தனிப்பிறவி:
.........................................................
மர்ம யோகி:
இந்த வார ஆனந்த விகடன் பேட்டியில் வழக்கம்போல் சீறி இருக்கிறார் இயக்குனர் அமீர். Tsotsi படத்தை அலேக் செய்து என்று யோகி படத்தில் நடித்தாரோ அன்றே எனக்கு அமீரின் மீதிருந்த மரியாதை போய்விட்டது. அதை உறுதி செய்தது இந்த பேட்டி. அமீருக்கு இத்தேர்தலில் சினிமா சிரிப்பு நடிகர்கள் செய்த கேலிக்கூத்துகள் எல்லாம் பிடிக்கவில்லையாம். ஆனால், அரசியல் பலம் உள்ளவர்கள் தமிழ் சினிமாவில் கால் பதித்து இன்று அசுரர்களாக வீற்றிருப்பது பற்றி வாய் திறக்கவில்லை இவர். அரசாங்கம் மதுவை ஊற்றிக்குடுத்தால் அதை குடிப்பதில் தவறில்லை என்று ஒரு புரட்சி வாதத்தை முன் வைக்கும் அதே வேளையில், 'மாணவ மறுமலர்ச்சி திட்டம்' எனும் இயக்கத்தை ஆரம்பித்து ஊழலை எதிர்க்க போகிறாராம். 2016 - அரசியலில் கால் வைக்க போகிறாராம்.
காரிலும், கண்ணிலும் இருக்கும் கருப்பு கண்ணாடியை இறக்கிவிட்டு நமது தமிழக தெருக்களையும் சற்று பாருங்கள் பருத்தி வீரரே. 15 வயது விடலைகள் கூட இன்று சர்வ சாதாரணமாக ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் 2016 - இல் உங்கள் இயக்கத்திற்கு வரும் மாணவன் எந்த நிலையில் இருப்பான். தங்கள் பருத்தி வீரன் நாயகனை போல் அன்றாடம் குடித்து விட்டு ரோட்டில் புரள வேண்டும் என்பதால்தான் மது குடிப்பதை ஆதரிக்கிறீர்களா? ஏதேனும் ஒரு பக்கம் பேசுங்கள். ரௌத்ரம் பேசுகிறோம் பேர்வழி என்று நீங்களும் உங்கள் தம்பி சசியும் பத்திரிக்கைகளில் அர்த்தமற்ற எதிர்மறை விசயங்களை பேசுவதை தவிருங்கள். சினிமாவில் புகுந்த அரசியலை எதிர்க்க சேரன், நீங்கள் மற்றும் உங்கள் சக 'ஜிகிரி' தோஸ்த் இயக்குனர்கள் பம்முவதை ஒவ்வொரு பேட்டியிலும் பார்த்து வருகிறோம். அது உங்கள் விருப்பம். அதே சமயம் மக்களை குழப்பாமல் ஏதேனும் ஒரு பக்கம் நின்றால் நன்று.
சமீபத்தில் யுவன் இசை நிகழ்ச்சியில் இளையராஜா தங்களை பார்த்து "உன் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன். நீ ரத்தம் மற்றும் கத்தியுடன் அலையும் நாயகர்களை கொண்டு இயக்குகிறாய்" என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொன்னதை மறக்க வேண்டாம். இனி தாங்கள் இயக்கவிருக்கும் படங்களிலாவது இளைய சமூகத்தை சீரழிவிற்கு கொண்டு செல்லாமல் எடுக்கவும். பிறகு உங்கள் இயக்கத்திற்கு மாணவர்கள் தானாக வருவார்கள்.
யோகி......மன்னிக்க. Tsotsi பட ட்ரைலர் கீழுள்ள லிங்க்கில்:
.................................................................
துள்ளாத மனமும் துள்ளும்:
வெயிலில் வறுபட்ட வெறுப்பில் சூரியனை முறைத்து என்ன பயன். இன்னும் கொஞ்சம் கறுப்பாவும், கடுப்பாவும் ஆகப்போறதுதான் மிச்சம். வாங்க கொஞ்ச நேரம் தண்ணில விளையாடலாம். கீழே உள்ள 'தண்ணிக்கு தண்ணி காட்டுங்க' இணைப்பை அழுத்துங்க. படத்துல வர்ற தண்ணி மேல உங்க மவுசை மூவ் பண்ணுங்க. ஆசை தீர ஆடி முடிச்சதும், வலது பக்கம் உள்ள arrow மார்க்கை அழுத்தி ஒவ்வொரு இடமா விளையாடுங்க. என்சாய்:
முடிச்சாச்சா? சரி உடனே கட்டணத்தொகை 101 ஐ எனக்கு மறக்காம மணி ஆர்டர் பண்ணிடுங்க.
