CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, July 20, 2011

தெய்வத்திருமகள் - சுட்டது சரியா?                                                                   

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம்,  

வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல நாள் யோசித்து உருவாக்கிய I AM SAM எனும் பார்பி பொம்மைக்கு பொட்டிட்டு, பூச்சூடி கோடம்பாக்க சந்தையில் ‘தெய்வத்திருமகள்’ பொம்மை என பெயர் சூட்டி விற்பனைக்கு விட்டுள்ளார்கள். அந்த பொம்மையை தன் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை செலவழித்து வாங்குபவர்களிடம், “ஐயா அந்த பொம்மையின் உண்மையான முதலாளி வேறு ஒருவர். காப்பிரைட் சட்டப்படி இம்மாதிரியான செயல்களை ஊக்குவிக்க வேண்டாம்” என சொல்லியும் அதை மதிக்காமல் வாங்கும் வரை  இது போன்ற ‘உலக சினிமா உருவிகள்’ காட்டில் அடை மழைதான். இது போன்ற படங்களின் வெற்றியின் மூலம் இயக்குனர், நாயகன் சம்பளமும் மேலும் சில கோடிகள் உயரும். பிறகு ருசி கண்ட பூனை சும்மா விடுமா? அபேஸ் படலம் தொடரும். 

இப்படி ஒரு திருட்டு தொடர்ந்து நடக்கிறதே என்று அதை சில பதிவர்கள் வெளிச்சம் போட்டு காட்டினால் அதையும் முடக்க முனைகின்றனர் எம் சக நண்பர்கள். இந்த திருட்டு வேலை தமிழ் சினிமாவின் ஆதிகாலத்திலேயே துவங்கி விட்டது. தமிழில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நல்லதம்பி எனும் திரைப்படம், 1936 ஆம் ஆண்டு வெளிவந்த Mr. Deeds Goes to town எனும் ஆங்கில படத்தின் அபேஸ்தான். அதுபோல ஜெமினி, காஞ்சனா நடித்த வெற்றிப்படமான ‘சாந்தி நிலையம்’, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ‘The sound of Music’ எனும் படத்தின் அலேக். ஆங்கிலத்தில் கன்னியாஸ்திரி, தமிழில் ட்யூசன் டீச்சர். அங்கே காமடியன் இல்லை. இங்கே நாகேஷ். படத்தில் இடம்பெற்றுள்ள செட் கூட அப்படியே ஜெராக்ஸ்  எடுக்கப்பட்டுள்ளது. 

                                                                 The Sound of Music


என்ன ஒரு அற்புதமான நடிப்பு, கதை அம்சம்டா சாமி என்று நாம் புகழ்ந்து தள்ளிய (குறிப்பாக 1964 க்கு  பிறகு) பல படங்கள் சென்னை அண்ணாசாலையில் இருந்த சபையர் தியேட்டரில்தான் உருவாயின. ஆம். அங்குதான் அடிக்கடி ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவார்கள். நம் முந்தைய தலைமுறை புகழ்ந்து தள்ளிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என யாரேனும் ஒருவர் அந்த படத்தை பார்ப்பார்கள். படம் முடிந்ததும் “சார். சபையர்ல ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். சூப்பரா இருக்கு. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க. நாம தமிழ்ல செய்யலாம்” என்று அங்கேயே முதல் பூஜையை போட்டுவிடுவார்கள். அதன் பரிணாம வளர்ச்சியாக,  அதன் பின் ஆங்கில படங்களை டி.வி.டி.யில் இருந்து சுட்டனர். ஆனால் இணையத்தின் வளர்ச்சி மற்றும் உலக சினிமா பார்க்கும் இளைய தலைமுறையின் ஆர்வம் அதிகரித்ததால் படைப்பாளிகள் விழிபிதுங்கினர். கொரியா, இத்தாலி என்று எல்லைகளை விரிவுபடுத்தி சுட ஆரம்பித்தனர். ஆனாலும் பருப்பு வேகவில்லை. அந்த திருட்டையும் பதிவர்கள் பிற சினிமா ஆர்வலர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர். உதாரணம்: நந்தலாலா (Kikujiro எனும் ஜப்பான் படத்தின் அபேஸ்).  தற்போது படத்தின் ஸ்டில் வந்த உடனேயே அது எங்கிருந்து லபக்கப்பட்டது என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் உஷார் ஆகிவிட்டதால், மண்டை காய்ந்து நிற்கிறான் திருட்டு படைப்பாளி.

உலக சினிமாவை முறைப்படி அனுமதி வாங்கி தமிழில் எடுக்க பல கோடி செலவு செய்யவேண்டும் என்பதால் ‘தழுவி’ எடுக்கலாமா? அப்படியெனில் விலை உயர்ந்த பொருளை வாங்க வசதி இல்லை என்றால் திருடுவது சரியா?


