CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, May 30, 2011

கேபிள் சங்கர் - சினிமா வியாபாரம்                                                                 


நான் சினிமா மீது ஓரளவு ஆர்வம் உள்ளவன் என்ற முறையிலும், எனது தந்தை இந்த துறையை சார்ந்தவர் என்பதாலும் திரைத்துறை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள கூடுமானவரை தவறியதில்லை. இந்த புத்தக தலைப்பை பார்த்ததும் வாங்கவேண்டும் என எண்ணியதற்கு முக்கிய காரணம் சங்கர் அவர்களின் எழுத்து நடை. ஏகப்பட்ட பக்கங்களுடன் மிக ஆழமாக என்னைப்போன்ற பாமரனுக்கு புரியா வண்ணம் எவரேனும் இந்த தலைப்பில் எழுதி இருந்தால் இப்புத்தகத்தை வாங்க பல முறை யோசித்து இருப்பேன். சங்கர் ஒரு 'காஷுவல் - கம் - கன்டென்ட்' ஸ்டைல் எழுத்தாளர் என்பதால் அந்த தயக்கம் நீங்கியது. 

16 வயதினிலே, சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்கள் வசூலில் வெற்றி பெற்றதோடு, விருதுகளையும் அள்ளியது பற்றி குறிப்பிட்டு உள்ளார். அது மாதிரியான நிலை இக்கால கட்டத்தில் இல்லாதது வருத்தமே. எந்த படம் ஓடும், ஓடாது என்பதை கணிப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல என்பதும், தவறாக கணித்து விநியோகம் செய்வதில் ஏற்படும் ரோல்லர் கோஸ்டர் ரைட் அனுபவங்கள் பற்றியும் ஆரம்ப பக்கங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சூப்பர் செவன் எனும் தலைப்பில் ஏரியா வியாபாரம் பற்றி படிக்கையில் மெர்சன்டைசிங் உரிமை எனும் வார்த்தை வருகிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இந்த விசயத்தில் இன்று வரை ஏன் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை என்பது ஆச்சர்யமே. அப்படியே டி-ஷர்ட், தொப்பி போன்றவை மூலம் விளம்பரம் செய்தாலும் புதுமையான படங்கள் மற்றும் வார்த்தைகள் இல்லாமல் போவதும், லோ க்வாலிட்டியும் மெர்சன்டைசிங் எனும் முறை இங்கு எடுபடாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பது என் கருத்து. திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி ஏரியா பற்றி வெகு சுருக்கமாக எழுதி இருக்கிறார் கேபிள். ஒரு சில வரிகள் நீட்டி இருக்கலாம். 

தியேட்டர் ஆட்கள், விநியோகிஸ்தர்கள் என பல நிலையில் இருப்பவர்கள் எப்படி டக்கால்டி கணக்கு காட்டி பணத்தை பாக்கெட்டில் போடுகிறார்கள் என படு சுவாரஸ்யமாக எழுதி இருப்பதற்கு ஹாட்ஸ் ஆப். திரைக்கு பின்னே இத்தனை வகையான கால்குலேசன்கள் இருப்பது மலைக்க வைக்கிறது. லேப்பில் கடைசி தருணங்களில் படப்பெட்டியுடன் நடக்கும் போராட்டங்கள் பற்றிய செய்திகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.  


ஹாலிவுட் சினிமா வியாபாரம் குறித்து ஏகப்பட்ட தகவல்களை புத்தகத்தின் மறுபாதியில் அள்ளித்தந்திருக்கிறார். பேமிலி பாப்கார்னை ஒரே ஆள் சாப்பிடுவது எவ்வளவு கஷ்டமோ, அந்த அளவுக்கு செய்திகள் புதைந்து கிடப்பதால், சாதாரண சினிமா ரசிகன் கண்டிப்பாக நான்கு கப் காப்பி குடித்து விட்டுத்தான் அவற்றை படித்து முடிக்க முடியும். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களை பற்றி குறிப்பிட்டுள்ள கேபிள் சங்கர், எப்படி PIXAR அனிமேசன் கம்பனியை பற்றி குறிப்பிட மறந்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அள்ளி அனிமேசன் துறையில் உச்சத்தில் இருக்கும் நிறுவனம் பற்றி ஒரு பேரக்ராப் ஆவது கண்டிப்பாக எழுதி இருக்கலாம். அடுத்த பாகத்தில் அது குறித்து எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. இனிவரும் பதிப்புகள்  இத்தகைய குறைகள் இன்றி வெளிவரும் என நம்புகிறோம்.   

விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், அரங்க உரிமையாளர்கள் என பலரும் கலக்சன் பணத்தை ஷேர் செய்வதில் மண்டையை பிய்த்து கொள்வதை பார்த்தால் நமக்கு மண்டை காய்கிறது. இதற்கு தீர்வு சொல்ல கணித மேதை ராமானுஜம் மறுபிறவி எடுத்தால்தான் உண்டு என உணர்த்துகிறது வியாபார தந்திரம் குறித்த பகிர்வுகள். இப்புத்தகத்தை படித்து முடித்ததும் ஆசிரியர் கேபிள் சங்கரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அடுத்தமுறை ஆந்திர, கேரள மற்றும் கன்னட ஏரியாக்களின் சினிமா வியாபாரம் குறித்து தனி புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்பதே அக்கோரிக்கை. அதற்கு பதில் அளித்த அவர், அப்படி எழுத வேண்டுமெனில் அந்த மாநிலங்களுக்கு சென்று நிலவரங்களை அலசி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கூறினார். கண்டிப்பாக அந்த காலம் கனியும் என நம்புகிறேன். 

கையடக்க புத்தகத்தில் பர்சை பதம் பார்க்காத விலையில் திரைக்கு பின்னே நடக்கும் மேத்ஸ் மேஜிக்குகள் பற்றி எளிய நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம்..ஒவ்வொரு சினிமா ஆர்வலர் மற்றும் அத்துறை சார்ந்தோர் வீட்டிலும் இருக்க வேண்டிய பெட்டகம் என்பதில் மிகையில்லை. திரைத்துறையில் தடம்  பதிக்க போகும் புதியவர்களுக்கு, Its a must read book!

சுமாரான வாசிப்புத்திறன் கொண்ட என்னைப்போன்றோருக்கு, அருகில் இருந்து வழிநடத்தி செல்லும் கைட் போல தோளில் கைபோட்டவாறு சினிமா வியாபார விசயங்களை பகிர்ந்த கேபிள் சங்கர் அவர்களுக்கு..மிக்க நன்றி!!

.................................................

