CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 11, 2011

No One Killed Jessica                                                      
சென்ற சனி அன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரை எடுத்துப்பார்த்தால் 'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' படத்திற்கு 4 ஸ்டார்கள் தந்து இருந்தனர். உடனே நெட்டில் பார்த்தால் மேலும் சில விமர்சனங்களும் படம் நன்றாக இருப்பதாகவும், சுமார் என்று மற்ற ஊடகங்களும் கூற..  ஞாயிறு அன்று படம் பார்த்தேன். தில்லியில் உள்ள ஒரு பாரில் வேலை செய்த ஜெஸ்ஸிகா 1999 ஆம் ஆண்டு மனு ஷர்மா என்பவனால் கொல்லப்பட்டு நாடெங்கும் பரபரப்பாக செய்திகளில் அடிபட்ட உண்மை சம்பவம்தான் இப்படம். படம் செல்ல முக்கியக்காரணம் ஹீரோ என ஒருவரும் இல்லை.. ராணி முகர்ஜி மற்றும் வித்யா பாலன் இருவர்தான் மைய கதாபாத்திரங்கள். 

நிஜத்தில்.... ஜெஸ்ஸிகா மற்றும்  மனுஷர்மா 
                                                                       .
படத்தின் டைட்டில் போடும்போது தில்லி நகரம் பற்றி ஒரு பாடலும்(படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்), ராணி முகர்ஜியின் குரலும் மாறி மாறி ஒலித்தது நன்றாக இருந்தது. தில்லி நகரில் ஒரு பாரில் வேலை செய்கிறார் சப்ரினாவின் (வித்யா பாலன்) சகோதரி ஜெஸ்ஸிகா. ஒரு நாள் நள்ளிரவு முக்கிய அரசியல்புள்ளியின்  மகன் குடிக்க மேலும் சரக்கு கேட்டு தகராறு செய்கிறான். "அனைத்தும் விற்பனையாகிவிட்டது, சென்று விடுங்கள்" என ஜெஸ்ஸிகா சற்று அதட்டலாக கூற அவளை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறான் அவன். 300- க்கும்  மேற்பட்டவர்கள் அவன் தப்பி ஓடுவதை பார்க்க.. வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. ஒவ்வொரு சாட்சியையும் பணபலத்தால் தன்பக்கம் மாற்றி இறுதியில் தன் மகனை விடுதலை செய்கிறார் அரசியல்வாதி. ஒரு சில வருடங்களுக்கு பிறகு அவ்வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார் NDTV - யின் செய்தியாளர் மீரா (ராணி முகர்ஜி). தீர்ப்பு என்னவாயிற்று என்பதே மீதிக்கதை. 

அதிரடியான செய்தியாளராக வரும் ராணி முகர்ஜியின் நடிப்பு கனகச்சிதம். வித்யா பாலனும் அவ்வாறே. ஜெஸ்ஸிகாவாக வரும் பெண்ணின் நடிப்பு சுமார்தான். ஒரு வழக்கு செல்லும் போக்கை அருகில் இருந்து பார்ப்பது போல் நன்றாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைகிறது. அர்த்தமுள்ள திரைப்படமாக, அடுத்த வருடம் விருதுகளை வெல்லும் படமாக இருக்கும் No one killed Jessica. 


படத்தில் நான் ரசித்தவை:

* "தில்லி, தில்லி" என தலைநகரத்தை பற்றி எடுக்கப்பட்ட பாடல். 

*  மப்டி உடையில் போலீஸ் அதிகாரியாக சில காட்சிகள் வந்தாலும், நன்றாக நடித்த நபர்.

* கோர்ட்டில் நடக்கும் விவாதங்களும், அக்காட்சியில் நடித்தவர்களின் முகபாவங்களும். 

* நாயகன் இன்றியே இப்படி ஒரு கதையை எடுக்கத்துணிந்த இயக்குனர் ராஜ்குமாரின் தைரியம். 'ஆமிர்' எனும் அசத்தலான ஹிந்தி படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதை இயக்கியதும் இவர்தான் என்பது இப்போதுதான் தெரிந்தது.  
    
