CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 22, 2011

DHOBI GHAT - விமர்சனம்

              


                                                  
                                                              வெற்றிக்கூட்டணி


 ஸ்டார்ட்டர்:     
அமீர் கான்... இந்த ஒரு பெயருக்காக மட்டுமே நான் சென்ற படம் Peepli live. ஆனால் ஏனோ அந்த படம் எனக்கு பிடிக்கவில்லை. அது குறித்து சென்ற வருடம் நான் எழுதியதை பார்க்க - பீப்ளி லைவ் . இந்த முறை மீண்டும் அதையேதான் செய்தேன். Dhobi Ghat படம் குறித்து எந்த செய்தியையும் படிக்கவில்லை. Dhobi Ghat (Mumbai Diaries) பெயரை கண்டதும் உடனே ரிசர்வ் செய்துவிட்டேன். காரணம் பிராக்கெட்டில் இருந்த Mumbai Diaries எனும் வார்த்தைகள்தான். வழக்கம் போல மும்பை நகர மக்களின் ஏழ்மை அல்லது சலவை செய்யும் மக்களின் பிரச்னைகளை அலசாமல் மும்பையில் வாழும் ஒரு சிலரின் யதார்த்த வாழ்க்கையை படம் பிடித்து இருப்பார்கள் அமீர்கானும் அவரது மனைவி கிரணும்  என்று நம்பினேன்.  என்னை ஏமாற்றவில்லை அவர்கள். கிரணுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 35mm திரைதான் படம் முழுதும். 95 நிமிடம். இடைவேளை இன்றி. லண்டன் மற்றும் டொரோண்டோ திரைப்பட விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த திரைப்படம். 


சாப்பாடு:
ஓவியர் அருண்(அமீர்), என்.ஆர். ஐ. பெண்மணி ஷாய், துணி வெளுக்கும் இளைஞன் முன்னா, சராசரி குடும்பப்பெண் யாஸ்மின். இவர்கள் நால்வரை மையமாக கொண்ட யதார்த்த சினிமாதான்  Dhobi Ghat. முதல் சில நிமிடங்கள் மெதுவாக செல்கிறது படம். முன்னா எனும் இளைஞன் வந்த பிறகு ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களுடன் வேகம் பிடிக்கிறது.  படத்தில் ஆமிர்கான் தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்ற மூவருக்கும் முக்கியத்துவம் தந்தது மிகப்பெரிய விஷயம். இந்தியாவில் வேறெந்த முன்னணி நடிகருக்கும் இந்த தைரியம் இருக்குமா என்பது சந்தேகமே. பரபரப்பான திருப்பங்களோ, ஆழமான கதையோ இதில் இல்லை. மும்பையை சேர்ந்த ஒரு சிலரின் வாழ்வை புரட்டிப்பார்க்கும் ஆல்பம் இது. பீகாரில் இருந்து வந்து மும்பையில் வாழும் துணி வெளுத்தல் முன்னாவின் வேலை எனினும், நடிகன் ஆவதை லட்சியமாக கொண்டவன். ஷாய் அவனை நிற்க வைத்து ஸ்டில் எடுக்கும் காட்சி, லிப்டில் தகராறு செய்தல் என பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறான் முன்னா. ஷாய் கதாபாத்திரத்தில் வரும் மோனிகா சற்று ஏடாகூடமான பெண்ணாக நன்றாக  நடித்துள்ளார்.

