CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 20, 2011

முத்துக்கு முத்தாக

                                                                      
                
இளவரசு...இந்த அற்புதமான நடிகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற ஒரே காரணம்தான் என்னை 'முத்துக்கு முத்தாக' படத்தை பார்க்கத்தூண்டியது. வெற்றிக்கொடி கட்டு, தம்பி, இம்சை அரசன், சென்னை - 28 மற்றும் பல தமிழ் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்த இவர் நேற்று வெளியான முத்துக்கு முத்தாக படத்தில் 5 பிள்ளைகளின் தந்தையாக தன்னால் முடிந்தவரை இயல்பாக நடித்திருந்தார். ஆனால் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மணிவண்ணனுக்கு நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு இப்படத்தில் இளவரசுக்கு பெருமளவு கிடைக்காதது வருத்தமே. சரண்யா எனும் சிறந்த நடிகையை இன்னும் எத்தனை நாள்தான் அடுப்பு ஓடுவது, அழுது வடிவது போன்ற ஸ்டீரியோடைப் ரோலில் தொடர்ந்து நடிக்க வைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனியும் சரண்யாவை இதே போன்று நடிக்க வைத்தால் சலிப்பு தட்டிவிடும் என்பதே உண்மை. 


மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ரீப்ளே மாதிரி உள்ளது இப்படம். 5 ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை மணம் செய்து வைத்தபின் மருமகள்களால் படும் துயரமே கதை. இயக்குனரின் ஆஸ்தான நடிகர்களான ராஜ்கபூர், சிங்கப்புலி, விக்ராந்த்  உள்ளிட்ட பலரும் 'உள்ளேன் ஐயா'. இதுபோக வையாபுரி, சிசர் மனோகர் மற்றும் பலர். மயில்சாமி ஆப்சன்ட். அவர் படத்தில் இருந்திருந்தலாவது ஓரளவு நகைச்சுவை இருந்திருக்கும். சற்று அழுத்தமான சப்ஜெக்டில் நகைச்சுவை காட்சிகள்தான் பெரும்பாலும் வலி நிவாரணியாக இருக்கும். ஆனால் இதில் தலைகீழ். சிங்கப்புலி அண்ட் கோ மொக்கை போட்டு தள்ளுகிறார்கள். கெட் அப்பை சிங்கப்புலி  படத்துக்கு படம் மாற்றினாலும் வசன உச்சரிப்பு மட்டும் மாறவே இல்லை. 'திண்டுக்கல், சின்னாளப்பட்டி' என்று அடிக்கடி கூவி அறுக்கிறார். ரூட்ட மாத்துங்க பாஸ். ஐந்து ஆண் பிள்ளைகளும் அடிக்கடி அழ முயற்சி செய்கின்றனர்...நடிப்பு வரவில்லை. மாயாண்டி குடும்பத்தாரில் கதாபாத்திர தேர்வை கச்சிதமாக செய்த இயக்குனர் இப்படத்தில் (வெற்றிக்)கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது. 

                                                  
                                                      இயக்குனர் இராசுமதுரவன்


உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தாக்கம் சினிமாவின் வசூலை பாதிக்கும் என்பதற்கு அரங்கில் இருந்த கூட்டமே சாட்சி. 25% மட்டும் நிரம்பி இருந்தது. மல்டிப்ளக்ஸில் இப்படம் வெற்றி பெறுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. 'என்னாங்கிற' எனும்  பாடலில் ஆண்கள் அனைவரும் வேட்டியை தோளில் போட்டுக்கொண்டு டிரவுசருடன் ஆடும் ஆட்டம்...ஹய்யோ ஹய்யோ. நாயகிகள் மோனிகா ஒரு சில காட்சிகளில் சிரித்துவிட்டு கடைசி காட்சியில் மனது நெகிழ ஒரு வசனம் பேசிவிட்டு செல்கிறார். களவாணி ஓவியா மனதை திருடவில்லை.  சில க்ளோஸ் அப் ஷாட்களில் நம்மை பயமுறுத்துகிறார். மா.குடும்பத்தாரில் பெண்கள் அனைவரும் நடிப்புத்திறனை நன்றாக வெளிப்படுத்தி இருந்தனர். இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எவரும் இல்லை. முதல் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெளிவாக இல்லை. இரண்டாம் பாதிதான்  படத்தை கரையேற்றி உள்ளது. 


