CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, April 5, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் - (05/04/11)

பாட்டி சொல்லை தட்டாதே: 

பல வருடங்களுக்கு முன் (1981) வெளியான 'இன்று போய் நாளை வா' இன்றும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நம்ம ஆளு கே.பாக்யராஜ். பாய்ஸ், சென்னை - 28 போன்ற யூத் வரிசை படங்களுக்கு எல்லாம் முன்னோடியான இப்படத்தின் கலக்கல் காட்சியை காண கீழ் உள்ள லிங்க்கை அழுத்தவும்:  

http://youtu.be/iH7_PIAkhCM

.........................................................


இரு வல்லவர்கள்:                            சனிக்கிழமை வென்ற மியாமி மாஸ்டர்ஸ் கோப்பையுடன் 


இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்ற அதே நாளில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர்.1 இடத்தை பிடித்து சாதனை படைத்தனர் லியாண்டரும் மகேசும்.  இந்த நொடிவரை கிரிக்கெட் வெற்றியை மட்டுமே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு இருக்கின்றன செய்தி சேனல்கள். இந்த இருவரை  பற்றி அதிகபட்சம் நாம் பார்த்தது ஒரு சில நொடி கிளிப்பிங் அல்லது ஒரு வரி செய்தி. பத்து பதினைந்து நாடுகள் மட்டுமே பார்க்கும் கிரிக்கெட்டுக்கு நாலு நாள் கவரேஜ். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆடும் மிகவும்  பிரபலமான டென்னிஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்த நம் மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு சில நொடிகள் மட்டுமே செய்தி ஒதுக்கும் தாராள பண்பு கொண்ட இவர்கள் இனி தயவு செய்து தங்களை தேசிய செய்தி சேனல்கள் என்று சொல்லிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் விளையாட்டை ரசிக்கும் ஒவ்வொரு மனிதரும் இந்தியர் ஒருவர் உலக விளையாட்டு அரங்கில் சாதனை செய்தால் அதை பாராட்டும் மனம் கொண்டவர்களே. ஆனால் அமெரிக்காவில் நடந்த மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி டென் ஸ்போர்ட்சில் நள்ளிரவு ஒளிபரப்பானது. அதை பார்க்கும் வாய்ப்பு பலருக்கு சாத்தியமில்லை. இறுதி ஆட்டத்தில் டேனியல் நெஸ்டர் மற்றும் மாக்ஸ் மிரின்யி (இருவரும் அசகாய சூரர்கள்) ஜோடியை 6-7, 6-2, 10-5 எனும் செட் கணக்கில் கடுமையாக போராடி வென்றனர் பெயஸும், பூபதியும். இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த ப்ரியன் சகோதரர்களை பின்னுக்கு தள்ளி இன்று உலக நம்பர். 1 ஜோடியாகி உள்ளனர் நம் வீரர்கள்.  

டேவிஸ் கோப்பை மட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஒரு பைசா கூட பரிசு கிடைக்காது. அதனால் பல உலகின் முன்னணி வீரர்கள் இவற்றில் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தேசத்திற்காக ஆட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பல ஆண்டு காலம் இப்போட்டிகளில் ஆடி சாதனை செய்துள்ளார் பெயஸ். இதன் மூலம் அவர் இழந்தது பல கோடி ரூபாய். மகேசும் அவ்வாறே. இடையில் பல ஆண்டு காலம் பெயஸுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, டேவிஸ் கோப்பை போட்டிகளில் அவருடன் சேர்ந்து ஆடாமல் இருந்ததில்லை. 

இன்று இவர்கள் மீண்டும் சேர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். அடுத்த வருடம் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இருவருக்கும் வாழ்த்துகள்!!
.....................................................

நாளைய செய்தி:  

கிரிக்கெட் உலகக்கோப்பை முடியும் வரை காத்திருந்த தமிழ் படங்கள் இனி பொறுப்பதில்லை என ரிலீசுக்கு தயார் ஆகி விட்டன. ஐ.பி.எல். பற்றி எந்த பயமும் இன்றி. ஆனால் உலகக்கோப்பை வென்றதன் மூலம் ஐ.பி.எல். மேலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி இருப்பதால் படங்களின் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. 

வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்:

ஏப்ரல் - 8   ---  மாப்பிள்ளை.  தனுஷ், ஹன்சிகா.  