நாங்கள் உலக சினிமா பார்க்க வாய்ப்பு இல்லை. அதனால் ‘அபேஸ்’ படங்களை பார்க்கிறோம் என்று சொல்லும் நண்பர்களே. தங்கள் வாதம் நியாயம்தான். ஆனால் ஒரு திரைப்படம் திருடப்படுகிறது என்று தங்களுக்கு எடுத்துரைக்கும் பதிவர்களை புரிந்து கொள்ளுங்கள். நம்மில் 99% பேர் சொந்தமாக உழைத்து உண்கிறோம். அப்படி கிடைத்த பணத்தில்தான் படமும் பார்க்கிறோம். ஆனால், கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஊரான் உழைப்பை திருடி இங்கு படமெடுத்து, ஓரிரு வருடங்களில் கோடீஸ்வரர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதை உணருங்கள். இப்படங்கள் வெற்றி பெற்றால்  திருடனின் கனவு மேலும் விரியும். முதலில் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் நடிப்பவன் இம்மாதிரி திருட்டு படங்களில் நடித்து கொஞ்சம் டெல்லி, அப்புறம் கட்சி, கடைசியா சி.எம். என்று மனக்கணக்கு போடுகிறான். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்க வேண்டாம். 

இருப்பவனிடம்(உலக சினிமா படைப்பாளி)இருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு(தமிழ் ரசிகன்) தரும் கோடம்பாக்க ராபின் ஹூட்களே,  ஒரு நிமிடம். மக்களிடம் கொள்ளை அடித்தவனிடம் இருந்து பணத்தை பிடுங்கி மக்களுக்கு தரலாம், தவறில்லை. ஆனால் சுயமாக உழைத்து பணம் ஈட்டியவனிடம் இருந்து திருடும் உரிமையை உனக்கு எவன் தந்தான்? இப்படி சுட்டு எடுத்த படங்களை இனிவரும் கணினியுக இளைய சமுதாயம் வேடிக்கை பார்க்கும் என்றால் அது தங்கள் பகல் கனவாகவே இருக்கும். 


அதற்கு கிடைத்த சாட்டையடிதான் யோகி(Tsotsi), மன்மதன் அம்பு (Romance on the high seas), ஆடுகளம் (Amores Perros) போன்ற படங்களின் வசூல் ரீதியான தோல்வி. இதோ சகபதிவர் தந்துள்ள மேலும் ஒரு சான்று:

                       அயல்நாட்டு ‘அவ்வை சண்முகி’


சக பதிவர் ஹாலிவுட் பாலா  அவர்கள் தெய்வத்திருமகள் திருடப்பட்டது குறித்து I AM SAM படத்தின் தயாரிப்பு நிறுவனமான Newline Cinema – விற்கு மின் அஞ்சல் அனுப்பிய செய்தியை ‘கருந்தேள்’ வலைப்பூ மூலம் அறிந்து கொண்டேன். அப்பதிவில் பின்னூட்டம் அளித்துள்ள நண்பர் ‘உலக சினிமா ரசிகன்’ அவர்கள், இம்மாதிரி திருட்டு விஷயங்கள் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டப்படி 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என கூறி உள்ளார். வலைப்பூ மூலம் இந்த கொள்ளைக்கு முடிவு கட்ட கிளம்பி இருக்கும் பதிவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

ஆங்கில படத்தை தழுவலாம் என்று திருட்டு படைப்பாளிகளுக்கு ஆதரவு தரும் அன்பர்களே. சற்று யோசித்து பாருங்கள். நாலு பேருக்கு நல்லது நடந்தா தப்பில்லை. எங்களுக்கு தேவை ஒரு நல்ல படம். எங்க இருந்து சுட்டா எனக்கென்ன என்று சொல்கிறீர்களே. தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை மட்டும் எதற்காக ரீமேக் அனுமதி பெற்று இவர்கள் படம் எடுக்கிறார்கள். ஏன்னா அனுமதி இல்லாம எடுத்தா தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆளுங்க பொளந்து கட்டிடுவாங்க. ஆனா எங்கயோ இருக்குற வெளிநாட்டுக்காரன் பாவம். இதெல்லாம் அவனுக்கு தெரியாது. அதனால் திருடலாம். சூப்பர் அப்பு!!

என்னய்யா நியாயம் இது? இவனுங்க திருடி படம் எடுப்பாங்களாம். ஆனா அந்தப்படத்த நாம திருட்டு வி.சி.டி.ல பாத்தா மட்டும் இவங்களுக்கு பொறுக்காதாம். திருடி எடுக்கப்பட்ட படங்களை திருட்டு வி.சி.டியில் மட்டும்தான் பார்க்க வேண்டும்னு ஒரு சட்டம் வந்தாதான் இந்த போலி படைப்பாளிங்க திருந்துவாங்க.


