CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்                                                                   
தெய்வமகன், தெய்வத்திருமகன்..அப்புறம் ஒரு வழியா தெய்வத்திருமகள். நல்லவேளை. ஆளும் கட்சில ஆளுங்க வந்து எப்படிடா எங்க அம்மா பேரை படத்துக்கு டைட்டிலா வச்சன்னு சண்டைக்கு வரலை. வித்யாசமா ஒரு தமிழ் சினிமா வந்துருக்கேன்னு நாக்கு மேல விரலை வச்சிக்கிட்டு பாக்கலாம்னு போனா அதுல 99% வெளிநாட்டு படத்துல இருந்த உருவின படங்களாத்தான்  இருக்கு. யோகி, நொந்தலாலா..இந்த லிஸ்டுல இப்ப தெய்வத்தி(ருட்டு)மகள்.   

சிவாஜி, கமல் எல்லாம் அவங்க நடிப்பால நாலு கால் பாய்ச்சல்ல முன்னேறினா, இந்த விக்ரம் எட்டு கால் பாய்ச்சல்ல பறக்குராறு. அதுல ஒண்ணுதான் இந்தப்படம். பயங்கரமான ஹோம்வொர்க். ஓவர் ஆக்டிங் அல்லது சொதப்பல் இரண்டும் இல்லாம கடைசி வரை செம நடிப்பு. குறிப்பா தன் மகளை ஸ்கூல்ல இருந்து தூக்கிட்டு ஓடும்போது, துரத்திட்டு வர்ற ஆளுங்ககிட்ட அவர் சொல்லும் வசனம்: “நான் வீட்டுக்கு போணும்”. அனுஷ்கா, அமலாபால் ரெண்டு பேரும் அழகா, அளவா நடிச்சி இருக்காங்க. எல்லாரையும் மிஞ்சியது குழந்தை சாராவின் நடிப்பு. எதையோ தொலைத்த மாதிரி இருக்கும் அவளது கண்கள், கேரக்டருக்கு செம பொருத்தம். ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம்.  எம்.எஸ். பாஸ்கருக்கு தேவையா அந்த தெத்துப்பல்? கார்த்திக், ஒய்.ஜி. ரெண்டு பேருக்கும் படத்துல பெரிய ஸ்கோப் இல்ல.

விக்ரம் தன் மாமனார் வீட்டுக்கு உள்ளே, வெளியே ஓடும்போது அவரை பிடிக்க முடியாம செக்யூரிட்டிங்க திணறிப்போற சீன் எல்லாம் நம்பமுடியல. பார்க் ஹோட்டல்ல சந்தானம், அனுஷ்கா மற்றும் பலர் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டமும் அதேமாதிரிதான்.  

                                                                        
முதல் பாதி போர் அடிக்காம போகுது. இரண்டாம் பாதியில் எட்டிப்பாக்குது ஏகப்பட்ட சினிமாத்தனங்கள். கோர்ட்ல விவாதம் நடக்கும்போது ரெண்டு வயசான வக்கீல்கள் ‘அடடா’ ‘அப்பப்பா’ அப்டின்னு அடிக்கடி பேசுறது சுத்த நாடகத்தனம். ‘வியட்நாம் வீடு’ சிவாஜி நடிப்பை காப்பி அடிக்க முயற்சி செஞ்சிருக்கார் நாசர். அவ்வ்வ்!! அசத்தலான ஒன்லைன் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துது. கடைசி பால் சிக்சர் மாதிரி க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்ல விக்ரமும், குழந்தையும் சைகையால பேசுற இடம் கண்ணை குளமாக்குது. அசத்தல் பெர்பாமன்ஸ். தியேட்டரில் செம கைதட்டல். அங்க நிக்கறாரு ‘தூள்’ விக்ரம். அவருக்கு சமமா நடிச்சிருக்கு அந்த ‘தெய்வத்திருமகள்’ சாரா. ரெண்டு பேருக்கும் பல அவார்ட்ஸ் காத்திருக்கு. ஆனா............   
                                                                       
