CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 27, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (03/27/11)
பாசமலர்:


                                

                                 
பொல்லாதவன்:

                                     

..................................................

நேருக்கு நேர்: 

                                                                     

நண்பர் ராஜாராமன்(விந்தைமனிதன்)  சனிக்கிழமை அன்று ம.தி.மு.க. வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை 'தமிழ் வெளி' இணைய தளம் சார்பாக பேட்டி எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். அவருடன் சேர்ந்து 'தாயகம்' செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அஞ்சா சிங்கம் செல்வினும் எங்களுடன் வந்திருந்தார். அரசியல் தலைவர் ஒருவரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியது புதிய அனுபவமாக இருந்தது. ராஜாராமின் பல்வேறு கேள்விகளுக்கு தங்கள் கட்சி எடுத்துள்ள முடிவுகளை சம்பத் அவர்கள் எடுத்துரைத்தார். நான் எந்த கட்சிக்கும் அபிமானி இல்லை எனினும்..என் நண்பர்கள் சிலர் கேட்கச்சொல்லிய கேள்விகள் மற்றும்   நான் கேட்க விரும்பிய கேள்வி ஆகியவற்றை முன்வைத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பதில் அளித்தார். பேட்டியின் முழுவிபரமும் விரைவில் தமிழ்வெளியில் வெளியாக உள்ளது. பேட்டி நடந்து கொண்டிருக்கையில் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். நாஞ்சில் சம்பத் அறிமுகம் செய்து வைத்ததும்தான் தெரிந்தது, அவர் ஆனந்த விகடனில் பணியாற்றி வரும் பா. திருமாவேலன் என்று. அவருடைய எழுத்துக்களையும் மற்றும் பிரபலங்களை அவர் சந்தித்து எடுத்த பேட்டிகளையும் நம்மில் பலர் படித்திருப்போம்.  அவரை சந்தித்ததும் கூடுதல் மகிழ்ச்சியே!
...................................................

சங்கமம்: 

இன்று (ஞாயிறு) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸில் கேபிள் சங்கர் எழுதிய 'கொத்து பரோட்டா' மற்றும் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' , உலகநாதன் அவர்கள் எழுதிய 'சாமானியனின் கதை' மற்றும் 'வீணையடி நீ எனக்கு'  ஆகியவற்றின் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வழக்கறிஞர் சாமிதுரை உள்ளிட்ட பலர் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து பேசினர். நேசமித்ரன் அவர்கள் சங்கரின் 'கொத்து பரோட்டா' வில் வரும் சாப்பாட்டுக்கடை எனும் பகுதியில் பெரும்பாலும் நகரம் சார்ந்த உணவுகளே உள்ளன என குறிப்பிட்டார். அநேகமாக கிராமம்/தென் தமிழக பகுதிகளில் சங்கர் அவர்கள் ஜாகையை மாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். பணம் படுத்திய பாடு பற்றி செந்தில் அவர்கள் எழுதிய புத்தகத்தை முன்பே படித்து இருந்த சிலர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். பதிவர்களின் புத்தகங்களுக்கு ஆதரவு தரும் 'ழ' பதிப்பகத்திற்கு நன்றி. 
.........................................................

வாய்க்கொழுப்பு:

டாக்டர்:  "உங்க பல்லு எப்படி விழுந்துச்சி?"
ராகுல்: "அதை யார் கிட்டயாவது சொன்ன மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா"
........................................................

கௌரவம்:

