CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, April 21, 2011

கோ - விமர்சனம்நண்பர் ஒருவர் நேற்று மதியம் போனில் அழைத்து 'கோ' படத்தின் பிரிமியர் காட்சிக்கான டிக்கட் இருப்பதாக கூற, சென்னையில் உள்ள இயக்குனர் பிரியதர்சனின் 4 பிரேம்ஸ் ப்ரிவியு தியேட்டருக்கு விரைந்தேன். ஆர்.பி. சௌத்ரி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் படம் பார்க்க வந்திருந்தனர். நண்பன் பட ஷூட்டிங் இருப்பதால் ஜீவா வெளியூரில் இருப்பதாக தன் உறவினரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ரமேஷ். படம் தொடங்கும் முன் ரஜினியின் 'ரானா' படத்தின் ஒரு நிமிட ட்ரைலரை போட்டனர். கொடூரமான வில்லன் கெட்டப்பில் வந்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு போகிறார் ரஜினி. ஷூட்டிங் எடுத்த ஒரு சில காட்சிகளுடன் முடிகிறது ட்ரைலர். 


இதற்கு முன் அயன் மூலம் விஸ்வரூபம் எடுத்த இயக்குனர் கே.வி. ஆனந்த் இம்முறை அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். சவுத் வியு எனும் முன்னணி பத்திரிக்கையின் நிருபர்களாக இருப்பவர்கள்தான் ஜீவா மற்றும் கார்த்திகா. சவாலான இடங்களில் புகைப்படம் எடுக்கும் துணிச்சல் மிக்க ஹீரோவாக வலம் வருகிறார் நாயகன். வழக்கம்போல் அவர் மேல் காதல் வருகிறது நாயகிக்கு. முதல் 20 நிமிடம் மட்டும் நகைச்சுவையாக நகரும் படம் அடுத்து தேக்கடியில் நடிக்கும் ஒரு கொலையை நோக்கி மையம் கொள்கிறது. படத்தில் அஜ்மல் ரோல் பெரிதாக பேசப்படும். அதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் வில்லனாக பிரகாஷ் ராஜ். இவர் வந்ததும் படம் டாப் கியரில் பறக்கிறது. வழக்கமான பாத்திரத்தில் இருந்து மாறுபட்டு நடித்து உள்ளார் பிரகாஷ் ராஜ். மதுரை உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சமயத்தில் ஜீவாவுக்கும், பிரகாஷ் ராஜ் ஆட்களுக்கும் நடக்கும் கார், பைக் சேஸ் சீன்கள் ஆங்கில படத்துக்கு இணையான விறுவிறுப்பு. 


'என்னமோ ஏதோ பாடல்' ஆடியோவில் ஹிட் ஆனது போல், படக்காட்சிகளும் நன்றாக உள்ளதால் மேலும் பேசப்படும். 'வெண்பனியே' பாடலில் பா.விஜய் பேனா தன் திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளது. 'அமளி துமளி' பாடலை மிகவும் வித்யாசமான வெளிநாட்டு லொக்கேசன்களில் படம் ஆக்கி உள்ளனர். சைனாவின் இயற்கை அழகை இதுவரை எவரும் இப்படி அசத்தலாக எடுத்ததில்லை என்று சொல்லலாம். 'அக நக' பாடல் அக்மார்க் ஹாரிஸ் படைப்பு. அசத்தல் இசை. இந்தப்பாடலில் சூர்யா, கார்த்தி, பரத், ஜெயம் ரவி, ஹாரிஸ் மற்றும் கே.வி. ஆனந்த் என அனைவரும் தலைகாட்டி விட்டு போகிறார்கள். டாப் ஆங்கிளில் புதுமையான முறையில் படம் ஆக்கி உள்ளார் இயக்குனர். மீண்டும் ஒரு முறை பார்க்கத்தூண்டும் கேமரா வொர்க்.  


                                                                             

* ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்து கொண்டிருப்பதாக கூறும் வில்லன் பிரகாஷ்ராஜ் கார் செல்லும் ஒரு இடத்தில் காஞ்சிபுரம் பெயர்பலகை மின்னல் என வந்து செல்கிறது. என்ன ஆச்சி கே.வி. ஆனந்த் சார். 

