CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, May 16, 2011

அம்மா பதவி ஏற்பு விழா!

"அவரு பாவம். விட்டுடுங்க. மைக் செட் கட்டுறவரு. அவரை பம்ம சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்கப்பா!"

                                                               
புதிய முதல்வர் அம்மாவின் பதவி ஏற்பு விழாவை நேரடித்து தன்னை நட்ட நடுநிலை தொலைக்காட்சி என்று காட்டிக்கொண்டது சன் டி.வி. எப்படியோ நமக்கு தொழில் நடந்தா சரி என்ற கலாநிதியின் வழி தனி வழிதான். விழா நடக்கும் இடத்தில் ரபி பெர்னார்ட் மைக்கை பிடித்துக்கொண்டு கொஞ்சம் ஓவராக கூவிக்கொண்டு இருந்தார். தலையில் இருந்த ஒரு சில முடியை கையால் படிய வைக்க சிரமப்பட்டவாறு உள்ளே நுழைந்தார் நரேந்திர மோடி. சாந்த சொரூபியாக சந்திரபாபு நாயுடும் ஆஜர் ஆனார். சோவும், கேப்டனும் செம ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர். அரங்க வாயிலில் அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் பன்னீர் தெளிக்காத குறையாக அனைவரையும் வரவேற்று கொண்டிருக்க, இறுதி நேரத்தில் ராடன் டி.வி. முதல்வருடன் பனியன் போடாத வெள்ளை சட்டையுடன் பரபரப்பாக உள்ளே நுழைந்தார் சரத்குமார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் தானே போய் உட்கார்ந்து கொண்ட தானைத்தலைவர் இளைய தளபதியின் நைனா சந்திரசேகர் அட்டன்டன்ஸ் போட்டார். தேர்தலில் போட்டி இடாமல் பதவியில் அமர்ந்த நைனாவுக்கு எதிராக போராட்டம் நடக்க நாள் குறித்துவிட்டனர் பிற தயாரிப்பாளர்கள். அம்மாக்கு முன்னால பதவியை பிடிக்க என்ன நைனா அவசரம்?

அம்மா பச்சை நிற உடையில் வருவார் என்று தவறான தகவலை சொன்னது NDTV ஹிந்து. ஆனால் டார்க் மெரூன் கலர் உடையில் உள்ளே வந்தார். அம்மா வந்த கடற்கரை சாலை நெடுக தொண்டர்கள் அவருடைய கார் டயருக்கு முன்னே எலுமிச்சை பழம் போல உருண்டு புரள முற்பட, அவர்களை கருப்பு பூனைகள் கவ்விச்சென்றன. ரோட்டோரம் வைக்கப்பட்டு இருந்த அம்மாவின் மெகா பேனரை யாரோ ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி கிழித்து தொங்கவிட்டு இருந்தார். அம்மா சரியாக மதியம் 12:19 மணிக்கு (4 நிமிடம் லேட்டாக) வந்தார். நம்ம கவர்னர் அம்மாவின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார். அம்மா வாட்சை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கையில் முகம் சற்று சிவக்க துவங்கியது. நல்ல நேரம் போறதுக்குள்ள இந்த கவர்னர் வருவாரா, மாட்டாரா என்ற பதற்றம் அவர் முகத்தில் தென்பட்டது. ஒரிஜினல் புருவத்தை டிங்கரிங் செய்து விட்டு சிறிதாக ட்ரிம் செய்த புருவத்துடன் தென்பட்டார் அம்மா. 


ஒருவழியாக 12:33 மணிக்கு வீல்சேரில் என்ட்ரி குடுத்தார் பர்னாலா. தேவுடா, புயல் வேகத்துல நடந்து வர்ற முதல்வர்/கவர்னரை எப்பதான் எங்க நாட்டுக்கு தரப்போறியோ!  அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அம்மா. பெண் அமைச்சர்கள் பர்னாலாவிற்கு கை கொடுக்காமல் வணக்கம் போட்டுவிட்டு ஓட, பல ஆண் அமைச்சர்கள் அம்மா அருகில் இருந்ததால் முதுகை வளைத்துக்கொண்டு செம பம்மு பம்மினார்கள். ஆஹா...ஆஹா. மம்மியை பார்த்து பம்மிய அமைச்சர்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி. இனி நமக்கு தினமும் தீபாவளிதான். அம்மாவின் வல மற்றும் இடப்பக்கம் பல அடி தூரம் கேப் விட்டு அமைச்சர்கள் அமர்ந்து இருந்தனர். வாயில் கை வைத்தவாறு அம்மா காதில் ஏதோ ஓதிக்கொண்டு இருந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர். என்னதான் சொல்லுங்க பம்முவதில் பன்னீரை மிஞ்ச ஒருத்தன் பிறந்துதான் வர வேண்டும்!

