CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 17, 2011

காதலெனும் காட்டாறு

                                                              

"டேய் நந்தா..ஷூவ எடுத்துட்டு வாடா" என அதட்டினார் ராம். பெற்றோரை இழந்த நாள் முதல் ராமின் இல்லத்தில் தஞ்சம் புகுந்து இன்றோர் இளைஞனாக வளர்ந்து நிற்பவன்தான் நந்தா. சென்னை அண்ணா நகரின் சாந்தி காலனியில் உள்ள இந்த வீடுதான் அவனது உலகம். மாதம் ஒரு நாள் கடற்கரை அல்லது பூங்கா..அதுவும் ராமின் மனைவி விரும்பினால்தான் இவனும் செல்ல முடியும். பேசும் திறனை இழந்த அப்பாவி. ராமுக்கு ஷூவை எடுத்து தந்து விட்டு வாசலில் வந்து நின்றான் நந்தா. மேலே உள்ள வீட்டில் குடியேற சாமான்களை இறக்கிக்கொண்டு இருந்தது ஒரு குடும்பம். "ப்ரீத்தி..மாடில பாத்து ஏறு" என்று ராகவன் சொன்னதும் உடனே மாடியை நோக்கினான் நந்தா. முகத்தை பார்க்கும் முன், தொகுதி எம்.எல்.ஏ போல வேகமாக படி ஏறி மறைந்தாள் ப்ரீத்தி.  

படிக்கட்டுகளுக்கு கூட தன் காலடி அழுத்தத்தை உணர விடாமல் இலவம் பஞ்சு பாதங்களை கொண்டிருந்தாள் ப்ரீத்தி. இளம் பெண்களின் தரிசனமே கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் போலிச்சாமியார் போல் வெறுப்பில் இருந்த நந்தாவின் மனதில் இன்றுதான் காவிரி கரைபுரண்டு ஓடியது. கிரிமினல் வக்கீல் ராகவன், மனைவி சத்யா இருவரும் இவனை மேலும் கீழும் பார்த்தவாறு மேலே ஏறினர். ராமின் குடும்பத்திற்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள் இவர்கள். "ப்ரீத்தி முகத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே" என்று கடுப்பில் கால் அருகில் கிடந்த டென்னிஸ் பந்தை எட்டி உதைத்தான். மாலை கடந்து இரவும் வந்தது. அவள் ஒரு முறை கூட வெளியே வரவில்லை. 

ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் "என்ன கலர், நாளைக்கி எப்போ, நான் எப்படி?" என்று மணிரத்னம் டயலாக்கை மனதினுள் ஓட விட்டான். அந்நேரம் திடீரென ஒரு அசரீரி கேட்டது. "விருதகிரி பார்ட் - 2 படத்தை இந்த வீட்டு தம்பி பாக்கப்போவுது. அதனால அந்த புள்ள உசுருக்கு ஆபத்து வருது, ஆபத்து வருது...டுர்ர்.. டுர்ர்..". இதயத்துடிப்பு நின்று விடும் போல இருந்தது. அதிர்ந்து வாசலுக்கு ஓடினான். "ச்சீ..வெறும் பிரமைதானா. என்னைக்கோ ஒரு நாள் சந்தோசமா இருக்கும்போது அபாய ஒலி கேக்குதே" என்று நடுங்கியவாறு உறங்க ஆரம்பித்தான்.

"கொக்கர கொக்கரக்கோ...சேவல் கொக்கரக்கோ. சேவல் கூவகுல்லே ரெண்டு கோழி கொக்கரக்கோ" என்று அதிகாலையில் நாயர் கடை ரேடியோ அலறியதும் எரிச்சலான ஏரியா சேவல் ஒன்று "கொக்கோ ரக்கோ" என்று ஒரு தரம் மட்டும் கூவி விட்டு மீண்டும் ரெஸ்ட் எடுத்தது. ராம் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. "வாங்க ராகவன், என்ன ஜாக்கிங் கெளம்பியாச்சா?", "ஆமா சார். நீங்க எப்பிடி?"  "நானும் வர்றேன். ஒரு நிமிஷம் உக்காருங்க". நந்தாவை மீண்டும் ஒரு முறை ஏறிட்டு பார்த்தார் ராகவன், "என்ன ஜாதியோ" என்று மனதிற்குள் எண்ணியவாறு வீட்டை நோட்டமிட்டார். "டேய், நந்தா நீயும் வா" என்று ராம் அழைத்தார். உடனே துள்ளி ஓடினான் நந்தா. "என்னங்க, கொஞ்சம் நில்லுங்க. ப்ரீத்தி உங்க கூட வருவேன்னு அடம் பிடிக்கிறா" என கத்தினாள் சத்யா. மிகவும் செல்லமாக வளர்ந்தவள். வேறு வழியில்லை. இல்லாவிடில் பிரச்னை செய்வாள். அவளையும் சேர்த்து நால்வராக நடக்க தொடங்கினர்.   

