CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, February 1, 2011

மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்


                                                                        
கொத்துபரோட்டா, சாண்ட்வெஜ், பிரபா ஒயின்ஷாப் என்று பல பெயர்களில் பதிவர்கள் கலவைப்பதிவு இட்டு வருவது போல் நாமும் செய்தால் என்ன என்று பல நாட்களுக்கு முன்பே யோசித்ததுதான். தற்போதுதான் நேரம் அமைந்தது. என்ன பெயர் வைக்கலாம்?? மெட்ராஸ்பவன் என்று வலைப்பூவின் பெயர் இருக்கையில் நமக்கென்ன கவலை. அதனால் "மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்" என வைத்து விட்டேன். நம் ஹோட்டல் என்றுமே சுத்தமான சைவம்தான். எல்லாரும் வரலாம்.   
........................................

ஒளி...மாயம்-1  (SMS) 

தன் 24 வயது மகனுடன் ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார் ஒரு தந்தை. ஜன்னலோரத்தில் இருந்த மகன் உற்சாகமாய் கத்தினான் "அப்பா, இங்கே பாருங்கள் மரங்கள், செடிகள் எல்லாம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கின்றன". பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர்கள் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். அவன் மீண்டும் கத்தினான், "அப்பா, அதோ பாருங்கள் மேகங்கள் நம்மை பின் தொடர்ந்து வருகின்றன" . இதை கேட்ட ஒரு நபர் அவன் தந்தையிடம் "இவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்க்கலாமே? ". அதற்கு அவரின் பதில் "அவன் மருத்துவமனையில் இருந்துதான் வருகிறான். இன்றுதான் அவனுக்கு கண்பார்வை கிடைத்தது". 
..................................................
ஒளி...மாயம்-2  (SMS) 

கால்ப் விளையாட்டு போட்டியில் கண் பார்வையற்ற நபர் ஒருவர் வேகமாக முன்னேறி வருவது கண்டு பொறமை அடைந்தார் ஒரு முன்னணி வீரர். அவரிடம் சென்று "நாளை நாம் இருவரும் ஒரு போட்டியில் மோதிக்கொள்வாமா?" என்றார். அதற்கு பார்வை அற்ற நபர் சொன்ன பதில் "கண்டிப்பாக. ஒரே ஒரு நிபந்தனை. போட்டியை இரவில் வைத்து கொள்ளலாம்".
...........................................

என் கமன்ட்:

                                                                   
............................................

இந்த வார நிழற்படம்:


                                            உன் ஆட்சிக்காலத்தில் நாங்கள் வாழாதது
                                                     சாபக்கேடின்றி வேறென்ன....

.....................................

பயாஸ்கோப்:
( யூட்யூபில் என் கண்ணில் பட்டது)  

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்???????????
                                                                  

..............................................
Pics,Video: Google, Utube.
................................................

 'நெறைய பேர் சாப்புட்டா' தொடர்ந்து பரிமாறப்படும். மீண்டும் சந்திப்போம். 

32 comments:

வைகை said...

கண்ணியமா இருக்கவேண்டிய காவல்துறை காலில் விழுவதை பார்க்கும்பொழுது மனசு வலிக்குது! நான் முழுதாக பார்க்கவில்லை! பணம் ஒருவரை எப்பிடி ஆக்குது?

Unknown said...

அந்த யூ டியீப் வீடியோ திருப்பூரில் எடுத்தது, அந்த காவல்துறை பெண்மணி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்தவர், அவர் லஞ்சம் வாங்கி மாட்டி, வெளியே வரமுடியாமல் கடைக்காரர் பிடித்துக் கொண்டார், அப்பொழுது நடந்ததுதான் அந்த வீடியோ, பிறகு காவல்துறையே அந்த கடை மீது படை எடுத்து மீட்டுக் கொண்டு போனது தனிக்கதை :-)

சக்தி கல்வி மையம் said...

Nice,சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீல்ஸ் சூப்பர். ராமதாஸ் காமெடி கலக்கல்

! சிவகுமார் ! said...

>>> இந்த சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பது வருத்தமே...வைகை.

! சிவகுமார் ! said...

>>> விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி, சுரேஷ் (இரவுவானம்). தங்களிடம் விரைவில் பேசுகிறேன்.

! சிவகுமார் ! said...

>>> வாங்க நண்பர் சக்தி.

! சிவகுமார் ! said...

>>> மீல்ஸ் நல்லா இருக்குன்னு சொன்ன ரமேஷுக்கு தேங்க்ஸ்!

MANO நாஞ்சில் மனோ said...

அடி தூள் மக்கா.......
ராமதாஸ் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்......
[[சத்தியமா நான் மெசேஜ் அனுப்பலை]]

! சிவகுமார் ! said...