இயக்குனர் மிஸ்டர் விஜய். எப்படிய்யா கூச்சமே இல்லாம I AM SAM படத்தை உருவி இந்த மாதிரி படத்த எடுக்க மனசு வந்துச்சி? இப்படி சொந்த சரக்கு இல்லாம உங்களை மாதிரி ஆளுங்களை விட மசாலா படம் எடுக்குற ஹரி, கே.எஸ்.ரவிகுமார், பேரரசு மாதிரி ஆளுங்க எவ்வளவோ மேல். விக்ரம் அண்ணாத்த. நீங்க மெனக்கெட்டது எல்லாம் பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். ஆனா அதுக்காக I AM SAM ஹீரோ Sean Penn மாதிரியே முகம், ஹேர் ஸ்டைல்னு அப்பட்டமா காப்பி அடிக்கணுமா என்ன? கேட்டா ‘இன்ஸ்பிரேஷன்’ன்னு சப்பை கட்டு கட்டுவீங்க. ஒழுங்கா நீங்க வாங்குன சம்பளத்துல பாதிய ‘சீன் பென்’னுக்கு மணியார்டர் செஞ்சி பாவத்த போக்கிக்கங்க. 

இதுல என்ன காமடின்னா, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி உலக திரைப்பட விழாங்களுக்கு இந்த படத்தை அனுப்பி வப்பாங்க. தெய்வத்திருமகளை பாத்துட்டு வெளிநாட்டுக்காரன் அவார்ட் குடுத்தான்னா அவனை மாதிரி ஒரு கேனப்பய உலகத்துல இருக்க முடியாது. அதுக்கு முன்னாடி I AM SAM படத்தை எடுத்த நியூலைன் சினிமா தயாரிப்பாளரை சந்திச்சி “எசமான், உங்க படத்தை சுட்டு எடுத்துட்டோம். மன்னிச்சிக்கங்க. இந்தாங்க எங்க லாபத்துல ஒங்களுக்கு சேர வேண்டிய பங்கு” அப்டின்னு தெய்வத்திருமகள் டீம் செய்வாங்கன்னு எதிர்பார்த்தா நம்மள விட முட்டாளுங்க உலகத்துல இருக்க முடியாது.  

ஆனாலும் ஒரு விசயத்துல இயக்குனர் விஜய்யை பாராட்டியே தீருவேன். I AM  SAM - ல, பலூன் வாங்கிட்டு ரோட்டை கிராஸ் செய்யுற சீன்ல சீன் பென் அண்ட் கோ எல்லாரும் கைல ஒரே கலர் ஆரஞ்சு பலூனை கொண்டு போவாங்க. ஆனா நம்ம படத்துல அந்த சீனை அப்படியே எடுக்காம கலர் கலரா பலூனை கொண்டு போற மாதிரி எடுத்து இருக்காங்க. பட்.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர். விஜய்!!


http://youtu.be/EROTbDCr5agதெய்வத்திருமகள்திருட்டு மாங்கா. ருசியாத்தான் இருக்கும்!!
...............................................................................................................


My other site:


nanbendaa.blogspot.com
..................................................................சமீபத்தில் எழுதியது:
......................................................................


41 comments:

ஆமினா said...

ஒழுங்கா நீங்க வாங்குன சம்பளத்துல பாதிய ‘சீன் பென்’னுக்கு மணியார்டர் செஞ்சி பாவத்த போக்கிக்கங்க.////

அட....... அந்தளவுக்குக்கா போய்ட்டார் சீன் பென்? ;)

நல்ல நடுநிலைமையான விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்

! சிவகுமார் ! said...

வெல்கம் ஆமினா. After a long gap.

Unknown said...

மாப்ள திருடாம சாப்பிட முடியாதோ ஹிஹி!...நல்லா கலக்கலா ஆப்போட சேந்த விமர்சனம் ரசிச்சேன் ஹிஹி!

