CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, April 11, 2011

பொன்னர் - சங்கர்
                                                                  

கொங்கு நாட்டில் தங்கள் மண்ணை காக்க போராடிய இரு சகோதரர்கள்தான் பொன்னர் - சங்கர். இன்றும் கொங்கு மக்கள் இரட்டை ஆண் குழந்தைகள்  பிறப்பின் இவர்கள் இருவரின் பெயர்களை சூடும் அளவுக்கு ஓங்கி நிற்கிறது இவர்களின் புகழ். இரு சாதியை சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பகை போராக மாறுகிறது. அதில் அண்ணன்மார் ஜெயித்த கதையை சொல்கிறது இப்படம். மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் இடத்தில் இன்றும் இவர்களுக்கு பொங்கல் வைத்து மக்கள் பூஜை செய்து வருகின்றனர். இந்த வரலாற்றின் திரை வடிவம்தான் பொன்னர் - சங்கர். இவ்விரு வீரர்களின் வரலாறு சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா. இது குறித்து சான்றோர் பெருமக்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் சில நாட்களில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அதுவரை காத்திருப்போம். இப்படத்தில் நடித்தவர்கள், வசனங்கள் மற்றும் இன்ன பிற விசயங்களை பற்றி மட்டும் இவ்விமர்சனத்தில் காண்போம். 


சிவனே என்று வீட்டில் இருந்த என்னை இப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று அழைத்தவர் பிலாசபி பிரபாகரன். எனக்கு நேரமில்லை என்று பல முறை சொல்லியும் "உங்க கால் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறேன். திவ்யா பரமேஸ்வரன் எனும் பேரழகி இப்படத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக மட்டுமாவது நான் பார்த்தே ஆக வேண்டும்" என்று கதறி அழுததால் வேறு வழி இன்றி சம்மதித்தேன். பதிவுலக நண்பர் கஸாலி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் இணைய, அரங்கில் போய் அமர்ந்தோம். ஆரம்பத்தில் கலைஞர் படம் குறித்து பேச தொடங்கியதும் ஒரு விடலை "தலைவா.." என்று வீறிட்டான். நல்லா வருவீங்க தம்பி. அவனை விட விஜயகுமார் எட்டுக்கட்டையில் வசனம் பேசும் இடங்களில் விசில் பறந்தது. நெப்போலியன், குஷ்பு, போஸ் வெங்கட் என்று சூர்ய வம்ச ஆட்கள் அனைவரும் ஆஜர். 

பெயர் போடுகையில் என்னை பிரமிக்க வைத்த விசயங்களில் முக்கியமானது 'விஷுவல் எபக்ட்ஸ் டைரக்டர் - பிரசாந்த்' என்று போட்டதுதான். அடுத்து 'காஸ்ட்யூம்ஸ்' - ப்ரீத்தி தியாகராஜன். அது என்ன ஒரு படத்தோட காஸ்ட்யூம் டிசைனர்ஸ் எல்லாரும் ஹீரோ அல்லது டைரக்டருங்களோட மனைவி இல்லைன்னா தங்கச்சியாவே இருக்காங்க. 'பேமிலி கோம்போ' சம்பளம் தர்றதுதான் இப்ப பேஷன் போல. கலைஞர் வசனத்துல பக்கம் பக்கமா வசனம் பேசாம உதட்டை மூடியே வச்சிருக்காரு பிரசாந்த். காதலி என்றால் மட்டுமே உதடுகள் (டூயட் பாட) பிரியும். வசனம் என்றால் உதடுகள் பிரியாது என்று முடிவோடதான் இருந்துக்காங்க ரெண்டு பிரசாந்தும். பேப்பர்ல  "பிரசாந்த் நடிக்கும்" அப்படின்னு போட்டதை நம்பி போனேன். கடைசி வரைக்கும்..எனக்கு மாமா பிஸ்கோத்து கதிதான்.  கோல்கேட் பேஸ்ட்டை 50% தள்ளுபடியில் தந்த மாதிரி படம் முழுக்க சிரிச்சிட்டே இருக்காங்க பூஜாவும், திவ்யாவும். பாட்டு எல்லாமே ஓரளவு சுமாரா இருக்கு. இசை இளையராஜா? நம்ப முடியவில்லை. கடைசி பாட்டுல வர்ற வரிகள் "இன்னும் முடியல..இன்னும் முடியல". ரெண்டு நாயகிகள் அவ்ளோ சொல்லியும் யாரும் கேக்கல.  நான் மட்டும் கடைசி வரை நின்னு "எ பிலிம் பை தியாகராஜன்" அப்டின்னு போடுறதை பாத்துட்டுதான் போனேன். 


பிடிக்காதது:

* ராஜ்கிரண் எல்லா இடத்திலும் "பொன்னர் - ங்கர்" அப்டின்னு தப்பா வசனம் பேசுறாரு. "பொன்னர் - ங்கர்"ன்னு சொல்ல சொல்லி யாரும் ட்ரைனிங் தரலை.