My other site: 
.................................................

சமீபத்தில் எழுதியது:.......................................................

                                                                       

Sunday, May 22, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (22/05/11)சிவந்த மண்: 


செம்மண் புழுதி புறக்க பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி நாளை ஆரம்பம் ஆகிறது. உலகின் புகழ்பெற்ற 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டியாக கருதப்படும் இதில் தனி ஒருவரின் ஆதிக்கம் பெரிதாக எடுபட்டதில்லை. விதிவிலக்கு ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால். உலகின் நம்பர்.1 வீரரான இவர் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து இப்போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். படு வேகமாக முன்னேறி வரும் செர்பிய வீரர் டோஜோவிக் இவருக்கு கடும் சவாலை தரக்கூடும். இந்தியா சார்பாக சானியா மற்றும் சோம்தேவ் ஆட, இரட்டையர் பிரிவில் லியாண்டர் - மகேஷ் ஜோடியும் ஆடுவது மகிழ்ச்சியான செய்தி. இரண்டு வாரங்கள் நடக்கும் ஆட்டங்களை நேரடியாக  ஒளிபரப்பு செய்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
..........................................................................................

வியாபாரி:

பெட்டிக்கடை ஒன்றில் 'ஜெயா'ஸ் அஜெண்டா' எனும் தலைப்பில் 'ஜெ' அட்டை படத்துடன் 'இந்தியா டுடே' ஆங்கில இதழ் தொங்கிக்கொண்டு இருந்தது. 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பின் அட்டையில் ரஜினி படம் பெரிதாகவும் 'ஜெயலலிதாவின் செயல் திட்டம்' எனும் தலைப்பில் அம்மா படம் ஸ்டாம்ப் சைசிலும் இருந்தது. ரஜினிய வச்சி காசு பாக்குற டெக்குனிக்கு. எப்படியும் நம்மாளுங்க வாங்கியே தீருவாங்கன்னு ஒரு அபார நம்பிக்கைதான்!!
.......................................................................................

தூள்:  


                                                                         
CNN-IBN சேனலின் The week that wasn't நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடந்த நிகழ்வுகளை நையாண்டி செய்து பட்டையை கிளப்பி வருகிறார் சைரஸ் ப்ரோச்சா. குறிப்பாக இந்திய அரசியல்வாதிகளை வறுத்து எடுக்கிறார் மனிதர். ஞாயிறுதோறும் 10:30 AM, 2:30 PM & 8:00 PM ஆகிய நேரங்களில் ஒளிபரப்பு ஆகிறது. இவர் அடிக்கும் நக்கலுக்கு ஏகப்பட்ட வழக்குகள் போடப்படுவதால் பல பேர் கொண்ட வக்கீல் அணி இவருக்காக இயங்கி வருகிறது. இதில் இருந்தே சைரஸ் அண்ணன் எவ்ளோ ரவுசு கட்டுகிறார் என்று பாருங்கள்.  
........................................................................................

மொழி (sms):

செம்மொழியான தமிழ் மொழியாம் - நேற்று.
கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் - இன்று. 
.......................................................................................

பெண்சிங்கம்: 

                                    
அமெரிக்காவில் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளியை வென்று 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார் 27 வயதான ஹரியானா வீராங்கனை அன்னு ராஜ். இந்தியா சார்பாக ரோஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம் சிங், சஞ்சீவ் ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்பது கூடுதல் செய்தி.                                    
.............................................................................................

ரத்தக்கண்ணீர்:

இன்று காலை பேப்பர் கடையில் 'முரசொலி' (அவ்வ்!) ஊசலாட்டிக்கொண்டு இருந்தது. இதுவரை ஒருமுறை கூட படித்தது இல்லை. அப்படி என்னதான் இருக்கு? பாத்துடுவோம் என்று திடமான மனதுடன் வாங்கினேன். முதல் அதிர்ச்சி. மொத்தம் 6 பக்கங்கள்தான். ஆனா வெல மட்டும் 3 ஓவாயாமுல்ல. முதல் பக்கத்தில் 'இறுதிப்போரில் நாம் வெல்வது திண்ணம்' எனும் தலைப்பில் முழுப்பக்க கட்டுரை உடன்பிறப்புகளுக்கு. ஆத்தாடி. எத்தே பெருசு. தொடர்ச்சி ஆறாம் பக்கம்னு வேற போட்டு இருந்திச்சி. மேலோட்டமா படிச்சிப்பாத்தா  'பராசக்தி' 'மனோகரா' வரலாறு...ஸ்ஸ்..அப்பா. அப்படியே ஜம்ப் அடிச்சி கடைசி பக்கத்துக்கு தவ்வினேன். அதில் "தம்பி, நம் இருவண்ணக்கொடி பறக்கும் இடத்தில் புல் முளைக்க வேண்டும் என குமரி முனையிலிருந்து, இமயக்கொடுமுடி வரை உள்ளவர்கள் தவம் இருக்கிறார்கள். உஷாரு" என்று எழுதி இருந்தது. அடுத்தமுறை போனா 'நமது எம்.ஜி.ஆர்.' 'தி ரைசிங் சன்' பேப்பரை கடைக்காரர் என் தலைல கட்ட காத்துக்கிட்டு இருப்பார். மொதல்ல கடைய மாத்தணும்!!
..............................................................................................    

நாட்டாமை:

என்னடா காலக்கொடுமை இது. ஒலகத்துக்கே வாராவாரம் வெள்ளிப்பரிசு தந்த வள்ளல் மகளுக்கே இந்த வாரம் வெள்ளிப்பரிசு தந்துட்டாரே ஜட்ஜு அய்யா.  என்ன எகத்தாளம் இருந்தா 2 - வது வருச நிறைவு விழாவுக்கு சோறு திங்க கூப்புடுவாங்க. ராஸ்கல்ஸ். இதையெல்லாம் பாக்குறப்ப வடிவேலு ஜோக்கு ஞாபகத்துக்கு வருது.

கோனியா:  "கூல் ட்ரிங்க் குடிங்க மாப்ள. குளுகுளுன்னு இருக்கும். எரிச்சல் அடங்கும். குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"     

மு.க.:  "போம்மா அங்குட்டு. ஏற்கனவே அங்கங்க பொரிஞ்சு போயி கெடக்கு. இதுல வேற குத்தாலம் அருவின்னு பாட்டு வேற"
..............................................................................................

