடங்களை மட்டும் தேர்வு செய்து இருப்பதை பாராட்ட வேண்டும். பிரசித்தி பெற்ற தக்காளி திருவிழா, ஸ்கை டைவிங், பாம்ப்லோனா நகரில் நடக்கும் ‘Bull Running’, கடல் சாகசம் என பல்வேறு காட்சிகளை அழகாக படம் ஆக்கியுள்ளனர். ஸ்கை டைவிங் காட்சியில் மூவரும் அந்தரத்தில் மிதக்கும் காட்சி பரவசத்தின் உச்சம். முன்னணி நட்சத்திரங்களாக இருப்பினும் கதைக்கு தேவையான அளவு மட்டும் நடித்துள்ளனர் ஹ்ரிதிக்கும், காத்ரீனாவும். ‘பேரழகி காத்ரீனா ஸ்க்ரீனில் வந்தாலே போதும் ரசிகர்களுக்கு’ என்று சும்மாவா சொன்னார்கள். ‘ஸ்டீலிங் தெ ஷோ’ என்பார்களே, அதுபோல இப்படத்தில் கலக்கி இருப்பவர் பரான் அக்தர். படம் நெடுக நகைச்சுவை ஜாலம் செய்திருக்கிறார்.
இப்படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு பின்னணி இசையை சாரும். இசை மும்மூர்த்திகள் சங்கர் – எஷான் – லாய் ஆகியோருக்கு ஹாட்ஸ் ஆப். செயற்கையான ஒளிகளை திணிக்காமல் ஸ்பெயினை சுற்றிக்காட்டி உள்ளார் அயல்நாட்டு ஒளிப்பதிவாளர் கார்லஸ் (உலக சினிமா ஒளிப்பதிவர்களுக்கான விழாவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்). படம் முடிந்ததும் அதில் வேலை செய்தவர்கள் லிஸ்ட்டை சில கிலோமீட்டர் நீளத்திற்கு போட்டனர். மிகப்பெரிய வெளிநாட்டு டீம் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுடன் உழைத்திருக்கிறது. அதற்கு கிடைத்த வெற்றிதான் Zindagi Na Milegi Dobara படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன். அழகிய ஸ்பெயின், நல்ல பொழுதுபோக்கு, மிகையில்லா நடிப்பு, அர்த்தமுள்ள வசனங்கள் என அனைத்தையும் கலந்த ஒரு படம் பார்த்த நிறைவு.
இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் வித்யாசமாக வடிவமைத்து உள்ளனர். அதை பார்க்க இங்கு ‘கிளிக்’ செய்க: ZNMD
Zindagi Na Milegi Dobara - பரவசமான ஸ்பெயின் ட்ரிப்!
.....................................................................................................
ஜாவெத் அக்தர்:
Zindagi Na Milegi Dobara படத்தில் ஆங்காங்கு தன் கவித்திறனால் வசீகரித்த ஜாவெத் அக்தர் பற்றி சில வரிகள் சொல்லவேண்டும். 1971 இந்தியா பாகிஸ்தான் போரை மையமாக கொண்டு வெளிவந்த மெகாஹிட் படமான ‘பார்டர்’ ரிலீஸ் ஆன சமயம். சென்னை மெலடி தியேட்டரில் பார்த்தேன். (ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்). அதில் வரும் இரண்டு பாடல்கள் கண்களில் நீரை எட்டிப்பார்க்க வைத்தன.
முதல் பாடல் ‘சந்தேசே ஆத்தே ஹை’. போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள் தம் குடும்பத்தை எண்ணி பாடும் பாடல். ‘இல்லத்திற்கு எப்போது வருவாய்’ என கேட்டு குடும்பத்தினர் அனுப்பும் மடலை மையப்படுத்தி எழுதி இருக்கிறார் ஜாவெத் அக்தர்.
அந்தப்பாடல்:
மற்றொரு பாடலில், போரில் இறந்து பாகிஸ்தான் வீரர்களை பார்த்து இந்திய ராணுவ வீரன் சகோதரத்துவத்துடன் பாடும் ‘மேரே துஷ்மன் மேரே பாய்’ வரிகள் இரு தேசங்களை இணைக்கும் இதயப்பாலம்.
அந்தப்பாடல்:
அப்போது ஹிந்தி சினிமா எனக்கு பரிச்சயம் இல்லாத காலகட்டம். மீண்டும் பார்க்கத்தூண்டிய படமாக ‘பார்டர்’ இருந்ததால் அப்போதுதான் இவ்விரு உன்னதமான பாடல்களை எழுதியவர் ஜாவெத் என்று தெரிந்து கொண்டேன். நாற்பது ஆண்டு காலம் தன் எழுத்தால் திரையுலகில் கொடிகட்டிப்பறக்கும் அக்தரின் பேனா பிடிக்கும் கைக்கு முத்தங்களை தந்து விடைபெறுகிறேன். நன்றி!!
.........................................................
My other site:
........................................................
சமீபத்தில் எழுதியது:
...........................................................
7 comments:
இரு படங்கள் பற்றியும்,சம்பந்தப்பட்ட மனிதர்கள் பற்றியும் சுவாரஸ்யமான பகிர்வு.
இந்தி படங்களில் கடைசியா ராவன் பார்த்தேன்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.
மாப்பு, அப்போ பார்த்திடலாமா?
வேங்கையை விட நல்லா இருக்குமா?
Thanks for sharing maapla!
நடுநிலமையான விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்
இரு படங்களையும் அலசல் அருமை
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
Post a Comment