CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, April 13, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(13/04/11)
ரத்தக்கண்ணீர்:
ரட்சகன்:...........................................
      
ஆண் பாவம்:           

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சவ ஊர்வலத்தை கண்ட பிலிப் தன் காரை விட்டு இறங்கினான். இரண்டு சவப்பெட்டிகள் செல்கின்றனவே. பாவம் உறவினரை பறிகொடுத்த நபருக்கு  ஆறுதல் சொல்வோம் என்று கூட்டத்தை கடந்து சாமின் அருகே சென்று அவன் தோள் மீது கை வைத்து "சாம், இரண்டு உயிரை இழந்த சோகம் புரிகிறது. மனதை தேற்றிக்கொள். அவர்கள் உனக்கு என்ன உறவு?" என கேட்கிறான். அதற்கு சாம் "ஒன்று என் மனைவி. மற்றவர் எனது மாமியார்" என்று சொல்கிறான். உரையாடல் தொடர்கிறது..

"உன் மனைவி எப்படி இறந்தாள்"              

"என்னை கொஞ்ச வந்த செல்ல நாயை திட்டினாள். அது கோபத்தில் கடித்து குதறியதால் இறந்து போனாள்"

"அய்யகோ. என்ன கொடுமை. உங்கள் மாமியார் எப்படி இறந்தார்"

"எனக்கு ஏன் சோறு போடவில்லை என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் டி.வி. பார்த்தாள். கோபத்தில் என் நாய் அவளையும் கொன்றுவிட்டது"

"சாம். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா"

"என்ன"

"எத்தனை லட்சம் ஆனாலும் பரவாயில்லை. உன் நாயை எனக்கு விற்று விட முடியுமா? "

"அதை ஏலத்தில் எடுக்கத்தான் இத்தனை ஆயிரம் பேர் வரிசையில் வந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து நீயும் வரிசையில் வா".
................................................................................

வெற்றிக்கொடி கட்டு: 

(மெயிலில் வந்த படம்) 


                                                            
.......................................................
                       
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். 

(இதுல எந்த அரசியலும் இல்லீங்கோ)"அக்கா, தமிழ் ரொம்ப சீரியஸா இருக்கானே. பொழச்சிக்குவானா?"

"இன்னைக்கு குளுக்கோஸ் ஏத்த போறாங்க. அடுத்த மாசம்தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்றாங்க"

"நல்ல டாக்டர்தானா? "

"இந்த ஊர்ல இருக்குற ஒரே டாக்டர். வேற வழி இல்ல. ஓ.சி.ல மாத்திரை குடுத்துட்டு ரூம் வாடகை மட்டும் 1000 ரூபா டெய்லி புடுங்கிக்கறாரு. இந்த நர்சக்காவை நினைச்சாலும் பயமாத்தான் இருக்கு. ரொம்ப கோவமா பேசுது. இங்க ஒரே நர்சுதான். என் மவன் தமிழை பாத்துக்க அதை விட்டா ஆளு இல்லை."

"வாசல்ல உன் பேராண்டி பம்பரம் உட்டு வெளையாடிட்டு இருக்கான். ஏண்டா உங்க அப்பனை பாக்க மாட்டேங்குறன்னு கேட்டேன். நர்சக்கா பிஸ்கட் தரேன்னு சொல்லி சொல்லி ஏமாத்திடுச்சாம். அதான் உள்ள கால் வைக்க மாட்டேன்னு அழுவறான். வர்ற நோயாளிங்க காதுல 'இந்த நர்சக்கா சரியில்ல. நீங்க இங்க இருந்தா பொழைக்குறது சந்தேகம். எதுவா இருந்தாலும் டாக்டர் கிட்டயே சொல்லுங்கன்னு' அப்டின்னு சொல்லிட்டு திரியறான்"

"அடப்பாவி. ஆமா நீ எங்க இந்த பக்கம்"

"நர்ஸோட தம்பி தவசி எனக்கு உறவு முறை. அடிக்கடி வாய்ல கோளாறு வருதுன்னு இங்க சேத்துருக்கேன்"

"அவனா... போன வாரம் கூட கூகிள் பஸ்சுல டிக்கட் எப்ப குடுப்பீங்கன்னு ஓனர் கிட்ட நாக்கை கடிச்சி தகராறு பண்ணான். அப்பவே நெனச்சேன்"