                                                                
படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் யாஸ்மின். தன் கணவர் வாங்கி தந்த வீடியோவில் வீட்டில் நடக்கும் சம்பவங்களை  படம் பிடிக்கிறார். அது குறித்து தான் பேசுவதையும் பதிவு செய்கிறார். பிறந்த நாளுக்கு தனியே கேக் சாப்பிடுதல், பக்கத்துக்கு வீட்டு மூதாட்டியின் மனநிலை, தன் வீட்டு பணிப்பெண்ணிடம் பேசுதல், பக்ரீத் பண்டிகை குறித்து தன் மனநிலை இப்படி பல காட்சிகளை படம் பிடிக்கிறார். அந்த தொகுப்பு ஆமிர் கானிடம் கிடைக்க அதை அவ்வப்போது பார்க்கிறார் அவர். "பக்ரீத் என்றாலே சற்று பயமாக உள்ளது. ஆசையாய் வளர்த்த ஆட்டினை கொல்லப்போகிறோமே" என்று யாஸ்மின் சொல்கிறார். தன்னிடம் பணி செய்யும் பெண்மணி மற்றும் அவரது மகளையும் வீடியோவில் பதிவு செய்கிறார். வெகு இயல்பான அந்த காட்சிக்கு  சிரிக்கிறோம் பேர்வழி என்ற சாக்கில் சிரித்தார்கள் சில சக ரசிகர்கள். என்றேனும்  இப்படத்தை பார்க்கப்போகும் நண்பர்கள்/சகோதரிகள் இந்த காட்சியை பார்த்துவிட்டு சொல்லுங்கள். கண்டிப்பாக அதில் வாய்விட்டு சிரிக்க ஒன்றுமில்லை. சீரியஸ் ஆன காட்சி சிலருக்கு சிரிப்பை வரவழைக்கிறது. எப்படி என்று தெரியவில்லை. இல்லத்தில் தனிமையில் வாடும் பெண்ணின் மனநிலையை இவ்வளவு இயல்பாக இதற்கு முன் நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை. கிரண் ஒரு பெண் இயக்குனர் என்பது யாஸ்மின் பற்றிய காட்சிகளுக்கு பலமாக இருந்திருக்கிறது. இப்படி ஒரு தரமான படத்தை தந்த அமீர் - கிரண் தம்பதியினரை வாழ்த்தலாம். இதற்கு 'A' சர்டிபிகேட் தந்துள்ளனர். முதல் பாதியில் வரும் ஒரு சில வசனங்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். ஆனால் காட்சிகளில் ஒரு துளி ஆபாசம் கூட இல்லாமல் எடுத்துள்ளனர்.


உயரங்கள் மட்டுமே இலக்காக!!
                                                                    
திரைப்படம் பார்க்கும் உணர்வின்றி வாழ்வை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் துஸார். மெலடியாய் இதயத்தை வருடுகிறது குஸ்டாவோ சாண்டோலல்லா - வின் இசை. இவர் Brokeback Mountain(2005) மற்றும் Babel(2006) படங்களில் இசையமைத்ததற்காக ஆஸ்கர் வாங்கிய கலைஞர். தொடர்ந்து தரமான படங்களை தன் சொந்த பட நிறுவனம் மூலம் தந்து வரும் ஆமிர்கானின் மற்றுமொரு மைல்கல் தான் Dhobi Ghat. என்னை கவர்ந்த யதார்த்த சினிமாக்களில் இதுவும் இடம் பெற்றுவிட்டது. இப்படிப்பட்ட தரமான குறைந்த பட்ஜெட் படங்களை தமிழில் கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் முன்னணி நடிகர் எவரேனும் தயாரிக்க வருவார்களா? அப்படியே வந்தாலும் தன் கதாபாத்திரத்தை இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டமின்றி பின்னுக்கு தள்ளி மற்ற நடிகர்களை நடிக்க வைப்பார்களா என்பது மில்லியன்...அல்ல பில்லியன் டாலர் கேள்வி. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பார்க்கலாம்.

DHOBI GHAT -   இயல்பான சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். 

ட்ரைலர்(Dhobi Ghat):
http://www.youtube.com/watch?v=IUmiaoi7L7c


ஒரு இந்தி(ய) திரைப்படத்தின் ட்ரைலர். ஒரு சில நொடிகள் மட்டுமே. எந்த முன்னணி  நாயகனின் முகமும் இல்லாமல். ஆனால் அரங்கிற்கு வரவழைக்கும் யுக்தியுடன் தயாரிப்பது சாத்தியமா. அதற்கு பதில் சொல்லப்போவதுதான் அமீர்கான் தயாரிப்பில் ஜூலை -1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் Delhi Belly. அதன் ட்ரைலரை காண http://www.youtube.com/watch?v=M2q2k0c2pOQ.

ஊறுகாய்:
ஓரம்போ மற்றும் வ குவார்ட்டர் கட்டிங் எடுத்த புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் இந்த படத்தை தயவு செய்து பார்க்கவும்.

மீண்டும் சந்திப்போம்.
......................................................
Thanks: Google, Youtube.

சென்னை புத்தக கண்காட்சியில் நான்..
படிக்க please visit My other site: nanbendaa.blogspot.com
......................................................


