CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேஊழல் அரசியலுக்கு எதிரான போராட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் குரலுக்கு செவி சாய்த்துள்ளது இந்திய அரசாங்கம். தேசம் முழுக்க இளைஞர்களின் பேராதரவுடன் ஊழலை களைய அன்னா நடத்திய   97 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. லோக்பால் மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதாக கூறி உள்ளார் பிரதமர். அன்னா அவர்களின் பின்னால் இதுவரை தேசம் காணாத அளவிற்கு இளைஞர்களின் எழுச்சியை கண்டு மிரண்டு போய் உள்ளனர் ஊழல் பெருச்சாளிகள். சிறுவர் சிறுமியர், இல்லத்தரசிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஓங்கி குடுத்த குரல் அரசாங்கத்தை நன்றாக அசைத்து பார்த்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மொத்தம் மூன்று முறை இவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இறுதியாக லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய இசைந்துள்ளது அரசு. 


                                  அன்னா உண்ணாவிரதத்தை முடித்த காட்சி            


உண்ணாவிரதம் முடிந்ததும் அன்னா அளித்த பேட்டியில் "இது நம் தேசத்தின் இளைய சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. அதே சமயத்தில் நமது பொறுப்பு மேலும் கூடி இருக்கிறது. நம் நிஜமான போராட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. கடக்க வேண்டிய பாதை இன்னும் அதிகம். லோக்பால் மசோதாவை அரசு தாக்கல் செய்ய தாமதம் செய்தால் நாம் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தியாவின் தேர்தல் முறையில் பெருமளவு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது என் எண்ணம்" என்று கூறி உள்ளார். 


ஊழலை களைவதற்கான குழுவை நியமிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. அதன்படி இக்குழுவில் சமுதாயத்தில் நேர்மையான ஐந்து பேர், ஐந்து  அமைச்சர்கள் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோர் இருப்பர்.  


லோக்பால் ஒரு பார்வை:

* லோக்பால் குழு என்பது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போல சுதந்திரமாக செயல்படும். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தவறான பரிந்துரைகளை ஏற்காது. 

* ஊழல் செய்ததற்காக அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவர் கொள்ளை அடித்த பணம் கைப்பற்றப்படும். 

* ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பாதுகாக்கும்.

* லோக்பால் குழுவில் இருப்பவர்களின் நடவடிக்கை தவறாக இருப்பின் அவர் மீதான புகாரை தீர விசாரித்து இரண்டு மாத காலத்திற்குள் அவரை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

* அரசே ஊழல் பெருச்சாளிகளை லோக்பால் குழுவில் நியமித்தால் என்ன செய்வது? அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், குழுவில் இருக்கும் நபர்கள் அனைவரையும் நீதிபதிகள், மக்கள் மட்டுமே தேர்ந்து எடுப்பர்.

* மக்களுக்கு சரியாக சேவை செய்யாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். அரசு ஊழியர் செய்த தவறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். 


இப்படி பல நல்ல விசயங்களை உள்ளடக்கி உள்ளது இந்த லோக்பால்.


இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் வேறு வழிகளில் எப்படி ஊழல் செய்யலாம் என்று பல பெருச்சாளிகள் இப்போதே திட்டம் தீட்ட துவங்கி இருக்கும். அதை தடுத்து நிறுத்துவதே இந்த போராட்டத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும். 


                            அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக இளைஞர் படை       


இந்திய இளைஞர்கள் என்றால் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் பார்த்து விட்டு வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஊழலை பற்றி பெரிதாக கவலைப்படாதவர்கள் என்று இது நாள் வரை கொள்ளை அடித்து திரிந்த பொறம்போக்குகள் அனைவரும் கிலி அடித்து போய் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இதே போன்ற சவுக்கை இளைஞர்கள் சுழற்ற ஆரம்பித்தால் நம்மை பிடித்த பேய்கள் அனைத்தும் தலை தெறித்து ஓடிவிடும். அன்னா அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த இந்திய இளைஞர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

"நீ ஒருத்தன் போராடுனா எல்லாம் சரி ஆய்டுமா. எதுவும் நடக்காது. உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி இல்லையா" என்று இந்தியாவின் ஆஸ்தான 'பஞ்ச்' டயலாக்கை பேசிவிட்டு மருந்தளவிற்கு கூட நல்ல எண்ணங்களை மனதில் ஏற்றாமல் திரியும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு 73 வயது மாமனிதர் அன்னா ஹசாரே புகட்டி உள்ள பாடம் தான் இந்த போராட்டத்தின் வெற்றி. 