! சிவகுமார் ! said...

நன்றி மாம்ஸ்!

Unknown said...

மாப்ள என் தியேட்டருக்கு வாய்யா வந்து பாரு ஹிஹி!

idroos said...

யோவ் ! என்னய்யா சொல்ற ?

அந்த டைரக்டர் பயபுள்ள இந்த மாதிரி கதையம்சம் உள்ள ஒரு படம் ஒலகத்துலயே யாரும் ட்ரை பண்ணது கிடையாதுனு சொன்னானே,பயபுள்ள பொய் சொல்லிட்டான்போலிருக்கு.

நீ கலக்கு சித்தப்பா.

! சிவகுமார் ! said...

@ ஐத்ருஸ்

நம்மள மாதிரி ஏமாந்தவங்க இருக்குற வரை அவங்க காட்ல மழைதான். அது சரி, அது என்ன ‘சித்தப்பா’? நம்ம நேர்ல மீட் பண்ணுவோம்.

Unknown said...

நானும் எல்லாம் விமர்சனம் படிச்சிட்டேன் ஆனாலும் யாருமே இத பத்தி விளக்கவே இல்ல ,எப்படி மனவளாச்சி குன்றியவர் தந்தையானார் ?

! சிவகுமார் ! said...

@நா.மணிவண்ணன்

டைட்டில்ல “டாக்டர். சீயான் விக்ரம்’’ன்னு போட்டாங்க. அவரை கேளுங்க மணி. பதில் கிடைக்கும்!

சசிகுமார் said...

எப்படிடியோ படம் நல்லா இருந்தா சரி

சென்னை பித்தன் said...

நேர்மையான விமரிசனம்!

செங்கோவி said...

நியாயமான விமர்சனம் சிவா..இயக்குநர் காப்பி என்பதைச் சொல்லிவிடலாம்.

ALM said...

அண்ணா. UNGALA MATHIRI ARIVALIKALUKKU HOLLYWOOD PADEME PODHUM... ENGALA MATHIRI PANNATTU MOZHI THERIYADHAVANGALUKKU INTHA MATHIRI NALLA PADATHAI KONDU SERTHA "VIJAY" IS A GREATE MAN. NEEGA SOLLURATHA PAATHA "THIRUKKURAL" MATRA MOZHIKALIL TRANSLATE-PANNUDHU THAPPUNNU NINAIKKA THONUDHU... NALLA MUYARCHIKALAI NINTHANAI SEYYATHEENGA....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

kobiraj said...

நான் நினைச்சன் கதையை மட்டும்தான் தழுவினார் என்று இப்பவெல்லோ தெரியுது ஒரு சீனைக் கூட விட்டு வைக்கவில்லை என்று நான் கூட இது தெரியாம ரொம்ப புகழ்ந்துட்டனோ விஜயை.#இதுக்குத்தான் சொல்றது பேரைப் பார்த்து ஏமாறக் கூடாது என்று

kobiraj said...

மணிவண்ண்ன் சார் என் விமர்சனம் படிக்க வில்லையா அதில் பதில் உள்ளது.http://kobirajkobi.blogspot.com/2011/07/blog-post_18.html தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்

Jey said...

என்னதான் காப்பி அடிச்சாலும், பலூன் சீன்ல சொந்தமா யோசிச்சி, மூளையை கசக்கி, ஆரஞ்சுகலர் பலூனுக்கு பதிலா, கலர், கலரா பலூன் பயன்படுத்துன விஜய்யை பாராட்டனும்யா!!!!...

விமர்சனம் நேர்மையாத் தெரியுது. நிங்க நல்லவரா?.கெட்டவரா?..

Jey said...

// நா.மணிவண்ணன் said...
நானும் எல்லாம் விமர்சனம் படிச்சிட்டேன் ஆனாலும் யாருமே இத பத்தி விளக்கவே இல்ல ,எப்படி மனவளாச்சி குன்றியவர் தந்தையானார் ?//

சேலம் சித்த வைத்தியர்கிட்ட ஒரு கோர்ஸ் சிகிச்சை எடுத்துகிட்டதா hearsay இன்பர்மேஷன்.