MANO நாஞ்சில் மனோ said...
அடி தூள் மக்கா.......
ராமதாஸ் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்......
[[சத்தியமா நான் மெசேஜ் அனுப்பலை]]

>>> என்ன தலைவா இப்படி சொல்லிட்டீங்க. நீங்கதான்னு கேள்விப்பட்டேன்??

Unknown said...

அருமையா எழுதியிருக்கீங்க

பொன் மாலை பொழுது said...

இப்போது இந்த வீடியோ இணையத்தில் உள்ளது அவர்களுக்கு தெரியுமா? லஞ்ச ஒழிப்புத்துறை திருப்பூரில் இல்லையா என்ன?
மகா கேவலமாய் இருக்கு அரசிடம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இப்படி பிறரை சுரண்டியும் பணம் பண்ணுவது.லஞ்சம் என்றால் ஆண் என்ன பெண் என்ன?

Unknown said...

அந்த காவல் துறை பெண்மணியை மீது பரிதாபம் தான் வந்தது

காமராஜர் அவர் ஆட்சியில் நாம் பிறக்காதது நாம் செய்த பாவம்

அஞ்சா சிங்கம் said...

காக்கி சட்டை போட்டபின் ஆணாவது பெண்ணாவது ......
அவர்கள் ஒரு தனி இனம் ............

அஞ்சா சிங்கம் said...

மீல்ஸ் சூப்பர் .............

எப்பூடி.. said...

கடைத் திறப்பிற்கு வாழ்த்துக்கள், சைவ சாப்பாடு என்பது சிறப்பு. முதல் பகிர்வு நன்றாக உள்ளது, ரயிலில் கண்பார்வை புதிதாக கிடைத்த சிறுவனது ஒளிமாயம் புதிதாகவும் நன்றாகவும் உள்ளது.

Chitra said...

அந்த வீடியோ வை பார்த்து இருக்கிறேன்... கொடுமை போங்க!

செங்கோவி said...

ஏன் எல்லோரும் ராமதாஸையே இந்த வாரம் நோண்டுறீங்க..மீல்ஸ் சூப்பர்..தொடருங்கள்..

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள் சிவா...

வீடியோ பார்த்தேன்... ஆனால் ஆடியோவில் எதோ பிராப்ளம்... சரியாக புரியவில்லை... என்ன மேட்டர்...?

மாணவன் said...

//மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்//

super

டக்கால்டி said...

மீல்ஸ் அருமை... பீடா கிடைக்குமா?

திருப்பூர் சரவனக்குமார் said...

மீல்ஸ் அருமை போங்க..

! சிவகுமார் ! said...

>>> ஜெய்சங்கர், அஞ்சாசிங்கம், செங்கோவி, சித்ரா, மாணவன், திருப்பூர் சரவணகுமார் ஆகிய அனைவருக்கும் என் நன்றி. செவ்வாய்கிழமை மீல்ஸ் கிடைக்கும்

! சிவகுமார் ! said...

>>> என்னத்த சொல்ல கக்கு மாணிக்கம் அண்ணே.

>>> உண்மைதான் மணி. நம்ம கிரகம்.

>>> அதுவும் சரிதான் செல்வின்.

>>> ஜீவா, வருகைக்கு நன்றி.

>>> நீங்க ஆரம்பிச்சி வச்சதுதான் செங்கோவி!! அப்படியே தொடருது.

// டக்கால்டி said...
மீல்ஸ் அருமை... பீடா கிடைக்குமா?//

>>> பீடா என்ன. அதற்கும் மேலே கிடைக்கும். என் அடுத்த தளத்தில்...
Nanbendaa.blogspot.com

! சிவகுமார் ! said...

>>> வாங்க பிரபா, எனக்கும் நீங்க தான் இன்ஸ்பிரேசன். Thanks. வீடியோ மேட்டரை நேரில் சொல்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீல்ஸ் நல்லாருக்குங்கோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீடியோ கேவலம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராமதாசு பாவம்ல? எங்கே தாவனும்னு தெரிஞ்சா இன்னேரம் தாவி இருக்க மாட்டாரா?

! சிவகுமார் ! said...

>>> வாங்க ராமசாமி. மீல்ஸ் சாப்பிட்டதற்கு நன்றி. நேரில் ‘வீடியோ’ போல பல காட்சிகளை அன்றாடம் பார்க்கிறோம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

//ராமதாசு பாவம்ல? எங்கே தாவனும்னு தெரிஞ்சா இன்னேரம் தாவி இருக்க மாட்டாரா?//

>>> அய்யய்யோ படத்துக்கும் கமண்டுக்கும் சம்மந்தம் இல்லீங்கண்ணா...ஹே..ஹே..

Madurai pandi said...

அளவு சாப்பாடு அளவுக்கு இருக்கு!!! எப்ப புல் மீல்ஸ் ?

Anonymous said...

இன்னும் சுவை தேவை

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Related Posts Plugin for WordPress, Blogger...