                                                                       
"ரொம்ப நாளா குறுகி குறுகி முதுகு வலிக்குது. எத்தனை வலுவா மழை அடிச்சாலும் சரி, இன்னைக்காவது நிமிர்ந்த நன்னடை போட்டு ஒரு வாக் போயே தீரணும்டா சாமி"

"இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து" என்று மைக்கில் ஒருவர் சொல்ல, "ஜன கன மன" ஒலித்தது. அம்மா முகம் சற்று கலவரம் ஆனது. பேமென்ட் சரியாக கிடைக்காத கடுப்பில் யாரோ சிலுப் சிலுப் காட்டியதன் விளைவாக இருக்கும். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அமைச்சர் சோ. கருப்பசாமி விபூதி மணக்கும் நெற்றியுடன் பதவி ஏற்றதுதான் செம ஹைலைட். ஸ்கூல் படிக்கும் பிள்ளை போல் வெள்ளந்தியாக கருப்பசாமி எடுத்த பதவிப்பிரமாணத்தை கண்டு மொத்த சபையே சிரிப்பில் ஆழ்ந்தது. சோ.ராமசாமி அவரை செம கிண்டல் செய்து கொண்டிருக்க, சோ. கருப்பசாமி மற்றும் சோ. ராமசாமி இருவரையும் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தார் அம்மா. 

அம்மா பதவி ஏற்ற சமயத்தில் ஒரு ரத்தத்தின் ரத்தம் "வாழ்க" கோஷம் போட்டு அரங்கை அதிர வைத்தது. பதவி ஏற்கும் நேரத்தில் கவர்னர் "நான் பன்னீர்", "நான் செங்கோட்டையன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியானார். ஒரு முறை கூட "நான் பர்னாலா" என்று சொல்லவே இல்லை. "நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தில்லாலங்கடி வேலையிலும் ஈடுபடமாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்" என்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் கடவுள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துவிட்டு சென்றனர். 

பதவி ஏற்பு படலம் முடிந்ததும் மைக்கில் "தற்போது தேசியகீதம் முழுதாக இசைக்கப்படும்" என்றார் ஒருவர். எப்பவுமே அப்படித்தானே? அது என்னங்கடா முழுதாக?  பாடல் முடிந்ததும் "நிரந்தர முதல்வர்.." என்று வழக்கம்போல் ஒரு ரத்தம் கொதித்தது. தம்பி, யாரா இருந்தாலும் அஞ்சி வருசம்தான். நாங்க ரொட்டேசன் பாலிசில உறுதியா இருக்கோம். தண்ணிய குடி. தண்ணிய குடி. 

லைவ்வா நிகழ்ச்சிய பாத்துக்கிட்டே பதிவு எழுதுறது எம்புட்டு கஷ்டம்டா சாமி. அதுக்கு நாந்தான் முதல்ல தண்ணிய குடிக்கணும். வர்ட்டா!

..............................................................
My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம் 

நண்பேன்டா - மிக்சர் கடை
...............................................................

  

28 comments:

Unknown said...

ha ha sollave illa, anga eppa poneenga

MANO நாஞ்சில் மனோ said...

வீல்சேரில் என்ட்ரி குடுத்தார் பர்னாலா. தேவுடா, புயல் வேகத்துல நடந்து வர்ற முதல்வர்/கவர்னரை எப்பதான் எங்க நாட்டுக்கு தரப்போறியோ! ////

இந்த கேள்வியை நான் எப்போ இருந்தோ கேட்டுட்டு இருக்கேன், இந்தியாவுலதான் இந்த சாபக்கேடு....

சக்தி கல்வி மையம் said...

செம நக்கல் பதிவு..

என் கேள்விக்கு பதிலென்ன?

Unknown said...

சிவா செம கலக்கல் போங்க ,பதிவ படிச்ச எனக்கும் தண்ணி தவிக்குது

Unknown said...

எலேய் மாப்ள நக்கலு!..........
இதெல்லாம் தானைத்தலைவன் கிட்ட சொல்ல வேண்டியதது பாத்துய்யா ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

Philosophy Prabhakaran said...

