CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, February 7, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (07/02/11)
                                                                      


இடியாப்பம்(ஒரே சிக்கல்ப்பா) :

தற்காலிக அரசு வேலைக்கு கணக்கு வாத்தியார்கள் தேவை:


வாழை 'இலை' சோறு போட்டு 'கை' நிறைய சம்பளம் தரப்படும். 'சூர்யோதயத்திற்கு' முன் வேலைக்கு வரவேண்டும். வேலை நேரத்தில் பம்பரம் விளையாடி சேட்டை எதுவும் செய்யப்படாது. 


மேலும் வெவரம் வேணுமா....லுக் டவுன்: (டூ இன் ஒன் கமண்ட்). 

                                                                                                                                         
 .............................................................               


சாம்பார்:
சென்ற வாரம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்கார பெண்மணியின் போன் கால். எடுத்து பேசினேன். (இங்கிலீஷ்லதான்). "ஹல்லோ, யார் வேணும்". அவிங்க சொன்னாங்க " ஐ வான்ட் டு ஸ்பீக் வித் ராஜா, டெல்லி". நான் "சாரி, இது பெங்களூர் பிராஞ்ச். நீங்க டெல்லிக்கு கால் செய்ங்க". அந்த பெண் மீண்டும் "இல்லை நான் இதற்கு முன் இந்த எண்ணில் பேசி உள்ளேன். ராஜா டில்லியை கூப்பிடுங்கள்". நான் சற்று குழம்பினேன். என்னடா இது. சென்னைக்கு போன் செய்துவிட்டு டில்லி நபரை அழைக்கிறாரே.  நம் அணியில் ராஜா என்று ஒருவர் உள்ளார். ஒருவேளை அவராக இருக்குமோ என்று ராஜாவிடம் போன் தந்தேன். கடைசியில் அவர்தான் அந்த பெண் எதிர்பார்த்த நபர். என் நண்பனிடம் விவரம் கேட்டேன். அவன் "மாப்பு, ராஜாவோட அப்பா பேரு டில்லி. அது தெரியாமா நீ பல்ப் வாங்குனியே. ஹே... ஹே.." என்று கொக்கரித்தான். விட்ரா விட்ரா..சிவா. சண்டைனா சட்ட கிழியத்தான செய்யும். இல்லன்னா தொழில் பண்ண முடியுமா..
..................................................................................                                                     

(பப்)படம்:
(பழசா இருந்தாலும் மொறு மொறுன்னு இருக்குல்ல) 

........AND THE OSCAR GOES TO.....
                                                             

http://www.youtube.com/watch?v=_HT5fiTOzF0
....................................................................


ஆப் பாயில் :


பக்கிரி: "டேய், அண்ணனுக்கு ஒரு முட்ட போட்டுட்டு போ"
420:  "யாரு நீ. ஒனக்கு எதுக்கு நா முட்ட போடணும்?"
பக்கிரி: "யாரா? ஜெயிலுக்கு புதுசா நீ. ஆமா, நீ பாக்கெட் போட்ட பணத்துல எத்தன சைபர் இருக்கும்?"
420: "பத்தாயிரம். அப்ப நாலு சைபர்"
பக்கிரி: "ஹே ஹே.. நா அடிச்சா பணத்துக்கு அஞ்சி சைபர். இப்ப என்ன சொல்ற"
420: "இந்தாங்கண்ணே...என் முட்ட"
பக்கிரி: "அது. கெளம்பு. அது யாரு புதுசா இன்னொருத்தரு? அல்லோ...எக்கீஸ் மீ...என் தட்டுல உங்க முட்டைய போட்டுட்டு கெளம்புங்க?"
840:  "யாருடா நீயி?"
பக்கிரி: "என்னாது..நா யாரா. பாம்ப் பக்கிரி. ஒரே ஒரு குண்டு. பொறி உருண்ட சைசுல. அப்படி லேசா சுண்டி விட்டேன். ஒரு இன்ஸ்பெக்டர், நாலு பி.சி. ஸ்பாட் அவுட்"
840: "ஓ"
பக்கிரி: "ஓ..வா. ஏன்யா இவ்ளோ லென்க்தா டயலாக் பேசி இருக்கேன். ஒரே வார்த்தைல ஆப் பண்ணிட்ட. ஆமா ஆப்ட்ரால் நீ என்ன பண்ணி இருப்ப. நீ அடிச்ச பணத்துல மிஞ்சிப்போனா எத்தனை சைபர் இருக்கும். ஒண்ணு, ரெண்டு, நாலு, ஏழு....??"
840: " 1,760,000,000,000.  நீயே எண்ணிக்க "   
பக்கிரி: "அய்யாடி! பத்து முட்டயா???  பிரதர்...இனிமே நீங்கதான் தலைவர். நான் உங்க அடிம. இனிமே நீங்க ஒரு கோடு போட்டு நிக்க சொன்னா அந்த இடத்துலயே கெடையா கெடப்பேன். இந்தாங்க இது என் முட்ட. நீங்க சாப்டுங்க. கார்டன்.. சாரி வார்டன் கூப்புடறாரு..நான் கெளம்பறேன். அவ்வ்..."
........................................பாயசம்: 