இதுதாண்டா போலீஸ்:

              
                                                                    
"நல்லா கேட்டுக்கிடுங்க. வடிவேலு ஒளிஞ்சி இருக்குற எடத்த சொல்லியே தீரணும். இல்லன்னா விருதகிரி படத்தை மறுபடியும் போட்டுடுவேன். யாரும் தப்ப முடியாது. கதவுகிட்ட பாருங்க. டி.ஆர். அண்ணன் காவலுக்கு இருக்காரு"
...................................................................................       
                                                              
நாடோடித்தென்றல்:          

ஆடுகளம் படத்திற்கு கடும் சவாலை தந்து 4 தேசிய விருதுகளை வென்ற சிறந்த மலையாள படமான 'ஆடமின்டே மகன் அபு' வில் இருந்து மனதை வருடும் பாடல்:                                                             http://youtu.be/V_HpBv9MXes

..............................................................
My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:


.............................................................
Tuesday, May 17, 2011

அம்மாவுக்கு ஒரு கட்தாசி!


                                                                             

                                                                         
"டாஸ்மாக்ல கொட்டுற தண்ணிய விட கொஞ்சம் அதிகம் கொட்டுனா என்ன இந்த கொழாய்ல....நம்ம உசுர வாங்குது" 
  

 என்னம்மா இப்பிடி செஞ்சிட்டீங்க? நாங்க எதிர்பாக்கவே இல்லியே. என்ன இருந்தாலும் நீங்க இதுக்கு சரின்னு சொன்னது மனசுக்கு கஷ்டமா கீது. சோனியா டீ குடிக்க கூப்ட்டா ஒடனே ப்ளேன் புடிச்சி டெல்லிக்கு போணுமா? நம்ம கவுரத இன்னா ஆவுறது. வேணும்னா அந்த பெரியம்மாவ இங்க வந்து சிங்கிள் டீ குஸ்ட்டு போவ சொல்லுங்க. அப்பதான் நம்ம கெத்து தெரியும். சரிம்மா, இப்ப விசயத்துக்கு வர்றேன். ஒங்க ஆட்சில நான் ஆசைப்படுறது நடக்கனும்னு நெனச்சி இதை எழுதறேன். சொம்மா ஒரு தபா பச்சி பாருங்க.


மொத மேட்டர் வெளயாட்ட பத்திதான். நீங்க எப்ப வந்தாலும் வெளாட்டுக்கு எதுனா செய்றீங்க. மெட்ராஸ்ல தெற்காசிய வெளாட்டு போட்டிக்கு கட்டுன ஸ்டேடியம்தான் இன்னிக்கி பல ஆட்டக்காரங்கள உருவாக்கி இருக்கு. இப்ப கஷ்டத்துல இருக்குற நம்ம தெறமசாலிகளை கைதூக்கி விடுங்க மவராசி. வலுதூக்குறதுல சாதனை செஞ்ச ஆளுங்க எல்லாம் இப்ப எக்மோர் ரெயில்வே டேசன்ல பாவம் போர்ட்டர் வேலை பாக்கறாங்க. அவங்க மாதிரி ஆளுங்களை மறுபடியும் வெளாட்டுல ஆட வைங்க. கிர்கெட் வேல்ட்கப்பு ஜெயிச்ச அஸ்வினுக்கு ஒரு கோடியாம். ஆனா மத்த ஆட்டக்காரங்க எல்லாம் உதவி செய்ய ஆள் இல்லாம தெருக்கோடில நிக்கறாங்க. அவங்களையும் கண்டுக்கங்க. 

மவுண்ட் ரோட்ல அதிகமா ட்ராபிக் ஆவுற எடமே நந்தனம் சிக்னல்தான். அந்த எடத்துல ஒரு சொரங்கப்பாதை கட்டணும்னு இது வரைக்கும் யாருக்குமே தோணலியே? ஏன்? தி.நகர், ஆழ்வார்பேட்ட, சி.ஐ.டி. நகர் இப்படி பல ஏரியாக்கு போற வழி ஆச்சே அது. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. புது சட்டசப கட்டுன எடத்துல(ஹிந்து பத்திரிக்கை ஆபிஸ் எதிர்ல) பாதி ரோட்ட வளைச்சி போட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க. அத ஒரு பத்து அடி பின்னால தள்ளுனா ரோடு அகலம் ஆகும். ட்ராபிக் ஜாமு கொறையும். லாப்டாப் வேற தரப்போறீங்க. அதை மட்டமான கம்பனிக்கு டெண்டர் விடாம, தரமான பிராண்டட் கம்பனி கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா படிக்கிற புள்ளைங்களுக்கு உதவியா  இருக்கும். 

போன ஆட்சில தமிழ்ல பேரு வச்சா வரி இல்லன்னு கலைஞர் அய்யா   சொன்னதை இந்த சினிமாக்காரங்க எப்படி யூஸ் பண்ணி இருக்காங்க பாருங்க. களவாணி, தெனாவட்டு, போக்கிரி, பொறம்போக்கு இப்படி எல்லாம பேரு வக்கிறது. எந்த மொழில வேணாலும் பேரு வச்சிக்கங்கன்னு சொல்லிடுங்க. தமிழாவது வாழும். அம்மா புண்ணியவதி, ஒட்டுமொத்த தமிழ் மக்களோட முக்கியமான கோரிக்கை ஒண்ணு. போன தடவ சன்.டி.வி.ல "வர்றான் பாரு வேட்டக்காரன்" ன்னு டெய்லி 1000 தபா எங்களை மெரள வச்ச விசய் இப்ப ஒங்க ஆட்சி வந்ததும் ஜெயா டி.வி.ல அடிக்கடி வந்து "வேலா வேலா வேலாயுதம்" ன்னு சொல்லி வவுத்த கலக்குறாரு. முடியல. எங்க நெலம உங்களுக்கு புரியும்னு நெனக்கிறேன். காப்பாத்துங்க தாயி!


