CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, May 17, 2011

அம்மாவுக்கு ஒரு கட்தாசி!


                                                                             

                                                                         
"டாஸ்மாக்ல கொட்டுற தண்ணிய விட கொஞ்சம் அதிகம் கொட்டுனா என்ன இந்த கொழாய்ல....நம்ம உசுர வாங்குது" 
  

 என்னம்மா இப்பிடி செஞ்சிட்டீங்க? நாங்க எதிர்பாக்கவே இல்லியே. என்ன இருந்தாலும் நீங்க இதுக்கு சரின்னு சொன்னது மனசுக்கு கஷ்டமா கீது. சோனியா டீ குடிக்க கூப்ட்டா ஒடனே ப்ளேன் புடிச்சி டெல்லிக்கு போணுமா? நம்ம கவுரத இன்னா ஆவுறது. வேணும்னா அந்த பெரியம்மாவ இங்க வந்து சிங்கிள் டீ குஸ்ட்டு போவ சொல்லுங்க. அப்பதான் நம்ம கெத்து தெரியும். சரிம்மா, இப்ப விசயத்துக்கு வர்றேன். ஒங்க ஆட்சில நான் ஆசைப்படுறது நடக்கனும்னு நெனச்சி இதை எழுதறேன். சொம்மா ஒரு தபா பச்சி பாருங்க.


மொத மேட்டர் வெளயாட்ட பத்திதான். நீங்க எப்ப வந்தாலும் வெளாட்டுக்கு எதுனா செய்றீங்க. மெட்ராஸ்ல தெற்காசிய வெளாட்டு போட்டிக்கு கட்டுன ஸ்டேடியம்தான் இன்னிக்கி பல ஆட்டக்காரங்கள உருவாக்கி இருக்கு. இப்ப கஷ்டத்துல இருக்குற நம்ம தெறமசாலிகளை கைதூக்கி விடுங்க மவராசி. வலுதூக்குறதுல சாதனை செஞ்ச ஆளுங்க எல்லாம் இப்ப எக்மோர் ரெயில்வே டேசன்ல பாவம் போர்ட்டர் வேலை பாக்கறாங்க. அவங்க மாதிரி ஆளுங்களை மறுபடியும் வெளாட்டுல ஆட வைங்க. கிர்கெட் வேல்ட்கப்பு ஜெயிச்ச அஸ்வினுக்கு ஒரு கோடியாம். ஆனா மத்த ஆட்டக்காரங்க எல்லாம் உதவி செய்ய ஆள் இல்லாம தெருக்கோடில நிக்கறாங்க. அவங்களையும் கண்டுக்கங்க. 

மவுண்ட் ரோட்ல அதிகமா ட்ராபிக் ஆவுற எடமே நந்தனம் சிக்னல்தான். அந்த எடத்துல ஒரு சொரங்கப்பாதை கட்டணும்னு இது வரைக்கும் யாருக்குமே தோணலியே? ஏன்? தி.நகர், ஆழ்வார்பேட்ட, சி.ஐ.டி. நகர் இப்படி பல ஏரியாக்கு போற வழி ஆச்சே அது. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. புது சட்டசப கட்டுன எடத்துல(ஹிந்து பத்திரிக்கை ஆபிஸ் எதிர்ல) பாதி ரோட்ட வளைச்சி போட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க. அத ஒரு பத்து அடி பின்னால தள்ளுனா ரோடு அகலம் ஆகும். ட்ராபிக் ஜாமு கொறையும். லாப்டாப் வேற தரப்போறீங்க. அதை மட்டமான கம்பனிக்கு டெண்டர் விடாம, தரமான பிராண்டட் கம்பனி கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா படிக்கிற புள்ளைங்களுக்கு உதவியா  இருக்கும். 

போன ஆட்சில தமிழ்ல பேரு வச்சா வரி இல்லன்னு கலைஞர் அய்யா   சொன்னதை இந்த சினிமாக்காரங்க எப்படி யூஸ் பண்ணி இருக்காங்க பாருங்க. களவாணி, தெனாவட்டு, போக்கிரி, பொறம்போக்கு இப்படி எல்லாம பேரு வக்கிறது. எந்த மொழில வேணாலும் பேரு வச்சிக்கங்கன்னு சொல்லிடுங்க. தமிழாவது வாழும். அம்மா புண்ணியவதி, ஒட்டுமொத்த தமிழ் மக்களோட முக்கியமான கோரிக்கை ஒண்ணு. போன தடவ சன்.டி.வி.ல "வர்றான் பாரு வேட்டக்காரன்" ன்னு டெய்லி 1000 தபா எங்களை மெரள வச்ச விசய் இப்ப ஒங்க ஆட்சி வந்ததும் ஜெயா டி.வி.ல அடிக்கடி வந்து "வேலா வேலா வேலாயுதம்" ன்னு சொல்லி வவுத்த கலக்குறாரு. முடியல. எங்க நெலம உங்களுக்கு புரியும்னு நெனக்கிறேன். காப்பாத்துங்க தாயி!