* ஒரு பாட்டுல 'தாமிரபரணி' பானு ஆடுன (உ)டான்ஸ் இருக்கே. அந்த காலத்துல சரோஜாதேவி பரதநாட்டியம் அப்டிங்கற பேருல குடுத்த இம்சைக்கு ஈக்வலா இருந்துச்சி பானுவோட ஆட்டம். 

* சினேகா, ரியாஸ்கான், நெப்போலியன், சீதா, டெல்லி கணேஷ் எல்லாம் இருந்தாங்க. ஆனா இல்ல. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்துல வர்ற தாத்தா மாதிரி நாசர் வேற வந்துட்டு போறாரு. நாசர் கமல் கூட நடிச்ச மாதிரி மறுபடியும் எப்ப நடிப்பாரோ.  சீக்கிரம் சண்டைய மறந்துட்டு சேருங்க ரெண்டு பேரும்.  

* போர் நடக்குற சீன் எல்லாத்துக்கும்  செம செலவு செஞ்சி இருக்கோம்னு சொன்னாங்க. ஆனா அதோட பிரம்மாண்டம் காட்சில பெருசா தெரியல. லாங் மற்றும் மிடில் ஷாட் வச்சி போர்ப்படையை பெருசா காட்டாம பிரசாந்துக்கு க்ளோஸ் அப் வச்சியே நெறைய சீன் எடுத்து இருக்காங்க. 

* அண்ணன்மார் கதைய நெகிழ்ச்சியோட இன்னும் அழகா படம் ஆக்கி இருந்து இருக்கலாம். தியாகராஜன் மிஸ் பண்ணிட்டார். தியேட்டரை விட்டு வந்ததும் படம் மனசு நிக்கல. 


பிடிச்சது:

* நீளமான, அலுப்பூட்டும் வசனங்களை குறைச்சி இருக்கார் கருணாநிதி. 

* வரலாற்று படம் என்றாலே செம்மண் அல்லது பிரவுன் கலர் டோனை யூஸ் பண்ணி வர்ற நேரத்துல, கண்ணை உறுத்தாம இயல்பா சீன்களை பதிவு செஞ்ச ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ். 

* உளியின் ஓசை படத்துல வர்ற மாதிரி 'கிச்சு கிச்சு' செட் போடாமல், பாஸ் மார்க் வாங்கிட்டாரு ஆர்ட் டைரக்டர். 

என்னோட கருது என்னன்னா:

ரெண்டு வேஷத்துல இளைய தளபதி நடிச்சி இருந்தாருன்னா மாஸுக்கு மாஸு, காசுக்கு காசும் பாத்து இருக்கலாம் பட மொதலாளி. பாவம். அவருக்கு கொடுத்து வக்கல. 

ஆயிரம்தான் சொல்லுங்க. ராஜா வேஷம்னா இனிமே நம்ம ஆளுதான் நடிக்கணும். வேற யாரு. அது என்னைக்குமே நம்ம அண்ணன் பவர் ஸ்டாரு. 

                                                       
                                                                    
                                                              
..........................................................

சமீபத்தில் எழுதியது:...........................................................
my other site: nanbendaa.blogspot.com
............................................................


                     

22 comments:

செங்கோவி said...

வடை!

செங்கோவி said...

நல்ல விமர்சனம்..எதை நம்பிப் போனீங்கன்னு தெரியலை!

செங்கோவி said...

பதிவு போட்டுட்டுப் போயிட்டா எப்படி..கலைஞரா வந்து தமிழ்மணத்துல இணைப்பாரு..(இணைச்சுப் போட்டாச்சு!)

Philosophy Prabhakaran said...

ஆமாம் சுண்டுவிரலை பிடித்துதான் கெஞ்சினேன்... இந்தப்படத்திற்கு போக வேண்டாமென்று... கேட்டியா மக்கா...

Philosophy Prabhakaran said...

பிடிக்காதது:
- சரித்திர காலத்தில் திருமணமான பெண்கள் உச்சியில் குங்குமம் வைத்திருப்பதாக காட்டியிருப்பது...
- பொன்னருக்கும் சங்கருக்கும் அவாள் தாலி எடுத்துக் கொடுத்து கட்டி, ஹோமத்தை சுற்றி வருவதாக காட்டியது சுத்த பேத்தனம்...

சக்தி கல்வி மையம் said...

படம் பாத்துட்டீங்க...

ரஹீம் கஸ்ஸாலி said...

சிவனே என்று வீட்டில் இருந்த என்னை இப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று அழைத்தவர் பிலாசபி பிரபாகரன்.////
இதை நான் ஆட்சேபிக்கிறேன் சே...சே...வழிமொழிகிறேன்

Unknown said...

ஏம்பா...ஏன்.....

Unknown said...

ஹி ஹி தானே உட்கார்ந்து படம் பார்த்த தானைத்தலைவன் சிவா வாழ்க, நீங்க நெஞ்சுக்கு நீதி புஸ்தகம் வாங்கி தர டிரை பண்ணும் போதே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு இருந்தது :-) நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க :-) விமர்சனம் மிக மிக அருமை சிவா

! சிவகுமார் ! said...

