CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, February 5, 2011

ஆடுகளம் படு தோல்வி - சந்தேகமே இல்ல!எரிமலை எப்படி பொறுக்கும்!
கலின்ஜர் /ஸ்டாலின் அண்ணன்/ மேயர் சாரு அல்லாருக்கும் ஒரு கட்தாசி!

இன்னாங்க இது?  பள்ளிக்கூடம், கல்லூரி, வேல செய்ற எடம் இப்படி எங்க போனாலும் எங்க பின்பக்கம் தேய நெருப்பு பத்திக்கிற வரைக்கும் ஒக்கார்றோம். அது எங்க விதி.  படிக்க போற புள்ளைங்க நேரம் கெடச்சா மெரினால கிரிக்கட்டு வெளாடின்னு குஜாலா இருந்தானுவோ. கொஞ்ச நாளிக்கி முன்னாடி எந்த மவராசன் கண்ணு உறுத்திச்சின்னு தெர்ல, அங்க   புள்ளைங்க ஆடக்கூடாதுன்னு சட்டம்  போட்டாங்க. காச வச்சிகினு என்ன பண்றதுன்னு தெரியாம கண்டதையும் தின்னுட்டு தொப்பை கரைய  குறுக்கயும், நெடுக்கையும் ஓடுற ஒண்ணு ரெண்டு பெரும் புள்ளிங்க பத்த வச்ச வேலையான்னு சந்தேகம் வருது. கேட்டா பந்து இங்க படுது, அங்க படுதுன்னு புகார் குடுக்றாங்க.  இல்லாதவன் வூட்ல இருந்து ஒரு சச்சின், சேவாக் வந்தா உங்களுக்கு இன்னாப்பா காண்டு. ட்ரிப்லிகேணி,சேப்பாக்கம் சுத்தி இருக்ற புள்ளைங்க எங்க போய் வெளாடும்?

ஒரு தபா போலீஸ்கார் ஒருத்தர் என் தோஸ்த பாத்து "மெரினால ஆடாத" அப்டின்னு மொறப்பா சொல்ட்டாரு. பையன் சூடான ஆளாச்சா, இன்னா பண்ணான் தெர்மா? "இங்க தான ஆடக்கூடாது. கடல்ல போய் ஆடுறேன்" அப்டின்னு சொல்லிக்கினு ரெண்டு அடி தூரம்தான் கடலுக்குள்ள போனான்.  திடீர்னு "டுமீல், டுமீல்" சத்தம். "இன்னாடா, ஓடியாந்துட்ட" ன்னு கேட்டா, "ஜெயசூரியா நாட்டு போலீஸ்கார் சுட்ராறு"ன்னு கத்துனான். இப்பல்லாம் கடல்ல லேசா கால் வச்சாலே "டுமீல்" சத்தம் கேக்குதே. பேசமா எங்க பாட்டன் சொத்து மெரினாவை அந்த நாட்டு ஆளுங்களுக்கு வித்துட போறேன். எதுக்கு எப்ப பாத்தாலும் வம்பு. கொஞ்ச நாளா கடற்கரை வாலிபால் அப்டின்னு புதுசா ஆரம்பிச்சி கீறாங்க. வெள்ளைக்கார பொண்ணுங்க எல்லாம் தம்மா தூண்டு துணி கட்டினு ஆடுது.  வாய்ல காக்கா கக்கா போறது கூட தெரியாம நெறிய பேரு பொளந்துகினு பாக்ரானுவ. அதுக்கு மட்டும் அனுமதி தர்றீங்க.  என்னாப்பா. ஒரு நியாய, தர்மம் வேணாமா? பாத்து செய்ங்க.

                                             மெரினால ஆடுற நம்ம வூட்டு புள்ளங்க!

அடுத்து இந்த தி. நகர் வெங்கட்நாரயணா சாலைல கீற மைதானம். அங்க கூட பெரிய வூட்டு ஆளுங்க பாண்டி பஜார் வர்ற சொல்லோ வண்டிய நிறுத்த எடம் இல்லைன்னு இந்த மைதானத்துல வண்டி விட எடம் வளைக்க நெனச்சீங்க. பகீர்னு ஆய்ருச்சி. அந்த சுத்துவட்டார பசங்க விளையாட இருக்குற ஒத்த எடத்துக்கும் வேட்டு வச்சிடுவாங்களோன்னு படா குமுறலா போச்சி. நல்ல வேலை, பஞ்சாயத்து தலைவர்(உச்ச நீதிமன்ற நீதிபதி ஐயா) தீர்ப்பால தப்பிச்சது அந்த எடம்.  ஒரு காலத்துல நிம்மதியான நடந்து போக வாக்கான எடமா இருந்த வெங்கட்நாரயணா சாலை இப்போ ஏகப்பட்ட கடைங்க தொறந்ததால, கொச கொசன்னு இக்குது. இதுக்கு எதாச்சும் பண்ணுங்க வாஜ்யாரே! எங்க கொள்ளு பாட்டன் சொத்து பெசன்ட் நகர் பீச்சுல வேணும்னா இலவச வண்டி நிறுத்த எடம் தர்றேன். பெரிய வூட்டு ஆளுங்க அங்க வேணும்னா வந்திங்கள ஓரம் விடட்டும். ரங்கநாதன் தெருவை அனுமார் சஞ்சீவி மலைய தூக்குன மாதிரி அலேக்கா தூக்கி பெசன்ட் நகருக்கு மாத்திருவோம்.