இந்தியா தனது இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கான முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது.  முதலில் லோக்பால் அவைகளில் தாக்கல் செய்யப்பட வேண்டும். பிறகு அது வெற்றிகரமாக செயல்பட வேண்டும். கொள்ளைக்கார கூட்டம் சிறையில் அடைபட வேண்டும். அதைக்கண்டு அடுத்து வரும் அரசியல்வாதிகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

ஆம்...அன்னா சொன்னதை போல கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இது வெறும் ஆரம்பம்தான்!!

..........................................................


                                
                                                                     

13 comments:

சக்தி கல்வி மையம் said...

இது வெறும் ஆரம்பம்தான்!!
சரியாச் சொல்லியிருக்காரு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஜனநாயகம்..அஹிம்சை
என்றும் தோற்பதில்லை...

RVS said...

அன்னாவை அண்ணா என்றே எழுதலாம் என்று எழுத்தாளர் இரா.முருகன் சொல்கிறார்!
நல்ல கட்டுரை சிவா! ஊர் கூடித் தேர் இழுப்போம். தேர் நகருமா? பொறுத்திருந்து பார்ப்போம். ;-))

அருள் said...

"பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

// //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
// //

அருள் கூறியது...

// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //

விந்தைமனிதன் கூறியது...

// //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

அருள் கூறியது...

// //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //

விந்தைமனிதன் சொன்னது…

// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

அஞ்சா சிங்கம் said...

சைக்கிள் கேப்புல் கேடா வெட்டியாச்சா .....
அருமையான பதிவு ...............

செங்கோவி said...

உண்மை தான்..கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. நல்ல பகிர்வு நண்பா!

! சிவகுமார் ! said...

நண்பர்கள் கருன் மற்றும் சௌந்தர் இருவரின் வருகைக்கும் நன்றி.

! சிவகுமார் ! said...

//RVS said...
அன்னாவை அண்ணா என்றே எழுதலாம் என்று எழுத்தாளர் இரா.முருகன் சொல்கிறார்!//

தகவலுக்கு நன்றி ஆர்.வி.எஸ்.

நல்ல கட்டுரை சிவா! ஊர் கூடித் தேர் இழுப்போம். தேர் நகருமா? பொறுத்திருந்து பார்ப்போம். ;-))//

தேர் நகர்ந்தே தீரும். திருவாரூர் தேரே ஆனாலும்..

! சிவகுமார் ! said...

தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி அருள் அவர்களே. ஆனால் பசுமை தாயகத்தின் தற்போதைய செயல்பாடுகள் பெருமளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளதா, அது குறித்து நகர இளைஞர்கள் மத்தியில் புத்தகங்கள், காணொளிகள் போன்றவை அவ்வப்போது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். மக்களுக்கும், இயற்கை வளத்திற்கும் பாகுபாடு பார்க்காமல் உழைக்கும் இயக்கம் எதுவாயினும் அதற்கு கட்சி சாராத மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு உண்டு. அதில் நான் என்றுமே விதிவிலக்கில்லை.

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
சைக்கிள் கேப்புல் கேடா வெட்டியாச்சா .....
அருமையான பதிவு ....//

லீவு கிடக்குற அன்னைக்கு தான் பதிவு போட முடியுது. அதுக்குள்ள பல விசயங்களை நம் பதிவர்கள் அலசி முடித்து விடுகிறார்கள். லேட்டாதான் வர முடியுது.

! சிவகுமார் ! said...

கருத்துக்கு நன்றி செங்கோவி.

அந்நியன் 2 said...

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

! சிவகுமார் ! said...

//அந்நியன் 2 said...
நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்//

கண்டிப்பாக படிக்கிறேன். அந்நியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...