// ஒரிஜினல் புருவத்தை டிங்கரிங் செய்து விட்டு சிறிதாக ட்ரிம் செய்த புருவத்துடன் தென்பட்டார் அம்மா. //

யோவ்... என்னய்யா கோ பட ஹீரோயினை பத்தி எழுதறா மாதிரி எழுதி இருக்கே...

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி ஸ்டில்ஸ் எல்லாம் எங்கே இருந்து புடிக்கிறீங்க சிவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தண்ணி வேணும்னா கேப்டன்கிட்ட கேட்க வேண்டித்தான?

சிராஜ் said...

ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க ஒரு அம்மா ரசிகர்னு நிருபிச்சிட்டீங்க சிவா... பின்ன வேலைக்கு போகாம, அம்மா பதவி ஏற்புக்கு போயிருக்கீங்களே????

மற்றபடி நேரடி வர்ணனை கலக்கல்.

Unknown said...

//அம்மா பச்சை நிற உடையில் வருவார் என்று தவறான தகவலை சொன்னது NDTV ஹிந்து. //

NDTVkku kottu

//ஆஹா...ஆஹா. மம்மியை பார்த்து பம்மிய அமைச்சர்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி. இனி நமக்கு தினமும் தீபாவளிதான்//

ஆஹா...ஆஹா.

Chitra said...

பாடல் முடிந்ததும் "நிரந்தர முதல்வர்.." என்று வழக்கம்போல் ஒரு ரத்தம் கொதித்தது. தம்பி, யாரா இருந்தாலும் அஞ்சி வருசம்தான். நாங்க ரொட்டேசன் பாலிசில உறுதியா இருக்கோம். தண்ணிய குடி. தண்ணிய குடி.


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... உணர்ச்சி வசப்பட்டு விட்டார் போல.... படங்கள் நல்லா இருக்குதுங்க.

செங்கோவி said...

அடடே, உங்களுக்கும் அழைப்பு வந்துச்சா....

அஞ்சா சிங்கம் said...

சிவா பொறுமைசாலின்னு எனக்கு தெரியும் இவ்ளோ பொறுமை காரன்னு இப்போ தான் தெரியுது அதை முழுசா உக்கார்ந்து பாத்திருக்கே ................

! சிவகுமார் ! said...

@சுரேஷ்

டி.வி.ல பாத்ததுதாங்க

! சிவகுமார் ! said...

@MANO நாஞ்சில் மனோ

சாபக்கேடு எப்ப தீருமோ..

! சிவகுமார் ! said...

@கருண்

நன்றி கருண். தங்கள் பதிவை படித்தேன்.

! சிவகுமார் ! said...

@விக்கி உலகம்

மாம்சு..என் தானைத்தலைவன் டி.ஆர். மட்டுமே..!

! சிவகுமார் ! said...

@பிரபாகரன்

அம்மாவும் ஒரு காலத்துல ஹீரோயின்தான. ஸ்டில்ஸ் எல்லாம் கூகுள் தயவுதான்.

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

நான் வடிவேலு மாதிரி ஆகணும்னு உங்க ஆசை..ரைட்டு..

! சிவகுமார் ! said...

@Arun Kumar

வருகைக்கு நன்றி அருண்!

! சிவகுமார் ! said...

//சிராஜ் said...
ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க ஒரு அம்மா ரசிகர்னு நிருபிச்சிட்டீங்க சிவா... //

அடுப்ப பத்த வச்சிட்டீங்க..

! சிவகுமார் ! said...

@ சித்ரா

கருத்துக்கு நன்றி சகோதரி சித்ரா!

! சிவகுமார் ! said...

@செங்கோவி

ஜெயா. டி.வி. அழைப்பு வந்தது. வீட்ல இருந்தே பார்த்தேன்.

! சிவகுமார் ! said...

@செல்வின்

கண்கொள்ளா காட்சி. எப்படி மிஸ் பண்ண முடியும்?

எம் அப்துல் காதர் said...

// லைவ்வா நிகழ்ச்சிய பாத்துக்கிட்டே பதிவு எழுதுறது எம்புட்டு கஷ்டம்டா சாமி.//

ஆனா எங்களுக்கு படிக்க ஜாலியா இருந்தது நீங்க எழுதியது.

ரஹீம் கஸ்ஸாலி said...

நேரடி ஒளிபரப்பை பார்க்காத குறையை உங்க வர்ணனை போக்கிவிட்டது...கலக்கல் நடையில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

"நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தில்லாலங்கடி வேலையிலும் ஈடுபடமாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்" என்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் கடவுள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துவிட்டு சென்றனர். ////
நச்

Related Posts Plugin for WordPress, Blogger...