CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, June 14, 2011

வினவு VS வெங்கட்
                                                         

ஜூன் 9 அன்று வினவு தளத்தில் திருப்பதி வெங்கட் எனும் தலைப்பில் ஒரு பதிவை படிக்கும் புண்ணியம் கிட்டியது. கடவுளை எதிர்ப்பை கொள்கையாக கொண்டவரின் கைவண்ணத்தில் இருந்தது அப்பதிவு. கடவுள் உண்டு என்று சொல்ல உரிமை உள்ளது போல இல்லை என்று சொல்லவும் உரிமை உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முன்னணி வலைத்தளம் என்று பெயர் பெற்ற வினவும் ஒருசில கசப்பான வார்த்தைகளை பயன்படுத்தி ஏன்  எழுதினார்கள் என்பதுதான் கேள்வி. வெங்கட்டை (அவர்கள் பாஷையில்)  கிழிப்பதாக(!) எண்ணிக்கொண்டு எழுதப்பட்டிருந்த பதிவில் தி.நகர் திருப்பதி பிராஞ்ச் கோயிலில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததெனவும், சீமான் (நாம் தமிழர் சீமான் அல்ல) மற்றும் சீமாட்டிகள் வரிசையில் நின்று ஜாம் செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார் அல்லது கூறினர்.

அதே தி.நகரில்தான் வெவரம் தெரிந்த நாள் முதல் திரிந்து கொண்டு இருக்கிறேன். சீமான், சீமாட்டிகளின் எண்ணிக்கையை விட நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பெருமளவில் தரிசனம் செய்வதை ஏனோ வினவு குறிப்பிடவில்லை. ஸ்க்ரீன்ப்ளே சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் அதை கட் செய்து இருக்கலாம். அமுதம் காலனி, சி.ஐ.டி. நகர் மற்றும் தி.நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான சாதாரண மக்களும் அக்கோயிலில் வழிபடுவது அங்குள்ள அனைவருக்கும் தெரியும். பாவம் அன்று மட்டும் அவர்கள் எங்கு மாயமாக மறைந்தார்களோ?

சிதிலம் அடைந்த கோயில்களில் 'டுபாக்கூர்' ஐயர்கள் இருப்பதாக வேறு ஒரு அரிய கண்டுபிடிப்பை பற்றி எழுதி இருந்தனர். ஐயர்களை டுபாக்கூர் என்று கண்டுபிடிக்கும் 'நவீன மிஷின்' எங்கு விற்கிறது என்று தெரியவில்லை. வெங்கி ஸ்காட்ச் குடிக்கிறாராம். கேப்டன் பாஷையில் "நீ பக்கத்தில் இருந்து ஊத்தி குடுத்தியா?" என்று கேட்க வெங்கியால் முடியாது என்று தெரிந்த பின்பு இப்படி எழுத யாருக்குதான் தைரியம் வராது. 

வெங்கியிடம் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி கணக்கை கேட்டால் அவர் லிபர்ட்டி தியேட்டரில் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். வாரே வா!!  அப்படி என்றால் வினவுக்கு நன்கொடை மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் சர்ப் எக்சலில் துவைக்கப்பட்ட வெள்ளை வெளேர் பணம் என்று எதை வைத்து நம்புவது? கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் ஆத்திகர்கள்/இந்துக்கள் அதிலும் குறிப்பாக வெங்கட் பக்தர்கள் எங்களுக்கு நன்கொடை தர வேண்டாம் என்று இதுவரை ஏன் அறிவிக்கவில்லை. சாரே, ஒரு திருத்தம்: லிபர்ட்டி தியேட்டரை என்றோ மூடி விட்டார்கள். சத்யம் தியேட்டர் என்று நீங்கள் எழுதி இருக்கலாம். பணக்கார தியேட்டர். நல்ல வருமானம் வரும். வாசலில் உட்கார்ந்தால்.  தங்கள் ஆருடம் பலிக்குமா என்பதை காலம் தீர்மானிக்கும்.  

சிறுமி ஒருத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபட்ட சமயத்தில் வெங்கி எதை பிடுங்கிக்கொண்டிருந்தார் எனும் வார்த்தைகள் வேறு. முன்னணி வலைப்பூவில் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் பெயரில் நடக்கும் மூட நம்பிக்கைகள், பண விரயங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் எனக்கும் கண்டிப்பாக உடன்பாடு உண்டு. அதே சமயம் எழுத்தில் நாகரிகம் இன்றி இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது பதிவுலக பெரியவர்களுக்கு அழகா என்பது மட்டுமே என் கேள்வி. அடுத்து வரும் இளைய/புதிய பதிவர்களுக்கு இப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் தேவையா?

