CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 11, 2011

ஆரண்ய காண்டம்


                         படத்தின் ரியல் ஹீரோக்கள் 

“டேய். நாங்கள்தான் சொல்றம்ல. ஆரண்ய காண்டம் வேல்ட் சினிமான்னு. பரதேசி. இன்னுமா பாக்காம இருக்க. நாப்பது அடி ஒசர அருவாள எடுத்து ஒரே போடா போட்டுருவேன். ஒழுங்கா போய் பாரு” என்று க்ரூப்பாக ஒரு சில ஒலக சினிமா ரசிகர்கள் என் கனவில் வந்து மிரட்டியதால் அதிர்ந்து போய் எழுந்தேன். 'எதுக்கும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோம். சாமி கண்ண குத்துதோ இல்லையோ. இவங்க சொருகுனாலும் சொருகிடுவாங்க' என்ற படப்பிடிப்பில்.. ச்சே..படபடப்பில் படத்தை பார்த்தேன். 

“சாணக்யா, எது தர்மம்?”ன்னு கேட்டா “எது தேவையோ அதுதான் தர்மம்” அப்டின்னு சாணக்யர் சொன்னதை சிரமேற்கொண்டு படத்தை தொடங்குறார் டைரடக்கர். அவர்(Mr.chanakyar) நல்ல விசயத்துக்கு சொன்னா அதை அப்படியே குறுக்கால வாய்க்கா வெட்டி படம் புல்லா அதர்மம் நடக்குற மேட்டருக்கு ரத்தம் பாய்ச்சி இருக்காங்க.

ஒரு ஊர்ல(மெட்ராஸ்) ஒரு ஐயா (ஜாக்கி செராப்). அவருக்கு கீழ எப்ப பாத்தாலும் கெட்ட வார்த்தை, ஆன்ட்டியை மடக்குறது எப்படி, சாரயம்னு  திரியிற நாலு கொய்யா. அதுல ஒருத்தர் பசுபதி (சம்பத்). கஜேந்திரன் கஜேந்திரன்னு ஒரு பேஜாரான ரவுடி(அட! ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார்). அவருக்கு ஒரு தொம்பி. அவன் பேரு கஜபதி. இவங்களுக்குள்ள வெட்டு, குத்து, துரோகம். அவ்ளதாங்க. இது போதாதுன்னு ஜாக்கி ஐயாவோட அல்லக்கை ‘சப்பை’ ரோலில் ரவிக்ருஷ்ணா. ஜாக்கியாண்ட மாட்டிக்கிட்ட இளம் வயசு பொண்ணு ஒண்ணு. அவங்களுக்குள்ள தனியா ஒரு கசமுசா ட்ராக் வேற.   

படத்துல செம கலக்கு கலக்கி இருப்பது கொடுக்காப்புளி (மாஸ்டர் வசந்த்) பையனும், அவன் அப்பாவும். இருவரின் குரல் உச்சரிப்பும், யதார்த்த நடிப்பும்  தமிழ் சினிமாவிற்கு சிறந்த வரவு. குறிப்பாக கடை போனில் பேசிவிட்டு, தன் தந்தை கிடைக்க மாட்டார் எனும் ஆற்றாமையில் சிறுவன் அழும் சத்தம். அல்டிமேட்.வழக்கமாக தமிழ் சினிமாவில் ரௌடிகள் கத்தியை எடுத்துக்கொண்டு 100 மீட்டர் உலக சாம்பியனை விட வேகமாக தெருத்தெருவாக ஓடுகையில் அவர்களை விட வேகமாக பின்னணி இசை நம் காதை கிழித்துக்கொண்டு பறக்கும். நல்ல வேலை யுவன் காப்பாற்றிவிட்டார். எனக்கு தெரிந்து சண்டை காட்சிகளுக்கு இவ்வளவு மெலடியான ட்யூனை முதன் முறை கேட்கிறேன். மிஸ்கின் படத்தில் வருவது போல உலக சினிமா இசையை அப்படியே (பில்டர்) காப்பி அடிக்காமல், தேவையான இடங்களில் மட்டும் தெளிவாக வாசித்துள்ளார் யுவன். 

                                                                      
என்னதான் டார்க் ரூம் எபக்ட், தென்மேற்கு கேமரா ஆங்கிள், டயட் வசனம் (மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி) எடுத்து என்னதான் பிலிம் காட்டினாலும் படம் ஒன்றும் பெரிதாக இல்லை. இதற்குப்போய் ‘ஆரண்ய காண்டம் – தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா’, ‘கொய்யாலே. இதுதாண்டா உலக சினிமா’, ‘கோடம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல 75 வருசமா காத்திருந்தேன். அந்தா வருது பாரு ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ்’ என்று காதில் பூவுக்கு பதில்  மெகாசைஸ் பொக்கேவை வக்கிறவங்ககிட்ட உஷாரா இருங்கப்போய்!!    

