ராதா மோகன்....மென்மையான குடும்ப படங்களை மட்டும் இயக்குபவர். இது நேற்று காலை 'பயணம்' திரைப்படத்தின் முதல் காட்சிக்கு முன்பு வரை அவருக்கு இருந்த பிராண்ட் நேம். அந்த இமேஜை தகர்த்து எறிந்து, தன்னால் ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தை அசத்தல் ஒன் லைன் நகைச்சுவை காட்சிகளுடன் எடுக்க இயலும் என்பதை நிரூபித்து இருக்கிறார். குறை சொல்ல வேண்டிய விஷயங்கள் மிகவும் குறைவு. அடுத்த வருடம் விருதுகளின் பட்டியலில் 'பயணம்' குழுவிற்கு பிரதான இடம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. பிரகாஷ் ராஜ்...தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதை இதற்கு மேலும் நிரூபிக்க தேவையில்லை.
எங்கே முதல் காட்சியில் பயணிகள் வீட்டில் இருந்து கிளம்புகையில் "நான் போயிட்டு வர்றேன்" போன்ற வசனங்கள் இருக்குமோ என்று எண்ணினால், நேராக விமான நிலையத்தில் கதையை துவக்கி படத்தை ஜெட் வேகத்தில் டேக் ஆப் செய்தார் இயக்குனர். ட்ரைலர் பார்க்கையில் செண்டிமெண்ட் காட்சிகள் சற்று அதீதமாக இருக்குமோ என்றெண்ணி 'பயணத்தை' சற்று தள்ளிப்போடலாம் என்று யோசித்தேன். ஆனால் ராதா மோகன் மீதுள்ள நம்பிக்கையில் இறுதிக்கட்டத்தில் 'ரிசர்வ்' செய்தேன். வெகு அரிதாக வெளிவரும் "நகைச்சுவை கலந்த த்ரில்லர்" படத்தை தந்து அசத்தி விட்டார். பொதுவாக ஏகப்பட்ட கேரக்டர்கள் வரும் படங்களில் பல நடிகர்கள் அர்த்தமின்றி வந்து செல்வதும், நல்ல துணை நடிகர்கள் வீணடிக்கப்படுவதும் மரபாக இருக்கும். 'காதல்' திரைப்படத்திற்கு பிறகு அனைத்து நடிகர்களையும் இயல்பாக நடிக்க வைத்த பெருமையை தட்டி சென்று விட்டார் இயக்குனர் ராதா மோகன் என்றால் அதில் மிகை இல்லை.
'சைனிங் ஸ்டார்' சந்திரகாந்த் ரோலில் வரும் பப்லுவை நக்கல் அடிக்கும் வசனங்கள், இரண்டாம் பாதியில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள், அவ்வப்போது கையால் ஆகாத அரசாங்கத்தை வெளுக்கும் இடங்கள் போன்றவை திரை அரங்கில் 'பயணம்' செய்வோரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. அடங்கப்பா மாஸ் ஹீரோக்களே... தயவு செஞ்சி நாகார்ஜுனா நடிப்பை பாருங்க. அதுதான் ஹீரோயிசம். என்ன வரம் வாங்கினாரோ. மனிதர் அநியாத்திற்கு இளமையாகவே இருக்கிறார். தமிழில் நடிகர் முரளி போல், தெலுங்கில் நாகார்ஜுனா. எவர் யூத். பயணிகளை எப்படி விடுவிப்பது என கலந்தாலோசனை செய்கையில் பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கோபப்படும் காட்சி. அவருக்கு தேசிய விருது தந்தது முற்றிலும் தகும் என்பதற்கு இது ஒரு சான்று. பாடல்கள் இல்லாத, காதல் இல்லாத, நேர்மையான, தரமான படத்தை தந்த 'பயணம்' குழுவிற்கு ஹாட்ஸ் - ஆப்.
* தலைவாசல் விஜய் ஷூவில் துண்டுச்சீட்டு ஒட்டிக்கொள்ளும் காட்சி. தீவிரவாதி அவரின் காலை நகர்த்த சொல்கிறான். அதிர்ஷ்டவசமாக ஷூவிலேயே அந்த காகிதம் ஒட்டிக்கொள்கிறது. அவன் சென்றுவிடுகிறான். ஷூவை தூக்கி காட்ட சொல்லி செக் செய்யாமல் செல்லும் அளவிற்கு ஒரு கூமாங்கு தீவிரவாதியா?
