CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, May 22, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (22/05/11)சிவந்த மண்: 


செம்மண் புழுதி புறக்க பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி நாளை ஆரம்பம் ஆகிறது. உலகின் புகழ்பெற்ற 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டியாக கருதப்படும் இதில் தனி ஒருவரின் ஆதிக்கம் பெரிதாக எடுபட்டதில்லை. விதிவிலக்கு ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால். உலகின் நம்பர்.1 வீரரான இவர் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து இப்போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். படு வேகமாக முன்னேறி வரும் செர்பிய வீரர் டோஜோவிக் இவருக்கு கடும் சவாலை தரக்கூடும். இந்தியா சார்பாக சானியா மற்றும் சோம்தேவ் ஆட, இரட்டையர் பிரிவில் லியாண்டர் - மகேஷ் ஜோடியும் ஆடுவது மகிழ்ச்சியான செய்தி. இரண்டு வாரங்கள் நடக்கும் ஆட்டங்களை நேரடியாக  ஒளிபரப்பு செய்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
..........................................................................................

வியாபாரி:

பெட்டிக்கடை ஒன்றில் 'ஜெயா'ஸ் அஜெண்டா' எனும் தலைப்பில் 'ஜெ' அட்டை படத்துடன் 'இந்தியா டுடே' ஆங்கில இதழ் தொங்கிக்கொண்டு இருந்தது. 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பின் அட்டையில் ரஜினி படம் பெரிதாகவும் 'ஜெயலலிதாவின் செயல் திட்டம்' எனும் தலைப்பில் அம்மா படம் ஸ்டாம்ப் சைசிலும் இருந்தது. ரஜினிய வச்சி காசு பாக்குற டெக்குனிக்கு. எப்படியும் நம்மாளுங்க வாங்கியே தீருவாங்கன்னு ஒரு அபார நம்பிக்கைதான்!!
.......................................................................................

தூள்:  


                                                                         
CNN-IBN சேனலின் The week that wasn't நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடந்த நிகழ்வுகளை நையாண்டி செய்து பட்டையை கிளப்பி வருகிறார் சைரஸ் ப்ரோச்சா. குறிப்பாக இந்திய அரசியல்வாதிகளை வறுத்து எடுக்கிறார் மனிதர். ஞாயிறுதோறும் 10:30 AM, 2:30 PM & 8:00 PM ஆகிய நேரங்களில் ஒளிபரப்பு ஆகிறது. இவர் அடிக்கும் நக்கலுக்கு ஏகப்பட்ட வழக்குகள் போடப்படுவதால் பல பேர் கொண்ட வக்கீல் அணி இவருக்காக இயங்கி வருகிறது. இதில் இருந்தே சைரஸ் அண்ணன் எவ்ளோ ரவுசு கட்டுகிறார் என்று பாருங்கள்.  
........................................................................................

மொழி (sms):

செம்மொழியான தமிழ் மொழியாம் - நேற்று.
கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் - இன்று. 
.......................................................................................

பெண்சிங்கம்: 

                                    
அமெரிக்காவில் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளியை வென்று 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார் 27 வயதான ஹரியானா வீராங்கனை அன்னு ராஜ். இந்தியா சார்பாக ரோஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம் சிங், சஞ்சீவ் ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்பது கூடுதல் செய்தி.                                    
.............................................................................................

ரத்தக்கண்ணீர்:

இன்று காலை பேப்பர் கடையில் 'முரசொலி' (அவ்வ்!) ஊசலாட்டிக்கொண்டு இருந்தது. இதுவரை ஒருமுறை கூட படித்தது இல்லை. அப்படி என்னதான் இருக்கு? பாத்துடுவோம் என்று திடமான மனதுடன் வாங்கினேன். முதல் அதிர்ச்சி. மொத்தம் 6 பக்கங்கள்தான். ஆனா வெல மட்டும் 3 ஓவாயாமுல்ல. முதல் பக்கத்தில் 'இறுதிப்போரில் நாம் வெல்வது திண்ணம்' எனும் தலைப்பில் முழுப்பக்க கட்டுரை உடன்பிறப்புகளுக்கு. ஆத்தாடி. எத்தே பெருசு. தொடர்ச்சி ஆறாம் பக்கம்னு வேற போட்டு இருந்திச்சி. மேலோட்டமா படிச்சிப்பாத்தா  'பராசக்தி' 'மனோகரா' வரலாறு...ஸ்ஸ்..அப்பா. அப்படியே ஜம்ப் அடிச்சி கடைசி பக்கத்துக்கு தவ்வினேன். அதில் "தம்பி, நம் இருவண்ணக்கொடி பறக்கும் இடத்தில் புல் முளைக்க வேண்டும் என குமரி முனையிலிருந்து, இமயக்கொடுமுடி வரை உள்ளவர்கள் தவம் இருக்கிறார்கள். உஷாரு" என்று எழுதி இருந்தது. அடுத்தமுறை போனா 'நமது எம்.ஜி.ஆர்.' 'தி ரைசிங் சன்' பேப்பரை கடைக்காரர் என் தலைல கட்ட காத்துக்கிட்டு இருப்பார். மொதல்ல கடைய மாத்தணும்!!
..............................................................................................    

