CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 7, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (07/07/11)


வியட்நாம் வீடு: 

                           
"வெள்ளிக்கம்பி ஜெயில்தான் வேணும்னு அடம் பிடிக்கப்படாது. டெல்லில ரெண்டு நாளா மிதமான மழை பெய்யுதாம். திகார்ல நாலு சொட்டு எக்ஸ்ட்ரா மழையாம். சமத்தா போகணும். நான் அங்க வரும்போது குருவி ரொட்டியும், குச்சி முட்டாயும் வாங்கிட்டு வருவனாம். போடி செல்லம்!!"
.................................................................................................

சரஸ்வதி சபதம்:
சென்னை புத்தக பிரியர்களே/வெறியர்களே, கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி விற்பனை தற்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோயில் எதிரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட புத்தகங்களை பலர் அள்ளிச்சென்று விட்டனர் என்பது மிச்சம் இருந்த சுமாரான தலைப்புகளை பார்த்தாலே தெரிந்தது. புதிய புத்தகங்கள் வர வாய்ப்பு உள்ளது. பெப்சி வரலாறு, எஸ்கொபார் எனும் டான் வாழ்க்கை, ஜீ.டி.வி. ஓனரின் வெற்றி ரகசியம் ஆகிய மூன்று புத்தகங்களை வாங்கினேன். மொத்தம் 80 ரூபாய் மட்டுமே. ஏகப்பட்ட பாக்கெட் சைஸ் புத்தங்கள் நிரம்பி இருக்கின்றன. இந்த ஞாயிறு வரை விற்பனை உண்டு என கடைக்காரர் சொன்னார். அதுபோல திங்கள் அன்று ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லாண்ட்மார்க் புத்தக கடைக்கு சென்றேன். அங்கும் தள்ளுபடி விற்பனை போட்டிருந்தனர். இரண்டு புத்தகங்களின் விலையில் மூன்று புத்தகங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்திய எழுத்தாளர்கள் எழுதியவை. இன்னும் எத்தனை நாள் இந்த தள்ளுபடி என்று தெரியவில்லை. நேரம்/விருப்பம் இருந்தால் இரண்டு இடங்களுக்கும் விசிட் அடிங்கோ!! 
.............................................................................................

குருதிப்புனல்:
தமிழ் ஈழ மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்த சேனல் காணொளி காட்சிகள் நாளை இரவு 10 மணி, வெள்ளி இரவு 11 மணி மற்றும் சனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்புகிறது ஆங்கில செய்தி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே. போர் நடைபெறுகையில் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஆங்கில செய்தி சேனல்களுக்கு இப்போதுதான் பார்வை தெரிந்துள்ளது. எப்படியோ சிங்கள கூட்டத்தின் அட்டூழியங்கள் உலகிற்கு இப்போதாவது தெரிய ஒரு வாய்ப்பு வந்துள்ளது. 
........................................................................................................


அபூர்வ சகோதரர்கள்: 

                             
சென்ற வாரம் நடந்து முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளனர் பாப் பிரயன் – மைக் பிரயன் சகோதரர்கள். இது இவர்கள் இணைந்து வென்ற 11 வது கிராண்ட் ஸ்லாம் போட்டி. இதன் மூலம், இதற்கு முன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகை கலக்கிய உட்போர்ட் – உட்பிரிட்ஜ் ஜோடியின் 11 கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமன் செய்துள்ளனர். கடந்த 244 வாரங்களாக இரட்டையர் பிரிவில் தொடர்ந்து உலகின் நம்பர் 1 இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர் இந்த அசத்தல் சகோதரர்கள்.
...........................................................................................................

சிந்தனை செய்:
சும்மா இருக்கறவனை சொறிஞ்சி விட்ட கதையா, ‘ஆரண்ய காண்டம் ஆஹோ ஓஹோ..செம உலகப்படம்’ என்று சில விமர்சகர்கள் உசுப்பேற்றி விட்டார்கள் எஸ்.பி.பி. சரணை. காண்டம் பாக்ஸ் ஆபீசில் கண்டம் ஆனதால்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் ஆசையாக கட்டிய ரிகார்டிங் ஸ்டுடியோ விற்கப்படும் நிலைக்கு வருவதாக செய்திகள் சொல்கின்றன. அப்படத்தில் வரும் அசிங்கமான விசயங்களை எதிர்த்ததற்கு லாலிபாப் சாப்பிட சொன்ன உலக சினிமா விமர்சகர்கள் இனியேனும் இளைய தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து அவர்களை உசுப்பேற்றவும். இல்லையெனில் லாலிபாப் வாங்க கூட கஷ்டப்பட வேண்டி வரும்.  
...........................................................................................................


எந்திரன்:
“நீ மட்டும் ஒரு தடவை கூட சிஸ்டம் பாஸ்வோர்ட் மறக்காம இருக்கியே, எப்படி?"


“என்னோட பாஸ்வோர்ட் ‘incorrect’ – னு செட் பண்ணி வச்சிருக்கேன். நான் மறந்தா கூட சிஸ்டம் ‘Your password is ‘incorrect’ – னு எடுத்து குடுத்துடும்!”
.........................................................................................................................


