CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 18, 2011

அவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்
நான் கடவுளுக்கு பிறகு அடுத்து வழக்கம்போல ஒரு கனமான படைப்பை தரலாம் என பாலா எண்ணியபோது அவருடைய நலம் விரும்பிகள் "ஒரே மாதிரி வேண்டாம். காமடியா ஒரு படம் பண்ணுங்க" என்று வற்புறுத்தியதன் விளைவாகவே அவன்- இவன் படத்தை எடுத்தார் என்று ஓர் இதழில் படித்தேன். அதுவும் சரிதான், எத்தனை தடவைதான் மார்க்கமான(மூர்க்கமான)  நாயகன், கிராமம், பேஸ்மென்ட்டை நடுங்க வைக்கும் குரூர கொலைகள் என ஒரே சாயலில் பாலாவின் படத்தை பார்ப்பது. காமடி படம் என்பதால் குறைந்தபட்சம் லொடுக்கு பாண்டி, ஸ்ரீமன், 'பிதாமகன்' சூர்யா அல்லது நான் கடவுள் பிச்சைக்காரர்களின் நையாண்டி லெவலில் ஒரு 50% ஆவது இயக்குனர் நம்மை சிரிக்க வைப்பார் என நம்பி முன்பே ரிசர்வ் செய்துவிட்டு இன்றைய காட்சிக்காக காத்திருந்தேன். 

வெள்ளி முதலே கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களிடம் இருந்தும் நெகடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்ததும் வயிறு லேசாக கலங்க ஆரம்பித்தது. அதுவும் நடுநிலையாக விமர்சிக்கும் பதிவர்களின் எச்சரிக்கை மணி என்றால் சொல்லவே வேண்டாம். என் கெட்ட நேரம் ஒத்தை டிக்கட்டை மட்டும் எடுத்து இருந்தேன். யார் தலையிலாவது டிக்கட்டை கட்டி விடலாம் என்றால் எல்லா பயலுவளும் உஷாராகி விட்டார்கள். கூட ஒரு டிக்கட் இருந்திருந்தால் தாஜா செய்து எஸ்கேப் ஆகி இருப்பேன். பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது என்று தெரிந்த பிறகு..வேறென்ன செய்ய முடியும். 

விஷாலை விட ஜி.எம்.குமார் சிறப்பாக நடித்துள்ளார் என்று பாலா சொன்னார். ஆனால் படத்தின் துவக்கத்தில் ஜமீன்தாரான அவர் விஷாலின் ஆட்டத்திற்கு இருக்கையில் படுத்தவாறு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கியதுமே எனது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் தன் நண்பரிடம் "என்னடா இது?" என்று சலிக்கத்தொடங்கினார். பாலா படங்களில் வரும் டிஸ்கவரி சேனல் க்ரியேச்சர் கெட்டப்பை இந்த முறை ஆர்யா (செம்மண் புழுதி)தலைவணங்கி  ஏற்றுக்கொண்டார். அவருடைய வசன உச்சரிப்பு கதை நடக்கும் இடத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது.விஷாலாவது நம்மை காப்பாற்றுவார் என்று பார்த்தால்..ம்ஹூம். மாறுகண் வைத்து ஏதோ தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார். அதை பாராட்டியே தீர வேண்டும் எனினும் விஷாலின் கேரியரில் திருப்புமுனையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. 

தாமிரபரணி ரிலீஸ் ஆன சமயம் ஆனந்த விகடன் நடத்திய போட்டியின் மூலம் விஷாலை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன். அது "புகை, மது பழக்கும் உள்ள கேரக்டரில் நடிப்பதை தவிர்ப்பீர்களா? சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா?". அதற்கு அவர் சொன்ன பதில்கள்: "கெட்ட பழக்கம் உள்ள கேரக்டர் கதைக்கு தேவை என்றால் நடிப்பேன். நீங்கள் சொன்ன இயக்குனர்களிடம் பணி புரியும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.". அந்த தருணம் தற்போது அவருக்கு அமைந்தும் அது பாலாவின் முந்தைய நான்கு படங்களின் நாயகர்களுக்கு ஈடாக இல்லை என்பதற்கு அவன் - இவனே சாட்சி. சூர்யா வரும் காட்சியில் தன் முகத்தில் நவரசங்களை காட்டும் விஷாலின் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க வேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...பாவம் ப்ரொட்யூசர்ஸ். 

