CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 29, 2011

திமிங்கிலங்களும் தமிழக மீனவனும்!

                                                           
                                                              
தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையால் சுடப்படுவதும், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் வருவதும், பிறகு மீண்டும் அந்த பொறம்போக்கு சுடுவதும்....அடிங்!

"இலங்கை யுத்தத்தில் எத்தனை அப்பாவி தமிழர்கள் இறந்தனர். எத்தனை பேர் அய்யகோ இப்படி ஆகி விட்டதே என்று கூக்குரலிட்டோம். எத்தனை நாடகங்கள் அரங்கேறின. ஒரு உயிரையாவது நம்மால் காப்பாற்ற முடிந்ததா??  இத்தனை கோடி தமிழர்களின் உணர்வுக்கு மத்திய அரசு தரும் மதிப்பு இதுதானா.  நம்மால் ஒரு சிறு உதவி கூட செய்ய இயலாமால் எழுதி தீர்ப்பதும், மணிக்கணக்கில் விவாதிப்பதும் இன்னும் எத்தனை நாள்?? எத்தனை வருடங்கள்??"  இப்படித்தான் நானும் பல நாட்களாக எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் சில நாட்களாக இணையதளத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ள  தீ... மீண்டும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

தேசத்தின் நாளைய புரட்சி கணினி பயன்படுத்தும் நல்லோர் சமூகத்தின் கையில் பத்திரமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தயவு செய்து இந்த தளத்திற்கு செல்லவும்:  www.savetnfisherman.org. மேலும் விவரங்களுக்கு http://vandhemadharam.blogspot.com.

இந்த முயற்சி கணினி உலகம் எனும் சிறு இல்லத்தில் அகல்விளக்காக  எரிவதை விட,  நம்மை சுற்றியுள்ள மக்கள் மனதில் என்றும் அணையா தீப்பிழம்பாக தொடர்ந்து கொழுந்து விட்டு எரியச்செய்வதே சரியானதா இருக்கும் என்பது என் கருத்து. நடிகனுக்கு ரசிகனாக இருக்கும் இளைஞனே, அது உன் விருப்பம். எந்த வெண்ணைக்கும் அதில் தலையிட உரிமை இல்லை. ஆனால் கடலிலே தினம் தினம் செத்து மடியும் உன் ஏழை சகோதரனுக்கும் கொஞ்சம் குரல் கொடு. இது அந்த ஏழை மீனவனுக்கு இல்லாவிடினும், நாளை உன் தலைமுறைக்காவது உதவும். பீர் அபிசேகம், கற்பூர தட்டு ஏந்தி உன் மகா நடிகனை போற்றும் நிலையை மாற்று.  இல்லாவிடில் ஒரு நாள் இலங்கை கடற்படை வீரன் உன் கோவணத்தையும் உருவிடலாம். அதை கர்மவீர்கள்  வேடிக்கை பார்க்கலாம். புரிஞ்சிக்க.

"அய்யய்யோ, ஆத்தா" என்று ஆஸ்திரேலிய நாட்டில் மேட்டுக்குடி மாணவர்கள் தாக்கப்பட்டபோது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்ட அரசே, இங்கே நித்தம் ஒருவன் சாகிறானே. அப்ப மட்டும் சத்தத்தை காணும்?  வடக்குல இருக்குற எவன் வெளிநாட்ல அடிபட்டாலும் 24 மணிநேரமும் "பிரேக்கிங் நியூஸ்" போட்டு வாய் கிழிய கத்தும் ஆங்கில செய்தி சேனல்களே, தமிழன் செத்தா மட்டும் அது உங்களுக்கு ஒரு நிமிட செய்தி??? செய்ங்கடா நீங்க.. செய்ங்க.  

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை படிப்படியாகத்தான் சரி செய்ய இயலும் என்பதுதான் நிதர்சனம். "இப்போது நான் என்ன கிழிக்கலாம்?" என்று யோசித்தபோது, இதுதான் மனதில் தோன்றியது:

                                                                      
துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த/அடிபட்டு வறுமையில் வாடும் மீனவர் இல்லத்தில் இருக்கும் குழந்தைக்கு நம்மால் ஆன கல்வித்தொகை அல்லது வேறேதேனும் பொருளாதார உதவியை செய்தால் மட்டுமே இத்தனை  கூக்குரலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். எனவே, பாதிக்கப்பட்ட  மீனவர் குடும்பம் பற்றிய விவரத்தை  பதிவுலக நண்பர்கள்  அல்லது வாசகர்கள் நமக்கு தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும். (குறிப்பாக செய்தித்துறை அல்லது கடலோர மாவட்ட நண்பர்கள்). நானும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரிக்கிறேன். களம் இறங்குவோம். தமிழன் யாரென்று தரணிக்கு பறைசாற்றுவோம். 
http://www.youtube.com/watch?v=MHGMJylqg8I

            
...............................................................
Pics, Video: Google & Youtube.
My other site: nanbendaa.blogspot.com
...............................................................