                                                                     

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கூட இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷின் திருட்டை அம்பலப்படுத்தி உள்ளது. “ப ப பாப்பா” என விக்ரம் பாடும் பாடல் 1973 ஆம் ஆண்டு வந்த Whistle stop எனும் படத்தின் அச்சு அசல் காப்பி எனவும், பாடல் வரிகள் கூட அப்படியே திருடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. அண்ணே நா.முத்துக்குமார் வாழ்க உங்கள் தொண்டு!


இதோ பாருங்கள் அந்த கொடுமையை:
http://youtu.be/B8UF-2_nlzg


இப்படிப்பட்ட கொள்ளைக்கூட்ட படைப்பாளிகளை தொடர்ந்து துகில் உரிக்கும் உலக சினிமா பதிவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்!!

............................................................
My other site:
nanbendaa.blogspot.com
...........................................................
சமீபத்தில் எழுதியது:
...................................................................                                                             

39 comments:

ஆமினா said...

///விலை உயர்ந்த பொருளை வாங்க வசதி இல்லை என்றால் திருடுவது சரியா?

///

சாட்டையடி கேள்வி!!!

///இவனுங்க திருடி படம் எடுப்பாங்களாம். ஆனா அந்தப்படத்த நாம திருட்டு வி.சி.டி.ல பாத்தா மட்டும் இவங்களுக்கு பொறுக்காதாம்.//

அதானே...!!!

செங்கோவி said...

//உலக சினிமா பதிவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்//

அப்போ ஒலக சினிமா பாக்குறதுலயும் ஒரு நன்மை இருக்குன்னு சொல்லுங்க.

தம்பி ஜீயின் பதிவும் இதில் குறிப்பிடத்தகுந்தது சிவா:
http://umajee.blogspot.com/2011/07/i-am-sam.html

! சிவகுமார் ! said...

@ஆமினா

வருகைக்கு நன்றி ஆமினா!!

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

ஜீ அவர்களின் பதிவை சமீபத்தில் படித்தேன் செங்கோவி. நன்றாக எழுதியுள்ளார்.

Unknown said...

மாப்ள சுட்டது பதிவு!....சுட்ட படமா சுட்ட நடிகரா சுட்ட டைரடக்கரா ..இல்ல அப்பாவி மக்களா!

! சிவகுமார் ! said...

@ விக்கியுலகம்

சுட்டவன் சத்தியமா மாட்டுவான் மாம்ஸ்!! எல்லா நாளும் ஏமாத்த முடியாது.

சக்தி கல்வி மையம் said...

நல்ல அலசல்..
வேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க?.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yes. Avoid this guys

rajamelaiyur said...

//
///இவனுங்க திருடி படம் எடுப்பாங்களாம். ஆனா அந்தப்படத்த நாம திருட்டு வி.சி.டி.ல பாத்தா மட்டும் இவங்களுக்கு பொறுக்காதாம்.//

//
இதுக்கு நீங்க அவர செருப்பால அடிச்சு இருக்கலாம்

rajamelaiyur said...

நல்ல பதிவு

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுட்டவங்களுக்கு சூடு வச்சிடிங்க... நல்ல கட்டுரை பகிர்வு.

மாய உலகம் said...

திட்டம் போடாமல் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது... அதை சத்தம் போடாமல் விற்று பெயரும் வாங்குது.... அடுத்தவர் உணவை எடுத்து தொப்பையை நிரப்பி ஏப்பம் விடுபவர் இங்கு ஏராளம்

! சிவகுமார் ! said...

@ கருன்

நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ ராஜா

அவ்ளோ எமோஷன் எதுக்கு ராஜா. ஆனா இவங்க ரொம்ப நாள் வெளிநாட்டுக்காரனை ஏமாத்த முடியாது.

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி

நன்றி பிரகாஷ்!

! சிவகுமார் ! said...

@ மாய உலகம்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீர வேண்டும்!

! சிவகுமார் ! said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Yes. Avoid this guys//

ஒரிஜினலை லைட்டா பட்டி, டிங்கரிங் பாத்து உள்ளூர் சந்தைல படத்தை விக்கிற கூட்டத்தை என்னன்னு சொல்ல!!

Jayadev Das said...

அருமையான பதிவு. ஒரிஜினல் கதைக்குச் சொந்தக்காரர்கள் இதை ஒரு பொருட்டாகக் கருதி நடவடிக்கை எடுப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனாலும், அவர்கள் கதைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்கள் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.

R.Puratchimani said...

நல்ல பதிவு நண்பரே. இந்த திருட்டு பசங்கள பத்தி நான் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். இதில் மேலும் என்ன கொடுமை என்றால் இந்த திருட்டு பசங்களுக்கு நிறைய பேர் வக்காலத்து வாங்குகிறார்கள்.