                                                          

                                                                  

21 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓரம்போ மற்றும் வ குவார்ட்டர் கட்டிங் எடுத்த புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் இந்த படத்தை தயவு செய்து பார்க்கவும்.//

naan paarkka koodaathaa?

MANO நாஞ்சில் மனோ said...

பாத்துர வேண்டியதுதான்...

! சிவகுமார் ! said...

>>> ஐயோ... இந்த ரமேஷ் தொல்ல தாங்கலியே ஆண்டவா...

! சிவகுமார் ! said...

>>> பாருங்கள் மனோ!

Unknown said...

sarithan boss, good review

! சிவகுமார் ! said...

Thanks Night Sky!!

Ram said...

அமீர்கானோட தீவிர ரசிகன் நான்.. படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு.. பாத்துட்டு வந்து சொல்றன்.. அந்த இன்னொரு ட்ரைலரையும் பாத்தன்.. அருமையான ட்ரைலர்.. ஆனா கக்கூஸ்ல இப்படி கூட நடக்க வாய்பிருக்கா.??? வெரி பேட்.. அப்பரம் அது ஜூலை 1 ஜூன் 1 இல்ல...

! சிவகுமார் ! said...

>>> தகவலுக்கு நன்றி கூர்மதியன். திருத்திவிட்டேன்.
//அந்த இன்னொரு ட்ரைலரையும் பாத்தன். இப்படி கூட நடக்க வாய்பிருக்கா.??? வெரி பேட்.// தற்போதெல்லாம் டீசெர் ட்ரைலர் போடுகின்றனர். சில சமயம் படத்தில் அக்காட்சிகள் இருப்பதில்லை. Delhi Belly எப்படி என்று தெரியவில்லை.

ஆமினா said...

//இந்தியாவில் வேறெந்த முன்னணி நடிகருக்கும் இந்த தைரியம் இருக்குமா என்பது சந்தேகமே//

உண்மை

ஆமினா said...

நல்ல நடுநிலையான விமர்சனம்

! சிவகுமார் ! said...

>>> பதிவை வாசித்தமைக்கு நன்றி ஆமினா.

செங்கோவி said...

அமீர் எப்போதும் அப்படித்தானே..நம்ம ஆட்கள்கிட்ட இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?

! சிவகுமார் ! said...

>>> இப்போதைக்கு முடியாது, செங்கோவி. எதிர்காலத்தில் எப்படியோ.

idroos said...

Ok.intha padatthai paakalamnu irukkiren.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇயல்பான சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.ஃஃஃஃ

அப்படிப் போல தான் தெரிகிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

Madurai pandi said...

//ஊறுகாய்:
ஓரம்போ மற்றும் வ குவார்ட்டர் கட்டிங் எடுத்த புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் இந்த படத்தை தயவு செய்து பார்க்கவும்.

அதை பார்த்துட்டு அதை அப்டியே எடுத்துர போறாங்க !!

! சிவகுமார் ! said...

ஐத்ருஸ் said...
Ok.intha padatthai paakalamnu irukkiren.

>>> Please watch.

! சிவகுமார் ! said...

>>> சகோ ம.தி.சுதா வருக.

! சிவகுமார் ! said...

Madurai pandi said...
அப்டியே எடுத்துர போறாங்க.

>>> அது நடக்காது பாண்டி! வாய்ப்பே இல்லை.

Prathap Kumar S. said...

படம் எனக்கும் பிடித்திருந்தது சிவகுமார். ஆனால் இவர் படங்களில் எதிர்பார்க்கும் சில நுனுக்கமான நகைச்சுவைகள், மற்றும் சுவாரஸ்யங்கள் குறைவு என்றே தோன்றியது, ஒருவேளை கதைக்கு தேவையில்லை என வைக்காம்ல் இருந்திருக்கலாமோ? சிறந்தபடம் எனப்தை மறுப்பதற்கில்லை.

! சிவகுமார் ! said...

//இவர் படங்களில் எதிர்பார்க்கும் சில நுனுக்கமான நகைச்சுவைகள், மற்றும் சுவாரஸ்யங்கள் குறைவு என்றே தோன்றியது//

>>> பிரதாப், அப்படி சில காட்சிகள் இல்லாதது சற்று பொறுமையை சோதித்தாலும், அதுவே இப்படத்தின் பலம் என்று நினைக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...