* யூசுப் கான் எனும் தீவிரவாதியாக நடிக்க ஒரு இளைஞனை நாகர்ஜுனா அழைத்து வருகிறார். அப்போது அவன் பேசும் வசனம் "சார், என்ன விட்ருங்க. நான் பெருமாள் கோவில்ல புளியோதரை சாப்டுட்டு நிம்மதியா இருந்துடறேன்' . இன்னும் எத்தனை நாள் தயிர்சாதம், மாவடு, புளியோதரை என குறிப்பிட்ட இனத்தை கிண்டல் அடிப்பார்களோ. நீங்களுமா ராதா மோகன்??? எதிர்பார்க்கவில்லை.
* விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ.
* லடாக் பகுதியில் நடக்கும் சண்டை காட்சி வெகு தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருந்தது.
* நிஜ தீவிரவாதிக்கு பதில் 'டூப்' போட்டு அனுப்புவதாக காட்டி உள்ளனர். இது போதும். இனி நிஜ வாழ்க்கையில் எல்லா தீவிரவாதியும் தங்கள் ஆள் ஒரிஜினிலா அல்லது நகலா என்பதை சோதித்தே தீருவார்கள். 'பயணம்' படம் அவர்கள் கண்ணில் பட்டால்.
* வசனங்கள் கிட்டத்தட்ட அனைத்தும் நன்றாக இருந்த போதிலும், மிகவும் பிடித்ததில் சில: நடிகராக வரும் பப்லூவிடம் "என்ன சார். என்னை அடிக்க போரீங்களா? அடிங்க. டெய்லி என் பொண்டாட்டி அடிக்கறா. நாலு வயசு பையன் கூட அடிக்கறான். அடிங்க" என சக பிரயாணி ரவுசு விடுவது, தீவிரவாதி ஒருவன் "ஏன் கத்துகிறீர்கள். விமானத்தில் இருக்கும் பெண்களுக்கு எங்களால் ஆபத்து வந்ததா? உங்கள் நாட்டு போலீசிடம் ஒரு பெண்ணை மூன்று நாட்கள் தனியாக விட்டால் அவளுக்கு பாதுகாப்பு உண்டா?" என சொல்லும் சுளீர் வசனம். ஒளிப்பதிவாளர் குகன் மற்றும் இசையமைப்பாளர் பிரவின் மணி இருவரும், நாம் படம் பார்க்கும் சூழலை தவிர்த்து நிஜ கடத்தலை கண் முன் பார்ப்பதுபோல் ஒரு உணர்வை உருவாக்கி உள்ளனர். சபாஷ்!
* எம்.எஸ். பாஸ்கர் போன்ற சிறந்த கலைஞர்கள் 'காவலன்' படத்தில் வீண் அடிக்கப்பட்டு இருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அந்த லிங்க்: காவலன். இனியாவது இவரை வைத்து இயக்குபவர்கள் மொழி, வெள்ளித்திரை, பயணம் போன்ற படங்களில் தரப்பட்ட முக்கியத்துவத்தை தர வேண்டும். What an Actor! தலைவாசல் விஜய், இளவரசு, எம். எஸ். பாஸ்கர் போன்ற கலைஞர்களை மட்டும் பிரதானமாக வைத்து எடுக்கப்படும் படம் கண்டிப்பாக அந்த இயக்குனரின் பெயர் சொல்லும். அந்த நாளும் வந்திடாதோ?
* இடைவேளையில் 'ஆரண்ய காண்டம்' ட்ரைலர் போட்டனர். ஏற்கனவே சென்சார் போர்டில் கிட்டத்தட்ட 50 வெட்டு வாங்கி பிரச்சனையில் இருக்கிறது இப்படம் என செய்திகள் வந்துள்ளன. ட்ரைலர் வித்யாசமாக இருந்தது. தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் 'ஏ' சர்டிபிகேட் வாங்க தயாராகி விட்டாராம். மக்கள் தயாரா என்பது இனிதான் தெரியும்.