மாசிலா said...

Very good post. I totally aprouve all of your points.

Unknown said...

நல்லது ,ஆனாலும் இனி தமிழ் என்னும்" உலக சினிமா " மிக அதிகமாய் தொடரும் என்றே நினைக்கிறேன்

Rabbani said...

அருமையான பதிவு

பல கேள்விகணைகள் திருடர்களை பார்த்து

இவர்கள் தமிழ் மக்களை இன்னும் கிணற்று தவளைகள் என்று நினைதுக்கொண்டுள்ளார்கள்

Rabbani said...

அருமையான பதிவு

பல கேள்விகணைகள் திருடர்களை பார்த்து

இவர்கள் தமிழ் மக்களை இன்னும் கிணற்று தவளைகள் என்று நினைதுக்கொண்டுள்ளார்கள்

பாலா said...

ஹு ஈஸ் திஸ், ‘சக பதிவர்’ ஹாலிவுட் பாலா??

”தளிர் சுரேஷ்” said...

திருட்டு பசங்கள வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி!ஆதாரங்களுடன் அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்

Venkat said...

Good post, i think the elite class is thinking of banning Internet so that they can keep us in dark ages.

Bhavanishankar Arulmozhi said...

Here are GV prakash copies...


http://www.youtube.com/watch?v=fZFNGGxMP7E

http://www.youtube.com/watch?v=PZ3Pj-t3FN4

Bhavanishankar Arulmozhi said...

Here's another one..
http://www.youtube.com/watch?v=nEoGZUdWQyQ

Arjun said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

கேரளாக்காரன் said...

What is the relation between aadukalam and ameros perros. Summa yaaravathu solratha kettu vanthu elutha koodathu. Jurassic park oda remake surannu sonna othukkuvingala.

! சிவகுமார் ! said...

//கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
What is the relation between aadukalam and ameros perros. Summa yaaravathu solratha kettu vanthu elutha koodathu. Jurassic park oda remake surannu sonna othukkuvingala.//

நண்பரே, இதை நான் சொல்லவில்லை. ஆடுகளம் படம் பார்த்தீர்களா? கடைசியாக டைட்டிலில் நன்றி ‘Ameros Perros’ என்று வெற்றிமாறன்தான் அறிவித்துள்ளார்.

Arun prasad.A said...

indha kovam enakum romba varshama irku ! ipa itha padicha apram dhan konjam nambika vandhurku.. ena case venumnalum evlo venumnalum podunga..orthan creativity ah thiruduna ena agum nu teryanum !

பாண்டியன் said...

palichnu solli irukkenga.

White Swan said...

AADukalam is not the Rip off of Amores perros... vettrimaran didnt use non linear screen play.. aadukalam had one story where as amores perros had three interlinked at some point... Amores perros is totally different from aadukalam..


more over vettrimaran had the guts to give filmography and bibliography at the end of the movie... Shantaram(novel) is more closer to aadukalm than any other movie mentioned by vettrimaran...

Inspired is different and copying is different..


Dnt degrade creativity...

Unknown said...

மன்னிக்கவும்,உலக சினிமாவை திருடாமல் படம் எடுத்தால் தமிழகம் ஒன்றும் முதன்மை மாநிலமாக ஆகப்போவதுமில்லை. இந்தப்பிரச்சினையை இவ்வளவு படு தீவிரமாக அலசத்தேவையும் இல்லை.

Unknown said...

Though I agree with you on giving credit to the original creator, only people like Rajkumar Hirani do. But I think you should know about copyright.

Ideas aren’t copyrightable. It is not the idea but for how you
execute that idea is important.

Ideas are seldom as valuable as execution. You can have the
greatest idea in the world, and it isn’t worth anything if you
can’t execute it.

Siva said...

ennadhu Amores perros .. padathoda copy aadukalam-ah? ayudha ezhuthu thambi... just bcoz of dog fighting u say its copied as aadukalaam???..i'm not saying aadukalam is original.. it might have been copied from a hell a lot of movies about cock fighting which even we don't know. But chumma adichu vida koodathu :P

- Siva

சாய்ரோஸ் said...

நான் சினிமாவை அதிகம் நேசிப்பதில்லை... பார்ப்பதில்லை... கண்டு கொள்வதுமில்லை... எனினும் உங்களின் இந்தபதிவிலிருக்கும் கருத்துக்கள் முழுவதும் நியாயம்தான்...

Chandrakumar said...

மணி ரத்னம் அண்ட் சுஜாதா AMORES PERROS விலிருந்து செய்த கருத்துக் களவுதான் ஆயுத எழுத்து என்கின்ற தமிழ் படம்.

Related Posts Plugin for WordPress, Blogger...