CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 13, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (13/03/11)
வெற்றிக்கொடி கட்டு:
குட்டி:...............................................

பயணம்:

மாநகரப்பேருந்து நிலையம்...பாரிமுனை செல்லும் குளிர்சாதனப்பேருந்து ஒன்றில் சிலர் மட்டும் இருந்தனர். வண்டி கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. என் பின் வரிசையில் இருந்த மூன்று வயதுப்பெண் குழந்தை தன் தாயிடம் கேள்வி ஒன்றை வைத்தாள் "அம்மா இந்த பஸ்சுல ஏ/சி ரொம்ப கம்மியா இருக்கு". அம்மா "கரெக்டா இருக்கு". அவள் விடவில்லை "இல்ல. அதிகமா வக்க சொல்லு" என்று நுகர்வோர் பிரதிநிதியாக கலக்கிக்கொண்டு இருந்தாள். பிறகு மழலைக்குரலில் விஜய்யின் பாடலை ரீமிக்ஸ் செய்தாள்.."வாடா மாப்புள்ள..வாழப்லா தோப்புல.வாளிப்லா ஆடலாம் வா". அதை ரசித்து கொண்டிருந்த வேளையில் நடந்தது ஒரு சம்பவம்...

நடுத்தர வயதுடைய தம்பதியர் சற்று முன்னே அமர்ந்திருந்தனர். நாவறட்சி காரணமாக தன் கணவரிடம் தண்ணீர் பிடித்து வருமாறு பாட்டிலை நீட்டினார் மனைவி. அதற்கு அந்த பொறம்போக்கு சொன்ன பதில் "பாட்டில்ல எச்சி துப்பி தர்றேன். குடிக்கறியா. போன்ல பேசிட்டு இருக்கல்ல. நீ போய் தண்ணி புடிக்க மாட்டியா". இப்படி ஏசிவிட்டு தன் நண்பரிடம் போனில் இளித்துக்கொண்டு இருந்தான் ஈரவெங்காயம். அந்த பெண்மணியின் முகம் பலர் முன்னிலையில் நேர்ந்த அவமானத்தால் துவண்டு போனது.  தானே தண்ணீர் பிடிக்க சென்றார். இதை பார்த்த மற்றொரு பெண் தன்னிடம் இருந்த நீரை வழங்கினார். அதை பருகிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தார் அப்பெண்மணி.

இதே வார்த்தைகளை அந்தப்பெண் தன் கணவரிடம் பேசி இருந்தால் நம் சமூகம் அவருக்கு வைக்கும் பெயர் "கொழுப்பு எடுத்த பொம்பள", "இவ எல்லாம் பொம்பளையா?". நாகரீக உலகில் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள், வீட்டுக்கு அடங்காமல் நடக்கிறார்கள் என்பதும், ஊடகங்களில் இன்னும் மனைவி 'பூரிக்கட்டையால் கணவனை அடித்தாள்' என்பது போன்ற அலுத்துப்போன  ஜோக்கை போடுவதும் ரசிக்க நன்றாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில்  பெரும்பான்மையான பெண்கள் பொது இடங்களில் கூட எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. இந்த மாதிரி செய்யுற புருசனுங்கள எல்லாம் வாயில செருப்ப கவ்வ குடுத்து அடிக்கணும்!
............................................

ஆடுகளம்:


                                                           

உட்டா ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகமே நடத்துவாங்க போல இருக்கே. கிரிக்கெட்ட தவுற வேற விளையாட்டு எதுவுமே கண்ணுக்கு தெரியாதா? மத்த விளையாட்டுக்கும் மரியாத குடுங்கப்பா. ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள....... 
...................................................

  அந்தரங்கம்:


 "வேலு சார். உங்களை மேனேஜர் கூப்புடறாரு"

"கூப்டீங்களா சார்?"

"யெஸ். ப்ளீஸ் சிட் டவ்ன். உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? "

"புரியலையே சார்"

"நீங்க வேலைய  ராஜினாமா செஞ்சிட்டு அரசியல்ல சேரப்போறதா எல்லாரும் சொல்றாங்க. நிஜமா? "

"இல்லையே சார்"

"பொய் சொல்லாதீங்க. நேத்து கூட நீங்க உண்ணாவிரதம் இருந்தீங்க"

"அய்யய்யோ. இது என்ன புது புரளி"

"நானே பாத்தேன். லஞ்ச சாப்புட்டு முடிச்சதும் 10 செகண்ட் உண்ணாவிரதம் இருந்ததுக்கு அப்புறம்தானே தண்ணியே குடிச்சீங்க"

"இதுக்கு பேரு உண்ணாவிரதமா?"