                                    வெங்கட்நாரயணா ரோடு - மாநகராட்சி கிரவுண்டு.

ரெண்டு நாளைக்கு முன்ன உங்க ஆளுங்க செஞ்சத பாத்து செம கடுப்பு  ஆயிருச்சி தலிவா. சைதாப்பேட்ட  டீச்சர்ஸ் காலேஜ்(ஆசிரியர் பள்ளி) மைதானத்துல ஆளும் கட்சி கூட்டம்.  மொத்த மைதானத்தையும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. "போதும் விடுங்க. ரொம்ப தோண்ட வேணாம்" அப்டின்னு சொன்னா "சும்மா இரு. இன்னும் கொஞ்சம் தோண்டுனா சோசியலிசம் கெடச்சாலும் கெடைக்கும்"ன்னு சொல்றாங்க. வறுமையின் நெரம் செவப்பு.. அவங்களும் பாத்துட்டாங்க போல. சும்மா ஈடன் கார்டன் கணக்கா பப்பரப்பேனு இருந்த மைதானம். நாயித்து கெளம ஆனா தி.நகர், சைதாப்பேட்ட, கோட்டூர்புரம், தேனாம்பெட்ட ...இன்னும் நெறிய எடத்துல இருந்து வயசு பசங்க, பெரியவங்க அல்லாரும் வந்து ஆடி சந்தோசமா இருந்த எடம். கொஞ்ச வர்சம் முன்னாடி பேருந்து நிலையம் கட்ட மைதான நிலத்தை கொஞ்சம் லவட்டுனாங்க. போன மாசம் இன்னாடான்னா 'மெட்ரோ' ரயிலுக்கு சொந்தம் அப்டின்னு பலகை வச்சிட்டாங்க.

ஒங்க கட்சி கூட்டம் முடிஞ்ச பொறவு "மச்சி பிட்ச் நாசமா போச்சி. ஆடுகளம் படு தோல்வி - சந்தேகமே இல்ல" அப்டின்னு என் சகல பொங்குனான். என்னதான் இனிமே மண்ணு போட்டு மூடுனாலும் முன்ன மாதிரி வருமா. ஒரு பிட்ச் ரெடி பண்ணவே எத்தன நாள் ஆவுது. அங்க ஒரு ஒரு அணிக்கும் ஒரு ஒரு பிட்ச். ஆச, ஆசையா வேர்வ சிந்த உழுதது. அந்த பிட்ச நம்பி எப்பயாச்சும் ஒண்ணு ரெண்டு சிக்ஸ் அடிச்சி பொழப்ப ஓட்டிட்டு இருந்தேன். அதுவும் போச்சி. இனிமே அடுத்த ஆட்டத்துல எதிராளி என் மூஞ்ச பாத்து பந்த வீசுவானுங்களே..நெனச்சாலே பொறி கலங்குது. இலவச கவசம் வழங்கும் திட்டம் எதுனா கீதா???  தயவு செஞ்சி இனிமே ஏழை, நடுத்தர வூட்டு புள்ளங்க வெளையாட தடை போடாதீங்க வாஜ்யாரே! நாளைக்கி வேலைக்கி போக ஆரம்பிச்சிட்டான்னா, அப்புறம் கல்யாணம், புள்ளகுட்டி.. பேய் அறஞ்ச மாதிரி திரியப்போறான். இப்பயாச்சும் குஜாலா இருக்கட்டுமே. விட்ருங்க!

சைதாப்பேட்ட பிட்ச் சரி ஆவ ரொம்ப நாள் ஆவும். உங்க தொகுதில கீற  சேப்பாக்கம் மைதானத்துல வெளையாடலாம்னா.. ஒலக (மகா) கிர்கேட் கோப்பை நடத்துற பயலுவ முன்பதிவு பண்ணிட்டானுவ. இப்ப எங்க போயி வெளையாடுவேன்??  சரி, நேரு உள் வெளயாட்டு அரங்கத்துல பசங்கள கூட்டிக்கினு போய் ஆடலாம்னு பாத்தா, அங்க எப்ப பாத்தாலும் அந்த விழா, இந்த விழான்னு சொல்லி துண்டு போட்டு எடம் புடிச்சுடறாங்க. ஒன்னியும் புரியல....ஒரே குஷ்டமப்பா..!!
.......................................................................
                                         
                                                           


24 comments:

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆடுகளம் படு தோல்வி - சந்தேகமே இல்ல!//


avvvvvvvvvvvvvv. sema bulb..