                                                            
 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மகுடம் சூடப்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது விஜய் டி.வி.யில் செய்து வரும் 'அது இது எது'  எனும் நிகழ்ச்சியை சமீபகாலமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிமிக்ரி மூலம் புகழ் பெற்றவர்கள்  ஒரு மணி நேரம் தொய்வின்றி, குறிப்பாக மிமிக்ரி செய்யாமல்  வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துவது சுலபமல்ல. அதை இவர் செய்து வருவது பாராட்டத்தக்கது. தான் அனைவரையும் கிண்டல் அடிப்பது, தன்னை மடக்க நினைப்பவர்களிடம் 'கோல்' வாங்காமல் பெரும்பாலும் தப்பிப்பது, 'சிரிச்சா போச்சி' சுற்றில் வரும் கலைஞர்கள் சற்று போர் அடிக்க ஆரம்பித்தால் "ஹலோ, அதெல்லாம் சரி. கான்சப்ட் எங்கே?" என்று வாருவது என வாரா வாரம் அசத்துகிறார் மனிதர். என்று வெள்ளித்திரையில் கால் பதிக்க போகிறார் என்று தெரியவில்லை. நாயகன்/நகைச்சுவை நடிகர் இரண்டுக்குமான தகுதி இவருக்கு உள்ளது என்று நம்புகிறேன். இவரைப்போலவே திறமை உள்ள ஆதவன்('கலக்கப்போவது யாரு' வெற்றியாளர்), மேலும் உயரத்தை தொடும் நாள் படைப்பாளிகள் கையில்தான் உள்ளது.   

.............................................
Pics,Video: Google,Youtube.
..............................................


36 comments:

Unknown said...

சிவகுமார் ஆபாயில் ,பாயசம் னு வித்யாசமான ஸ்பெஷல் மீல்ஸா இருக்கே உங்க ஊருலலாம் இப்படித்தானா

Chitra said...

சூப்பர் மீல்ஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im biggest fan of sivakarthikeyan

idroos said...

Vadai

idroos said...

Vadai

idroos said...

Sivakarthikeyan nichayam cinemavukku varalam.

! சிவகுமார் ! said...

>>> வாங்க மணி. எல்லாம் நம்ம ஊருதான். என்ன மாதிரி நாடோடிக்கு ஏது சொந்த ஊரு.

! சிவகுமார் ! said...

>>> சித்ரா அக்கா, வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

>>> ஐத்ருஸ், மன்னிக்கவும். மெது வடைதான் உங்களுக்கு. மதுரை மணி சூடான வடைய கவ்விட்டு போய்ட்டாரு.

! சிவகுமார் ! said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
im biggest fan of sivakarthikeyan

>>> நானும் அப்படித்தான் ரமேஷ். சிவகார்த்திகேயன் பெரும்பாலும் அசட்டு காமெடி செய்வதை இதுவரை நான் பார்த்ததில்லை. He is simply Rocking!!

உளவாளி said...

மீல்ஸ் ருசியாவே இருக்கு. நாளைக்கு எதாவது ஸ்பெஷல் இருந்த சொல்லுங்க (வடை முக்கியம் )

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் ! said...

>>> ஐத்ருஸ், மன்னிக்கவும். மெது வடைதான் உங்களுக்கு. மதுரை மணி சூடான வடைய கவ்விட்டு போய்ட்டாரு.////////////////////////
நான்தான் தட்டு நிறைய வடைய வச்சிக்கிட்டு காத்திருக்கேன் அங்கேவந்து கவ்விக்க வேண்டியது தானே ..
வர வர மணி சேட்டை அதிகமா இருக்கு எல்லா வடையும் இன்னக்கி அவருதான் எடுத்திருக்காரு ..........

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
! சிவகுமார் ! said...

>>> நண்பர் உளவாளி. மீல்ஸ் சாப்பிட்டதற்கு நன்றி!