பயணம் - இந்த ஆண்டு மட்டுமல்ல. இதுவரை தமிழில் வந்த சிறந்த படங்களின் வரிசையில் தனி இடம் பெற்றுவிட்டது என்பது என் கருத்து!
..................................................
இவ்வாண்டு ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள INSIDE JOB ஆங்கில படத்தின் விமர்சனம் என் மற்றொரு தளத்தில்: nanbendaa.blogspot.com
22 comments:
விமர்சனம் அருமை..
நல்ல நடுநிலையான விமர்சனம்
முதல் வெட்டு
முதல் வெட்டு
சுவையான விமர்சனம்.... நன்றிகள்,
ராதாமோகன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
எல்லா புகழும் வசனகர்த்தா ராதா மோகனுக்கே!//
வசனகர்த்தா ராதா Mohan?
//விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ.// என்ன அநியாயம் பாருங்க சார்..ச்சே!
இன்னைக்கு போவதாக இருந்து தடைபட்டது.. கண்டிப்பாக பாத்துட்டு சொல்றன்.. சூப்பர்..
>>>வெகு அரிதாக வெளிவரும் "நகைச்சுவை கலந்த த்ரில்லர்" படத்தை தந்து அசத்தி விட்டார்.
சூப்பர்
சிவகுமார் இன்னைக்கு நைட் ஷோ கண்டிப்பா படம் பாத்துடறேன்
அசத்தலாக இருக்கிறது சிவா, உங்கள் மேசேஜ் பார்த்தேன் ஆனா ஆடிட்ல இருந்ததால பதிலளிக்க முடியவில்லை, மன்னிக்கவும் ..
>>> கருன், பாரதி, தம்பி கூர்மதியன் தங்கள் வருகைக்கு நன்றி!
>>> பார்வையாளன் சார், வருகைக்கு நன்றி!
>>> செந்தில்குமார் சார், சிறப்பான படம் பயணம் என்பதில் சந்தேகமில்லை. நன்றி!
>>> செல்வின், அது எப்படி ரெண்டு தடவை முதல் வெட்டு???
//எல்லா புகழும் வசனகர்த்தா ராதா மோகனுக்கே!///
>>> >>> ரமேஷ், வசனம் ஞானவேல். ராதா மோகன் இல்ல. ஏன் இப்படி தப்பா எழுதி மக்களை குழப்புறீங்க? (எஸ்கேப்....)
>> செங்கோவி, இதற்கு ஒரு விசாரணை கமிசன் வச்சே தீரனும்
>>> பாருங்க மணி. உங்க கருத்தையும் சொல்லுங்க.
>>> சுரேஷ், மன்னிப்பா? எதுக்கு? வேலைதான முக்கியம். படம் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்.
//விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ
என்ன ஒரு கவலை
"விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ"
அது ஒரு இயக்குனரின் திறமை. கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தை திரையில் காட்டாமல் உலவ விடுவது புதிது அல்ல. பாலசந்தர் ஒரு படத்தில் பாத்திமா பாபுவின் கணவராக வரும் பாத்திரத்தை திரையில் காட்டாமலேயே அப்படி ஒரு பாத்திரம் இருப்பதாக காட்டி இருப்பார்.
நீங்கள் ஜொள்ளு விடிவதற்காக சொல்லி இருந்தால் அது வேறு விஷயம்.
"விமானத்தில் இரு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் இருந்தபோதிலும் ஒரு பெண்ணை மட்டுமே திரையில் காட்டினர். மற்றவரை காட்டவே இல்லீங்கோ"
அது ஒரு இயக்குனரின் திறமை. கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தை திரையில் காட்டாமல் உலவ விடுவது புதிது அல்ல. பாலசந்தர் ஒரு படத்தில் பாத்திமா பாபுவின் கணவராக வரும் பாத்திரத்தை திரையில் காட்டாமலேயே அப்படி ஒரு பாத்திரம் இருப்பதாக காட்டி இருப்பார்.
நீங்கள் ஜொள்ளு விடிவதற்காக சொல்லி இருந்தால் அது வேறு விஷயம்.
Post a Comment