                                                                      
"மறுபடியும் பவருக்கு வருவீங்கன்னு தெரிஞ்சுதான் 'மங்காத்தா'ன்னு டைட்டில் வச்சேன் மேடம். Actually I mean it" 


உங்க அமைச்சர்ல சில பேரு முழுக்கை சட்டைய முட்டிக்கு மேல மடிச்சி வஸ்தாது மாதிரி வலம் வர்றாங்க. அதுவும் ஒங்க முன்னாடி. குறிப்பா பன்னீர் சார் மாதிரி ஆளுங்க. ஒண்ணு அரைக்கை சட்டை போட சொல்லுங்க. அப்டி இல்லன்னா எறக்கிவிட்டு டீசன்ட்டா டிரஸ் போட சொல்லுங்க. என்ன தெனாவட்டு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப நீங்க சி.எம்.மா இருந்த காலம். ரோட்ட க்ராஸ் பண்ண பாத்தா ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. என்னை போகவிடாம ஒரு போலீஸ் அங்கிள் தடுப்பாரு. செம கடுப்பா இருக்கும். ரொம்ப நேரம் கழிச்சி திடீர்னு "ஹூய்..ஹூய்"ன்னு சத்தம் போட்டுட்டு ரெண்டு அம்பாசடர் காரு வேகமா பறக்கும். கார் கதவு வழியா கருப்பு பூனைங்க குறுகுறுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி ஒங்க காரு என்ன தாண்டி போவும். கடைசில இப்ப போகலாம்னு போலீசு சொன்ன ஒடனே வூட்டுக்கு ஓடுவேன். இப்ப ஏகப்பட்ட ஜனங்களோட வண்டிங்க ரோட்ல ஓடுது. அந்த நெலம மறுபடி வராமா இருக்கணும் மம்மி!

                                                                 
கடைசியா ஒரு கோரிக்கை மேடம். எல்லா அமைச்சர் பேரையும் சொன்னீங்க. துணை முதலமைச்சர் யாருன்னு சொல்லவே இல்லியே. அந்த பதவியை எங்க நிரந்தர அண்ணி பிரேமலதாவுக்கு குடுத்து பாருங்க. செம டக்கரா இருக்கும். ஒங்க ரெண்டு பேரு காம்பினேசன் பட்டைய கெளப்பும். பாத்து செய்ங்க!
...................................................................


தொடர்புடைய பதிவுகள்:
....................................................................

My other site: nanbendaa.blogspot.com
.....................................................................Monday, May 16, 2011

அம்மா பதவி ஏற்பு விழா!

"அவரு பாவம். விட்டுடுங்க. மைக் செட் கட்டுறவரு. அவரை பம்ம சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்கப்பா!"

                                                               
புதிய முதல்வர் அம்மாவின் பதவி ஏற்பு விழாவை நேரடித்து தன்னை நட்ட நடுநிலை தொலைக்காட்சி என்று காட்டிக்கொண்டது சன் டி.வி. எப்படியோ நமக்கு தொழில் நடந்தா சரி என்ற கலாநிதியின் வழி தனி வழிதான். விழா நடக்கும் இடத்தில் ரபி பெர்னார்ட் மைக்கை பிடித்துக்கொண்டு கொஞ்சம் ஓவராக கூவிக்கொண்டு இருந்தார். தலையில் இருந்த ஒரு சில முடியை கையால் படிய வைக்க சிரமப்பட்டவாறு உள்ளே நுழைந்தார் நரேந்திர மோடி. சாந்த சொரூபியாக சந்திரபாபு நாயுடும் ஆஜர் ஆனார். சோவும், கேப்டனும் செம ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தனர். அரங்க வாயிலில் அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் பன்னீர் தெளிக்காத குறையாக அனைவரையும் வரவேற்று கொண்டிருக்க, இறுதி நேரத்தில் ராடன் டி.வி. முதல்வருடன் பனியன் போடாத வெள்ளை சட்டையுடன் பரபரப்பாக உள்ளே நுழைந்தார் சரத்குமார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் தானே போய் உட்கார்ந்து கொண்ட தானைத்தலைவர் இளைய தளபதியின் நைனா சந்திரசேகர் அட்டன்டன்ஸ் போட்டார். தேர்தலில் போட்டி இடாமல் பதவியில் அமர்ந்த நைனாவுக்கு எதிராக போராட்டம் நடக்க நாள் குறித்துவிட்டனர் பிற தயாரிப்பாளர்கள். அம்மாக்கு முன்னால பதவியை பிடிக்க என்ன நைனா அவசரம்?

அம்மா பச்சை நிற உடையில் வருவார் என்று தவறான தகவலை சொன்னது NDTV ஹிந்து. ஆனால் டார்க் மெரூன் கலர் உடையில் உள்ளே வந்தார். அம்மா வந்த கடற்கரை சாலை நெடுக தொண்டர்கள் அவருடைய கார் டயருக்கு முன்னே எலுமிச்சை பழம் போல உருண்டு புரள முற்பட, அவர்களை கருப்பு பூனைகள் கவ்விச்சென்றன. ரோட்டோரம் வைக்கப்பட்டு இருந்த அம்மாவின் மெகா பேனரை யாரோ ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி கிழித்து தொங்கவிட்டு இருந்தார். அம்மா சரியாக மதியம் 12:19 மணிக்கு (4 நிமிடம் லேட்டாக) வந்தார். நம்ம கவர்னர் அம்மாவின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார். அம்மா வாட்சை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கையில் முகம் சற்று சிவக்க துவங்கியது. நல்ல நேரம் போறதுக்குள்ள இந்த கவர்னர் வருவாரா, மாட்டாரா என்ற பதற்றம் அவர் முகத்தில் தென்பட்டது. ஒரிஜினல் புருவத்தை டிங்கரிங் செய்து விட்டு சிறிதாக ட்ரிம் செய்த புருவத்துடன் தென்பட்டார் அம்மா. 


ஒருவழியாக 12:33 மணிக்கு வீல்சேரில் என்ட்ரி குடுத்தார் பர்னாலா. தேவுடா, புயல் வேகத்துல நடந்து வர்ற முதல்வர்/கவர்னரை எப்பதான் எங்க நாட்டுக்கு தரப்போறியோ!  அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அம்மா. பெண் அமைச்சர்கள் பர்னாலாவிற்கு கை கொடுக்காமல் வணக்கம் போட்டுவிட்டு ஓட, பல ஆண் அமைச்சர்கள் அம்மா அருகில் இருந்ததால் முதுகை வளைத்துக்கொண்டு செம பம்மு பம்மினார்கள். ஆஹா...ஆஹா. மம்மியை பார்த்து பம்மிய அமைச்சர்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி. இனி நமக்கு தினமும் தீபாவளிதான். அம்மாவின் வல மற்றும் இடப்பக்கம் பல அடி தூரம் கேப் விட்டு அமைச்சர்கள் அமர்ந்து இருந்தனர். வாயில் கை வைத்தவாறு அம்மா காதில் ஏதோ ஓதிக்கொண்டு இருந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர். என்னதான் சொல்லுங்க பம்முவதில் பன்னீரை மிஞ்ச ஒருத்தன் பிறந்துதான் வர வேண்டும்!

