CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, January 24, 2011

TANGLED 3-D

ஸ்டார்ட்டர்: 
கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. இந்த படத்தை காண ஆவலாக உள்ளதாக நான் சென்ற வருடப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான லிங்க்: விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு கடந்த வெள்ளி அன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது.  


சாப்பாடு:
சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை உடல் நலம் சரியின்றி வாடும் குட்டி இளவரசி ரபான்செல்லுக்கு தருகிறார் மன்னர். அவள் குணமாகிறாள். அவளை மூதாட்டி கடத்தி செல்கிறாள். உயரமான இடத்தில் இருக்கும்  இல்லத்தில் அவளை எவர் கண்ணுக்கும் படாமல் வளர்க்கிறாள். பதினெட்டு வயது நெருங்குகையில் அடைபட்ட இடத்தை விட்டு வெளியேற எண்ணுகிறாள் ரபான்செல். அதற்கு உதவி செய்ய வருகிறான்  ரைடர். அடுத்து என்ன நடந்தது என்பதை திரையில் காண்க. 

சிறந்த அனிமேஷன் படங்களை பெரும்பாலும் தவற விடுவதில்லை நான். அந்த படங்களும் இதுவரை என்னை ஏமாற்றியதில்லை. இதுவும் அப்படித்தான். படம் முழுக்க நகைச்சுவை தெறிக்கிறது. தியேட்டரில் மக்கள் மனம் விட்டு சிரித்த படங்களில் இதுவும் இடம்பெற்று விட்டது. கிட்டத்தட்ட ஆறு பாடல்கள். அனைத்தும் கதை சார்ந்தவை. எனக்கு மிகவும் பிடித்தது "ட்ரீம்" எனும் தலைப்பில் அமைந்த பாடல். தங்கள் வாழ்க்கை கனவு குறித்து ஒவ்வொரு கதாபாத்திரமும் பாடும் பாடல். அசத்தல். ரபான்செலின் மிக நீளமான கூந்தல்தான் படத்தின் ஹைலைட்.  ஒரு காட்சியில் நாயகன் ரைடர் மற்றும் நாயகி தப்பி ஓடி ஒரு குகையில் மறைகின்றனர். அப்போது கடல் நீர் சீறி வரும் காட்சி..சத்தியமாக அனிமேசன் என்று நம்ப முடியவில்லை. தொழிநுட்ப நேர்த்தியின் உச்சம். நான் அரசனாக இருந்தால் அதை உருவாக்கிய கலைஞர்களுக்கு ஒவ்வொரு விரலிலும் தங்க மோதிரம் அணிவிப்பேன். நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 

படம் முழுக்க நகைச்சுவை வசனங்கள் மற்றும் காட்சிகள்  பட்டையை கிளப்புவதால் எதை சொல்வது என்று தெரியவில்லை. ஓரிரண்டு மட்டும் உங்களுக்காக:

* ரபான்செலின் வளர்ப்பு தாய் கண்ணாடி அருகே நிற்கிறாள். ரபான்செலை அழைத்து அருகில் நிற்க வைத்து சொல்கிறாள் "அந்த கண்ணாடியில் தெரியும் இளம் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்". ரபான்செல் வெட்கப்படுகிறாள். அதற்கு வளர்ப்பு தாய் "உன்னை சொல்லவில்லை. என்னை சொன்னேன்" என டீஸ் செய்யும் காட்சி. 

* கிளைமாக்ஸில் நாயகன் பேசும் வசனம் "அதுதான் என்ன நடக்கபோகிறது என்று உங்களுக்கு தெரியுமே. அவளும் நானும் சந்தோசமாக இருந்தோம்". செம நையாண்டி. 

                                                                    
படத்தில் வரும் இரு கேரக்டர்கள் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். வெள்ளை குதிரை மாக்ஸிமஸ் மற்றும் அடிக்கடி நிறம் மாறும் தவளை பாஸ்கல். மாக்ஸிமஸ் பயங்கர கோபக்காரன். இவன் செய்யும் அட்டகாசங்களுக்குதான் அரங்கில் பலத்த கைதட்டல். அதற்கு சற்றும் சளைக்காத பாஸ்கல் குழந்தைகளின் மனதை கொள்ளை கொள்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் 3-D. அந்த அனுபவத்தை அரங்கில் பாருங்கள். கண்டிப்பாக மறக்க மாட்டீர்கள். நாயகனும், நாயகியும் ஒரு படகில் நிலவொளியில் பேச, லாண்டர்ன் விளக்குகள் மிளிரும் காட்சி அற்புதம். இந்தியாவில் இருக்கும் நண்பர்கள்/சகோதரிகள் பலர்க்கு வரும் புதன் குடியரசு தின விடுமுறையாக இருக்கும். தங்கள் குழந்தைகளுக்கும்தான். அவர்களை இப்படத்திற்கு அழைத்து செல்லுங்கள். பிடித்து உள்ளதா என அவர்களிடம் கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் என்னை சபியுங்கள். பிற நாட்டு மக்களும் இப்படத்தை தவறாமல் பார்க்கவும். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினர் மத்தியிலும் அனிமேசன் படங்கள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.  அதற்கு TANGLED மட்டும் விதிவிலக்கில்லை. 