நட்ராஜ் தன் பெற்றோருக்கு பேருந்து நிலையத்தில் இட்லி வாங்கி தந்து விட்டு பேசும் இடம் மனதை நெகிழ வைக்கிறது. கவி பெரியதம்பி பின்னணி இசை என்ற ஒன்றை மறந்து விட்டாரோ?. ஒளிப்பதிவில் அப்படியே மா. குடும்பத்தார் படத்தின் சாயல். அடிக்கடி படத்தில் கறிச்சோறு தலை காட்டிக்கொண்டே இருக்கிறது. குடும்பப்படம் என்றால் அதில் ஒரு மினி மாநாடு நடக்கும் அளவிற்கு ஆட்கள் இருந்தே தீர வேண்டும் எனும் மூட நம்பிக்கையை இனி வரும் காலத்தில் இயக்குனர்கள் கை விட்டால் தேவலை. பப்பே சாப்பாட்டில் அனைத்து உணவுகளையும் ஓரளவு ருசி பார்த்துவிட்டு எதையும் முழுதாக சாப்பிட்ட திருப்தி இல்லாமல் போவது போல், பல கதாபாத்திரங்கள் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங்குமாக இருக்கின்றன. இயக்குனர் இராசுமதுரவன் விரைவில் சிட்டி சப்ஜெக்டிற்கு ஒரு டிக்கட் எடுக்க வேண்டும். ரொம்ப நாட்களாக கிராமத்து பஸ்ஸில் பயணம் செய்து வருகிறார். 

மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்கும் படமாகவோ முத்துக்கு முத்தாக இல்லாவிடினும் தரத்தில் தாழ்ந்து போகவில்லை என்பது உண்மை. ஆனால் விறுவிறுப்பு இல்லாதது பெரிய குறையாக இருந்தது. உலகக்கோப்பை சுனாமியில் இப்படம் தாக்குப்பிடிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


முத்துக்கு முத்தாக - மெகா ஸ்க்ரீனில் ஒரு மெகா சீரியல். 

...............................


இவ்வாண்டு நான் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் முக்கியமான ஒன்று இயக்குனர் சுசீந்தரனின் அழகர்சாமியின் குதிரை.  நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் இயக்குனராக செம உண்டைக்கட்டி வாங்கிய கௌதம், இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பெருமைப்பட்டு கொள்ள ஒரு வாய்ப்பு. சமீபத்தில் இப்படத்தை பற்றி இளையராஜா சொன்னது "இப்படத்தில் நான் இசை அமைத்த ஏதேனும் ஒரு இடத்தில் கூட உங்களுக்கு கண்ணீர் வரவில்லை என்றால்..இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்".                                                                      
கதாநாயகனாக களம் இறங்கும் 'வெண்ணிலா கபடி குழு' அப்புக்குட்டிக்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றே தெரிகிறது. காத்திருப்போம்.                                                                 

....................

My other site: nanbendaa.blogspot.com


25 comments:

செங்கோவி said...

வடை!

செங்கோவி said...

சிங்கம்புலி காமெடியில் ஃபிட்னெஸ் இருப்பதில்லை..பழைய வடிவேலு காமெடி போல் உள்ளது..தனி விமர்சனமாகவே போட்டிருக்கலாமே சிவா!

pichaikaaran said...

ரொம்ப நாளா ஏன் எழுதல? பிசியா?

Philosophy Prabhakaran said...

கோரிப்பாளையம் படத்தை பார்த்து அடிச்ச போதைஎல்லாம் இறங்குச்சே... அன்னைக்கே இனி ராசு.மதுரவன் படமெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்...

லத்திகா போகலாம்ன்னு நினைச்சேன்... ராத்திரி தியேட்டர்ல யாரும் இல்லாம பயமா இருந்துச்சு... திரும்ப வந்துட்டேன்...

அஞ்சா சிங்கம் said...

வர வர டி.வீ.சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுவீங்க போல இருக்கே ........
சிவா பார்த்து சூப்பர் மூன் வந்திருக்கு நிறையபேருக்கு பயித்தியம் பிடிக்கலாம் என்று விஞ்சானிகள் சொல்லிருக்காங்க ............

Unknown said...

அருமையாக விமர்சனம் செய்திருக்கீங்க சிவகுமார்..

பெரிய அழுவாச்சி படமா இருக்குமோ.. நான் பார்க்கற ஐடியா இல்ல.. :-)

டக்கால்டி said...

வந்தேன் வாசித்தேன்...
படம் பற்றிய உங்கள் பார்வையை நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...

டக்கால்டி said...

நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம் ரெண்டு வருஷமா ரிலீஸ் ஆகாமலே இருக்கு...
என்ன படமா?