தந்தைக்கு இரு மனைவிகள். ஆளுக்கொரு பிள்ளையாக அவனும் இவனும். திருட்டு குலத்தொழில். பாசக்கார ஜமீனை கொல்பவனை இருவரும் சேர்ந்து பழி தீர்ப்பது, அவ்ளோதான் கதை. படம் நெடுக போலீசை காமெடி பீஸ் ஆக்கி இருவரும் நக்கல் செய்வது, தண்ணி அடிப்பது, அவ்வப்போது இயற்கை உபாதைகளை பற்றி கப்பு அடிக்க பேசுவது, அம்பிகா ஆண்ட்டி பீடி அடிப்பது, அவருடைய சக்களத்தியாக வரும் ஆண்ட்டி தனது உத்தமபுத்திரன் ஆர்யாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது, க்ளைமாக்சில் வழக்கம்போல பாலாவின் ஸ்பெஷல் 'ருத்ரதாண்டவம்'.  அட போங்க... பாலா சார்...

பாவம் ஜனனி பொண்ணு.  நடிக்க முயற்சி செய்துள்ளார். டப்பிங்...ஸ்ஸ்ஸ். சேதுவில் விக்ரமின் அண்ணி, பிதாமகன் லைலா, சங்கீதா போன்றவர்கள் மனதில் நிற்பதை போல இல்லாவிடினும், கொஞ்சம் சுமாராகவாவது நடித்து இருக்கலாம். ஆர்யா ஜோடியாக வரும் மது ஷாலினி இன்னும் பாவம்.  நாயகிகளை சகட்டு மேனிக்கு நாயகர்கள் அடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் பாலாவுக்கு அப்படி என்ன அலாதிப்பிரியமோ? இன்னும் எத்தனை படங்களில். அவ்வ்!
                                                                      
                                                                
யுவனின் பாடல்கள் ஆடியோவில் சுமாராக இருந்தாலும், படமாக்கிய விதம் அதையும் ரசிக்க வைக்க மறுக்கிறது. வெயில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஜி.எம்.குமாரின் 'அவன் இவன்' நடிப்பை பற்றி பாலா வெகுவாக சிலாகித்து பேசி இருக்கும் அளவிற்கு பெரிதாக இல்லை. பல இடங்களில் அவர் காமடி செய்தாலும் உதடுகள் சிரிக்க மறுக்கின்றன. ஆர்.கே.விடம் அடி வாங்கும் காட்சியில் மட்டும் அவர் மேல் ஓரளவு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், மனதில் பதிய மறுக்கிறது. 

மாடுகளை கடத்தும் ஆர்.கே.வை சூழ்ந்துகொண்டு மீடியா, ப்ளூ க்ராஸ் நபர்கள், போலீஸ் எல்லோரும் நிற்கையில் அவர் சொல்லும் வசனம் ஒன்று "எங்களை பிடிக்க மட்டும் வந்துடறீங்க. குர்பானிக்காக ஒட்டகங்களை கொல்றாங்களே. அங்க மட்டும் போய் கேக்க மாட்டீங்களா? ".  வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம்?பாலாவின் கடவுள் மறுப்புக்காக மட்டுமே சொருகப்பட்டதாக தெரிகிறது.  காதல், பருத்திவீரன் படங்களில் வரும் சிறுவர் பாத்திரங்கள் பெருமளவில் பேசப்பட்டன. ஆனால் முழுநீள நகைச்சுவை படமாக அவன் இவன் இருப்பினும், இதில் வரும் சிறுவனின் நடிப்பு சுமார்தான். 

படம் முடிந்து வெளியே வருகையில் தன் தோழியிடம் ஒரு பெண் சொன்னது; "நான் வரமாட்டேன்னு அப்பவே முட்டிக்கிட்டேன். எல்லாம் உன்னால". முழு நீள நகைச்சுவை படத்தை எடுப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் நகைச்சுவை ஜாம்பவான்கள் தொன்று தொட்டே ஆட்சி செலுத்தி வரும் தமிழ் சினிமாவில் இது இயக்குனர்களுக்கு மிகப்பெரிய சவால். அதில் சிக்சர் அடித்த படங்களில் குறிப்பாக சபாபதி, சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை,தில்லுமுள்ளு,சதிலீலாவதி,உள்ளத்தை அள்ளித்தா(சபாஷ்  மீனாவின் ஜெராக்ஸ் ஆக இருப்பினும்), சென்னை -28  (அப் கோர்ஸ் விருதகிரி, வீராசாமி)  போன்றவற்றை சொல்லலாம். பாலாவின் படங்களில் பெரிய அளவில் கதை இல்லாவிடினும்(சேது தவிர)  ஹீரோக்களின் அசர வைக்கும் நடிப்பு ஒன்றே பிற குறைகளை மறக்கடித்து விடும். ஆனால் காமடி படத்தில் லாஜிக் இல்லாவிடினும் நகைச்சுவை மேஜிக்காவது இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் அவன் இவனில் அதுவும் வெகு சுமார்தான். 