                                                                       
"ரொம்ப நாளா குறுகி குறுகி முதுகு வலிக்குது. எத்தனை வலுவா மழை அடிச்சாலும் சரி, இன்னைக்காவது நிமிர்ந்த நன்னடை போட்டு ஒரு வாக் போயே தீரணும்டா சாமி"

"இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து" என்று மைக்கில் ஒருவர் சொல்ல, "ஜன கன மன" ஒலித்தது. அம்மா முகம் சற்று கலவரம் ஆனது. பேமென்ட் சரியாக கிடைக்காத கடுப்பில் யாரோ சிலுப் சிலுப் காட்டியதன் விளைவாக இருக்கும். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அமைச்சர் சோ. கருப்பசாமி விபூதி மணக்கும் நெற்றியுடன் பதவி ஏற்றதுதான் செம ஹைலைட். ஸ்கூல் படிக்கும் பிள்ளை போல் வெள்ளந்தியாக கருப்பசாமி எடுத்த பதவிப்பிரமாணத்தை கண்டு மொத்த சபையே சிரிப்பில் ஆழ்ந்தது. சோ.ராமசாமி அவரை செம கிண்டல் செய்து கொண்டிருக்க, சோ. கருப்பசாமி மற்றும் சோ. ராமசாமி இருவரையும் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தார் அம்மா. 

அம்மா பதவி ஏற்ற சமயத்தில் ஒரு ரத்தத்தின் ரத்தம் "வாழ்க" கோஷம் போட்டு அரங்கை அதிர வைத்தது. பதவி ஏற்கும் நேரத்தில் கவர்னர் "நான் பன்னீர்", "நான் செங்கோட்டையன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியானார். ஒரு முறை கூட "நான் பர்னாலா" என்று சொல்லவே இல்லை. "நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தில்லாலங்கடி வேலையிலும் ஈடுபடமாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்" என்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் கடவுள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துவிட்டு சென்றனர். 

பதவி ஏற்பு படலம் முடிந்ததும் மைக்கில் "தற்போது தேசியகீதம் முழுதாக இசைக்கப்படும்" என்றார் ஒருவர். எப்பவுமே அப்படித்தானே? அது என்னங்கடா முழுதாக?  பாடல் முடிந்ததும் "நிரந்தர முதல்வர்.." என்று வழக்கம்போல் ஒரு ரத்தம் கொதித்தது. தம்பி, யாரா இருந்தாலும் அஞ்சி வருசம்தான். நாங்க ரொட்டேசன் பாலிசில உறுதியா இருக்கோம். தண்ணிய குடி. தண்ணிய குடி. 

லைவ்வா நிகழ்ச்சிய பாத்துக்கிட்டே பதிவு எழுதுறது எம்புட்டு கஷ்டம்டா சாமி. அதுக்கு நாந்தான் முதல்ல தண்ணிய குடிக்கணும். வர்ட்டா!

..............................................................
My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம் 

நண்பேன்டா - மிக்சர் கடை
...............................................................

  

Sunday, May 15, 2011

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்
                                                                     

பொதுவாக இந்திய திரைப்படங்களை பார்க்கையில் எனக்கு ஏற்படும் சலிப்பு என்னவெனில் படத்தின் முன்னணி கேரக்டர் ஏன் ஒரு முதியவராகவோ அல்லது விடலைகளாகவோ இருப்பதில்லை என்பதுதான். அவர்களுக்கான அல்லது அவர்களின் வாழ்வை சொல்லும் படங்கள் இங்கு வருவது வெகு அரிதாகவே இருக்கும் அவலம் இன்று வரை தொடர்கிறது. அப்படியே ஒரு சில படங்கள் வந்து இருந்தாலும் அவை விருதுக்கான படங்கள் எனும் வட்டத்துக்குள் அடைபட்டு போய்விடுகின்றன. இல்லாவிடில் ராம.நாராயணன் ஸ்டைலில் கிச்சு கிச்சு மூட்டி புல்லரிக்க வைக்கும் குட்டிப்பிசாசு போன்ற உன்னத படங்கள் வந்து தொலைக்கின்றன. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் உலகப்புகழ் பெற்ற சில்ட்ரென் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், பாரன் போன்ற படங்கள் இந்தியாவில் வருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கிடைத்த விடைதான் தாரே ஜாமீன் பர். அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆசியரான அமோல் குப்தேவின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது வந்துள்ள அசத்தல் படம்தான் 'ஸ்டான்லி கா டப்பா'. 


சில்ட்ரென் ஆப் ஹெவனில் எப்படி மஜீத் ஒரு காலணியை வைத்து கதை சொன்னாரோ அதுபோல் 4-வது படிக்கும் மாணவர்களின் டிபன் பாக்சை மட்டும் மையமாக வைத்து படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அமோல். படத்தின் நாயகன் பெயர் ஸ்டான்லி(நிஜப்பெயர் பார்த்தோ). லஞ்ச் நேரத்தில் வீட்டில் இருந்து உணவு கொண்டு வராமல் பிற மாணவர்களிடன் வாங்கி தின்பதுதான் அவன் வேலை. அவனைப்போல்தான் ஹிந்தி ஆசிரியர் கதூஸ் கேரக்டரும். சக ஆசிரியர்கள் உணவு தரும்வரை பாடி அறுப்பார். அதற்கு பயந்தே அவர்கள் டிபன் பாக்சை அவருக்கு தந்து விடுவர். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து பாடங்களும் நிறைவு செய்யப்படாததால் நித்தம் மூன்று பீரியட்கள் அதிகம் வைத்து இலக்கை எட்ட முடிவு செய்கிறது நிர்வாகம். எனவே இரு வேலை உண்பதற்கு ஏதுவாக சற்று அதிகமான உணவை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறது. அடுத்த நாள் முதல் டிபன் பாக்ஸ்கள் வந்து குவிகின்றன. அமன் எனும் பணக்கார மாணவன் கொண்டு வரும் நான்கு அடுக்கு கேரியர் உணவு எப்படி ஸ்டான்லி மற்றும் ஹிந்தி ஆசிரியர் வாழ்வை மாற்றி அமைக்கின்றன என்பதுதான் கதை.  


                                                                 

ஸ்டான்லியாக வரும் பார்த்தோவின் நடிப்பு 'அடேங்கப்பா' ரகம். தாரே ஜாமீன் பர் படத்தில் தர்ஷீல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் உச்சத்தை தொட்டிருக்கிறான் இந்த இளம்புலி. முதல் காட்சியில் முகத்தில் அடிபட்டதற்கு ஆசிரியரிடம் காரணம் சொல்லும் இடம் ஒன்று போதும். இந்திய சினிமாவில் அடுத்த உலக நடிகன் தயார் என்றே தெரிகிறது. ஆசிரியர் தேர்வு அனைத்தும் அருமை. குறிப்பாக அறிவியல் ஆசிரியராக வரும் ஸ்ட்ரிக்ட் டீச்சர் தூள். ஸ்டான்லி உடன் படிக்கும் மாணவர்களாக வரும் சுட்டிகள் மட்டும் சும்மாவா. அவர்கள் அனைவரும்  பின்னி பெடல் எடுக்கின்றனர். படத்தின் டைட்டிலிலேயே கதையின் ஒன் லைனை நகைச்சுவையாக சொல்கிறார் இயக்குனர்.