சென்னை வந்திருந்த நண்பர் 'இரவுவானம்' அவர்களும், நானும் எக்ஸ்பிரஸ் அவின்யு மற்றும் மற்றும் ஸ்பென்சர் ஆகிய இடங்களை ஒரு ரவுண்ட் அடித்தோம். பாவம் ஸ்பென்சர். வார இறுதி நாட்களில் களைகட்டி பரபரப்பாக இருந்த அந்த இடம் தற்போது டல் அடித்து போய் இருக்கிறது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்ப்ரஸ் அவென்யு கவர்ந்து சென்று விட்டது. என்னதான் இருந்தாலும் பொருட்களின் விலை ஸ்பென்சரில் குறைவாகத்தான் உள்ளது. குறிப்பாக சாட் உணவங்களின் விலைகள் சாமான்ய மனிதனுக்கும் ஏற்ற வகையில் இருப்பதால்,  நடுத்தர மக்களின் 'பட்ஜெட்' வளாகமாக ஸ்பென்சர் திகழலாம். பணம் படைத்தவர்கள் பெரும்பாலும் எக்ஸ்ப்ரஸ் அவின்யுவிற்கு படை எடுக்க ஆரம்பித்துவிட்டதால்..ஸ்பென்சர் இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை. 
 ......................................................

நெஞ்சம் மறப்பதில்லை:

காமராஜ்...இத்திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சமயம். சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தேன். அரங்கில் ஒரு சில வரிசைகள் மட்டுமே நிரம்பி இருந்தன. பெரும்பாலும் வயதானவர்கள். காமராஜ் மீது பேரன்பு கொண்டவர்கள் என்று முகங்களே கூறின. ஏற்கனவே காமராஜ் பற்றிய தொடரை தொலைக்காட்சியில் பார்த்திருப்பினும், அதில் இல்லாத பல காட்சிகளை படத்தில் இணைத்திருந்தனர். இப்பேற்பட்ட உன்னத தலைவன் ஆண்ட மாநிலம் இன்று?.  அவ்வப்போது தி.நகரில் உள்ள திருமலை சாலையை கடந்து போகையில் காமராஜ் இல்லத்தை பார்த்துக்கொண்டே செல்லத்தவறியதில்லை நான். 

இப்படத்தில் என்னை மிகவும் நெகிழ வைத்த காட்சி..காமராஜை சந்திக்க விருந்தினர் ஒருவர் வருவார். அவருக்கு அசைவ விருந்தளிக்க முடிவு செய்யும் தலைவர் தன வேலையாளிடம் முட்டை வாங்கி வர சொல்வார். "முதல்வர் வீட்டு விருந்தாயிற்றே? மட்டன், சிக்கன் இல்லையா?" என்று  விருந்தாளி கேட்பார்.  அதற்கு அய்யா சொல்லும் பதில்...நீங்களே பாருங்கள்:                                                                                                             

இவர் ஆண்டது நாம் வாழும்(!) தமிழ்நாட்டை என்கிறார்கள். நம்பினால் நம்புங்கள். 

"நல்லதோர் தமிழகம் படைத்தேன். அதை நலங்கெட புழுதியில் எறிந்ததார்? சொல்லடி சிவசக்தி? "   கர்மவீரரின் அசரீரி கேட்கிறது.   
...........................................................

My other site: nanbendaa.blogspot.com


18 comments:

செங்கோவி said...

இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் செம கலக்கல் நண்பா..நாஞ்சில் சம்பத் பேட்டியை எதிர்பார்க்கிறேன் தமிழ்வெளியில்!...காமராஜர்.ஹ்ம்..நாம குடுத்து வசது அவ்வளவு தான்!

Prabu M said...

ரொம்ப அழகா தொகுத்திருக்கீங்க நண்பா.....
காமராஜர் படத்தின் காணொளியைப் பார்த்தேன்..... சொல்ல வார்த்தைகளில்லை..... இப்படி ஒரு மனிதரா என்ற வியப்பு தணிவதற்குமுன்பு இவர் நம்மை ஆண்ட தலைவரா என்று சிலிர்க்கிறது....!
ருசிகரமான மீல்ஸுக்கு நன்றி....

Chitra said...

நல்ல தொகுப்பு. அந்த வீடியோ கிளிப்க்கு ரொம்ப நன்றி.

Philosophy Prabhakaran said...

// சென்னை வந்திருந்த நண்பர் 'இரவுவானம்' அவர்களும், நானும் எக்ஸ்பிரஸ் அவின்யு மற்றும் மற்றும் ஸ்பென்சர் ஆகிய இடங்களை ஒரு ரவுண்ட் அடித்தோம். //

முதலாவது... லத்திகா படத்தின் விமர்சனம் எழுதிய அந்த மாமனிதரை நானும் பார்க்க விரும்பினேன்... நீங்கள் என்னையும் அழைத்திருக்கலாம்...