* இடைவேளைக்கு முன் ஜீவா மற்றும் கார்த்திகா காதல் காட்சிகள் சற்று பொறுமையை சோதிக்கின்றன. அம்மணி நடிப்பு அசத்தலாக இருப்பதால் தமிழ் சினிமாவில் பெரிதாக ஒரு வலம் வருவார். பியா என்று ஒரு நடிகையை காரணம் இன்றி ஆங்கிலத்தில் பேசவைத்து பொறுமையை சோதிக்கிறார்கள். 

* ஜீவா வழக்கம்போல் தன்னால் முடிந்த உழைப்பை தந்திருக்கிறார். சூர்யா எப்படி சிங்கம் மூலம் கோடையில் வெற்றிக்கொடி நாட்டினாரோ அதை இம்முறை ஜீவா ரிப்பீட் செய்துள்ளார். சீன நெடுஞ்சுவரில் வில்லன் ஒருவனை துரத்தும் காட்சியில் நகைச்சுவை கலந்து இவர் செய்யும் முகபாவங்கள் அரங்கில் பெரும் கைதட்டலை பெற்றன. 

* பெரியதாக கதையில் ரிஸ்க் எடுக்காமல் அயன் ஸ்டைலில் கமர்சியல் விருந்து படைக்க கே.வி. ஆனந்த் எண்ணி இருந்தாலும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம். அது போல் அஜ்மல் தேக்கடியில் பேசும் வசனம் படத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பது சிறு உறுத்தல். 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் பிரிமியர் ஷோ பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், டிக்கட் ஏற்பாடு செய்த நண்பருக்கு பெரிய நன்றியை  சொல்லிவிட்டு விடைபெற்றேன். மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் படம்தான் கோ. நிஜமாகவே வரும் ஞாயிறு அன்று காலையில் படம் பார்க்க இருப்பதால் அன்று இரவு விமர்சனம் போடுகிறேன். சி.பி. செந்தில்குமார் போன்றவர்கள் வெள்ளி ஆனால் போதும் உடனே படம் பார்த்து விட்டு விமர்சனம் போட்டுவிடுவதால் இந்த முறை முதல் (டுபாக்கூர்) விமர்சனத்தை போட்டே தீருவது என்று முடிவு செய்ததன் விளைவே இப்பதிவு. பார்க்காத படத்தை பற்றி விமர்சனம் போட எவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டி இருக்கு. பொய் சொல்றதோட வலி இப்பதான் புரியுது. சினிமா பிரியர்களே, கோடை வெயிலில் கோபம் கொள்ள வேண்டாம். நரம்பு புடைக்க என்ன அடிக்க கிளம்ப வேண்டாம். நான் இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறேன். தமிழகம் வரும் வரை காத்திருக்கவும். 
..............................................................

my other site: nanbendaa.blogspot.com
.............................................................
                                                                      

25 comments:

Ram said...

முதல் ஆளா.?

Ram said...

அட போங்கப்பா.. கடுப்புகள கிளப்பிகிட்டு.. இத வேற மெனக்கெட்டு படிச்சன்.. மொத ஆளா வந்து இப்படி மொக்கை வாங்க தானா.?

சக்தி கல்வி மையம் said...

பார்க்காத படத்தை பற்றி விமர்சனம் போட எவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டி இருக்கு. பொய் சொல்றதோட வலி இப்பதான் புரியுது. சினிமா பிரியர்களே, கோடை வெயிலில் கோபம் கொள்ள வேண்டாம். நரம்பு புடைக்க என்ன அடிக்க கிளம்ப வேண்டாம். நான் இப்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறேன். தமிழகம் வரும் வரை காத்திருக்கவும். ----
அடப் பாவிங்களா ...

சக்தி கல்வி மையம் said...

இதை வேற கடைசிவரைக்கும் படிச்சு தொலைச்சிட்டேன்.

சக்தி கல்வி மையம் said...

இருந்தாலும் படம் பார்த்த மாதிரியே விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...

Unknown said...

அடங்கொன்னியா!

Unknown said...

எனக்கு வர கோபத்துக்கு..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Prabu M said...