.......................................................................
தாமரை நெஞ்சம்:
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டுக்கொள்ள ஒரு செய்தி. உலகின் சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து ஐ.நா. வெளியிட்டு உள்ள பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குஜராத். முதல் இடத்தை ஜெர்மனி வென்றுள்ளது. 10 வருடத்திற்கு முன்பு உலக வங்கிக்கு 50,000 கோடி கடன்பட்டு இருந்த குஜராத், இன்று உலக வங்கியில் 1 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. இதற்கு காரணமான முதல்வர் மோடி மற்றும் அனைவருக்கும் ஆயிரம் நன்றிகள். குஜராத்தில் மின் தடை மற்றும் மதுக்கடை இரண்டும் இல்லை(தமிழகம் கூட இந்தியாவில் உள்ளதாக கேள்விப்பட்டேன்). அம்மாநிலத்தில் பெண்கள் 100% கல்வியறிவு பெற்று உள்ளனர். இந்தியாவின் பங்குச்சந்தை 30% குஜராத்தை நம்பியே உள்ளது.
என் தாய் தமிழகம் இதற்கு நேர் மாறான திசையில் சென்றுகொண்டிருப்பதை காணுகையில் உள்ளம் குமுறுகிறது. என்று விடியுமோ?
........................................................................
அவன்- இவன் - யுவன்:
அவன் இவன் படப்பால்களை சமீபத்தில் கேட்டேன். எல்லா பாடல்களையும் நா.முத்துகுமார் எழுதி உள்ளார்.
* 'ஒரு மலையோரம்' பாடல் மனதை தாலாட்டுகிறது. பிரியங்கா, ஸ்ரீனிஷா (சூப்பர் சிங்கர் குட்டி என்று நினைக்கிறேன்), நித்யஸ்ரீ மற்றும் விஜய் யேசுதாஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி.
* முத்துக்குமாரின் இயல்பான வரிகளில் 'ராசாத்தி' பாடல் (குரல் ஹரிசரண்) டீக்கடை மற்றும் எப்.எம்மில் பெரிய ரவுண்ட் வரும் என்று தோன்றுகிறது. பாடல் முழுதும் யுவன் ராஜாங்கம்.
* 'முதல் முறை' பாடலில் முத்துக்குமார் விஸ்வரூபம் எடுத்துள்ளார். அவரின் பேனா சுழற்றிய அற்புத வரிகள்:
- 'கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்'
- 'இன்று வந்த பின்னாலும் நேற்று சென்று மிதக்கிறேன்'.
குரல்: விஜய் பிரகாஷ்.
........................................................................
தங்கப்பதக்கம்:
சமீபத்தில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் நம் நாட்டை சேர்ந்த ரொஞ்ஜன் சோதி. இவர் ஏற்கனவே 2010 ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஆவார். ஒலிம்பிக்கிலும் இவரது சாதனை பயணம் தொடர வாழ்த்துவோம்.
.............................................................................
நீங்கள் கேட்டவை: (sms)
தயாரிப்பாளர்: "நம்ம எடுக்கப்போற ஹாலிவுட் படத்தோட பேரை கேட்டாலே ஸ்கூல், காலேஜ் மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் சும்மா அதிரணும். அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க சார்"
இயக்குனர்: "Sunday - Working Day."
............................................................................
அழகிய தமிழ்மகன்:
தான் சார்ந்த துறையில் உச்சத்தை எட்டினாலும் சபையில் எப்படி அழகிய தமிழில் பேச வேண்டும், உயர்ந்த பண்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு இதோ கீழே உள்ள இரு காணொளிகளே சாட்சி. அப்துல் ஹமீத் அவர்களுக்கு சிம்மக்குரலோன் சிவாஜி அளித்த பேட்டி.
http://youtu.be/c8xZ1n3eLxI
இன்று ஒரு ஹிட் குடுத்தாலே எகிறி குதிக்கும் தளபதிகளே... நடிகர் திலகத்தின் பண்பையும், திரை உலகம் சார்ந்த ஆழ்ந்த அறிவையும் எப்படி வளர்த்து கொள்ளவேண்டும் என்று இனியாவது கற்றுக்கொள்ளுங்கள்.
..................................................................................