கடவுளை மறுப்பவர்கள் ஆனா ஊனா என்றால் பெரியாரை துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.அந்த மாமனிதர் கடவுள் பெயரால் மூட நம்பிக்கையில் ஊறி திளைத்த மக்களை வீட்டு திண்ணையில் அமர்ந்தவாறு  பகடி மட்டும் செய்து கொண்டா இருந்தார். அவருடைய தியாகங்களும், போராட்டங்களும் சர்வ சாதரணமானவையா? அப்படிப்பட்ட மனிதரை பின்தொடர்பவர்கள் அவரின் பொதுவாழ்வை சற்றேனும் பின் தொடர்ந்து விட்டு பிறகு நாத்திகம் பேசலாம். சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் போலி நாத்திகவாதிகள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் பகுத்தறிவு அஞ்சி பைசாவுக்கு கூட அருகதை இல்லாத வெத்து வெட்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்  (வசன உபயம்: வினவு).  

பிட்டு படம் பார்ப்பவனை கடவுளாக எப்படி ஏற்பது என்று வேறு கூறி  உள்ளனர். அதாவது 'கலாய்ச்சிட்டாங்கலாம்'. நாத்திகவாதம் செய்பவர்கள் ஆண்டாண்டு காலமாக சொல்லும் வசனங்கள் 'கடவுள் இருக்காரா காட்டு. ஹே..ஹே', 'நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க'. இதன் மூலம் எத்தனை பேரை திருத்தி விட முடியும். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் சோம்பேறியாக இருப்பவர்கள், ஒவ்வொரு விசயத்திற்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவர்கள், ஒரு ஏழை குழந்தைக்கு கல்வி உதவி செய்யாமல் லட்சக்கணக்கில் பணத்தை உண்டியலில் போடுபவர்களை எதிர்ப்பதில் எந்தவிதத்தவறும் இல்லை. அது கண்டிக்கப்பட வேண்டிய செயலே. கடவுள் எதிர்ப்பு குறித்து பொறுப்புள்ள முறையில் எழுத்துக்களை பயன்படுத்தாமல் தெருவில் நடந்து செல்பவர்களை உரண்டைக்கு இழுக்கும் மனிதர்களைப்போல வினவின் பதிவு இருப்பது எவ்வகையில் நியாயம்? 

உடனே, 'டேய் நீயெல்லாம்...' என்கிற ரீதியில் வரிந்து கட்டிக்கொண்டு வரும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான். இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை பத்திரிக்கையில் சொன்ன விஷயம் "நான் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவன்தான். அதே சமயம் பிறரின் மத உணர்வுகளை புண் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை", இவர்தான் நாத்திகவாதி. கமல், சத்யராஜ், கலைஞர் போன்றவர்களைப்போல இந்து மதத்தை மட்டும் கிண்டிப்பார்க்கும் குழுவில் வினவு இணைந்தது ஏன்? 

பகுத்தறிவு பாசறையில் வந்தவர்களின் பணம் சுவிஸ் பேங்கில் எத்தனை கோடி உள்ளது என்பது பெரியாருக்கே வெளிச்சம். அதேபோல் இனி யாரும் திருப்பதி செல்லாதீர்கள். நேராக படகில் ஏறி சுவிட்சர்லாந்து செல்லுங்கள். அந்த வங்கிகளின் முன்பு நின்று கொண்டு வெறிக்க வெறிக்க பாருங்கள். ஊரை அடித்து உலையில் போட்ட நாத்திகவாதிகளின் பணத்தை எல்லாம் மூட்டை கட்டி உங்கள் கையில் கொடுப்பார்கள். நம் நாட்டின் பசி, பட்டினி எல்லாம் உடனே தீர்ந்து விடும். 

போலி ஆத்திக மற்றும் நாத்திகவாதிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்:http://youtu.be/H1eQmWShRf4


அய்யா கடவுள் எதிர்ப்பாளர்களே, எங்களில் பலர் பகுத்தறிய தெரியாத பதர்களாகவே இருந்து விட்டுப்போகிறோம். ஆனால் மருத்துவர்களும், ராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் கூட தலையில் திருநீறு பூசிக்கொண்டு கடவுளை வழிபடுவது ஏன்? அர்த்தம் இல்லாமலா செய்கிறார்கள்?  உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள்: "நான் எத்தனையோ ஆராய்ச்சிகளை செய்திருப்பினும் அதையும் மீறி உலகில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நம்புகிறேன்".  அதை கடவுள் என்று ஒரு தரப்பு நம்புகிறார்கள். அவ்வளவுதான். கடவுளை தனி மனிதராக எண்ணி எள்ளி நகையாடுவதை விட அனைத்து மதங்களிலும்  சொன்ன போதனைகளை மட்டும் பின்பற்றுவதே சாலச்சிறந்தது.அந்த பக்குவம் தங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் வராதது வருத்தமே!