நாட்டாமை:

என்னடா காலக்கொடுமை இது. ஒலகத்துக்கே வாராவாரம் வெள்ளிப்பரிசு தந்த வள்ளல் மகளுக்கே இந்த வாரம் வெள்ளிப்பரிசு தந்துட்டாரே ஜட்ஜு அய்யா.  என்ன எகத்தாளம் இருந்தா 2 - வது வருச நிறைவு விழாவுக்கு சோறு திங்க கூப்புடுவாங்க. ராஸ்கல்ஸ். இதையெல்லாம் பாக்குறப்ப வடிவேலு ஜோக்கு ஞாபகத்துக்கு வருது.

கோனியா:  "கூல் ட்ரிங்க் குடிங்க மாப்ள. குளுகுளுன்னு இருக்கும். எரிச்சல் அடங்கும். குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"     

மு.க.:  "போம்மா அங்குட்டு. ஏற்கனவே அங்கங்க பொரிஞ்சு போயி கெடக்கு. இதுல வேற குத்தாலம் அருவின்னு பாட்டு வேற"
..............................................................................................

இதுதாண்டா போலீஸ்:

              
                                                                    
"நல்லா கேட்டுக்கிடுங்க. வடிவேலு ஒளிஞ்சி இருக்குற எடத்த சொல்லியே தீரணும். இல்லன்னா விருதகிரி படத்தை மறுபடியும் போட்டுடுவேன். யாரும் தப்ப முடியாது. கதவுகிட்ட பாருங்க. டி.ஆர். அண்ணன் காவலுக்கு இருக்காரு"
...................................................................................       
                                                              
நாடோடித்தென்றல்:          

ஆடுகளம் படத்திற்கு கடும் சவாலை தந்து 4 தேசிய விருதுகளை வென்ற சிறந்த மலையாள படமான 'ஆடமின்டே மகன் அபு' வில் இருந்து மனதை வருடும் பாடல்:                                                             http://youtu.be/V_HpBv9MXes

..............................................................
My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:


.............................................................
13 comments:

Anonymous said...

செம்மொழியான தமிழ் மொழியாம் - நேற்று.
கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் - இன்று./// ஹஹா சூப்பர் பாஸ்

அந்த விஜயகாந்தின் போட்டோ உண்மையிலே சிரிக்க வைத்துவிட்டது

Philosophy Prabhakaran said...

யோவ்... நாங்க அப்படித்தான்யா அட்டைப்படத்துல போடுவோம்... எங்க தலைவரு ரசினியை பத்தி யாராவது தப்பா பேசினா தக்காளி தமிழ்நாடே பத்திக்கிட்டு எரியும்...

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லா கேட்டுக்கிடுங்க. வடிவேலு ஒளிஞ்சி இருக்குற எடத்த சொல்லியே தீரணும். இல்லன்னா விருதகிரி படத்தை மறுபடியும் போட்டுடுவேன். யாரும் தப்ப முடியாது. கதவுகிட்ட பாருங்க. டி.ஆர். அண்ணன் காவலுக்கு இருக்காரு"//

யாத்தே எத்தா தண்டி ஒடுங்கலே ஒடுங்கலே......

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் முரசொலியை எப்பிடிய்யா அம்புட்டு தெகிரியமா படிச்சீரு அவ்வ்வ்வ்....!!!

Rathnavel Natarajan said...

அருமை.

சென்னை பித்தன் said...

//செம்மொழியான தமிழ் மொழியாம் - நேற்று.
கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் - இன்று. //
”எம்மொழியாயினும் அது கலைஞர் மொழியே”
ஃபுல் மீல்ஸ்!

! சிவகுமார் ! said...

@கந்தசாமி

வருகைக்கு நன்றி கந்தசாமி!

! சிவகுமார் ! said...

@பிரபாகரன்

இப்ப மட்டும் தமிழ்நாட்ல உறைய வக்கிற பனிக்காலமாவா இருக்கு? ஏற்கனவே அக்கினி வெயில்ல அவிஞ்சி போய்தான் கெடக்கு.

! சிவகுமார் ! said...

@மனோ

போன அஞ்சி வருஷம் தமிழ்நாட்ல சட்டைய கிழிச்சிக்காம தப்பிச்சமே எல்லாரும். அந்த தைரியத்துக்கு முன்னாடி இது ஒண்ணுமில்ல அண்ணே!!

! சிவகுமார் ! said...

@ரத்னவேல்

நன்றி ஐயா!

! சிவகுமார் ! said...

@சென்னை பித்தன்

//எம்மொழியாயினும் அது கலைஞர் மொழியே//

இத்தாலியுமா?

சிராஜ் said...

ஸ்பெஷல் மீல்ஸ் ரொம்ப கலவையாவும் ரகளையாவும் இருந்தது... முதலில் இந்த கான்செப்ட்ட சுட்டு நம்ம தலத்தில எழுதணும்...
குட் வொர்க் சிவா

Unknown said...

மாப்ள விஷயங்கள் அனைத்தும் தூள்யா!

Related Posts Plugin for WordPress, Blogger...