Jey said...

போட்ட கமென்ஸ் காணோம் அதுக்கு பதிலா
//Your comment has been saved and will be visible after blog owner approval.// அப்படின்னு வருது...

நான் சொந்தமா சிந்திச்சி காப்பி அடிக்காம போட்ட கமண்ட்யா... அதனால அப்ப்ரோவ் பண்ணி ”ராசா”...

Unknown said...

@ நா.மணிவண்ணன்

யோவ் மணி பதிவை படிக்க சொன்னா மனவளாச்சி குன்றியவர் எப்படி தந்தையானார்? கேட்டா சிவா எப்படி பதில் சொல்லுவாரு???

! சிவகுமார் ! said...

@சசிகுமார்

ஒருதரம் பாக்கலாம் சசி!

! சிவகுமார் ! said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்!

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

அப்படியே ஒத்துக்கிட்டாலும், ஒரிஜினல் படம் எடுத்தவங்க கிட்ட உரிய அனுமதி வாங்கி படம் எடுக்கவே மாட்டாங்கன்னு தோணுது.

! சிவகுமார் ! said...

@ ALM

தம்பி, அறிவாளி முட்டாள் விவாதம் எல்லாம் அப்புறம். இந்த நாட்ல கதைக்கா பஞ்சம். ஏதோ ஒரு நாட்ல இருக்ற ஒருத்தன் கேள்வி கேக்க மாட்டான்னு இப்படி திருடி படம் எடுத்து கோடீஸ்வரன் ஆவுறது மட்டமான செயல். பன்னாட்டு மொழின்னு வேற இங்கிலீஷை சொல்லிட்டீங்க. ஆனா நீங்க டைப் அடிச்சது எல்லாமே அந்த மொழிலதான். உங்களுக்கா இங்கிலீஷ் தெரியாது. ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு.

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

நன்றி ரமேஷ்!

! சிவகுமார் ! said...

@ kobiraj

வருகைக்கு நன்றி கோபிராஜ். சூப்பரா சுட்டுருக்காரு விஜய்!

! சிவகுமார் ! said...

@ Jey

அப்ரூவ் ஆயிடுச்சி சார்.

! சிவகுமார் ! said...

@இரவுவானம்

அதெல்லாம் மணிக்கு நல்லா தெரியும் சுரேஷ். நம்மள கோத்துவிட பிளான் பண்றதே வேலையா போச்சி அவருக்கு

vivek.dgl said...

Hi Siva,

Good review..

You can blame Director Vijay.

But how the vikram acting it is like fantastic performance.

My humble request dont blame vikram.

He is the good actor dont compare with any one..

Anyway good

ranhasan said...

எப்பா நிறுத்துங்க... நிறுத்துங்க... நாம போடுற செருப்புலேந்து, போற கார் வரைக்கும் எல்லாத்லையும் வெளிநாடு பொருட்கள் வந்தாச்சு... வெளிநாட்ல பண்ற ஒவ்வொரு விஷயத்தை பார்த்துதான் நம்ம அரசாங்கமே திட்டங்களை வகுக்குது... சும்மா காபி காபினு வைசவுடால் பேசுரின்களே ஒரு ஆங்கிலப்படத்தை தமிழ எடுப்பது எவ்வளவு கஷ்டம தெரியுமா? பாரதியார் கூட "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்க்கப்பட வேண்டும்" என்றுதான் சொல்லிருகாறு... எத்தனை பேரு தமிழ் நாட்ல i am sam படம் பார்துருபாங்க? தெய்வத்திருமகள் படம் வராட்டி எத்தனை பேருக்கு இந்த கதை தெரிஞ்சுருக்கும்... நல்ல விஷயங்கள் எங்க இருந்தாலும் காப்பி அடிக்கலாம் அது தப்பில்லை... ஒரு படம் எடுக்குறது எவ்வளவு கஷ்டம தெரியுமா? வாய் கிழிய விமர்சனம் பண்றது ரொம்ப ஈசி...