இதே ரேஞ்சில் இன்னும் நாலு பதிவு போடுங்கள். (வெங்கி எதை பிடுங்கினார், பிட்டுப்படம் போன்ற வார்த்தைகளை சொன்னேன்).வருங்கால பதிவுலகம் சீரும் சிறப்புமாக இருக்கும். இப்படி கடவுளுக்கு ஓவராக ஜால்ரா தட்டுகிறாயே நீ எப்படிப்பட்டிவன் என்று கேட்பவர்களுக்கு: கடவுள் உண்டு என்பதை  நம்புகிறவன். உணர்ந்தவன். அதே சமயம் நினைத்த காரியம் நடக்க பெரும்பணத்தை உண்டியலில் கொட்டுதல், எல்லாம் இறைவன் செயல் என்று முயற்சி செய்யாமல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பொற்காசு கொட்டுமா என பார்த்தல், ஏகாதசி,  அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் கோயில் சென்று இறைவனை வேண்டுதல், மாலை ஆறு மணிக்கு பிறகு பணத்தை செலவு செய்தால் வீட்டில் குபேரப்பார்வை இருக்காது என எண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபடாதவன். இப்பதிவின் மூலம் நான் முக்கியமாக சொல்ல விரும்புவது ஒன்றே: சற்றேனும் சபை நாகரீகம் கருதி முன்னணி பதிவர்களின் எழுத்துக்கள் இருத்தல் வேண்டும் என்பதே.

வினவு அன்பரே, சென்னையில் எங்கேனும், வேண்டுமெனில்  வெங்கி கோயில் அருகில் கூட எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நேரடி விவாதத்திற்கும் தயார். அவ்விவாதம் மூலம் எனக்கு நல்ல போதனை கிடைத்தால் பேருவகை கொள்வேன்!!  

madrasminnal@gmail.com      
...................................................................

My other site:

nanbendaa.blogspot.com

சமீபத்தில் எழுதியது:

ஆரண்ய கண்டம்? - பாக்காத படத்துக்கு வெமர்சனம்!

..................................................................

22 comments:

எப்பூடி.. said...

வினவு வெறும் காமடி பீஸ் அவளவுதான், நானும் இந்த காமடி பீசுகளுக்கு பல தடவை பதில் பதிவு போட நினைத்ததுண்டு, தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதுபோல நடிப்பவனை???????????????? எங்கும் குற்றம், எதிலும் குற்றம் , இவர்களும் இவர்கள் அடிவருடிகளும் சுத்தம், இதுதான் இவர்களின் தாரக மந்திரம். இவர்களை பேச்சை கேட்டால் நடு ரோட்டில்தான் பைத்தியம் பிடித்தவன் போலத்தான் நிக்கவேண்டி வரும். இதில நிதி வேற கேக்குறாங்க, சுத்தம்ம்மம்மம்ம்ம்ம்................

Philosophy Prabhakaran said...

சரியா சொன்னீங்க சிவா...

சென்னை பித்தன் said...

துணிச்சலான ஒரு நெத்தியடிப் பதிவு சிவா!

Unknown said...

மாப்ள விடுய்யா...கடவுளை நிந்திப்பவனே...அதிகமாக கடவுளை நேசிக்கிறான் ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

உமக்கு தையிரியம் ஜாஸ்தி ............
நல்ல கேள்வி .............

கத்தார் சீனு said...

மிக அருமையான பதிவு.
அசத்தலான மறுப்பு.....!!!

baba said...

நண்பரே

பட்டய கெளப்பீட்டிங்க.

நானும் அந்த மானகெட்ட பதிவ படிச்சேன்.

இந்த மாதிரி வெண்ண வெட்டி பதிவுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டமுனு விட்டுட்டேன். ஆனாலும் மனசுல ஒரு கோபத்தோட தான் இருந்தேன்.

உங்க பதிவை படித்தவுடன் சற்று ஆறுதலாக இருக்கிறது .

இவனுக எப்பவுமே இப்படித்தான் .

இந்து மதம், ஐயர், பார்ப்பனர்கள் பற்றி சொல்லவில்லை என்றால் பொழப்பு ஓடாது .