ப்ரீத்தியை கண்ட உற்சாகத்தில் இருப்பு கொள்ளாமல் மிதந்தான் நந்தா. சிவந்த உதட்டில் இவ்வளவு மின்சாரத்தை இவள் பதுக்கி வைத்திருந்தால் ஏன் நாட்டில் மின் தட்டுப்பாடு வராது? சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரே பிரதிநிதியாக வெண் புஷ்பமாக நடந்து வந்தாள் ப்ரீத்தி. இரண்டு ஜோடி முடிகள் அவள் முகத்தை முழுதாய் பார்க்க அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை ஒதுக்கி விட்டாலும் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அவள் நெற்றியில் ஒற்றைக்காலில் நடனமாடிக்கொண்டே இருந்தன. ப்ரீத்தி நம்மை ஏறிட்டாவது பார்ப்பாளா என்று எண்ணிய வேளையில் ஒரு பைக் அசுர வேகத்தில் அவளை நோக்கி மிக அருகில் வந்ததை பார்த்த நந்தா, ப்ரீத்தியை பார்த்து கத்தினான். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. பைக்கை நிறுத்தி அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார் ராகவன். ஒன்றும் பேசமால் சென்று விட்டான் அந்த இளைஞன். 

நன்றியுடன் நந்தாவை பார்த்து சிரித்தார் ராகவன். மகிழ்ச்சி தாளவில்லை அவனுக்கு. அருகில் உள்ள பூங்காவில் நுழைந்தனர் நால்வரும்.  பள்ளிக்காலத்தில் தான் செய்த படு மொக்கை சாகசங்களை ராமிடம் சொல்லி சுனாமியை வரவழைத்து கொண்டிருந்தார் ராகவன். சற்று தள்ளி ஓரிடத்தில்  தனியே நின்று கொண்டிருந்தான் நந்தா. அதைக்கண்ட ப்ரீத்தி அவனருகில் சென்றாள். சில நிமிட மௌனம். லேசாக தலையை உயர்த்தினான் அவன். ப்ரீத்தியின் கண்களை உற்று நோக்கிக்கொண்டே இருந்தான் நந்தா. அவனுடைய கன்னத்தை வருடினாள் ப்ரீத்தி. காதலுக்கு சம்மதம் தெரிவிப்பது போல் அவனை பார்த்தன கண்கள். என்னடா இது லாஜிக் இல்லா மாஜிக் என்று குதூகலித்தான் நந்தா. என்னை எப்படி காதலிக்க ஒப்புக்கொண்டாள். 'வாழ்க பைக் ஓட்டி' என்று எண்ணியவாறு அவளை மீண்டும் பார்த்தான்.

பிறகென்ன. பிரைவேட் ஜெட் பிடித்து வேக வேகமாக வந்து இறங்கியது காதல். மேல்சாதி பெண் என்பதால் இவளை நந்தாவுடன் சேர ராகவன் விடப்போவதில்லை. காதலிப்பது என்று முடிவான பிறகு இன்றென்ன, நாளை என்ன. இன்றிரவே வீட்டை விட்டு ஓடி விட முடிவு செய்தனர் இருவரும். 


தொடரும்...

...............................................................
My other site: nanbendaa.blogspot.com
...............................................................

சமீபத்தில் எழுதியது:.............................................................

20 comments:

Unknown said...

//அந்நேரம் திடீரென ஒரு அசரீரி கேட்டது. "விருதகிரி பார்ட் - 2 படத்தை இந்த வீட்டு தம்பி பாக்கப்போவுது. அதனால அந்த புள்ள உசுருக்கு ஆபத்து வருது, ஆபத்து வருது...டுர்ர்.. டுர்ர்.."//

கதையிலும் அரசியல் காமெடியா?

MANO நாஞ்சில் மனோ said...

//கொக்கர கொக்கரக்கோ...சேவல் கொக்கரக்கோ. சேவல் கூவகுல்லே ரெண்டு கோழி கொக்கரக்கோ" என்று அதிகாலையில் நாயர் கடை ரேடியோ அலறியதும் எரிச்சலான ஏரியா சேவல் ஒன்று "கொக்கோ ரக்கோ" என்று ஒரு தரம் மட்டும் கூவி விட்டு மீண்டும் ரெஸ்ட் எடுத்தது//


ஹா ஹா ஹா ஹா குசும்பை பாரு ஹே ஹே ஹே ஹே ஹே....

செங்கோவி said...