ஏப்ரல் - 15 ---  கோ. ஜீவா, கார்த்திகா.  
                        பொன்னர் சங்கர் - பிரசாந்த்+பிரசாந்த் (அவ்வ்வ்வ்!)

ஏப்ரல் - 22 ---  அழகர்சாமியின் குதிரை. அப்புக்குட்டி, சரண்யா. 

ஏப்ரல் - 29 ---  எங்கேயும் காதல். ஜெயம் ரவி, ஹன்சிகா.

மே - 6        ---   வானம்.  சிம்பு, பரத், அனுஷ்கா ((அவ்வ்வ்வ்!)

மே - 13      ---   180.  சித்தார்த், மௌலி.

மே - 20      ---   அவன் இவன். ஆர்யா, விஷால்.

மே - 27      ---   தெய்வத்திருமகன். விக்ரம், அமலா பால், அனுஷ்கா, சந்தானம்.  


                                                                     
                                                       
விக்ரம்..?? நம்ப முடியவில்லை.  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..
.........................................................

சொல்ல மறந்த கதை:  

இப்பகுதியை வழங்குவோர்:  மெமரி பிளஸ்...


* கேப்டன் எத்தனை ரவுண்ட் தண்ணி அடித்தார் என்று கணக்கு சொல்லும் கைப்புள்ள ஒரு எடத்துல கூட டாஸ்மாக் பத்தி வாய தொறக்கலியே??

* இதுவரை நடந்த பிரச்சாரத்துல ஒரு வாட்டி கூட கேப்டன் வாய் திறந்து "ஜெயலலிதா" என்றோ அம்மா வாயால "விஜயகாந்த்" என்றோ சொல்லவே இல்லியே. நண்பேன்டா. நண்பேன்டா!! 

* ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கொடுக்கும் பில்ட் அப்பை விட விஜய் பிரசாரத்துக்கு வருவாரா என்ற பில்ட் அப் ரொம்ப ஓவராத்தான் இருக்கு. 
ஹல்லோ பாஸ்..மறந்துட்டீங்களா..? வீ ஆர் வைட்டிங். 

* பா.ஜ.க. எத்தனை தொகுதில நிக்கறாங்க? எங்க பிரச்சாரம் பண்றாங்க? ஒரு பயபுள்ளையும் செய்தி போட மாட்றானுங்க. "நான் நிக்கறேன். நிக்கறேன்".
..................................................... 

நீதிக்கு தண்டனை:

"டேய் தம்பி.. இங்க வா"

"என்ன சார்"

"பாக்கெட்ல எவ்ளோ பணம் வச்சிருக்கே"

"ஒரு ரூபா"

"பாத்தா ப்ரீ கே. ஜி. பையனாட்டம் இருக்க. உன் கைல ஏதுடா இம்புட்டு பணம்"

"பல்லி முட்டாய் வாங்க சித்தப்பா குடுத்தது சார்"

"நம்ப மாட்டேன். மரியாதையா சொல்லு. இந்த ஒரு ரூபாவை சில்லறை மாத்தி உங்க ஸ்கூல் பசங்க எல்லாருக்கும் குடுக்க போறன்னு எனக்கு தெரியும்"

"சத்தியமா இல்ல சார்"

"டேய்..யார ஏமாத்தற. நாளைக்கி உங்க கிளாஸ்ல லீடர் போஸ்டுக்கு தேர்தல் நடக்குதுன்னு நேத்தே எனக்கு தெரியும்"

ஓட்டம் எடுக்கிறான் பையன்.  "டேய் நில்லுடா. ஓடாத. விட மாட்டேன்"

...........................................................

மாவீரன்:  (sms) 

பாகிஸ்தான் தீவிரவாதிகிட்ட கேப்டன் செம டுப்பாக்கி சண்ட போட்டுக்கிட்டு இருக்காரு. கேப்டன் அவனை சுட துப்பாக்கிய அழுத்தறாரு..ஆனா தர்மத்துக்கு அந்த நேரம் பார்த்து ஒரு சோதனை. புல்லட் எல்லாம் தீந்து போச்சி. ஆனாலும் கேப்டன் அசரல. தில்லா எதிரிய நோக்கி நடந்து போறாரு. அவன் காது கிட்ட போயி ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்றாரு. அடுத்த செகண்ட் அவன் துடி துடிச்சி செத்துட்டான். 

