CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, May 6, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (06/05/11)


                                                     

பூவொன்று புயலானது: 


                                                                 
.................................................................................

பல்லாண்டு வாழ்க:


சில நாட்களுக்கு முன் வம்பை விலைக்கு வாங்கும் பதிவுலக நண்பர் மணிக்கு போன் செய்து மாறுபட்ட குரலில் பேசினேன்.

"ஹலோ மணியா? "

"ஆமாங்க நீங்க?"

"மதுரை தி.மு.க. இளைஞர் அணில இருந்து பேசறேன். உங்க பதிவுல எதுக்கு கலைஞரை கிண்டல் செஞ்சி எழுதி இருக்கீங்க?"

"நான் ரொம்ப மோசமா எல்லாம் எழுதலியே?"

"அதெல்லாம் தெரியாதுங்க. அழகிரி அண்ணன் ரொம்ப கோவமா இருக்காரு. எதுக்கு இப்படி எல்லாம் எழுதறீங்க?"

"ஹல்லோ. நீங்க யாரு? எங்க இருக்கீங்க?"

"மதுரை மேலமாசி வீதி இளைஞர் அணி ஆபிஸ்ல இருக்கேன். நேர்ல வாங்க"

"இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன். எனக்கென்ன பயம்"


                                                           
                                                                   
ஒரிஜினல் அஞ்சா நெஞ்சனாக மதுரையில் வலம் வரும் அன்புத்தோழர் மணிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவர் இதே நெஞ்சுரத்துடன் மதுரை மாநகரை கலக்க வாழ்த்துவோம். வாழ்க நீவிர் பல்லாண்டு!
.....................................................................................................

அன்புள்ள ரஜினிகாந்த்: 

மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு மருத்துவர்கள் சொன்ன அறிவுரை "சூட்டிங் நடக்கும்போது மின் வெளிச்சம் தங்கள் உடலில் படுவது ஆபத்தானது" அதை தவிர்க்கவும்". எந்திரன் படம் முடிந்ததுமே ரஜினி சினிமாவுக்கு டாட்டா சொல்லி இருக்கலாம். இதற்கு மேலும் நடித்து உடலை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வது ஏன்? நீங்கள் பார்க்காத பணமா? போதும் ஒய்வு எடுங்க பாஸ்.                                             
........................................................................................................

கில்லி:

                                                                 

ட்விட்டரில் இன்று உலகத்தையே கலக்கிக்கொண்டிருக்கும் பரபரப்பான ஆள்தான் இந்த 33 வயது சொஹைப் அதர். ஒசாமா கொல்லப்பட்ட சம்பவத்தை அருகில் உள்ள இடத்தில் இருந்து நேரடியாக ட்வீட் செய்த பாகிஸ்தான் நாட்டின் கில்லி. இந்நிகழ்வை இவர் ட்வீட் செய்வதற்கு முன்பு இவரது பாலோயர்களின் எண்ணிக்கை 100+ மட்டுமே. இன்று ஒரு லட்சத்தை தாண்டி விட்டது அந்த எண்ணிக்கை. பாவம் மனிதர். பலருக்கு பதில் சொல்லியே அலுத்து விட்டார். இவர் ட்வீட் செய்ததில் சிலவற்றை கீழே பார்ப்போம்:

Here are the answers to a few questions that I am being asked over and over again. http://www.reallyvirtual.com/faq/

*   Sohaib Athar 
A huge window shaking bang here in Abbottabad Cantt. I hope its not the start of something nasty :-S

 Sohaib Athar 
@ 
@ yep, the mad power cuts have reached abbottabad - 14 hours daily - luckily I have generator AND a UPS at the coffee shop.

 Sohaib Athar 
Uh oh, now I'm the guy who liveblogged the Osama raid without knowing it.

ட்விட்டரில் சொஹைப்:  @reallyvirtual.  வெப்சைட்: reallyvirtual.com. ஒசாமா இறந்த இடத்தின் அருகே இவர் எடுத்த படங்கள் இத்தளத்தில் உள்ளன. அதில் ஒன்று:

                                                                       
..................................................................................................

பொக்கிஷம்:

சமீபத்தில் மறைந்த வில்லன் நடிகர் அலெக்சின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. திரை உலகில் பெருமளவு பிரகாசிக்க இயலாவிடினும் தமிழன் என்ற முறையில் என்றும் நினைவில் நிற்கும் வண்ணம் பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார் இவர். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனைதான் அது. இதுதவிர சிலம்பம், ஒயில் மற்றும் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர் இவர். UAE அரசு இவருக்கு செவாலியே பட்டம் தந்து கௌரவித்து உள்ளது. 