//படிக்கட்டுகளுக்கு கூட தன் காலடி அழுத்தத்தை உணர விடாமல் இலவம் பஞ்சு பாதங்களை கொண்டிருந்தாள் ப்ரீத்தி.// ஆஹா, என்ன ஒரு வர்ணனை..இங்கேயும் தொடரா, கலக்குங்க சிவா.

செங்கோவி said...

இரண்டாம் பகுதியைக் காணோம்..போட்டுட்டு எடுத்திட்டீங்களா..

! சிவகுமார் ! said...

//பாரத்... பாரதி... said...//
கதையிலும் அரசியல் காமெடியா?//

பழக்க தோசத்துல வந்துருச்சி நண்பா..

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா குசும்பை பாரு//

வருகைக்கு நன்றி தல.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
இங்கேயும் தொடரா//

ஒரே பதிவில் முடிக்க முடியாத உன்னத காதல் கதை. அதான்.

! சிவகுமார் ! said...

/செங்கோவி said...
இரண்டாம் பகுதியைக் காணோம்..போட்டுட்டு எடுத்திட்டீங்களா..//

சீக்கிரம் ரிலீஸ் ஆயிடும். கொஞ்சம் சோகமான சம்பவங்களை சேர்த்திருப்பதால் யோசிக்க நேரம் ஆகிறது.

கருத்திற்கு நன்றி நண்பரே!

ரஹீம் கஸ்ஸாலி said...

முடிவை என்னால் ஓரளவு யூகிக்க முடிகிறது. அதை போனில் சொல்கிறேன் சிவா

Unknown said...

சிவா இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? பைக்காரன் இடிக்காம காப்பாத்துனதுக்காக, உடனேவா கன்னத்தை வருடுவா? இந்த ரேஞ்சுல பொண்னுக இருந்தா நாட்டுல ஏன் கள்ளக்காதல நொள்ளக்காதல், வெட்டு குத்து கொலையெல்லாம் நடக்க போகுது? கதைங்கறதால விடறேன், கடைசில உண்மைகதை நடந்த சம்பவம்னு ஏதாவது போட்டீங்க, லத்திகா சிடிய வாங்கி பார்சல் அனுப்பிருவேன் ஜாக்கிரதை...

Unknown said...

கதையின் மீதியை அள்ளி விடுங்கள் சீக்கிரம்..

Unknown said...

கதை நல்லாதான் இருக்கு.. எதோ பொண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் யோசிச்சுட்டே எழுதிட்டீங்க கரெக்ட்தானே.. ;-)

Unknown said...

கலக்கல்

! சிவகுமார் ! said...

//ரஹீம் கஸாலி said...
முடிவை என்னால் ஓரளவு யூகிக்க முடிகிறது.//

சீக்கிரம் முடிவை சொல்லி விடுகிறேன்.

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
இந்த ரேஞ்சுல பொண்னுக இருந்தா நாட்டுல ஏன் கள்ளக்காதல நொள்ளக்காதல், வெட்டு குத்து கொலையெல்லாம் நடக்க போகுது? //

டக்குனு பூத்தாதான் காதல்.

//கதைங்கறதால விடறேன், கடைசில உண்மைகதை நடந்த சம்பவம்னு ஏதாவது போட்டீங்க, லத்திகா சிடிய வாங்கி பார்சல் அனுப்பிருவேன் ஜாக்கிரதை...//

அசராம பாப்போம்ல....

! சிவகுமார் ! said...

//பாரத்... பாரதி... said...
கதையின் மீதியை அள்ளி விடுங்கள் சீக்கிரம்..//

வெகு விரைவில் நண்பரே..

! சிவகுமார் ! said...

//பதிவுலகில் பாபு said...
எதோ பொண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் யோசிச்சுட்டே எழுதிட்டீங்க கரெக்ட்தானே.. ;-)//

கலைகளிலே அவள் ஓவியம்..

! சிவகுமார் ! said...

//விக்கி உலகம் said...
கலக்கல்//

நன்றி விக்கி.

RVS said...

அந்த பைக் ஓட்டி ராம் செட் பண்ணிய ஆள் அப்படின்னு மட்டும் ட்விஸ்ட் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்...
அது சரி.. எப்போ ஓடப்போறாங்க.. ;-))
அந்த ரெண்டு ஜோடி முடி முகத்தில் ஆடும் தாண்டவம் நல்லா இருக்கு சிவா! வாழ்த்துக்கள். ;-))

! சிவகுமார் ! said...

//அந்த பைக் ஓட்டி ராம் செட் பண்ணிய ஆள் அப்படின்னு மட்டும் ட்விஸ்ட் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்...அது சரி.. எப்போ ஓடப்போறாங்க.//

ரெண்டாவது பார்ட் ரிலீஸ் ஆயிடுச்சி ஆர்.வி.எஸ். வேற ட்விஸ்ட் வச்சிருக்கேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...