நீங்க நல்லா இருக்கணும்...... வாழ்க வளமுடன்......

கெட்ட கோபத்துடன்,

பிரபு எம் :-)

Shajahan.S. said...

மிகவும் அருமையான (பொய்) விமர்சனம். நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருந்தாலும் உங்களுக்கு இந்த விமர்சனம் வெற்றிதான்.முடிவுல தான தெரியுது.(ரூம்போட்டு யொசிப்பீங்களோ!

Anonymous said...

நான் புதன் கிரகத்தில் இருப்பதால் ,அடிக்க வர முடியாது ஸாரி..என்னை மாதிரி தானா ..அவ்வவ்

! சிவகுமார் ! said...

//தம்பி கூர்மதியன் said...
முதல் ஆளா.?//

வலையில் சிக்கிய முதல் மீன் நீங்கதான்.

! சிவகுமார் ! said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இதை வேற கடைசிவரைக்கும் படிச்சு தொலைச்சிட்டேன்.//

ஹா. ஹா....ரொம்ப சந்தோஷம்.

! சிவகுமார் ! said...

//விக்கி உலகம் said...
அடங்கொன்னியா!//

நான் யாரையும் கொல்லலீங்க!

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
எனக்கு வர கோபத்துக்கு..........ம்ம்ம்ம்ம்ம்ம்//

நீர் மோர் குடிக்க போறீங்களா..

! சிவகுமார் ! said...

//Prabu M said...
நீங்க நல்லா இருக்கணும்...... வாழ்க வளமுடன்......

கெட்ட கோபத்துடன்,

பிரபு எம் :-)//

பொன்னாடை போர்த்த விரும்புவோர் தயவு செய்து வரிசையில் வரவும்.

! சிவகுமார் ! said...

/ஆர்.கே.சதீஷ்குமார் said...
நான் புதன் கிரகத்தில் இருப்பதால் ,அடிக்க வர முடியாது ஸாரி..என்னை மாதிரி தானா ..அவ்வவ்//

நம்ம என்ன தப்பு செஞ்சோம் சதீஷ். இப்படி அடிக்கறாங்க...

RVS said...

ஒரு நல்ல படம் இயக்ககூடிய திறமை உங்களிடம் இருப்பதாக தெரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள். ;-)

சென்னை பித்தன் said...

உண்மையாவே ப்ரிவியூ பார்த்து விட்டு எழுதியிருக் கிறீர்கள் என நினைத்தேன்.கார்த்திகா நடிப்பைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்துத் திகைத்தேன்,இவர் கருத்து வேறாகயிருக்கிறதே என்று.கடைசியில் பார்த்தால்!
விமரிசனம் எழுத எல்லாத் தகுதிகளும் இருக்கிறது!

அஞ்சா சிங்கம் said...

கர் ........................நற நற நற நற .........................
நல்லா வருது வாயில ...........................

! சிவகுமார் ! said...

//RVS said..
ஒரு நல்ல படம் இயக்ககூடிய திறமை உங்களிடம் இருப்பதாக தெரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள். ;-)//

அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் ஷங்கருக்கு ஒரு சுஜாதா போல் எனக்கு தாங்கள் எழுத வேண்டிய கட்டாயம் வரும். விதி வலியது.;-)

! சிவகுமார் ! said...

//சென்னை பித்தன் said...
உண்மையாவே ப்ரிவியூ பார்த்து விட்டு எழுதியிருக் கிறீர்கள் என நினைத்தேன்//

என்னை உதைக்காமல் விட்டவரை மகிழ்ச்சி சார். பாராட்டுக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
கர் ...நற நற நற நற...நல்லா வருது வாயில//

ஆஹா.. சிங்கம் களம் இறங்கிடுச்சீ...எஸ்கேப்!

RVS said...

அப்போது நீங்கள் ஷிவகுமார் என்று பெயர் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும். ஹி..ஹி.. சினிமா சென்டிமென்ட்.. ;-))

JK said...

Nalla vela naa No 1 illa..

ஜோதிஜி said...

தமிழ்ச்செடி சார்பாக உங்களை வரவேற்கின்றேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...