                                                    
                                              


20 comments:

செங்கோவி said...

உண்மையில் இணையத்தில் உண்டாகியிருக்கும் எழுச்சி பெருமை அளிக்கிறது.

---செங்கோவி
ஒன்றுபடுவோம் மீனவச் சகோதரனுக்காக.

செங்கோவி said...

தமிழ்மனத்தில் உங்கள் பதிவை இணைத்தேன்..இணைந்துவிட்டது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போராடுவோம்

எப்பூடி.. said...

தேர்தல் நிறம் என்பதால் கலைஞர் அவர்களும் கூடுதல் அக்கறை எடுப்பதைபோல காட்டிக்கொள்வார், நம்பாதீங்க மகா ஜனங்களே

Anonymous said...

Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman

Philosophy Prabhakaran said...

msidhard

ஐந்து இலட்சமும் வேலையும் தர நாங்க தயார்.கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா.? #TNfisherman

kanagu said...

முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்...

! சிவகுமார் ! said...

>>> உதவியதற்கு நன்றி செங்கோவி.

! சிவகுமார் ! said...

>>> >>> கண்டிப்பாக ரமேஷ். நம்மால் ஆனதை செய்யும் நேரம் நெருங்கி விட்டது.

! சிவகுமார் ! said...

//எப்பூடி.. said...நம்பாதீங்க மகா ஜனங்களே//
>>> தலைகீழ நின்னு சம்மர் டைவ் அடிச்சாலும் எவன் நம்ப போறான்..ஜீவா!!

! சிவகுமார் ! said...

>>> கனகு மற்றும் பாண்டிச்சேரி வலைப்பூ நண்பர்கள் இருவரின் வருகைக்கும் நன்றி!

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
msidhard

ஐந்து இலட்சமும் வேலையும் தர நாங்க தயார்.கடலில் மீன் பிடிக்க அரசியல்வாதிகள் தயாரா.? #TNfisherman//

>>> குழம்பிய குட்டையில் வேண்டுமானால் பிடிக்கலாம்.

வைகை said...

எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

Unknown said...

அவரு கடல்ல கட்டுமரமா மெத்தாப்பாரு நாம பொனமாலே மெதக்குறோம்

! சிவகுமார் ! said...

>>> நண்பர் வைகை, தங்கள் கருத்துக்கு நன்றி!

! சிவகுமார் ! said...

>>> கரெக்ட் மணி!!

enrenrum16 said...
This comment has been removed by the author.
enrenrum16 said...

வடக்கே பாகிஸ்தான்...தெற்கே இலங்கை... என ரத்த வெறி கொண்ட மனிதர்களிடமிருந்து என்றுதான் நமக்கு விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை...

ஈழத்தமிழர்களிலிருந்து அன்றும் இன்றும் என்றும் அதன் துப்பாக்கிகளுக்கு தமிழர்களே எத்தனை நாள்தான் இரையாகிக்கொண்டேயிருப்பது... என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உயிரிழந்த நமதருமை மீனவர்களின் குடும்பத்தினரின் சாபங்கள் ராஜபக்சேவிற்கு நல்ல மரணத்தை தராது... உள்நாட்டு அரசியல்வாதிகளின் வெறியாட்டங்களுக்கே நம்மால் தாக்கு பிடிக்கமுடியவில்லை...இதில் இந்த இலங்கை வேறு ஏன் இப்படி கொலை வெறி கொண்டு திரிகிறதோ... இலங்கை-தமிழகம் எனப் பார்க்கும்போது இஸ்ரேல்-பாலஸ்தீன் ஞாபகம் வந்து பயமுறுத்துகிறது...:((((

! சிவகுமார் ! said...

enrenrum16 said. //இதில் இந்த இலங்கை வேறு ஏன் இப்படி கொலை வெறி கொண்டு திரிகிறதோ..//

>>> ராவண தேசம்..வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

அஞ்சா சிங்கம் said...

இல்லாவிடில் ஒரு நாள் இலங்கை கடற்படை வீரன் உன் கோவணத்தையும் உருவிடலாம். அதை கர்மவீர்கள் வேடிக்கை பார்க்கலாம்.///////////////////////////////

வேடிக்கையெல்லாம் பார்க்கமாட்டாங்க .பன்னாடைங்க போட்டு குடுகுறதே இதுங்கதான் ...............

Related Posts Plugin for WordPress, Blogger...