"அவன பாத்தா நர்சே நடுங்குது. பேருக்குதான் அக்கா தம்பி. ஆனா வீட்ல கூட பேசிக்க மாட்டாங்க. எதுனா பேசணும்னா ரோட்டுல போறவங்கள உள்ள கூப்புட்டு 'இதை அக்கா கிட்ட சொல்லிடுங்க', இதை தம்பி கிட்ட சொல்லிடுங்க' அப்டின்னு தொந்தரவு செய்வாங்க. தம்பி கிட்ட அக்கா மாட்டிக்கிட்டாளா இல்ல அவ கிட்ட இவன் மாட்டிக்கிட்டானா அப்டிங்கறது இன்னைக்கி முடிவு ஆயிடும். பாப்போம். நம்ம தமிழ் ஒடம்பு சரியாகி வீட்டுக்கு வந்தா சரி"

"அதுதான் முக்கியம். ஆபரேசன் சக்சஸ். பேசன்ட் அவுட்டுன்னு அடிக்கடி இந்த ஆஸ்பத்திரில சத்தம் கேக்குது. அதை நினைச்சாத்தான் பயமா இருக்கு"
...........................................................................

காசேதான் கடவுளடா: 


(இன்னைக்குன்னு பாத்து இந்த பாட்டை அடிக்கடி கேக்கனும்னு தோணுது)


தேச ஞானம் கல்வி எல்லாம் காசு முன் செல்லாதடி. குதம்பாய் காசு முன் செல்லாதடி.

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே. குதம்பாய் காசுக்கு பின்னாலே. காட்சி ஆன பணம் கைவிட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடி.
குதம்பாய் சாட்சி கோர்ட் ஏறாதடி. பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி. குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது. குதம்பாய் நாடு மதிக்காது. கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே. குதம்பாய் வெள்ளி பணமடியே.

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே. காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே. உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே. காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே. 

முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே.

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே....பிணத்தை கட்டி அழும்போதும்
தாண்டவக்கோனே..பணப்பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே.
........................................................

பொற்காலம்:  

ராஜ்ய சபா, மந்திரி சபை கூட்டம், ராஜினாமா நாடகம், மொழிப்பிரச்சனை என இக்காலத்திற்கும் பொருந்தும் அரசியலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்து தொங்கவிட்ட சோ வின் முகம்மது பின் துக்ளக் படத்தில் இருந்து சில காட்சிகள்:
.................................................

சமீபத்தில் எழுதியது:  

படிக்க கீழுள்ள லிங்கை அழுத்தவும்:


.................................................

My other site: nanbendaa.blogspot.com
..................................................

          
                                          

14 comments:

Chitra said...

பொற்காலம் காணொளி ...... முதன் முறை பார்க்கிறேன். செம! சான்சே இல்லை!

MANO நாஞ்சில் மனோ said...

சிரிச்சி முடியல....

MANO நாஞ்சில் மனோ said...

//"அதுதான் முக்கியம். ஆபரேசன் சக்சஸ். பேசன்ட் அவுட்டுன்னு அடிக்கடி இந்த ஆஸ்பத்திரில சத்தம் கேக்குது. அதை நினைச்சாத்தான் பயமா இருக்கு"//

இப்பிடி வேறே ஆரம்பிச்சாச்சா....

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

அஞ்சா சிங்கம் said...

சூப்பர் அருமையான படம் முகமது பின் துக்ளக்

செங்கோவி said...

வசூல்ராஜா கலக்கல் சிவா!..

shortfilmindia.com said...

முகமது பின் துக்ளக்.. எந்த காலத்திலுல்ம் செட் ஆகும் சிவா..

கேபிள் சங்கர்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கல் பதிவு..
வாழ்த்துக்கள்..

! சிவகுமார் ! said...

@சித்ரா

வருகைக்கு நன்றி சகோதரி சித்ரா.

! சிவகுமார் ! said...

@நாஞ்சில் மனோ

//இப்பிடி வேறே ஆரம்பிச்சாச்சா..//

ஏதோ நம்மால முடிஞ்சது தல.

! சிவகுமார் ! said...

@கருன்
@செல்வின்
@செங்கோவி
@சௌந்தர்

பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே.

! சிவகுமார் ! said...

//shortfilmindia.com said...
முகமது பின் துக்ளக்.. எந்த காலத்திலுல்ம் செட் ஆகும் சிவா.//

கேபிள் சங்கர்//

ஆமாம் சார். முதன் முறை பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

Unknown said...

அருமை சிவா, வசூல் ராஜா புரிஞ்ச மாதிர்யும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு, நான் போன் பண்ணியே கேட்டுக்கிறேன்

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...

வசூல் ராஜா புரிஞ்ச புரியாத மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு//

நல்ல வேலை தப்பிச்சேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...