இந்துக்கள் என்றால் திருடன் புதிய விளக்கம் கொடுத்தவர் நம் முன்னால் முதல்வர் .

ஏன் தேர்தல் நேரத்தில் வந்து சொல்லவேண்டியது தானே . இந்துக்கள் என்றால் திருடன். எனவே இந்துக்கள் யாரும் தி மு க விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று.

அவர் மனைவி துணைவி மற்றும் மருமகள்கள் கோவில் கோவிலாய் சுற்றும் பொழுது புத்தி இல்லையா ?

பார்பனர் என்று சொல்லுகிறரே , அவர் பேரனுக்கு( கலாநிதி மாறன் ) பொண்ணு எடுத்தது யார் வீட்டுல ? ஏன் ஒரு இஸ்லாமியர் வீட்டிலோ, அல்லது ஒரு கிருத்துவர் வீட்டிலோ எடுத்திருக்கலாம் அல்லவே.

எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு சமூகத்தை அதன் சாதி அடையாளம் சொல்லி வசை படுகிறார் ?

யாரும் இது பற்றி ஒரு அவதுறு வழக்கினை ஏன் நீதி மன்றத்தில் தொடரகூடாது .


நன்றி நண்பரே . தொடரட்டும் உங்கள் பணி .


ஆனந்த்
பமாகோ,மாலி

pichaikaaran said...

தெளிவான சிந்தனை

RVS said...

பதிவிட்டவுடன் சூடாக நான் போட்ட கமென்ட் எங்கே?

எப்பூடி.. said...

'விஷவு' இயக்கம் ஆரம்பம், ஆதரவு தாரீர்.....

http://eppoodi.blogspot.com/2011/06/blog-post_15.html

Unknown said...

வெல்டன் சிவா, நெத்தியடி

! சிவகுமார் ! said...

@எப்பூடி

எதிர்மறையாய் எல்லோரையும் மட்டமாக எப்போதும் விமர்சித்தல் ஒரு வியாதி. ஒன்றும் செய்ய இயலாது, ஜீவா. நம் பாதை தெளிவாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட வேண்டாம்.

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
சரியா சொன்னீங்க சிவா...//


நடுநிலை நாத்திகரின் கருத்தாக இதை ஏற்றுக்கொள்கிறேன் பிரபா.

! சிவகுமார் ! said...

சென்னை பித்தன் சார். தங்கள் கருத்துக்கு நன்றி!

! சிவகுமார் ! said...

@விக்கியுலகம்

நம்மள விட கடவுள் பேரை இவங்கதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க மாம்ஸ். தரமான வார்த்தைகளை பிரயோகித்தால் நன்றாக இருக்கும் என்பதே என் எண்ணம்.

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
உமக்கு தையிரியம் ஜாஸ்தி ..//

சிங்கமே, ஏதோ என் மனதில் பட்டதை எழுதினேன்.

! சிவகுமார் ! said...

@ கத்தார் சீனு

சீனு சார் எப்படி இருக்கீங்க? வருகைக்கு நன்றி!!

! சிவகுமார் ! said...

@ baba

கடவுளை எதிர்ப்பவர்கள் காலம் காலமாக பார்ப்பனீயம், இறைவனை கண்ட படி ஏசுதல் போன்றவற்றை மட்டுமே செய்தல் சலிப்பை தருகிறது. இன்றைய இளைய சமூகம் நல்லவன் அல்லது கெட்டவன் என்று மட்டுமே மனிதனை இனம் பிரித்து பார்த்து வரும் வேளையில் இவர்கள் இன்னும் பழைய ஜாதி விசயங்களை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது ஏன் என்று தெரியவில்லை?

! சிவகுமார் ! said...

@ பார்வையாளன்

கருத்துக்கு நன்றி சார்!

! சிவகுமார் ! said...

ஆர். வி. எஸ், இதோ தாங்கள் முதலில் அளித்த கமன்ட்:

//மணிவண்ணனை எனக்கு இந்த விஷயத்தில் ரொம்ப பிடிக்கும். அவரிடம் இருப்பது போலி இல்லாத பகுத்தறிவுவாதம். மிகவும் அற்புதமாக வரைந்துள்ள கட்டுரை சிவா! கீப் இட் அப். ; - ))
By RVS on வினவு VS வெங்கட் on 6/14/11// //

இது குறித்து தங்கள் gmail முகவரிக்கு ஏற்கனவே மெயில் அனுப்பி உள்ளேன். தங்கள் கருத்துக்கு நன்றி!!

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

jsksathiya said...

sirandha vimarsanam....

Related Posts Plugin for WordPress, Blogger...