சங்கர் சலீம் சைமன்:
“என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்” எனும் வாசகம் தாங்கிய வாகனங்களை தாண்டி எப்போதும் ஓரிரு வாகனங்களாவது முன்னே சென்று கொண்டுதான் இருக்கின்றன!!
.....................................................................................................

வேலை கிடைச்சிருச்சி:
வருடாவருடம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்தும் ‘ஜம்போ ஜாப் பேர்’ வேலை வாய்ப்பு முகாம் இந்த வருடமும் தொடர்கிறது. வரும் சனி மற்றும் ஞாயிறு சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் காலை பத்து முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.  ஐ.டி. மற்றும் பி.பி.ஓ வாய்ப்புகளே பிரதானமாக உள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் வேலை தரும் இந்த வாய்ப்பை வேலை தேவைப்படும் நண்பர்கள் நழுவ விட வேண்டாம்.
முகவரி:

சென்னை ட்ரேட் சென்டர்,
ஹால் 2, மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நந்தம்பாக்கம், சென்னை.
இணையம்:
மேலும் விவரங்களுக்கு இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளிவரும் ‘சென்னை டைம்ஸ்’ இணைப்பின் கடைசி பக்கத்தை பார்க்கவும்.
............................................................................................................ 

சிங்கம்:
தமிழில் எகிறி அடித்த சிங்கம் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடித்துள்ளார். ஹிந்தி டைட்டிலும் ‘சிங்கம்’ தான். ஹீரோயின் கஜல் அகர்வால். வில்லன் அதே பிரகாஷ்ராஜ்தான். வரும் 22 ஆம் தேதி ரிலீஸ். சல்மானுக்கு ஒரு ‘தபங்’ என்றால் தேவ்கனுக்கு ஒரு ‘சிங்கம்’?  http://www.youtube.com/watch?v=mp-XqCrCi6I
...................................................................................
My other site:

nanbendaa.blogspot.com
...............................................................................

20 comments:

சக்தி கல்வி மையம் said...

சிங்கம் மறுபடியும் காலத்துல இரங்கிடிச்சு..

வாங்க..வாங்க..

Niroo said...

வடை எனக்கே

Niroo said...

//நான் அங்க வரும்போது குருவி ரொட்டியும், குச்சி முட்டாயும் வாங்கிட்டு வருவனாம்.//

ஐயோ கொல்றாங்களே #கொசுவத்தி

Niroo said...

வடை miss

Unknown said...

மாப்ள என்னமா சொல்றய்யா சேதி ஹிஹி!

Unknown said...

வாங்க வாங்க சென்னையின் மெரீனாவே உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன், ஸ்பெசல் மீல்ஸ் வழக்கம் போலவே அசத்தல், அதிலும் தாத்தா பேரனுக்கு சொல்லும் அட்வைஸ் கலக்கல்

செங்கோவி said...

புது ஃபார்ம்ல மாப்பு திரும்பி வந்திருக்காரே..கலக்கல்.

சென்னை பித்தன் said...

இன்று மெட்ராஸ் பவனில் சூப்பரான கலந்தசாத வகைகள்-தொட்டுக் கொள்ள அவியல்,வடாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எந்திரன்:
“நீ மட்டும் ஒரு தடவை கூட சிஸ்டம் பாஸ்வோர்ட் மறக்காம இருக்கியே, எப்படி?"


“என்னோட பாஸ்வோர்ட் ‘incorrect’ – னு செட் பண்ணி வச்சிருக்கேன். நான் மறந்தா கூட சிஸ்டம் ‘Your password is ‘incorrect’ – னு எடுத்து குடுத்துடும்!”///

ROFL

குணசேகரன்... said...

கட்டுரை நல்லா இருக்கு
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

! சிவகுமார் ! said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
//காலத்துல இரங்கிடிச்சு..//

காலத்துல இறங்கிட்டனா?

! சிவகுமார் ! said...

// Niroo said...
வடை எனக்கே//

யூ ஆர் லேட். மெதுவடை ஒன்லி.

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
மாப்ள என்னமா சொல்றய்யா சேதி ஹிஹி//

வணக்கம் மாம்ஸ்.

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
வாங்க வாங்க சென்னையின் மெரீனாவே //
மெரீனாவை வா வான்னு கூப்புடாதீங்க. ஊருக்குள்ள சுனாமி வந்துடப்போகுது.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
புது ஃபார்ம்ல மாப்பு திரும்பி வந்திருக்காரே//

வைரஸ் வந்தததால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தது என் சிஸ்டம்..

! சிவகுமார் ! said...

//சென்னை பித்தன் said...
இன்று மெட்ராஸ் பவனில் சூப்பரான கலந்தசாத வகைகள்-தொட்டுக் கொள்ள அவியல்,வடாம்!//

வருகைக்கு நன்றி சார்!

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ROFL//

Thanks Ramesh.

! சிவகுமார் ! said...

//குணசேகரன்... said...
கட்டுரை நல்லா இருக்கு
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க//

நன்றி. தங்கள் வலைப்பூ பக்கம் வர்றேன் குணா.

Unknown said...

Vanakkam sir,

Really nice information about the exam and interview tips for those who are preparing for private and latest govt jobs

kingrani said...

JNTUK 3-1 Results Check

Related Posts Plugin for WordPress, Blogger...