விபூதியுடன் ராஜ்கிரண், குங்குமப்பொட்டுடன் தனுஷ், சந்தனம் மற்றும் குங்குமம் சேர்ந்த பொட்டுடன் பிரகாஷ்ராஜ், கோபுர பொட்டுடன் தமன்னா. சிங்கம், சாமி போல ஆட்டம் பாம் வெடிக்க இயலாவிடினும், அட்லீஸ்ட் லட்சுமி வெடியையாவது பற்ற வைத்து இருக்கலாம் ஹரி. ஆனால் நமக்கு(அவ்வ்வ்..எனக்கு)மிஞ்சியது ‘பொட்டு’வெடிதான். இதுவரை கண்டிராத பல புதுமையான காட்சிகளை உள்ளடக்கி வீறுகொண்டு பாய நினைத்து இருக்கிறது இவ்வேங்கை. அத்தகு உள்ளடக்கங்கள் பின்வருமாறு:
சிவங்கையின் காட்பாதர் ராஜ்கிரண். ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்ர்ர். தப்பு செஞ்சா செம மிதி மிதிப்பாரு. அந்த ஊர்ல ஜட்ஜ், இன்ஸ்பெக்டர், டவாலி, வக்கீல் எல்லாமே அவர்தான். அவரோட புள்ளைதான் நம்ம ஈரோ தனுசு. இவர் கேரக்டரும் ரொம்ப புதுசு. எங்க அடிதடி நடந்தாலும் தட்டி, குட்டி, வெட்டிகூட கேப்பாரு. ஆனா இவரும் நல்லவருங்கோ.. இவர் சாதுவா மாறணும்னு அவங்க மாமா ஊரான திருச்சிக்கு அனுப்பி வைக்கிறார் ராஜ்கிரணு. அடப்பாவிங்களா. எம்ஜி.ஆர் காலத்துல இருந்து, ரஜினி நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு தாண்டி இன்னும் எத்தனை வருஷம் இப்படியே ஓட்டுவீங்க. போதும் ரீலு அந்து போச்சி. அடுத்து நம்ம வில்லன் பிரகாஷ்ராஜ். முதன் முறையா மிகவும் புதுமையான கேரக்டரை சவாலா ஏத்து கலக்கி இருக்காரு. அதாகப்பட்டது சிவகங்கை எம்.எல்.ஏ. ரோல். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, ஹீரோவை முறைப்பது, அப்புறம் டம்மி பீஸ் ஆவது, “டேய் டேய்”, “அவனை தூக்குடா தூக்குடா”, “கொன்னுடுவேன், கொன்னுடுவேன்” என்று டபுள் ட்ரபுள் குடுப்பது என பின்னுகிறார்.
‘தக தக’ தமன்னா படம் முழுக்க 2G வழக்கில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கைது ஆகப்போகும் வி.ஐ.பி.யைப்போல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நடிக்கிறார்(?) படம் நெடுக. மசாலா தமிழ் சினிமா படங்களில் அம்மா பாத்திரத்தில் யார் நடித்தாலும் ஒரே காட்சி அமைப்புதான் என்பது கோடம்பாக்க கல்வெட்டில் பதிக்கப்பட்ட ஒன்று. ஊர்வசி மாதிரி திறமையுள்ள நடிகைகள் எதற்கு இப்படி வீணடிக்கப்பட வேண்டும்? ஈரோவுக்கு தொங்கச்சியாக வருபவர்களை மெகாசீரியலில் இருந்து 99 வருட லீசில் எடுத்து இருக்கிறார்கள் போல. இங்கும் அவ்வாறே. பாவம் பொண்ணு. படத்தில் இருந்ததே தெரியவில்லை.
சமீபகால தமிழ் சினிமாவில் ஈரோவுக்கு வேலை வெட்டி இல்லாவிடினும் உலக வரலாறு முதல் உள்ளூர் உருட்டுக்கட்டை உருவான விதம் வரை எல்லாத்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ராஜ்கிரண் வெளியூருக்கு ட்ரெயினில்/காரில் செல்லும் வழியில் அவருக்கு ஆப்பு வைக்க பிரகாஷ்ராஜ் ஆட்களை அனுப்புகிறார். அப்பாவை காப்பாற்ற தனுஷ் தன் ஆட்களுக்கு ‘கூகுள் எர்த்’ பற்றி எல்லாம் தெரிந்த வொர்த் ஸ்டூடன்ட் போல கிளாஸ் எடுக்கிறார். எப்படி? இப்படித்தான்: “அப்பா சிவகங்கைல இருந்து ட்ரெயின்ல கிளம்பு இத்தனை மணிக்கு அங்க போவாரு. அவனுங்க அத்தனை மணிக்கு அங்க நிப்பாங்க. அதுக்குள்ள காரைக்குடி வழியா சாத்துக்கொடி கடை பின்னாடி பைக்குல 199 கி.மீ. ஸ்பீட்ல நம்ம போயி அவனுங்கள போட்டுரலாம். அதுல தப்பிச்சா அடுத்து அவனுங்க அடுத்த ஊருல மூணாவது சந்துல முறுக்கிக்கிட்டு நிப்பாங்க. நம்ம குறுக்கு சந்துல போயி பொளக்கலாம்” என்று பின்னி பெடல் எடுக்கிறார்.