இரண்டாவது... கடந்த சனிக்கிழமை அதாவது மார்ச் 26 மாலை முழுவதும் நானும் எனது உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்களுடன் அதே எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா பகுதியில் சுற்றித் திரிந்தேன்....

மூன்றாவது... எக்ஸ்பிரஸ் அவென்யூ - ஸ்பென்சர் பிளாசா ஒப்பீட்டின் பொது எனக்கும் இதே எண்ணங்களே தோன்றியது.... நானும் பிரபா ஒயின்ஷாப்பில் அதுப்பற்றி புலம்ப எண்ணியிருந்தேன்...

pichaikaaran said...

நல்ல தொகுப்பு . புத்தக வெளியீட்டு விழா செய்தி நன்றாக இருந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல தொகுப்புங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////டாக்டர்: "உங்க பல்லு எப்படி விழுந்துச்சி?"
ராகுல்: "அதை யார் கிட்டயாவது சொன்ன மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா"////////

அப்போ அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

Unknown said...

நன்றி சிவா, உங்கள் சிரமத்தை பார்க்காமல் எனக்காக வந்ததுக்கு நன்றி, உங்களுடன் சுற்றிபார்த்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம், காமராஜர் வாழ்ந்த காலத்தை நினைத்தால் பொறாமையாக உள்ளது...

அஞ்சா சிங்கம் said...

நல்ல மீல்ஸ் சிவா ..............
காமராஜர் ..........................
விடுங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்லை .................

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் செம கலக்கல் நண்பா..நாஞ்சில் சம்பத் பேட்டியை எதிர்பார்க்கிறேன் தமிழ்வெளியில்//

நன்றி செங்கோவி. பேட்டி வெளியாகும் நாளை நானும் எதிர்பார்க்கிறேன்.

! சிவகுமார் ! said...

//பிரபு எம் said...
இப்படி ஒரு மனிதரா என்ற வியப்பு தணிவதற்குமுன்பு இவர் நம்மை ஆண்ட தலைவரா என்று சிலிர்க்கிறது//

எல்லாம் நம் தலை எழுத்து..அவர் காலத்தில் பிறந்து இருக்கலாம்.

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...

முதலாவது... லத்திகா படத்தின் விமர்சனம் எழுதிய அந்த மாமனிதரை நானும் பார்க்க விரும்பினேன்//

பிரபா, அவர் அடுத்த முறை சென்னை வரும்போது கண்டிப்பாக சொல்கிறேன்.

! சிவகுமார் ! said...

//பார்வையாளன் said...
நல்ல தொகுப்பு . புத்தக வெளியீட்டு விழா செய்தி நன்றாக இருந்தது//

கடைசி நேரத்தில் நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள். ஏன்?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?//

மனைவின்னு எழுதி இருக்கேன். அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கறீங்க.... என்ன ஒரு எகத்தாளம்!! நடத்துங்க..!!

! சிவகுமார் ! said...

//இரவு வானம் said...
நன்றி சிவா, உங்கள் சிரமத்தை பார்க்காமல் எனக்காக வந்ததுக்கு நன்றி, உங்களுடன் சுற்றிபார்த்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்//

எனக்கும்தான் நண்பா!!

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
நல்ல மீல்ஸ் சிவா ..............
காமராஜர் ..........................
விடுங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்லை //

பகல் கனவுதான் நமக்கு மிச்சம்!!

! சிவகுமார் ! said...

//Chitra said...
நல்ல தொகுப்பு. அந்த வீடியோ கிளிப்க்கு ரொம்ப நன்றி.//

கருத்துக்கு மிக்க நன்றி, சித்ரா அவர்களே!!

MANO நாஞ்சில் மனோ said...

காமராஜர், கல்வி கண் திறந்த தானை தலைவன் அவர் ஒரு வரலாறு, சகாப்தம், சரித்திர நாயகன்...

Related Posts Plugin for WordPress, Blogger...