புதிய சூப்பர் ஸ்டார் பிரதாப் நடித்த "கிண்டி". கூகிளில் தேடி தகவலை பெற்றுக் கொள்ளவும்...

RVS said...

//முத்துக்கு முத்தாக - மெகா ஸ்க்ரீனில் ஒரு மெகா சீரியல். //
ஓ.ஹோ.. ;-))

Unknown said...

விமர்சனம் அருமை

தீபிகா said...

அழகர்சாமியின் குதிரை நானும் எதிர்பார்க்கிறேன்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எனக்கு 'இளவரசு' 'மணிவண்ணன்' நடிப்பு பிடிக்கும்.
வாழ்த்துக்கள் சிவகுமார்.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
சிங்கம்புலி காமெடியில் ஃபிட்னெஸ் இருப்பதில்லை..பழைய வடிவேலு காமெடி போல் உள்ளது..தனி விமர்சனமாகவே போட்டிருக்கலாமே சிவா!//

அந்தளவிற்கு படம் ஈர்க்காததே காரணம். விகடனில் குடுத்த மதிப்பெண் 39.

! சிவகுமார் ! said...

பார்வையாளன் said...
ரொம்ப நாளா ஏன் எழுதல? பிசியா?//

ஆமாம் சார்.

! சிவகுமார் ! said...

Philosophy Prabhakaran said.

லத்திகா போகலாம்ன்னு நினைச்சேன்... ராத்திரி தியேட்டர்ல யாரும் இல்லாம பயமா இருந்துச்சு... திரும்ப வந்துட்டேன்...//

தியேட்டர் புல்லா இருந்தாலும் உங்கள பயமுறுத்தாம இருப்பாரா பவர் ஸ்டார்?

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
வர வர டி.வீ.சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுவீங்க போல இருக்கே//

மெகா சீரியலுக்கும் நம்மளுக்கும் ஆகவே ஆகாது.

! சிவகுமார் ! said...

பதிவுலகில் பாபு said.
பெரிய அழுவாச்சி படமா இருக்குமோ.. நான் பார்க்கற ஐடியா இல்ல.//


அழுகை காட்சிகளில் நடித்தவர்கள் சரியாக செய்யவில்லை என்பது உண்மை.

! சிவகுமார் ! said...

டக்கால்டி said...

புதிய சூப்பர் ஸ்டார் பிரதாப் நடித்த "கிண்டி". கூகிளில் தேடி தகவலை பெற்றுக் கொள்ளவும்..//


ஆஹா.. கண்டிப்பா பாக்கணும்!

! சிவகுமார் ! said...

RVS,விக்கி, தீபிகா, ரத்னவேல் அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குடும்ப படம் என்றாலே இப்படித்தான் போல, இந்த மாதிரி ஸ்டீரியோடைப் படங்கள் ரொம்பவே எரிச்சல் படுத்துகின்றன. பாவம் இளவரசு, அற்புதமான நடிகர்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அழகர்சாமியின் குதிரை பற்றிய இளையராஜாவின் கமெண்ட் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகப்படுத்தி விட்டது. நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நண்பா, கொஞ்ச நாளா எழுதுறதும் குறைஞ்சுடுச்சு, சீரியசும் ஆகிட்டீங்க?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
குடும்ப படம் என்றாலே இப்படித்தான் போல, இந்த மாதிரி ஸ்டீரியோடைப் படங்கள் ரொம்பவே எரிச்சல் படுத்துகின்றன. பாவம் இளவரசு, அற்புதமான நடிகர்....!//

நல்ல வாய்ப்பு..இளவரசு அவர்களுக்கு மேலும் சில நல்ல காட்சிகளை தந்து இருக்கலாம்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அழகர்சாமியின் குதிரை பற்றிய இளையராஜாவின் கமெண்ட் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகப்படுத்தி விட்டது. நன்றி!//

இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். சந்தேகமே இல்லை.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன நண்பா, கொஞ்ச நாளா எழுதுறதும் குறைஞ்சுடுச்சு, சீரியசும் ஆகிட்டீங்க?//

பணி நெருக்கடி, வெளியே செல்லும் வேலைகள். டைட்டா இருக்கு. தமிழ்நாடு இந்த கதிக்கு ஆளான கடுப்புதான்..சீரியஸ் ஆக்கி இருக்கு. உங்க ஊருக்கு(வெளிநாடு) ஓடி வந்துரலாம்னு தோணுது..

Related Posts Plugin for WordPress, Blogger...