ஹரி படம் என்றால் ACP, DSP என்று யாராவது இருந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்பது விக்கிரமாதித்த வேதாளத்தின் சாபம் என்பது நமக்கு நன்றாக தெரியும். இப்படத்தில் பணியாற்றிய DSP (Devi Sri Prasad) வேலையை ஒழுங்காக செய்யவே இல்லை. ‘பிடிக்கல’ பாடல் சுமார். மத்த எந்த பாட்டும் எனக்கு பிடிக்கல. ஹாரிஸ் ஸ்டைலில் ‘ஒண்ண மட்டும் புடிக்குது’ பாடலில் சேட்டை செய்ய முயற்சி செய்து உள்ளார். யாருக்கும் புரியாத பாசையில “‘உனாகி சாங்கலோ, அமையா வீங்கேலோ, லிபியா ஊங்கோயா யான்கேளா வாங்களோ வாங் வாங்” என்று ஆரம்பிக்குது அந்தப்பாட்டு. பட்..சாங் இஸ் ஓக்கே. அதுக்காக மட்டும் இவரை மன்னிக்கலாம். இல்லன்னா மாண்புமிகு அம்மாகிட்ட சொல்லி இந்த DSP – யையும் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்ய சொல்லலாம்னு நினச்சேன்.
கஞ்சா கருப்பு காமடி செய்கிறேன் பேர்வழி என்று ஹரி பட ரௌடிகளை விட மோசமாக நம் கழுத்தை அறுக்கிறார். எல்லா படத்திலும் வாய்ஸ் மாடுலேஷன் எதுவும் செய்யாமல் ஒரே மாதிரி இன்னும் எத்தனை நாள்தான் கருப்பின் பருப்பு வேகும் என்று தெரியவில்லை. வடிவேலு, விவேக், சந்தானம் என்று யாராவது இருந்திருக்கலாம்.
படத்தில் முக்கியமான இரு பஞ்ச் டயலாக்குகள்: ஒன்று பிரகாஷ்ராஜ் சொன்னது “பருப்புல ஒசந்தது முந்திரி. பதவில ஒசந்தது மந்திரி”. படம் பார்த்தவர்கள் மனதில் “தயவு செஞ்சி சீட்டை விட்டு சீக்கிரம் எந்திரி”.
அடுத்த பஞ்ச் பேசியவர் நம்ம ஈரோ தனுசு: “கோபக்காரன் அருவா எடுத்தாதான் தப்பு. காவக்காரன் எடுத்தா தப்பில்ல”. என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை.. அப்ப கோவக்காரன் எவனுமே காவக்காரனா இருக்கக்கூடாதா? இல்ல காவக்காரன் எவனுக்குமே கோவமே வராதா?
சுமோ, பொலேரோ, ஸ்கார்பியோ, அருவாள், டவுன், கிராமம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஊர் பெரியவர், கோயிலும் கோயில் சார்ந்த இடங்கள், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை...ஆத்தாடி இதுக்கு மேல எங்க ஒடம்பு தாங்காது ஹரி சார். ஏதோ விக்ரம், சூர்யா ரெண்டு பேரும் நல்லா பெர்பாம் பண்ணதால சாமி, சிங்கம் ரெண்டும் தப்பிச்சது. அவங்க பண்ண (ஒன்றரை டன்) வைட்டான ரோலை எல்லாம் தனுஷ், பரத் மாதிரி ஆளுங்க மேல ஓங்கி முதுகுல அடிச்சா தாங்குமா?
நாங்க சொல்றதை பத்தி எல்லாம் கவலைப்படாம நீங்க உங்க ரூட்டை மாத்தாம இப்படியே படம் எடுங்க ஹரி சார். அப்பதான் வெள்ளை வேட்டி சட்டை விக்கிறவங்க, வெளுக்கறவங்க, அயன் பண்றவங்க, வித விதமா (ஓட்டு) மீசை வச்சி விட்றவங்க, காரை வாடகைக்கு விட்றவங்க, பொட்டு விக்கிறவங்க இப்படி எல்லாருக்கும் பிசினஸ் ஜகஜோரா நடக்கும். யூ கண்டின்யூ!!
தனுஷ், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சா எனக்கென்ன!
.................................................................My other site:
..............................................................
13 comments:
;-)
பின்னி பெடலெடுத்திட்டீங்க பாஸ்,ரொம்ப நாளாச்சு இப்படி ஜாலியான விமர்சனம் படிச்சு.
//கஞ்சா கருப்பு காமடி செய்கிறேன் பேர்வழி என்று ஹரி பட ரௌடிகளை விட மோசமாக நம் கழுத்தை அறுக்கிறார்.//ம்ம் கொஞ்ச காமெடி(!) பார்த்தேன் சகிக்கல ..)
வேங்கை – மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண.
தனுஷ், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சா எனக்கென்ன! ///ஹஹஹா அது சரி தான் ..)))
Padam nalla irukkumu ennanu theriyala aana vimarsanam unmaile pattaiya kelappudhu
வடை கிடைக்குமா?
இந்த உலகத்துலயே எனக்கு மட்டும் தான் படம் பிடிச்சிருக்கோ?
ஹி ஹி ஹி
// மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண.//
அவ்வளவுதானா?
படம் பாத்து கூட நான் இவ்ளோ சிருச்சி இருக்க மாட்டேன்... உங்க விமர்சனம் படு தூள் !!!
super comment boss.padichtu sirichite irunthen...
மாப்பு, உங்க விமர்சனம் டாப்பு..
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Builders In Trivandrum
Flats In Trivandrum
Apartments In Trivandrum
Flats Near Technopark
Villas In Trivandrum
Budgeted homes Trivandrum
Flats In Thiruvananthapuram
Builders In Thiruvananthapuram
Builders near Technopark
Post a Comment