தமிழகத்திற்கும், தமிழ் திரை உலகிற்கும் கிடைத்த அரிய பொக்கிஷத்தின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
.................................................................................................

தங்கப்ப... தக்கம்: 

நேற்று தி.நகர் பேருந்து நிலையத்தில் அரசு ஊழியர் மைக்கில் அறிவித்தார் இப்படி: "நாளை அட்சய திருதியையை முன்னிட்டு தி.நகரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்". அடப்பாவிங்களா....எப்படி எல்லாம் டெவெலப் ஆகிட்டு போறீங்கடா. இன்னிக்கி காலைல ஏழு மணிக்கே பல்லு வெளக்காம இன்ஸ்டன்ட் குபேரர்கள் ஆக படை எடுத்து வரப்போறாங்க நம்ம மக்கள். அது சரி இதுக்கு முன்ன நகை வாங்கிட்டு போனவங்க எல்லாம் இப்ப எத்தன கோடிக்கு அதிபதி ஆகி இருக்காங்கன்னு ஒரு நகைக்கடைக்காரனும் சொல்லவே இல்லியே? போங்க.. மொத்தமா போயி கடைல விழுங்க. Forbes பத்திரிக்கைல அடுத்த வருஷம் உங்க பேருதான் வரப்போகுது.  
.......................................................................................                                                                      
          
அட்டகாசம்:                  
                                                                         
போன வாரம் ரிலீஸ் ஆன Source Code படம் செம கலக்கலா இருக்கு. பிரின்ஸ் ஆப் பெர்சியா படத்தோட ஹீரோதான் இதுலயும் நடிச்சிருக்கார். இன்சப்சன் படம் மாதிரி ஒவ்வொரு சீனும் செம இன்டரெஸ்டிங். ஒரு தரம் பாத்ததுமே புரியுறது கொஞ்சம் கஷ்டம். ரொம்ப உன்னிச்சி பாக்கணும். அந்த அளவுக்கு நம்ம மூளைக்கு செம வேலை தந்துருக்கார் டைரக்டர். சினிமா ரசிகர்களே, டோன்ட் மிஸ்.                                             

 ட்ரைலர்:                                                                                
                                                               http://youtu.be/DiBVUulE_wo
..................................................................................

வெண்ணிற ஆடை:

முண்டா பனியன் போடுற ஆளுங்களுக்கு ஒரு கேள்வி. அது எப்படி தலைவா கொளுத்துற வெயில்ல கூட இந்த பனியனை போட்டுக்கிட்டு பொது இடத்துல சுத்தறீங்க. எதுக்கு கேக்கறன்னா, கை வச்ச பனியன் போட்டா அது ஒரு பில்டர் மாதிரி வியர்வையை கொஞ்சமாச்சும் வடிகட்டி வாடையை குறைக்கும். ஆனா சட்டைக்குள்ள இந்த முண்டா பனியனை போட்டுக்கிட்டு வேர்க்க விறுவிறுக்க ட்ரெய்னு, பஸ்சுல எல்லாம் போறப்ப பக்கத்துல இருக்கறவன் நிலைமைய நினச்சி பாருங்க. என்ன கொடும சரவணன்!
..................................................................

My other site: nanbendaa.blogspot.com
.................................................................  

28 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நிறைய விபரங்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

அண்ணே உங்க விஷயங்கள் அடங்கிய பதிவு சூப்பருண்ணே!

Prabu M said...

வழக்கம்போல் நல்ல உணவு நண்பா... :)

சென்னை பித்தன் said...

சாப்பிட்டு முடித்ததும் ஏப்பமா வருது!நல்ல சாப்பாடு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நண்பர் மணிக்கு- Happy Birthday

அஞ்சா சிங்கம் said...

என் உடலுக்கு மேலே விஜய் முகத்தை வைத்து மார்பிங் பண்ணி இருக்கீங்க . சபாஷ் ஆனா இதுக்கு என் கிட்ட அனுமதி வாங்கலையே ?...........

! சிவகுமார் ! said...

ரத்னவேல் அய்யா, வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@விக்கி உலகம்

நான் அண்ணனா?? அவ்வ்வ்வ்..

! சிவகுமார் ! said...

@Prabu M

மீல்ஸை ருசித்தமைக்கு மகிழ்ச்சி பிரபு.