ஊறுகாய்: 
படம் முடிந்ததும் சென்னை சத்யம் அரங்கில் மழலை பட்டாளங்கள் TANGLED படத்தின் விளம்பர பேனர் முன் நின்று கொண்டு தங்கள் பெற்றோருடன் மொபைலில் போட்டோ எடுக்க சொல்ல பல பெற்றோர்கள் அதை எடுத்த காட்சி எனக்கு கிடைத்த மிகப்பெரிய போனஸ். பல நிமிடங்கள் நானும் என் தாயும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.  எத்தனை வகையான படங்கள் வந்தாலும் அனிமேசன் படங்களை குழந்தைகள் சூழ பார்ப்பதில் கிடைக்கும் நிறைவே தனிதான். 

TANGLED 3-D :   குழந்தைகளுக்கு நீங்கள் தரப்போகும் அழகான பரிசுசந்தேகமின்றி. 


 சென்னையில் TANGLED வெளியாகி இருக்கும் தியேட்டர்கள்:

 * சத்யம் (சீசன்ஸ்) - 4.15 PM,  எஸ்கேப்(கைட்ஸ்) - 2 PM, 7.15 PM
 (சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சிறப்பு காலை காட்சிகள் உண்டு).

* ஏ.ஜி.எஸ். - 1.45 PM, 7.30 PM, சங்கம் 3.15PM, ஐநாக்ஸ் - 4.10 pm. PVR - 3.45 PM.

* தேவிகலா - 1 and 4 PM. மாயாஜால் - 1.50 and 4 PM.

                                                            
ட்ரைலர்:


http://www.youtube.com/watch?v=sSx1dYJlJh4..................................................................................
"சென்னை புத்தக கண்காட்சியில் நான்"
படிக்க Visit my other site: nanbendaa.blogspot.com

Pics and Videos: Google, Youtube.
..................................................................................

மீண்டும் சந்திப்போம்.
                                                                


                                                                  

18 comments:

எப்பூடி.. said...

ஹ்ம்ம், எங்களுக்கு இந்தமாதிரி படங்கள், ஒலக சினிமாக்கள், ஹிந்தி படங்கள் எவற்றையும் பார்க்கும் கொடுப்பனவு இல்லை :-((

MANO நாஞ்சில் மனோ said...

vadai............

MANO நாஞ்சில் மனோ said...

சரி பாத்துர வேண்டியதுதான்....

! சிவகுமார் ! said...

எப்பூடி.. said...
எங்களுக்கு இந்தமாதிரி படங்கள், ஒலக சினிமாக்கள், ஹிந்தி படங்கள் எவற்றையும் பார்க்கும் கொடுப்பனவு இல்லை.

>>> ஏன் ஜீவா???

! சிவகுமார் ! said...

>>> மனோ சார், கண்டிப்பா பாருங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை மாதிரி குழந்தைங்க பார்க்க வேண்டிய படமா?

! சிவகுமார் ! said...

>>> மம்மி, ரமேஷ் அண்ணன் என் கைல இருந்த சாக்லேட்டை பறிச்சிட்டு என்னமோ கேக்குறார்.

Unknown said...

குழந்தைகள் படமா.... எஸ்கேப்ப்ப்ப்ப்

! சிவகுமார் ! said...

இரவு வானம் said...
குழந்தைகள் படமா.... எஸ்கேப்ப்ப்ப்..

>>>இரவு வானம், பதிவில் நான் எழுதிய வரிகள்
//குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினர் மத்தியிலும் அனிமேசன் படங்கள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதற்கு TANGLED மட்டும் விதிவிலக்கில்லை.//

>>> அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் தொழிநுட்பத்தில் அசத்தி உள்ளது டிஸ்னி.

போளூர் தயாநிதி said...

parattugal

Chitra said...

good review. yet to see the movie...

செங்கோவி said...

நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க..பார்க்க முயற்சிக்கிறேன்..

Philosophy Prabhakaran said...

Good Review Shiva...

// தேவிகலா - 1 and 4 PM //

இது மட்டும்தான் நம்ம தியேட்டர்... மத்ததெல்லாம் பெரிய மனுஷங்க பாக்குற தியேட்டர்...

! சிவகுமார் ! said...

>>> Thanks Dhaya and Chitra!

! சிவகுமார் ! said...

>>> பாருங்க செங்கோவி.

! சிவகுமார் ! said...

//மத்ததெல்லாம் பெரிய மனுஷங்க பாக்குற தியேட்டர்.//
>>> அப்படி எல்லாம் இல்லை பிரபா. காசு இருந்தா எல்லா தியேட்டரும் ஒண்ணுதான்.

அஞ்சா சிங்கம் said...

ம்................. இதில் அந்த குதிரை பேரு மார்கஸ்ன்னு நினைக்கிறன் ரொம்ப நல்லா பன்னிருபாங்க ..

! சிவகுமார் ! said...

>>> shelwin, the horse name is maximus.

Related Posts Plugin for WordPress, Blogger...