தமிழ் ஈழத்தலைவர் பிரபாகரனின் தாயார் நோயுடன் போராடி இறந்த செய்தி வேதனை அளிக்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சார்பாக அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
sms:
From my rotting body, flowers shall grow and I am in them and that is eternity.
~Edvard Munch
.......................
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அஜ்மல் கசாப்பிற்கு இன்று தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவிருக்கின்றனர் கசாப் தரப்பினர். விரைவு நீதி மன்றம் மூலமாக துரித தீர்ப்பு வழங்க வேண்டும் என மீடியாக்கள் உட்பட பலர் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.
sms:
Death is a distant rumor to the young. ~Andrew A. Rooney
.............................................
காலத்தால் அழிக்க முடியாத பல அற்புதமான பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய பாணியில் இதுவரை எவராலும் பாட இயலாதது அக்குரலின் தனிச்சிறப்பு என்பதை அறிவோம். நடிப்பிலும் தனி முத்திரை பதித்தை வாசுதேவன் சில வாரங்களுக்கு முன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் திரைத்துறையை சார்ந்த வெகு சிலரே தன்னை பார்க்க வந்ததாக கூறினார். முரளி, ஸ்வர்ணலதா, தற்போது வாசுதேவன் வரை தமிழ் சினிமா தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவது வேதனையானதே. இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சிறப்பானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அதில் நம் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் சில பாடல்கள்:
* ஒரு கூட்டுக்கிளியாக (படிக்காதவன்)
* ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
* காடு.. பொட்டக்காடு (கருத்தம்மா)
* பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)
sms:
If I had a single flower for every time I think about you, I could walk forever in my garden. ~Claudia Ghandi
http://www.youtube.com/watch?v=9hgnW6jbwTU
..............................
Pics,Video: Google, Youtube.
8 comments:
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
அன்னார்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே).........../////////
அந்த படத்தில் எல்லா பாடல்களும் இவர்தான் பாடியது ...............
அவர் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம் ..........
இரு நல்ல ஆத்மாக்களும் சாந்தி அடைய பிரார்திப்போம்.
இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
ஒரு கூட்டுக்கிளியாக பாடலை சேர்த்திருக்கலாம்...
sad news. May their souls rest in peace.
ஆழ்ந்த அனுதாபங்கள்...
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்...
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_26.html
Post a Comment