! சிவகுமார் ! said...

//@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நண்பர் மணிக்கு- Happy Birthday//

மதுரை சிங்கத்தை வாழ்த்தியதற்கு தேங்க்ஸ் ரமேஷ்!

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
என் உடலுக்கு மேலே விஜய் முகத்தை வைத்து மார்பிங் பண்ணி இருக்கீங்க . சபாஷ் ஆனா இதுக்கு என் கிட்ட அனுமதி வாங்கலையே ?//

இந்த வாரம் சிராஜுதீனை கூட்டிகிட்டு உங்க வீட்டுக்கு வர்றேன். பஞ்சாயத்து வச்சிக்கலாம்!

! சிவகுமார் ! said...

//சென்னை பித்தன் said...
சாப்பிட்டு முடித்ததும் ஏப்பமா வருது!நல்ல சாப்பாடு!//

மீல்ஸ் சாப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்!

செங்கோவி said...

சோர்ஸ் கோடு நல்லா இருக்கும் போலிருக்கே..பார்த்திடுவோம்!

! சிவகுமார் ! said...

கண்டிப்பா பாருங்க செங்கோவி!

MANO நாஞ்சில் மனோ said...

சகலத்தையும் கலந்து கட்டியிருக்கீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவை....

பிரசன்னா கண்ணன் said...

வருத்தப்படுகிற அளவிற்கு அலெக்ஸ் ஒன்றும் உத்தமர் கிடையாது..
கந்து வட்டி பிஸ்னஸ் பண்ணிய ஒரு படு பாவி.. நிறைய பேர் இவரால பாதிக்கப்பட்டிருக்காங்க..
(என் நண்பர் வட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தினரே இதற்கு சாட்சி.. அதனால்தான் சொல்கிறேன்..)

Unknown said...

நம்ம அஞ்சாதசிங்கம் மணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சொல்லிடுங்க சிவா, ஆளையே காணோம், மெசேஜ் அனுப்புனேன், இப்பத்தான் ப்ரீயானேன், அப்புறம் மீல்ஸ்சுல ஆரம்பத்துலேயே விஜய் படம் போட்டு இருக்கீங்களே, அந்த படத்த மணிக்கு டெடிகேட் பண்ணி இருக்கலாம்ல :-)

Unknown said...

மறைந்த நடிகர் அலெக்ஸ்சின் ஆத்மா சாந்தியடையட்டும், சோர்ஸ் கோடு டிரைலர் சூப்பரா இருக்கு, இங்கதான் படம் வராது

Chitra said...

பல விஷயங்களை - செய்திகளை - கலந்து கட்டி தூள் கிளப்பி இருக்கீங்க. சூப்பர்!

Anonymous said...

அடேங்கப்பா செம மசாலா வா இருக்கே

Anonymous said...

என் பிளாக்கில் உங்கள் அப்டேட்டை இணைத்துவிட்டேன் இனி அடிக்கடி வருவேன்..சோயித் அஃப்தர் மேட்டர் ஸ்வாரஸ்யம்..விஜய் படம் கலக்கல்,ரஜினி நடிக்கணும்/சோர்ஸ் கோர்டு தமிழ் வருமா ஹிஹி

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ.

தேங்க் யூ தல!

! சிவகுமார் ! said...

@பிரசன்னா கண்ணன்

தகவலுக்கு நன்றி பிரசன்னா. உலக சாதனை செய்தவர் என்ற முறையில் மட்டுமே அவரை பற்றி எழுதி இருக்கிறேன்.

! சிவகுமார் ! said...

@இரவு வானம்.

விஜய் படத்தை மணிக்கு அனுப்பிடுவோம். சோர்ஸ் கோட் டி.வி.டி. வந்தா பாருங்க!

! சிவகுமார் ! said...

@சித்ரா

தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி சித்ரா!

! சிவகுமார் ! said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
என் பிளாக்கில் உங்கள் அப்டேட்டை இணைத்துவிட்டேன் இனி அடிக்கடி வருவேன்..//

தங்கள் அன்புக்கு நன்றி சதீஷ்.

//சோர்ஸ் கோர்டு தமிழ் வருமா//

வரலாம். ஆனால் மசாலா சேர்க்கப்பட்டு சுவை குறைந்து போய் இருக்கும்!

RVS said...

எல்லா ருசியும் இருந்தது சிவா! ;-))
சோர்ஸ் கோடு.... ட்ரைலர் நல்லா இருந்தது. ;-))

Related Posts Plugin for WordPress, Blogger...