"அதுதான இப்ப பேஷன். சரி அத விடுங்க. 63 மூவர் பத்தி எனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னீங்களே? ஏன்?"

"சார். நான் மைலாப்பூர் ஆளு. 63 மூவர் உலா வருசா வருஷம் பாப்பேன்"

"அந்த 63 ஆ..ஓகே. 'ஓ போடு..ஓ போடு'ன்னு 49 தரம் ஏன் பாடுனீங்க? எல்லாரும் 49 ஓ போடணும்னு நீங்க பண்ண பிளான்தான அது? "

"என்ன கொடும சார் இது? "

"நேத்து சாப்புடும்போது சங்கர் கிட்ட கூட்டு வச்சிக்கங்கன்னு சொன்னது"

"நான் கொண்டு வந்த கூட்டை எடுத்துக்கங்கன்னு சொன்னேன் சார்"

"என்னவோ சொல்றீங்க. பாத்துக்கங்க. உங்களுக்கு வேலைதான் முக்கியம். சொல்லிட்டேன்"

"நான் அரசியலுக்கு போக மாட்டேன் சார். உங்க ஓட்டு...."

"என் ஓட்டா? அது யாருக்கு போடணும்னு எனக்கு தெரியும். நான் இவ்ளோ சொல்லியும்..."

'சார்...சார்.. அய்யய்யோ.. உங்க ஓட்டு வீடு ஒண்ணு சும்மா பூட்டி இருக்கே. அதை எப்ப வாடகைக்கு விடப்போறீங்கன்னுதான் கேட்டேன். ஆள விடுங்க. மயக்கம் வருது".

.........................................................

நான் கடவுள்:


                                                                
..........................................................


ஒளிவிளக்கு
                                                    
நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனைத்தமிழர்கள் நரேன் கார்த்திகேயன், ரூத் மனோரமா மற்றும் ஓடந்துறை சண்முகம் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
.....................................


ஹவுசிங் போர்ட் வீட்டில் ஒரு உலக சாம்பியன்!

படிக்க என் மற்றொரு தளத்திற்கு வரவும். இணைப்பு கீழே: 

My other site: nanbendaa.blogspot.com16 comments:

pichaikaaran said...

சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1

செங்கோவி said...

நான் கடவுள் சூப்பர்..மீல்ஸ் கலக்கல் சிவா!

செங்கோவி said...

தமிழ்மணத்துல இணைக்கலையா..பரவாயில்லை நானே இணைச்சுட்டேன்..அதனால விழுற ஓட்டெல்லாம் எனக்குத் தான் சொந்தம், ஆமா!

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தரங்கம்:

கலக்கல்

Unknown said...

சிவக்குமார் செம செம மீல்ஸ்

! சிவகுமார் ! said...

பார்வையாளன்,செங்கோவி, ரமேஷ், மணி, கந்தசாமி...கருத்துக்கு ரொம்ப நன்றி!

! சிவகுமார் ! said...

தமிழ்மணம் லிங்க் அடிக்கடி தொல்லை தருகிறது. இணைத்ததற்கு தேங்க்ஸ் செங்கோவி!

உணவு உலகம் said...

விருந்து ரொம்ப திருப்தியா இருந்தது. நன்றி.

Free Traffic said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் நல்ல மீல்ஸ் ......................

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் நல்ல மீல்ஸ் ......................

! சிவகுமார் ! said...

ராசலிங்கம்..வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

செல்வின், எங்க காணாம போயிட்டீங்க..

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

செல்வின், எங்க காணாம போயிட்டீங்க.............
//////////////////////

ஊருக்கு போயிருந்தேன் ............
அதான் வந்துட்டோம்ல .............

Unknown said...

siva ella newsume super, antha mathiriyana purusanungalai nalu appu appanum..

Related Posts Plugin for WordPress, Blogger...