படத்திற்கு டைட்டிலை வைக்கும்போதே "பேரு எதுவா இருந்தா என்ன? பேசாம  'அவன் - இவன்'னு வச்சா போகுது என்று பாலா அசால்ட்டாக யோசித்ததின்  விளைவு இப்பட ஷூட்டிங் முடியும் வரை இருந்திருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது. போதும் பாலா சார். கொஞ்ச வருசத்துக்கு உங்க ட்ரேட்மார்க் எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டு(ஜுராசிக் பார்க் ஹீரோக்கள், சித்ரவதை கொலைகள் etc), (பெரு)நகரம் சார்ந்த கதைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை, பீரியட் பிலிம் போன்ற மாறுபட்ட தளத்திற்கு வர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை என வெவ்வேறு தளங்களில் பயணித்து வரும் இயக்குனர் சுசீந்தரனைப்போல. The ball is in your court, Bala.  

சேவாக் எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல, பாலா படங்கள் ஒவ்வொன்றும் பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லை.அதற்கு முற்றிலும் தகுதியான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் மூலம், காலை இரண்டடி பின்னே வைத்து ஒரு பவுண்டரியாவது அடிக்கலாம் என்று எண்ணி ஹிட் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். தயாரிப்பாளருக்கும் 'ஹிட்' அவுட் ஆகும் என்பது தியேட்டரை விட்டு பெருமூச்சுடன் வெளியே வந்த அம்பயர்களின்(ரசிகர்கள்) முகத்தில் தெரிகிறது!!  நல்லவேளை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் என்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி.   அப்பாவி தயாரிப்பாளராக இருந்திருந்தால் கிளீன் போல்ட்தான் போல. 

அவன் - இவன் லெக் பீஸ் இல்லாத வெகு சுமாரான பிரியாணி! 

........................................................................................

My other site: 

........................................................................................ 

சமீபத்தில் எழுதியது:


........................................................................................


                                                                           

17 comments:

rajamelaiyur said...

Padam kovindava?

RVS said...

சரிப்பா... நான் போகலை... ;-)

Unknown said...

சைவ கடையில பிரியாணி போட்ட மாதிரி ஆகிருச்சா அவன் இவன் படக்கதை, ஹூம்ம்ம் யாருமே பார்க்கற மாதிரி கூட இருக்குன்னு சொல்ல மாட்டேங்குறாங்களே.....!!!!

Anonymous said...

///சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க வேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...பாவம் ப்ரொட்யூசர்ஸ்.

/// ஹஹாஹா

சென்னை பித்தன் said...

எனக்குத் தெரிந்ததெல்லாம் வெஜிடபிள் பிரியாணிதான்!
தியேட்டருக்குப் போய்ப் படம் பாக்குறதே இல்லை!

செங்கோவி said...

ஒரு பெரிய மனுசன் சொன்னாக் கேட்கணும்..அதையும் மீறிப் பார்த்துட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா எப்படி..ம்?

சிவகுமாரன் said...

நல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ் ,

சிவகுமாரன் said...

நல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ் ,

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் இப்போ நான் படம் பார்க்கணுமா வேண்டாமா அதை சொல்லும்யா.....?

! சிவகுமார் ! said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Padam kovindava?//

அது தெரியலை. நமக்கு நாமம் உறுதி.

! சிவகுமார் ! said...

//RVS said...
சரிப்பா... நான் போகலை... ;-)//

எஸ்கேப் ஆயிட்டீங்க!!

! சிவகுமார் ! said...

@இரவுவானம்

உண்மைத்தமிழன் சொல்லி இருக்காரே!

! சிவகுமார் ! said...

@கந்தசாமி

நீங்க கூட கௌரவ நடிகர் மாதிரி அப்பப்ப வர்றீங்க. நன்றி கந்தசாமி!

! சிவகுமார் ! said...

@ சென்னை பித்தன்

ரொம்ப நல்ல விஷயம் சார். நாங்க திருந்த நாள் ஆகும்.

! சிவகுமார் ! said...

@செங்கோவி

தலைவா, நீங்க பதிவு போட்டது சனிக்கிழமை. நான் ரிசர்வ் செய்தது செவ்வாய் கிழமை. டிக்கட்டை வாங்க மாட்டேன்னு சொல்லி பிரெண்ட்ஸ் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டானுங்க. வேற வழி!!

! சிவகுமார் ! said...

//சிவகுமாரன் said...
நல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ்//

தப்பியதற்கு வாழ்த்துகள் சிவகுமாரன்!!

! சிவகுமார் ! said...

//
MANO நாஞ்சில் மனோ said...
யோவ் இப்போ நான் படம் பார்க்கணுமா வேண்டாமா அதை சொல்லும்யா.....?//

விடிய விடிய எந்திரன் பாத்துட்டு ரஜினிக்கு ஜோடி தமன்னாவான்னு கேக்குற மாதிரி இருக்கு. இவ்ளோ பெருசா பதிவு எழுதி இருக்கேன். அப்பயும் இந்த கேள்வி. நேர்ல சிக்குனீங்க...அவ்ளோதான்!!

Related Posts Plugin for WordPress, Blogger...