                                                                      
"மறுபடியும் பவருக்கு வருவீங்கன்னு தெரிஞ்சுதான் 'மங்காத்தா'ன்னு டைட்டில் வச்சேன் மேடம். Actually I mean it" 


உங்க அமைச்சர்ல சில பேரு முழுக்கை சட்டைய முட்டிக்கு மேல மடிச்சி வஸ்தாது மாதிரி வலம் வர்றாங்க. அதுவும் ஒங்க முன்னாடி. குறிப்பா பன்னீர் சார் மாதிரி ஆளுங்க. ஒண்ணு அரைக்கை சட்டை போட சொல்லுங்க. அப்டி இல்லன்னா எறக்கிவிட்டு டீசன்ட்டா டிரஸ் போட சொல்லுங்க. என்ன தெனாவட்டு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப நீங்க சி.எம்.மா இருந்த காலம். ரோட்ட க்ராஸ் பண்ண பாத்தா ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. என்னை போகவிடாம ஒரு போலீஸ் அங்கிள் தடுப்பாரு. செம கடுப்பா இருக்கும். ரொம்ப நேரம் கழிச்சி திடீர்னு "ஹூய்..ஹூய்"ன்னு சத்தம் போட்டுட்டு ரெண்டு அம்பாசடர் காரு வேகமா பறக்கும். கார் கதவு வழியா கருப்பு பூனைங்க குறுகுறுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி ஒங்க காரு என்ன தாண்டி போவும். கடைசில இப்ப போகலாம்னு போலீசு சொன்ன ஒடனே வூட்டுக்கு ஓடுவேன். இப்ப ஏகப்பட்ட ஜனங்களோட வண்டிங்க ரோட்ல ஓடுது. அந்த நெலம மறுபடி வராமா இருக்கணும் மம்மி!

                                                                 
கடைசியா ஒரு கோரிக்கை மேடம். எல்லா அமைச்சர் பேரையும் சொன்னீங்க. துணை முதலமைச்சர் யாருன்னு சொல்லவே இல்லியே. அந்த பதவியை எங்க நிரந்தர அண்ணி பிரேமலதாவுக்கு குடுத்து பாருங்க. செம டக்கரா இருக்கும். ஒங்க ரெண்டு பேரு காம்பினேசன் பட்டைய கெளப்பும். பாத்து செய்ங்க!
...................................................................


தொடர்புடைய பதிவுகள்:
....................................................................

My other site: nanbendaa.blogspot.com
.....................................................................16 comments:

Speed Master said...

துணைமுதலமைச்சர் பதவி MLA வுக்குதான் தரனும்

அண்ணி MLA வா

ஏன் கேப்டனுக்கு தரக்கூடாதா???=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”

http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

! சிவகுமார் ! said...

தெரியும் நண்பரே. இந்த காம்பினேசன் நல்லா இருக்குமேன்னு ஆசைப்பட்டேன். அவ்ளோதான்!

rajamelaiyur said...

Super letter

! சிவகுமார் ! said...

Thanks Raja!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

haaha ROFL

! சிவகுமார் ! said...

Welcome Ramesh!

Unknown said...

தலைப்பே தப்பா இருக்கே சசிகலா அம்மாவுக்கு ஒரு கட்தாசி! அப்படின்னுதான் இருக்கனும் :-)

Unknown said...

மாப்ள நல்லாத்தான் சொல்லிகிரீங்கோ!

MANO நாஞ்சில் மனோ said...

//மவுண்ட் ரோட்ல அதிகமா ட்ராபிக் ஆவுற எடமே நந்தனம் சிக்னல்தான். அந்த எடத்துல ஒரு சொரங்கப்பாதை கட்டணும்னு இது வரைக்கும் யாருக்குமே தோணலியே? ஏன்? தி.நகர், ஆழ்வார்பேட்ட, சி.ஐ.டி. நகர் இப்படி பல ஏரியாக்கு போற வழி ஆச்சே அது. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. புது சட்டசப கட்டுன எடத்துல(ஹிந்து பத்திரிக்கை ஆபிஸ் எதிர்ல) பாதி ரோட்ட வளைச்சி போட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க. அத ஒரு பத்து அடி பின்னால தள்ளுனா ரோடு அகலம் ஆகும். ட்ராபிக் ஜாமு கொறையும். லாப்டாப் வேற தரப்போறீங்க. அதை மட்டமான கம்பனிக்கு டெண்டர் விடாம, தரமான பிராண்டட் கம்பனி கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா படிக்கிற புள்ளைங்களுக்கு உதவியா இருக்கும். //

யோவ் மெதுவா பேசுய்யா, நடக்குறது அம்மா ஆட்சி....!!!

Chitra said...

:-)))))))

செங்கோவி said...

மம்மி பாவம்யா..விட்டுடுங்க!

அஞ்சா சிங்கம் said...

அந்த பதவியை எங்க நிரந்தர அண்ணி பிரேமலதாவுக்கு குடுத்து பாருங்க. செம டக்கரா இருக்கும்.
//////////////////////

என்ன ஒரு வில்லத்தனம் ............

சிராஜ் said...

நந்தனம் சிக்னல் ல ரொம்ப பாடு பட்டிருப்பீங்க போல? அந்த கோரிக்கை 2 வது இடத்தில இருக்கே???

சிராஜ் said...

யோவ் சிவா... கமெண்ட் modulation வச்சா, அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்த்து கிளியர் பண்ணுப்பா... கமெண்ட் போட்டுட்டு 2 நாளா பாக்கிறேன் வரமாட்டேங்குது.

! சிவகுமார் ! said...

நாலு நாலா சிஸ்டம் புட்டுக்கிச்சி. இப்பதான் உசுரு வந்துருக்கு. கருத்து சொன்ன எல்லாருக்கும் தேங்க்ஸ்!

ரஹீம் கஸ்ஸாலி said...

மெய்யாலுமே சூப்பர எழுதிருக்கேப்பா

Related Posts Plugin for WordPress, Blogger...