My other site: nanbendaa.blogspot.com
.................................................................................
23 comments:
பல்சுவை விருந்து நடத்துங்க நடத்துங்க மக்கா...
நான் எத்தனாவது.?
Excellent piece. My all time favourite,s humility and wisdom is giving me goose pimples. as you rightly said, in today's world, barring Rajnikanth to a certain extent no body bothers about etiquette. I like it.
ஒரு மலையோரம் பாடல் செம செம...
ரொஞ்ஜன் சோதி தெரியும்.. ஆனா அவரு வெள்ளி வாங்கினது தெரியாது.. வாழ்த்துவோம்.. சுட்டு சுட்டாச்சும் ஏதாச்சும் எடுத்துட்டு வாராங்களான்னு பாப்போம்..
@நாஞ்சில் மனோ
>>> நன்றி தலைவா.
//தம்பி கூர்மதியன் said...
நான் எத்தனாவது.?//
உங்களுக்கு வெள்ளிப்பதக்கம், கூர்!
@Shankar
Thanks a lot shankar sir, for your valuable feedback. Will strive to give the best.
Very Good!தாமரை நெஞ்சம்.. நிறைய நல்ல விஷயங்கள் குஜராத்தில் நடக்கிறது. அடுத்த பிரதம மந்திரிக்கு சரியான ஆள் மோடி. ;-))
//தம்பி கூர்மதியன் said...
சுட்டு சுட்டாச்சும் ஏதாச்சும் எடுத்துட்டு வாராங்களான்னு பாப்போம்..//
வெற்றி நமதே.
சிவாஜி பேட்டி அருமை..நச்னு சொன்னீங்க சிவா!
//RVS said...
அடுத்த பிரதம மந்திரிக்கு சரியான ஆள் மோடி.//
வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.வருகைக்கு நன்றி ஆர்.வி.எஸ்!
//செங்கோவி said...
சிவாஜி பேட்டி அருமை..நச்னு சொன்னீங்க சிவா!//
நடிகர் திலகத்தின் அழகான பேட்டி. கருத்துக்கு நன்றி செங்கோவி.
முதல் முறை அந்த பெட்டியை கேட்க்கிறேன். தகவலுக்கு நன்றி
அமீர் எதுக்கு இதெல்லாம் பேசுறாருன்னு அன்பழகனுக்கே வெளிச்சம்..
அப்புறம் மோடிய பாராட்டுனதாலே இஸ்லாமிய நண்பர்கள் கொதிச்சு எழ வாய்ப்பு இருக்கு!
அவன் இவன் எவனோ ஒருவனா? ஆகாம இருந்தா சரிதான்...
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி கந்தசாமி.
//கே.ஆர்.பி.செந்தில்
மோடிய பாராட்டுனதாலே இஸ்லாமிய நண்பர்கள் கொதிச்சு எழ வாய்ப்பு இருக்கு! //
ஐ.நா. பாராட்டியதை பதிவிட்டுள்ளேன். அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்த தவறுகள் மன்னிக்க முடியாதது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அங்கு நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது என்பது நிதர்சனம். என்றும் நடுநிலையுடனே இருக்கும் எனது எழுத்துகள். எனக்கு மதம், ஜாதி மாதிரி குறுகிய வட்டத்தில் ஒரு பக்கம் பேசுவது என்றுமே பிடிக்காது அண்ணே. இறைவன் ஒருவனே!
//கே.ஆர்.பி.செந்தில் said...
அமீர் எதுக்கு இதெல்லாம் பேசுறாருன்னு அன்பழகனுக்கே வெளிச்சம்..//
அமீர் மற்றும் சசி இருவரும் அப்படித்தான். பரபரப்பாக பேசுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
நைஸ் மீல்ஸ் சிவா ,அந்த தண்ணில ரொம்ப நேரம் வெளையாடினேன்,அப்பறம் நடிகர் திலகம் சிவாஜி பேட்டிக்கு நன்றி ,
ஸ்பெசல் மீல்ஸ் சூப்பர் சிவா? நிறைய தகவல்கள் அருமை
இன்றைய பதிவும் ரசிக்கும் படி இருந்தது..
வாழ்த்துக்கள்..
மீல்ஸ் ஓகே
வாங்க கொஞ்ச நேரம் தண்ணில விளையாடலாம்.......................
////////////////////////////////
வெறும் தண்ணி தானா பாஸ் ..?
தண்ணி அடிச்ச மணிக்கு நன்றி!
Post a Comment