செங்கோவி said...
வடை!
//வெயில் காலம்..அதனால உங்களுக்கு தயிர் வடை பார்சல்.

//நல்ல விமர்சனம்..எதை நம்பிப் போனீங்கன்னு தெரியலை!//

திவ்யா பரமேஸ்வரன்...இதை சொல்லியே உசுப்பேத்தி விட்டுட்டாங்க..

//பதிவு போட்டுட்டுப் போயிட்டா எப்படி..கலைஞரா வந்து தமிழ்மணத்துல இணைப்பாரு..(இணைச்சுப் போட்டாச்சு!)//

தமிழ் மணத்தின் ஒட்டுப்பட்டை அடிக்கடி பேஜார் செய்வதால் வந்த வினை. உங்கள் உதவிக்கு நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
ஆமாம் சுண்டுவிரலை பிடித்துதான் கெஞ்சினேன்... இந்தப்படத்திற்கு போக வேண்டாமென்று... கேட்டியா மக்கா...//

படத்துல திவ்யா வரும்போது ஸ்க்ரீன் கிட்ட போய் டான்ஸ் ஆடிட்டு இங்க பல்டி அடிக்கறீங்களே.. நியாயமா?

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
பிடிக்காதது:
- சரித்திர காலத்தில் திருமணமான பெண்கள் உச்சியில் குங்குமம் வைத்திருப்பதாக காட்டியிருப்பது...
- பொன்னருக்கும் சங்கருக்கும் அவாள் தாலி எடுத்துக் கொடுத்து கட்டி, ஹோமத்தை சுற்றி வருவதாக காட்டியது சுத்த பேத்தனம்.//

இது குறித்து விசாரணை நடக்குது. தீர்ப்பு வந்ததும் பேசறேன்.

! சிவகுமார் ! said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
படம் பாத்துட்டீங்க...//

எஸ் பாஸ்..

! சிவகுமார் ! said...

//ரஹீம் கஸாலி said...
சிவனே என்று வீட்டில் இருந்த என்னை இப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று அழைத்தவர் பிலாசபி பிரபாகரன்.////
இதை நான் ஆட்சேபிக்கிறேன் சே...சே...வழிமொழிகிறேன் //

எப்படியோ உங்க தலைவலிக்கு மருந்து தந்த சந்தோஷம் ஒண்ணு போதும் எனக்கு.

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஏம்பா...ஏன்..//

எல்லா புகழும் இறைவனுக்கே...

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
ஹி ஹி தானே உட்கார்ந்து படம் பார்த்த தானைத்தலைவன் சிவா வாழ்க, //

கரும்பு தின்ன கூலியா....பாப்போம்ல.

//நீங்க நெஞ்சுக்கு நீதி புஸ்தகம் வாங்கி தர டிரை பண்ணும் போதே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு இருந்தது//

அட்ரஸ் சொல்லுங்க. பார்சல் அனுப்பறேன்.

// நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க//

நீங்க லத்திகா பாத்ததை விடவா??

விமர்சனம் மிக மிக அருமை சிவா//

நன்றி சுரேஷ்!

Chitra said...

கோல்கேட் பேஸ்ட்டை 50% தள்ளுபடியில் தந்த மாதிரி படம் முழுக்க சிரிச்சிட்டே இருக்காங்க பூஜாவும், திவ்யாவும்.


......ஆயிரம்தான் சொல்லுங்க. ராஜா வேஷம்னா இனிமே நம்ம ஆளுதான் நடிக்கணும். வேற யாரு. அது என்னைக்குமே நம்ம அண்ணன் பவர் ஸ்டாரு.


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி கமென்ட்ஸ்!

! சிவகுமார் ! said...

//Chitra said...

ஹா,ஹா.... செம காமெடி கமென்ட்ஸ்!//

கருத்துக்கு நன்றி சகோதரி சித்ரா!! உங்க ஏரியால ரிலீஸ் ஆயிடுச்சா.

Unknown said...

ஆகா மொத்தம் எல்லாத்துக்கும் பிலாசபி தான் காரணமா ?

! சிவகுமார் ! said...

//நா.மணிவண்ணன் said...
ஆகா மொத்தம் எல்லாத்துக்கும் பிலாசபி தான் காரணமா ?//

அதுல சந்தேகமே இல்ல மணி.

அஞ்சா சிங்கம் said...

நண்பர் கஸாலி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் இணைய,......
///////////////////////////

அப்பாடா நல்ல வேலை இந்த கும்பல்ல நான் சேரல என்னை கூப்பிடாததர்க்கு அநேகம் கோடி நன்றி ..................
ஒரு மப்புல நானும் உங்க கூட வந்திருந்தா என் நிலைமை என்ன ஆகி இருக்கும் நினைத்தாலே குலை நடுங்குகிறது ...........

RVS said...

சொ.செ.சூ வச்சுக்குறீங்க... ஆமாம் எத நம்பி போறீங்க... ;-)
சூர்ய வம்சம்... நல்லா எழுதியிருக்கீங்க.. ;-)))

Related Posts Plugin for WordPress, Blogger...