என்ன சொன்னார் கேப்டன்???
.
.
.
.
.
.
.
.
.
.
.

"டுமீல்".

                                                                  ***********
........................................................

My other site: nanbendaa.blogspot.com
.........................................................

சமீபத்தில் எழுதியது.... 

.........................................................                                                                                                 

14 comments:

Unknown said...

ஹா ஹா ஹா செமயா இருக்கு சிவா, எப்படித்தான் இத்தனை மேட்டர் புடிக்கறீங்களோ, கலக்கல், அந்த ஏக் காவ் மே மறக்க்க முடியுமா? சூப்பர்

Speed Master said...

வடை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன சொன்னார் கேப்டன்???
"டுமீல்".//

நான் கூட விருத்தகிரி சூப்பர் ஹிட்டுன்னு சொன்னாரோன்னு நினைச்சேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாளைய செய்தி:
கிரிக்கெட் உலகக்கோப்பை முடியும் வரை காத்திருந்த தமிழ் படங்கள் இனி பொறுப்பதில்லை என ரிலீசுக்கு தயார் ஆகி விட்டன. ஐ.பி.எல். பற்றி எந்த பயமும் இன்றி. ஆனால் உலகக்கோப்பை வென்றதன் மூலம் ஐ.பி.எல். மேலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி இருப்பதால் படங்களின் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.
வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்:
ஏப்ரல் - 8 --- மாப்பிள்ளை. தனுஷ், ஹன்சிகா. //

தேவையான செய்தி. வாழ்க வளமுடன்

ரஹீம் கஸ்ஸாலி said...

kalakkal meals

Chitra said...

கலக்கல் தொகுப்பு!

செங்கோவி said...

நீதிக்குத் தண்டனை சூப்பர் சிவா!

RVS said...

அந்தக் கடைசி "டூமீல்"... படிச்சதுக்கே செத்துட்டேன்...
டென்னிஸ் ஒரு நல்ல விளையாட்டு. தனிமனித திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு. என் மருமான் அதில் சாம்பியன்.
நல்லா இருக்கு சிவா! ;-))

! சிவகுமார் ! said...

@இரவுவானம்

கருத்துக்கு நன்றி சுரேஷ்!

@ரமேஷ்

//நான் கூட விருத்தகிரி சூப்பர் ஹிட்டுன்னு சொன்னாரோன்னு நினைச்சேன்//

அதை கேட்டா பாகிஸ்தானே காலி ஆகி இருக்கும்.

@ரஹீம்
@சித்ரா
@செங்கோவி

அனைவருக்கும் நன்றி.

@ஆர்.வி.எஸ்.
தங்கள் வீட்டில் ஒரு டென்னிஸ் சாம்பியன் இருப்பது மிக்க மகிழ்ச்சி!!

! சிவகுமார் ! said...

@ ஸ்பீட் மாஸ்டர்

கொஞ்சம் லேட்டா வந்ததால் உங்களுக்கு மெது வடை பார்சல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல் தொகுப்பு பாஸ்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////! சிவகுமார் ! said...
@ ஸ்பீட் மாஸ்டர்

கொஞ்சம் லேட்டா வந்ததால் உங்களுக்கு மெது வடை பார்சல். /////////

7-ம் தேதிக்கே இந்த நெலமன்னா நமக்கு என்னான்னு தெரியலியே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன சொன்னார் கேப்டன்???
"டுமீல்".//

நான் கூட விருத்தகிரி சூப்பர் ஹிட்டுன்னு சொன்னாரோன்னு நினைச்சேன்
/////////

இருந்தாலும் இவ்வளவு பேராசை உடம்புக்கு ஆகாது தம்பி..........!

! சிவகுமார் ! said...

/////////பன்னிக்குட்டி ராம்சாமி said...
கலக்கல் தொகுப்பு பாஸ்.........!//

நன்றி நண்பரே!

......................
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


நான் கூட விருத்தகிரி சூப்பர் ஹிட்டுன்னு சொன்னாரோன்னு நினைச்சேன்
//

இருந்தாலும் இவ்வளவு பேராசை உடம்புக்கு ஆகாது தம்பி.//////////////////

அப்பா விருதகிரி ஹிட் இல்லையா???

Related Posts Plugin for WordPress, Blogger...