பிடித்த காட்சி
ராணி முகர்ஜி இல்லத்தில் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெஸ்ஸிகா வழக்கு பற்றிய காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. உடனே டி.வி.யை ஆப் செய்கிறார்.  ஏனெனில், இந்த காட்சி வருவதற்கு முன், ஜெஸ்ஸிகா கொலை வழக்கை NDTV யில் விரிவாக போட வேண்டும் என தன் ஜூனியர் கூறுகையில் அதை மறுத்துவிட்டு, கந்தகார் விமானக்கடத்தலை பிரதான செய்தியாக கூறி இருப்பார் ராணி முகர்ஜி. ஆனால் டி.வி. பார்க்கையில் ஜெஸ்ஸிகாவின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என முடிவெடுப்பார் ராணி முகர்ஜி. அந்த முடிவை மனதில் எடுத்து விட்ட பிறகுதான் டி.வி.யை ஆப் செய்வார். ஆனால் படம் பார்க்கையில் ஜெஸ்ஸிகா வழக்கை ஒரு பொருட்டாக மதிக்காமல் ராணி டி.வி.யை ஆப் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். சினிமா ரசிகனின் ரசிப்புத்திறனை  உயர்த்த இயக்குனர் செய்த சிறப்பான காட்சி. இன்னொரு காட்சியில் வேலைக்கார பெண்ணை அதட்டி எழுப்புவார் ராணி. அப்பெண் எழுந்ததும் ராணியை "குத்தி" (நாய்) என திட்டுவாள். சற்று தொலைவில் இருக்கும் ராணி "சொன்னதை கேட்டுவிட்டேன். வேலையைப்பார்" என்பார். யதார்த்தத்தின் பிரதிபலிப்பு. 

உலக படங்களுக்கு இணையாக ஹிந்தி படங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஆனால், சமீபகாலமாக F**k எனும் வார்த்தை பாலிவுட் திரைப்படங்களில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இப்படமும்தான். வழக்கமான  படம் பார்க்க விரும்பாமல், வழக்கு பற்றிய படம் பார்க்க எண்ணுபவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். கடந்த மூன்று வருடங்களாக பாலிவுட்டில் வருடத்தின் முதலில் வந்த அனைத்து படங்களும் ஊத்திக்கொண்டது. இந்த வருடம் ஜனவரி ஏழாம் தேதி வந்த படம்தான் No One Killed Jessica. மல்டிப்ளக்ஸில் வசூல் நன்றாக இருப்பதாகவும், சாட்டிலைட் உரிமையில் போட்ட பணத்தை தயாரிப்பாளர்கள் எடுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ட்ரைலர்:


http://www.youtube.com/watch?v=yWguKahcbD0


இன்னும் சில நாட்களில் சிறந்த ஹிந்தி சினிமா படைப்பாளிகளின் படங்கள் திரையில்  தொடர்ந்து வர இருப்பதால் விருது வழங்கும் குழுவிற்கு நிறைய வேலை இருக்கும் என்பது மட்டும்  உறுதி.

my other site: nanbendaa.blogspot.com

23 comments:

சக்தி கல்வி மையம் said...

படம் சுமாராக இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

Madurai pandi said...

படம் பார்த்துரலாம்...

அருண் பிரசாத் said...

பார்கலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு... இனி பார்த்தே ஆகணும்

ஆனந்தி.. said...

இப்படி ஒரு படம் வந்ததே உங்க பதிவில் தான் தெரிஞ்சுகிட்டேன்..நன்றி சிவா..

ஆமினா said...

நல்ல விமர்சனம் சகோ

நாளைக்கு அன்கே தான் போக போறேன்... ;)

செங்கோவி said...

விமர்சனம் அருமை..பார்த்திடுவோம்.

Chitra said...

படம் பார்க்கலாம் போல....

Philosophy Prabhakaran said...

நானெல்லாம் டி.வி.டி வந்தாத்தான் பார்ப்பேன்... ஷாருக்கானின் ரா ஒன வரும்போது வேண்டுமானால் நாம் இருவரும் சேர்ந்து பார்க்கலாம்...

அஞ்சா சிங்கம் said...

அருமையான விமர்சனம் படம் பார்த்துட்டு சொல்றேன் ...........

சண்டே புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் ...................

அஞ்சா சிங்கம் said...

அருமையான விமர்சனம் படம் பார்த்துட்டு சொல்றேன் ...........

சண்டே புத்தக கண்காட்சியில் சந்திக்கலாம் ...................

அஞ்சா சிங்கம் said...

கமன்ட் மாடுரேஷன் எடுத்து விடுய்யா ..........

டென்சன் பண்ணுது ............

! சிவகுமார் ! said...

>>> கருத்திட்ட அனைவரும் நேரம் இருப்பின் படம் பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை சொல்லவும். Thanks for reading…

Unknown said...

nice review

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

send ur number to sgramesh1980@gmail.com

pichaikaaran said...

நல்ல விமர்சனம்

Shankar said...

Good review.
I am an ardent fan of Cable.I followed the link. I will read your columns also. You are in my subscription in the reader. Good Luck.

dinesh said...

Nice review, and please give english movie review more

! சிவகுமார் ! said...

Thanks very much Shankar sir. Its my pleasure. I met brother cableshankar. He is a very down to earth person.

! சிவகுமார் ! said...

sure dinesh. thanks for your comments.

puduvaisiva said...

விமர்சனத்துக்கு நன்றி சிவகுமார் . . .

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

ஆயிஷா said...

நல்ல விமர்சனம் சகோ

Related Posts Plugin for WordPress, Blogger...