பெரும்பாலும் நகைச்சுவையாக நகரும் படத்தின் இறுதியில் மனதை உலுக்கும் காட்சிகள் கொண்டு நிறைவு செய்துள்ளார் அமோல். படத்தில் குறை என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அமன் எனும் மாணவனின் சாப்பாடை தேடி ஹிந்தி ஆசிரியர், பள்ளியை சுற்றி ஓடும் காட்சி சற்று மிகையாக படுகிறது. படத்தின் பலம் என்று சொல்லப்போனால் ஆரம்பம் முதல் இறுதி வரை டிபன் பாக்சை மட்டுமே வைத்து காட்சிகளை எடுத்திருப்பது என்று சொல்லலாம். படம் பார்க்கும் முன் வயிறாற சாப்பிட்டு விட்டு செல்வது நலம். இல்லை என்றால் தியேட்டரை விட்டு வெளியே சென்று ஹோட்டலில் அறுசுவை உணவை உடனே உண்டே தீர வேண்டும் எனும் அளவிற்கு நாக்கில் எச்சில் ஊற வைத்திருக்கிறார் அமோல். நல்லவேளை நான் தப்பித்தேன். வயிற்றை நிரப்பி விட்டே சென்றேன்.


                                                                   

முக்கியமான மேட்டர் தெரியுமா?  படத்தின் நாயகன் பார்த்தோ வேறு யாரும் அல்ல. இயக்குனர் அமோல் குப்தேவின் மகன்தான். அந்த ஹிந்தி ஆசிரியராக வருபவர்...? படத்தின் இயக்குனர் அமோல் குப்தேதான். அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர். சர்வதேச விழாக்களில் பெரிய ரவுண்ட் வரும் இந்த 'ஸ்டான்லி கா டப்பா'.

ஹிந்தி தெரியாது என்ற காரணத்திற்காக இப்படத்தை தவிர்க்க வேண்டாம். காட்சிகளே கதையை சொல்லும். ஒரு அற்புதமான திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு. டோன்ட் மிஸ்.


ஸ்டான்லி கா டப்பா - நீங்கள் படித்த 4 -ஆம் வகுப்புக்கு ஒரு பாஸ்போர்ட்!

..............................................................................


சென்னையில் 'ஸ்டான்லி கா டப்பா':

ஐநாக்ஸ் - 12:25 PM, சத்யம் - 4.15 PM, எஸ்கேப் - 7:20 PM, ஈகா - 6: 30 PM
PVR (Skywalk) - 7.30 PM, மாயாஜால் - 2:05 PM.


ட்ரைலர்:
   
http://youtu.be/VZaL32aLYWc

................................................................................

இப்பதிவை வாசித்த உள்ளங்களே, அப்படியே கீழே உள்ள இணைப்பை ஒரு முறை அழுத்தி பாருங்கள்:


படத்தின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் Tree of Hope எனும் லிங்க்கை க்ளிக் செய்தால் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் பண உதவி செய்தல், தொண்டு செய்தல் அல்லது ஸ்பான்சர் செய்தல் என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம் நண்பர்களின் இ-மெயில் முகவரி தந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை பகிர்கிறார்கள். 


                                                                       

குழந்தைத்தொழிலுக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும் வழி வகுக்கிறது இந்த இணைய தளம்.  STANLEY எனும் பெயரை டைப் செய்து 57827 எனும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.  குழந்தைகள் படும் சித்திரவதைகளுக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும். 

..........................................................................

என்னடா இவ்ளோ எழுதிட்டு 'பசங்க' தமிழ் படத்தை பத்தி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகுற அப்டின்னு நினைக்கும் நெஞ்சங்களே. அடுத்து வரும் பதிவில் அப்படம் குறித்தும், குழந்தைகள் சினிமா மற்றும் ஸ்டான்லி கா டப்பா குறித்தும் மேலும் சில விசயங்களை கண்டிப்பாக அலசுவோம். நன்றி ! 

விருப்பம் இருந்தா மேலே சொன்ன மேட்டருக்கு மறக்காம எஸ்.எம்.எஸ். அனுப்பிடுங்க. மீண்டும் சந்திப்போம். 

..................................................................

My other site: nanbendaa.blogspot.com

.................................................................

சமீபத்தில் எழுதியது: 


.................................................................

Saturday, May 14, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (14/05/11)
இருவர் உள்ளம்: 


....................................................................................

நீ வருவாய் என..


                                                                     
..........................................................................................

உன்னைத்தேடி:

                                                                        
....................................................................................................

குள்ளநரி கூட்டம்:  ........................................................................

விதி:


                                                                        
............................................................................
                                                                                                                                     

வாழ்க்கைச்சக்கரம்:       

http://youtu.be/41t6DNDIo50


........................................................................

My other site: nanbendaa.blogspot.com
.......................................................................

சமீபத்தில் எழுதியது:
Sunday, May 8, 2011

மரணகானா விஜி - சந்திப்போமா - 3

குறிப்பு: உதிரிப்பூக்களாய் இருட்டுலகில் வாழ்ந்து மறையும் இதயங்களின் இடியோசையே இப்பதிவு. அருவருப்புகளையும், அதிர்ச்சிகளையும் தாங்க விரும்பாத அன்பர்கள் தயவு செய்து இப்பக்கத்தை தவிர்க்கவும்.


                                                                         

தொடர்ந்து கொண்டிருந்த பேட்டியில் மேலும் சில அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் விஜி.

"ஒரு நாள் பொதுமருத்துவமனையில் எனக்கு சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு பெரியவர் வாசலில் கிடத்தப்பட்டு இருந்தார். அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மருத்துவர்கள் என எவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தனர். அவ்விடம் குப்பைகளால் சூழப்பட்டு இருந்தது. அந்நேரம் சர்க்கரை பொட்டலத்தை ஒருவர் பெரியவர் இருந்த இடத்தின் அருகே போட்டுவிட்டு சென்றார். அதை மொய்க்க வந்த எறும்புகள் பெரியவரையும் விடவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். கிட்டத்தட்ட 500 - க்கும் மேற்பட்ட எறும்புகள் அவரின் இரு கண்களையும் குடைந்துகொண்டு இருந்தன.