வைகை said...

தமிழகத்தின் குபேரன் கலாநிதி மாறன் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்!

எப்பூடி.. said...

நல்லா கிளப்பிறாங்க பீதியை.

செங்கோவி said...

அந்த ஆடுகளமா..சர்..சரி..

Philosophy Prabhakaran said...

சிவா... நீங்க இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா... ஆனா தலைப்ப படிச்சிட்டு கொஞ்சம் பலப் வாங்கிவிட்டேன்...

pichaikaaran said...

சிவா... நீங்க இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா... ஆனா தலைப்ப படிச்சிட்டு கொஞ்சம் பலப் வாங்கிவிட்டேன்”

வழி மொழியிறேன்..

காப்பி டைரகடரின் புது படத்தை பார்த்து விட்டீர்களா...

! சிவகுமார் ! said...

>>> பாரத், ஜீவா...வருகைக்கு நன்றி!

! சிவகுமார் ! said...

>>> செங்கோவி, ரமேஷ்...வேற களம்னு நெனச்சி உள்ள வந்துட்டீங்களே..

! சிவகுமார் ! said...

>>> பிரபா, பார்வையாளன் மெட்ராஸ்ல பொறந்து வளந்த நான் இப்டி எழுதலன்னாதான் ஆச்சர்யம்.. இன்னா சொல்றீங்க.

>>> >>> கண்டிப்பாக பார்க்க மாட்டேன், பார்வையாளன் சார்!

idroos said...

////////ரெண்டு அடி தூரம்தான் கடலுக்குள்ள போனான். திடீர்னு "டுமீல், டுமீல்" சத்தம். "இன்னாடா, ஓடியாந்துட்ட" ன்னு கேட்டா, "ஜெயசூரியா நாட்டு போலீஸ்கார் சுட்ராறு" ன்னு கத்துனான்/////


ஹி....ஹீ ..ஹீ.பேச்சு நடையில் எழுதுறீங்க நல்லாருக்கு தல

idroos said...

thamizhmanam vote widget ஏன் சில நேரம் தெரியவே மாடேங்குது

சி.பி.செந்தில்குமார் said...

DIFFERENT TITLE.. GOOD WRITTING STYLE SIVA..

idroos said...

பின்னுட்டம் கொடுத்தவுடனே தெரியுது வோட்ட போட்டுட்டேன்

! சிவகுமார் ! said...

>>> பதிவை வாசித்ததற்கு நன்றி ஐத்ரூஸ்!!

! சிவகுமார் ! said...

>>> தங்களை போன்ற முன்னணி பதிவர்கள் தரும் ஊக்கம் என்னை மேலும் எழுத வைக்கிறது, சி.பி. செந்தில் அவர்களே! மிக்க நன்றி!

அந்நியன் 2 said...

உண்மையில் சேரி பேச்சை நேரிடையாக கேட்டது போல இருந்தது நண்பா,சும்மா யார் வேண்டாலும் என்ன வேண்டாலும் எப்படி வேண்டாலும் எழுதிட்டுப் போகலாம் ஆனால் மெட்ராஸ் பேச்சை எழுதனும்னா அது உம்மைப் போன்ற பதிவர் மூலம்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் !

! சிவகுமார் ! said...

//அந்நியன் 2 said...
உண்மையில் சேரி பேச்சை நேரிடையாக கேட்டது போல இருந்தது நண்பா//

>>> மெய்யாலுமா சொல்றீங்க?? ரொம்ப தேங்க்ஸ் நண்பா!!

ஆயிஷா said...

சென்னை தமிழ் சூப்பர். எழுத்து நடை நல்லாருக்கு.

உளவாளி said...

அப்புடியே எங்க எதிர் வூடு பையன் பேசுற மாத்ரி இருக்கு தல..

! சிவகுமார் ! said...

>>> வருகைக்கு நன்றி சகோதரி ஆயிஷா!

! சிவகுமார் ! said...

//உளவாளி said...
அப்புடியே எங்க எதிர் வூடு பையன் பேசுற மாத்ரி இருக்கு தல//

>>> யாருப்பா அது.. குளிக்க சொல்லோ கதவு வழியா எட்டி பாக்குறது. நல்ல வேல உங்க எதிர் வூட்ல நா இல்ல. எட்டி பாத்தா எனக்கு வெக்க வெக்கமா வரும் தலிவா..

Madurai pandi said...

ஆடுகளம் ரொம்ப முக்கியம் தான்..

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Villas In Trivandrum

Related Posts Plugin for WordPress, Blogger...