Jayadev Das said...

\\கார்த்திக், ஒய்.ஜி. ரெண்டு பேருக்கும் படத்துல பெரிய ஸ்கோப் இல்ல.\\ இந்த கார்த்திக் யாருங்க ? அவரு எந்த சீன்ல வராரு?

\\இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி உலக திரைப்பட விழாங்களுக்கு இந்த படத்தை அனுப்பி வப்பாங்க.\\ இப்பவெல்லாம் பதிவுலகம் இருக்கு, ஒரு படம் வந்ததுமே அதை எங்கேயிருந்து அடிச்சாங்கன்னு உடனடியா பதிவர்களில் பலர் கண்டுபிடிச்சு சொல்லிடறாங்க. நாயகன் படம் வந்தப்போ இன்டர்நெட் அப்படின்னா என்னன்னே இந்தியாவில் யாருக்கும் தெரியாத சமயம். அந்தப் படத்தை மொத்த இந்தியாவுமே அஹா, ஓஹோ.. ன்னு புகழ்ந்துகிட்டு இருந்தது. அப்படியே ஆஸ்காருக்கும் அனுப்பிட்டாங்க. அங்கே ந்த கருமாந்திரத்தை எல்லாம் The God Father படத்தில் நாற்பது வருஷத்துக்கு முன்னாடியே பாத்துடோமேன்னு காரி மணி மூஞ்சி மேல துப்பினாங்க, அந்த ஆள் அதையெல்லாம் துடைச்சு போட்டுட்டு வலிக்காத மாதிரியே இன்னமும் மெயிண்டன் பண்ணிக்கிட்டு இருக்கார். ஹா.ஹா..ஹா...

Jayadev Das said...

@ranhasan

ஐயா தெய்வமே, உங்க கால் மட்டும் எங்கயிருக்குதுன்னு மட்டும் சொல்லுங்க ஐயா, சேவிச்சிகிட்டு போயிடறோம். நீங்க சொல்வதைப் பார்த்தால், திருடன் கூடத்தான் ரொம்ப கஷ்டப் பட்டு உயிரையே பணம் வச்சி, ராத்திரி பூராவும் கண்ணு முழிச்சி திருடறான். மாட்டினால் எல்லோரும் போட்டு உதைப்பார்கள், ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்.... இத்தனை ரிஸ்கையும் எடுத்து திருடுறான்....... என்றெல்லாம் வாதாடுவீர்கள் போலிருக்கே!

! சிவகுமார் ! said...

@vivek.dgl said...

Hi Vivek, Thanks for your comment. Vikram is not a kid. He is also a culprit. He would have definitely seen the film I AM SAM. We all agree that he is a great performer. But this is a silly ACT. Without doubt.

! சிவகுமார் ! said...

@ ranhasan

இப்படி சுட்டு படம் எடுப்பவர்களை நீங்கள் ஊக்குவிக்கும் வரை தமிழகத்தில் அடுத்தவன் உழைப்பை அனுமதி இன்றி திருடிப்பிழைக்கும் கோடீஸ்வர சினிமாக்காரர்கள் உருவாவதில் ஆச்சர்யமில்லை. இதையும் படிங்க சார்:
http://www.karundhel.com/2011/07/blog-post.html

! சிவகுமார் ! said...

@ Jayadev Das
கருத்துக்கு நன்றி சார். கார்த்திக் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக வருபவர். மூளைக்கு வேலை தராமல் அயல் நாட்டு படங்களை திருடும் நம்மூர் படைப்பாளிகளின் சுயரூபத்தை வெளியே சொன்னால் அதை கூட எதிர்க்கிறார்கள் நம் மக்கள். அந்த இயக்குனர் தான் செய்தது தவறு என்று வருந்தினால் கூட, இவர்கள் விடமாட்டார்கள் போல. நண்பர் ranhasan அதை புரிந்து கொண்டால் நன்று.