உடனே என் இடுப்பில் இருந்த துணியை கழற்றி அவர் கண்களை சுத்தம் செய்தேன். உள்ளாடை இல்லாததால் அவ்விடத்தில் நிர்வாணமாக இருந்தேன். அதைக்கண்டு ஒருவன் சொன்னான்: "அந்த கிழவனை விட நீ கேவலமாக இருக்கிறாய்". எப்படி இருக்கிறது பாருங்கள் இந்த சமூகம். அதைப்பற்றி நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை. எறும்புகளை நீக்கிக்கொண்டு இருந்தேன். ஆனாலும் சில எறும்புகள் அவரின் கண்ணை இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தன. அதை எடுக்கையில் பெரியவரின் கண்ணில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அப்போதும் எவரும் உதவவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். இம்மக்களை எண்ணி என் மனம் கொதித்தது. வேறு மாற்றுத்துணி என்னிடம் இல்லாததால் ரிக்சாவில் ஏறி நிர்வாணமாக சென்றேன். என்னை கண்டு கேலி செய்த மக்கள் அனைவரும் ஆடையின்றி தெரிந்தனர் என் கண்களுக்கு."


"இது போல் எத்தனையோ நிகழ்வுகள். சென்ற வருடம் விஜய் டி.வி.க்காக கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியை முடித்த சில நிமிடங்களில் எனக்கு ஒரு போன் வந்தது. அது ஒரு பெண்ணின் குரல். என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். காரணத்தை சொன்னால்தான் பார்க்க முடியும் என்றதற்கு அவள் சொன்ன பதில் "அழகான தாய்க்கும் அசிங்கமான பேய்க்கும் பிறந்தவள் நான். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை". அவளை பார்க்க சென்னையில் இருந்த பூங்காவிற்கு சென்றேன். ஏன் அப்படி சொன்னாய் என்றதற்கு அவள் சொன்ன காரணம்:

"போனில் சொன்னேன் அல்லவா. என் பிறப்புக்கு காரணம் என் தாய். அந்த ஆண் யார் தெரியுமா? "

"யார்? "

"என் தாயின் தம்பி. இப்போது சொல்லுங்கள் நான் யார்? இந்த அசிங்கத்தை சுமந்து கொண்டு நான் இன்னும் உயிர்வாழ வேண்டுமா?"

என்ன சொல்ல. என்னால் முடிந்த அறிவுரைகளை கூறி அவளுடைய முடிவை மாற்ற வைத்தேன். இக்கணம் வரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். 

.............................................................................

இடைவெளி இன்றி இத்தனை அதிர்வுகளை கேட்க சக்தி இல்லாத இளகிய மனதுக்காரன் என்பதால் நான் சற்று நேரம் அமைதியானேன். ஏற்கனவே அம்மணம் ஆன 'நல்ல' மனம் கொண்டவர்களை  துகில் உரிக்க என்ன இருக்கிறது என்று எண்ணினேன். உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இத்தகைய செயல்களை கேள்விப்பட்டு பொங்கிய எனக்கு நிஜத்தின் சூடு சற்று அதிகமாகவே பட்டது. 

விஜி மீண்டும் பேச ஆரம்பித்தார்.
...........................................................................

"எனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று. நேப்பியர் பாலத்தின் அருகே உள்ள இரண்டாம் உலகப்போர் நினைவு சின்னத்தின் அருகே ஒரு இரவு நேரம். சினிமாப்பட போஸ்டர் ஒன்றை போர்வையாக போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென என் முகத்தில் வெந்நீர் ஊற்றப்பட்டது போல் ஒரு உணர்வு. முகத்தை துடைத்துக்கொண்டு பார்த்தேன்.

அது ஒன்றுமில்லை. 

சக மனிதன் ஒருவன் என் முகத்தில் பாய்ச்சிக்கொண்டிருந்த சிறுநீர். எதற்கு இப்படி செய்கிறீர்கள். நானும் ஒரு மனிதன்தானே என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில்:

'தே*#@ பை*. நீயெல்லாம் ஏண்டா எங்க வந்து தூங்கற?'

"எங்களைப்போன்ற வீடில்லா அனாதைகள் வேறு எங்குதான் தூங்குவது. அதற்குக்கூட சுதந்திரம் இல்லையா?" எனக்கேட்டார் விஜி.  

அடுத்து சராசரி வாழ்க்கை வாழும் சமூகத்தை நோக்கி தன் பார்வையை திருப்பினார்.

"இச்சமுதாயத்தில் மூன்று வகையான மக்களை பிரித்து வைத்து உள்ளனர். அதுதான் A,B,C. அதாவது பணக்காரன், நடுத்தரவாசி, ஏழை. இந்த மூன்று வகை வர்க்கங்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியும். ஆனால் D என்று ஒரு வர்க்கம் இதே சென்னை மாநகரில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

"அது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார் விஜி. 

அது என்ன ஒரு தனி உலகம்? 


அதிர்வுகள் தொடரும்.
.............................................................

My other site: nanbendaa.blogspot.com
..............................................................

சமீபத்தில் எழுதியது:

..............................................................
              

Friday, May 6, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (06/05/11)


                                                     

பூவொன்று புயலானது: 


                                                                 
.................................................................................

பல்லாண்டு வாழ்க:


சில நாட்களுக்கு முன் வம்பை விலைக்கு வாங்கும் பதிவுலக நண்பர் மணிக்கு போன் செய்து மாறுபட்ட குரலில் பேசினேன்.

"ஹலோ மணியா? "

"ஆமாங்க நீங்க?"

"மதுரை தி.மு.க. இளைஞர் அணில இருந்து பேசறேன். உங்க பதிவுல எதுக்கு கலைஞரை கிண்டல் செஞ்சி எழுதி இருக்கீங்க?"

"நான் ரொம்ப மோசமா எல்லாம் எழுதலியே?"

"அதெல்லாம் தெரியாதுங்க. அழகிரி அண்ணன் ரொம்ப கோவமா இருக்காரு. எதுக்கு இப்படி எல்லாம் எழுதறீங்க?"

"ஹல்லோ. நீங்க யாரு? எங்க இருக்கீங்க?"