! சிவகுமார் ! said...

அஞ்சா சிங்கம் said...

//வர வர மணி சேட்டை அதிகமா இருக்கு எல்லா வடையும் இன்னக்கி அவருதான் எடுத்திருக்காரு//

>>> சிங்கமே..மேட்டர் தெரியுமா. நம்ம மணி வர்ற தேர்தல்ல சுயேட்சையா நிக்க போறாரு. சின்னம்..வடை!

! சிவகுமார் ! said...

இராஜராஜேஸ்வரி said...

//அசத்தலான அறுசுவை உணவு!சுவைத்தோம்.//

>>> >>> முதல் வருகைக்கு நன்றி சகோதரி!

எப்பூடி.. said...

சிவகார்த்திகேயனை எனக்கும் மிகவும் பிடிக்கும், பதிவு சிறப்பாக உள்ளது, அந்த சிம்பு வீடியோ? ................... சான்சே இல்லை

Prabu M said...

மறுபடியும் திருப்தியான சாப்பாடு நண்பா...
வெரைட்டி மெனு போட்டு அசத்துறீங்க!
வாழ்த்துக்கள் :)

செங்கோவி said...

ஆஃபாயில் சூப்பர்..

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

AND THE OSCAR GOES TO..... STR :P

Philosophy Prabhakaran said...

சிவா... நீங்க பிரபல பதிவர் ஆகிட்டு வர்றீங்க போல... வாழ்த்துக்கள்... பதிவை படிச்சிட்டு வர்றேன்...

Philosophy Prabhakaran said...

இடியாப்பம் சூப்பர்... சாம்பார் கொஞ்சம் மொக்கை தான்... பப்படம் மறக்க முடியுமா...? ஆப்பாயில் கான்செப்ட் நன்று... சிவ கார்த்திகேயனை எனக்கும் பிடிக்கும்...

! சிவகுமார் ! said...

எப்பூடி.. said.

//அந்த சிம்பு வீடியோ? .. சான்சே இல்லை//

>>> எவர்கிரீன் வீடியோ ஆச்சே..மறக்க முடியுமா.

! சிவகுமார் ! said...

பிரபு எம் said...

// மறுபடியும் திருப்தியான சாப்பாடு நண்பா...
வெரைட்டி மெனு போட்டு அசத்துறீங்க!
வாழ்த்துக்கள் //

>>> மிக்க நன்றி பிரபு!

! சிவகுமார் ! said...

செங்கோவி said...
//ஆஃபாயில் சூப்பர்//.

>>> இப்போதைக்கு தேவையான ஐட்டம் ஆச்சே..

! சிவகுமார் ! said...

//தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
AND THE OSCAR GOES TO..... STR :P//

>>> முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

Philosophy Prabhakaran said...
சிவா... நீங்க பிரபல பதிவர் ஆகிட்டு வர்றீங்க போல. வாழ்த்துக்கள். பதிவை படிச்சிட்டு வர்றேன்.

>>> நான் எப்பவுமே வளரும் பதிவர்தாங்க!!

! சிவகுமார் ! said...

This comment has been removed by the author.

! சிவகுமார் ! said...

Philosophy Prabhakaran said...
இடியாப்பம் சூப்பர்... சாம்பார் கொஞ்சம் மொக்கை தான்...

>>> >>> அதனால்தான் அதுக்கு சாம்பார்னு பேர் வச்சிருக்கேன் பிரபா.

ஆயிஷா said...

சூப்பர் மீல்ஸ்!

! சிவகுமார் ! said...

வருகைக்கு நன்றி சகோதரி ஆயிஷா!

Madurai pandi said...

சிவகார்த்திகேயனை எனக்கும் மிகவும் பிடிக்கும்//

எனக்கும் தான்.. நல்ல திறமைசாலி

சக்தி கல்வி மையம் said...

சிவகுமார் ! சொன்னது…

>>> அசத்தல்...அசத்தல்..!! நான் படித்த சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று நண்பரே! வாழ்த்துகள் கருண்!

/////////////
என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

RVS said...

மெட்ராஸ் பவன் அண்ணாச்சிக்கு வணக்கம்.
ஃபுல் மீல்ஸ் ஒரு கட்டு கட்டியாச்சு. நல்லா இருந்தது. ;-)

! சிவகுமார் ! said...

>>> நன்றி கருண்!

! சிவகுமார் ! said...

>>> முதன் முறை வருகை தரும் RVS அவர்களுக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...