A.R.ராஜகோபாலன் said...

உன்மைய ஒளிக்காம சொல்லணும்னா, நீங்க சொல்லாவிட்டா எனக்கு இந்த செய்தி தெரிந்திருக்காது.

அந்த பென் அருமையா நடிச்சிருக்கார்.
இந்த மாதிரி படம் எடுக்குறவர்களுக்கு ஏன் அந்த படைப்பாளிகளுக்கு நன்றின்னு போட மனசு வரலை.

Arjun said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

ram said...

விமர்சனம் எழுதுபவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய படைப்பாளி என்று நினைப்பு. உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காபி தாம் அடிகின்றோம். நல்ல விசயங்களை நமக்கு ஏற்றார் போல் மாற்றி யோ அல்லது மொழியாக்கம் செய்து அல்லது ரீமேக் செய்தோ பார்ப்பதில் தவறே ஏதும் இல்லை. அழகர்சாமியின் குதிரை மட்டும் ஏதோ பெரிய இயக்குனரின் சொந்த படைப்பு மாதிரியே கூறும் அதி புத்தி சாலிகளே அதுவும் ஒருவருடைய படைப்பே. அது எழுத்தை காட்சி ஆக மாற்றினார்கள். இது காட்சி யையே இன்னொரு மொழியில் அதற்கேற்ப காட்சி ஆக இயக்கினார்கள். அவ்வளுவுதான்.

ram said...

YOHAN ATHIYAYAM ONDRU"" French film ""Largo Winch""
vinnai thandi varuvaya - 500 days of summer
PATTIYAL - Bangkok Dangerous
AUTOGRAPH - MERA NAAM JOKER {HINDI MOVIE }
Indira Vizha- Disclosure
puthupettai - city of god
Vandhan Vendran{ UPCOMING}-Going the Distance
KO - ‘State of Play’
ROJA - SUNFLOWER
Ayutha Ezhuthu -Amores Perros
Thenali-What about bob
Avvai Shanmughi- Mrs.Doubfire Panchathanthira m -Very Bad Things
Guna - Rain Man,
munnabai MBBS or Vasool Raja MBBS -Patch Adams,

ram said...

Anbe Sivam, -Planes, Trains and Automobiles,
Mahanadi -Hardcore,,
Yogi, -Totsi,
Pudhupettai-City is God
Vaanam Vedam- Powder Blue,
Endhiran - Bicentennial Man,
Indran Chandran - Moon over parador Apoorva Sahodarangal - Corsican Brothers Enakkul Oruvan - The Reincarnation of Peter Proud
Nayagan - The Godfather,
Nammavar - The Class of 198412B - Sliding Doors
Magalir Mattum - 9 to 5
Vettri Vizha - Bourne Identity
Julie Ganapathy - Misery
Kaathala Kaathala - Two Much Sathileelavathi - She Devil
Thiruda Thiruda - Butch Cassidy and the Sundance Kid
Mahanadi - An Innocent Man, Hardcore Anjali - Son RiseAsuran - Predator Whistle - Urban Legend
May Maadham - Roman Holiday
Soora Samharam - Witness

ram said...

12B film is ripped from Sliding Doors
“New” is inspired from the hollywood movie ‘Big
Sarvam Remake of 21 grams
Ayan second half is very much based on Maria full of grace & Ayan Fight Utter Copy from Bourne Ultimatum


mankatha from hollywood ocean 12,13& hindi jannat


innum neraiya irukkuidam pathathu

vidunagappa nalla padam copy panna thapilla

mokka hollywood padam copy ellam inge super hit avuthu

ennomo vijay mattum copy mathiri matha director ellam maniratnam shankar kvanand, a.r.murugadoss ellam copy adikarakavngathan....

Related Posts Plugin for WordPress, Blogger...