"மதுரை மேலமாசி வீதி இளைஞர் அணி ஆபிஸ்ல இருக்கேன். நேர்ல வாங்க"

"இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன். எனக்கென்ன பயம்"


                                                           
                                                                   
ஒரிஜினல் அஞ்சா நெஞ்சனாக மதுரையில் வலம் வரும் அன்புத்தோழர் மணிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவர் இதே நெஞ்சுரத்துடன் மதுரை மாநகரை கலக்க வாழ்த்துவோம். வாழ்க நீவிர் பல்லாண்டு!
.....................................................................................................

அன்புள்ள ரஜினிகாந்த்: 

மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு மருத்துவர்கள் சொன்ன அறிவுரை "சூட்டிங் நடக்கும்போது மின் வெளிச்சம் தங்கள் உடலில் படுவது ஆபத்தானது" அதை தவிர்க்கவும்". எந்திரன் படம் முடிந்ததுமே ரஜினி சினிமாவுக்கு டாட்டா சொல்லி இருக்கலாம். இதற்கு மேலும் நடித்து உடலை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வது ஏன்? நீங்கள் பார்க்காத பணமா? போதும் ஒய்வு எடுங்க பாஸ்.                                             
........................................................................................................

கில்லி:

                                                                 

ட்விட்டரில் இன்று உலகத்தையே கலக்கிக்கொண்டிருக்கும் பரபரப்பான ஆள்தான் இந்த 33 வயது சொஹைப் அதர். ஒசாமா கொல்லப்பட்ட சம்பவத்தை அருகில் உள்ள இடத்தில் இருந்து நேரடியாக ட்வீட் செய்த பாகிஸ்தான் நாட்டின் கில்லி. இந்நிகழ்வை இவர் ட்வீட் செய்வதற்கு முன்பு இவரது பாலோயர்களின் எண்ணிக்கை 100+ மட்டுமே. இன்று ஒரு லட்சத்தை தாண்டி விட்டது அந்த எண்ணிக்கை. பாவம் மனிதர். பலருக்கு பதில் சொல்லியே அலுத்து விட்டார். இவர் ட்வீட் செய்ததில் சிலவற்றை கீழே பார்ப்போம்:

Here are the answers to a few questions that I am being asked over and over again. http://www.reallyvirtual.com/faq/

*   Sohaib Athar 
A huge window shaking bang here in Abbottabad Cantt. I hope its not the start of something nasty :-S

 Sohaib Athar 
@ 
@ yep, the mad power cuts have reached abbottabad - 14 hours daily - luckily I have generator AND a UPS at the coffee shop.

 Sohaib Athar 
Uh oh, now I'm the guy who liveblogged the Osama raid without knowing it.

ட்விட்டரில் சொஹைப்:  @reallyvirtual.  வெப்சைட்: reallyvirtual.com. ஒசாமா இறந்த இடத்தின் அருகே இவர் எடுத்த படங்கள் இத்தளத்தில் உள்ளன. அதில் ஒன்று:

                                                                       
..................................................................................................

பொக்கிஷம்:

சமீபத்தில் மறைந்த வில்லன் நடிகர் அலெக்சின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. திரை உலகில் பெருமளவு பிரகாசிக்க இயலாவிடினும் தமிழன் என்ற முறையில் என்றும் நினைவில் நிற்கும் வண்ணம் பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார் இவர். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனைதான் அது. இதுதவிர சிலம்பம், ஒயில் மற்றும் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர் இவர். UAE அரசு இவருக்கு செவாலியே பட்டம் தந்து கௌரவித்து உள்ளது. 


தமிழகத்திற்கும், தமிழ் திரை உலகிற்கும் கிடைத்த அரிய பொக்கிஷத்தின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
.................................................................................................

தங்கப்ப... தக்கம்: 

நேற்று தி.நகர் பேருந்து நிலையத்தில் அரசு ஊழியர் மைக்கில் அறிவித்தார் இப்படி: "நாளை அட்சய திருதியையை முன்னிட்டு தி.நகரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்". அடப்பாவிங்களா....எப்படி எல்லாம் டெவெலப் ஆகிட்டு போறீங்கடா. இன்னிக்கி காலைல ஏழு மணிக்கே பல்லு வெளக்காம இன்ஸ்டன்ட் குபேரர்கள் ஆக படை எடுத்து வரப்போறாங்க நம்ம மக்கள். அது சரி இதுக்கு முன்ன நகை வாங்கிட்டு போனவங்க எல்லாம் இப்ப எத்தன கோடிக்கு அதிபதி ஆகி இருக்காங்கன்னு ஒரு நகைக்கடைக்காரனும் சொல்லவே இல்லியே? போங்க.. மொத்தமா போயி கடைல விழுங்க. Forbes பத்திரிக்கைல அடுத்த வருஷம் உங்க பேருதான் வரப்போகுது.  
.......................................................................................                                                                      
          
அட்டகாசம்:                  
                                                                         
போன வாரம் ரிலீஸ் ஆன Source Code படம் செம கலக்கலா இருக்கு. பிரின்ஸ் ஆப் பெர்சியா படத்தோட ஹீரோதான் இதுலயும் நடிச்சிருக்கார். இன்சப்சன் படம் மாதிரி ஒவ்வொரு சீனும் செம இன்டரெஸ்டிங். ஒரு தரம் பாத்ததுமே புரியுறது கொஞ்சம் கஷ்டம். ரொம்ப உன்னிச்சி பாக்கணும். அந்த அளவுக்கு நம்ம மூளைக்கு செம வேலை தந்துருக்கார் டைரக்டர். சினிமா ரசிகர்களே, டோன்ட் மிஸ்.                                             

 ட்ரைலர்:                                                                                
                                                               http://youtu.be/DiBVUulE_wo
..................................................................................

வெண்ணிற ஆடை:

முண்டா பனியன் போடுற ஆளுங்களுக்கு ஒரு கேள்வி. அது எப்படி தலைவா கொளுத்துற வெயில்ல கூட இந்த பனியனை போட்டுக்கிட்டு பொது இடத்துல சுத்தறீங்க. எதுக்கு கேக்கறன்னா, கை வச்ச பனியன் போட்டா அது ஒரு பில்டர் மாதிரி வியர்வையை கொஞ்சமாச்சும் வடிகட்டி வாடையை குறைக்கும். ஆனா சட்டைக்குள்ள இந்த முண்டா பனியனை போட்டுக்கிட்டு வேர்க்க விறுவிறுக்க ட்ரெய்னு, பஸ்சுல எல்லாம் போறப்ப பக்கத்துல இருக்கறவன் நிலைமைய நினச்சி பாருங்க. என்ன கொடும சரவணன்!
..................................................................

My other site: nanbendaa.blogspot.com
.................................................................  
Related Posts Plugin for WordPress, Blogger...