சம்பத் போன்ற திறமைசாலிகளை வித விதமான கேங் படங்களில் பெரும்பாலும் நடிக்க வைத்து என்னத்த சாதிக்கப்போறாங்களோ. நீங்கள் ஆட வேண்டிய களம் பெரிது சம்பத். இந்த வட்டத்தை விட்டு அப்பப்ப வெளில வாங்க. அவன் இவன்ல பாலா ஜமீன்தாரை கிளைமாக்ஸ் காட்சில செம செக்ஸியாக காட்டுறது மாதிரி, இந்தப்படத்துல ஜாக்கி செராப் இடுப்புக்கு கீழ மட்டும் ஒரு இஞ்ச் கிராபிக்ஸ் செய்து மறைத்துவிட்டு, படு செக்ஸியாக காட்டுகிறார்கள். அடப்பாவிங்களா. உங்க யதார்த்த சினிமாவுக்கு ஒரு அளவே இல்லையாடா. கேட்டா “படத்துக்குதான் சர்டிபிகேட் குடுத்து இருக்கே. அப்பறம் நீ ஏண்டா கூவுற” அப்டின்னு கேக்குற தலைங்க சொல்றதும் சரிதான். அதைத்தான் நானும் கேக்கறேன். அந்த ஒரு இஞ்சை கூட ஏன் மறைக்கணும். அதையும் காட்ட வேண்டியதுதான. முழுக் நனஞ்சதுக்கு அப்பறம் மான் மார்க் குடை எதுக்கு? கொஞ்ச வருஷம் முன்னாடி வரை ஈரோயின் இல்லாக்காட்டி கவிர்ச்சி நடிகைங்கதான் எசகு பெசகா வருவாங்க. இப்ப என்னடான்னா ஆம்பளைங்க அவுத்து போட்டுட்டு நடிக்கறாங்க. செய்ங்கடா. நீங்க செய்ங்க. 

மாஸ் ஹீரோ நடிச்ச படத்துல வர்ற பன்ச் டயலாக், மரம்சுத்தி டூயட் இதையெல்லாம் கிண்டல் பண்ணி அவங்கள க்ளோஸ் பண்ணிட்டோம்.  டீசண்டா படம் எடுத்த விக்ரமன் மாதிரி ஆளுங்களையும் அமுக்கிட்டோம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன கதையா, ரௌடிப்படங்க எல்லாம் நல்ல படங்களை விரட்டிட்டு, இப்போ தமிழ் சினிமால பாய் போட்டு படுத்துருச்சி. ம்ஹூம். இது ஆவுரதில்ல!!
...................................................................................

My other site:


.....................................................................................சமீபத்தில் எழுதியது – நண்பேன்டா மிக்சர் கடை 
.......................................................................................


                                                               

8 comments:

சக்தி கல்வி மையம் said...

சாரி பாஸ் நீங்க ரொம்ப லேட்..

Unknown said...

இது என்ன விமர்சனமா இல்ல தாக்குதலா!....சொல்லுய்யா மாப்ள!

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
இது என்ன விமர்சனமா இல்ல தாக்குதலா!....சொல்லுய்யா மாப்ள//

தமிழ் சினிமாவை செல்லரித்துக்கொண்டிருக்கும் வன்முறை வைரஸ்களுக்கு போடப்படும் தடுப்பூசி.

! சிவகுமார் ! said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
சாரி பாஸ் நீங்க ரொம்ப லேட்//

இப்பதான் பக்க முடிஞ்சுது கருன்.

உலக சினிமா ரசிகன் said...

வேங்கை என்ற உலக சினிமா பார்க்கவும்.
ஆரண்ய காண்டம் போன்ற ஸ்லோ மோஷன் படத்துக்கு போய் இருக்கிற அறிவை கெடுத்துக்காதீங்க...

Ramesh said...

" டீசண்டா படம் எடுத்த விக்ரமன் மாதிரி ஆளுங்களையும் அமுக்கிட்டோம்"....

இது உண்மையா நீங்க பீல் பண்ணி சொன்னதா?

bandhu said...

ஆரண்ய காண்டம், பாட்டு இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் ஒன்று இல்லை, மேலும், இதெல்லாம் இல்லாமல் தமிழில் ஒரு படம் எடுக்க முடியும் என்று காட்டிய முதல் படம். இதெல்லாம் இருந்தால் என்ன என்றால், இதெல்லாம் நமது வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் இது ஒரு சிறந்த படம்.

மாய உலகம் said...

வன்முறை வைரஸ்களுக்கு போடப்படும் தடுப்பூசியினால் அந்த வைரஸ் மேலும் பலம்பெறாதா..
rajeshnedveera

Related Posts Plugin for WordPress, Blogger...