CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 18, 2011

அனுபவங்கள்

                                              
                                                              
அடிக்கடி சினிமா பற்றியே எழுதுகிறீர்களே, வேறு சில விசயங்களையும் எழுதுங்கள் என நண்பர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். "சிரிப்பு போலீஸ்" ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா) இரண்டு நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் என்னை பார்த்தபோது அதைத்தான் சொன்னார். என் நண்பர் சைமன் மற்றும் சிலரும் அவ்வாறே கூறினர். தெரியாத விசயங்களில் கால் வைப்பதற்கு முன் யோசிக்க வேண்டும் என்பதால் என் பதிவுகளில் சினிமா அடிக்கடி தலைதூக்குகிறது. அதற்கு முக்கிய காரணம், என் தந்தை திரைத்துறையை சார்ந்தவர். அது பற்றி பல அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். நான் படித்த பள்ளியில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும். அதில் பல நட்சத்திரங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். சமீப காலமாக நல்ல அயல்நாட்டு மற்றும் ஹிந்தி திரைப்படங்களை பார்த்ததன் விளைவாக சினிமா மீதுள்ள மோகம் சற்று அதிகமானது.  சமீபத்தில் வந்த ஒரு சில சிறந்த தமிழ் படங்களும் இதில் அடக்கம்.  என் பதிவை படிக்கும் நண்பர்களுக்கு நன்றாக தெரியும். எந்த நடிகருக்கும் அர்த்தமின்றி வால் பிடித்தல், குறிப்பிட்ட படத்தை தரம் தாழ்ந்து விமர்சித்தல் போன்ற செயல்களை செய்ததில்லை. ஒரு சராசரி நடுநிலை  சினிமா ரசிகனின் பார்வையே என்னுடையது. கண்டிப்பாக சினிமா பற்றிய  பதிவுகளில் சமுதாயம் பற்றிய கண்ணோட்டம் இருக்கும். அனைத்திலும் முக்கிய காரணம், சினிமாவில்தான் நாம் ஆண்டாண்டு காலமாக தலைவர்களை தேடுகிறோம். என்றுமே மக்களை ஏமாற்றும் சினிமாவை நான் பாராட்டி தள்ளியதில்லை. சென்ற ஆண்டு சினிமா அல்லாத சில பதிவுகளையும் நான் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் நண்பர்கள் பார்க்கவும்.

இப்பதிவில், சிறு வயதில்(இப்பவும் யூத்துதான். அப்ப பில்லக்கா பையன்)
நான் கண்ட நகைச்சுவை சம்பவங்களை கீழே பதிவிட்டுள்ளேன்:

* தெருவில் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். சற்று தொலைவில் ஒரு பெண்மணி யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். நான் அடித்த பந்து அவர் காலுக்கு கீழே போய் தஞ்சம் புக, தமிழ் சரியாக தெரியாத ஹிந்தி நண்பன் கிரி அந்த பெண்மணியிடம் கேட்ட கேள்வி "என்னங்க கொஞ்சம் ஓரமா வரீங்களா". வந்ததே கோபம் அந்த பெண்மணிக்கு. அந்த பெண்ணுக்கு தெரிந்த சிலர் 'கிரி' வலம் வந்தனர். சிலர்  அடிக்க போய்விட்டார்கள். நண்பர்கள் கூட்டம் அவர்களிடம் அவனுக்கு தமிழ் தெரியாதது பற்றி விளக்கி, கிரியை  ரிலீஸ் செய்தோம்.

                                                          

* பத்தாம் வகுப்பு விடுமுறை. மொத்த நண்பர்கள் கூட்டமும் மெரினாவிற்கு சென்றோம். கோன் ஐஸ் விற்பவன் வந்தான். விலை கேட்டேன். 75 பைசா என்றான். பல நண்பர்கள் வாங்கிக்கொள்ள, என் நண்பன் பாலாஜி மட்டும் வேண்டாம் என மறுத்தான். நான் வற்புறுத்தி கையில் திணித்தேன். மொத்தம் எவ்வளவு என்றேன். ஒரு ஐஸ் மூன்று ரூபாய் என்று கணக்கு போட துவங்கினான். "75 பைசான்னு சொல்லிட்டு இப்ப மூணு ரூவான்னு சொல்றீங்க? " என்றேன். நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர். ஆனால் ஐஸ் ஆள் சவுண்ட் குடுக்க தொடங்கினான். சகாக்களை அழைப்பது போல் படம் காட்ட, என்னடா இது வம்பு என எண்ணி கையில் இருந்த காசு அனைத்தையும் அவன் முன் கொட்டினோம். முதலில் ஐஸ் வேண்டாம் என மறுத்த பாலாஜி என்னை சுட்டெரிப்பது போல் பார்த்தான். இன்னொரு நண்பன் பாலா கையில் ஐஸ் ஒழுக வேடிக்கை பார்த்தான். "பரதேசி, 3 ரூவா ஐஸ்டா..தின்னு தொலை" என்றோம். இன்னொரு நண்பன் இதை பற்றி கவலைப்படாமல்  ஐஸை நக்கிக்கொண்டு இருந்தான். எல்லாரும் காசு கொடுத்ததும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது. ஐஸ் அண்ணனிடம்  காசு கம்மியாக இருந்ததை கூறி சமாதானப்படுத்தி கிளம்பும் சமயம் நண்பன் ஐயப்பன் குடுத்த குரல் இன்றும் மறக்க முடியாது. "டேய் ஆனந்த், உன் பான்ட் பாக்கெட்ல பத்து ரூவா வச்சிருக்கியே. மறந்துட்டியா?".   ஐஸ் அண்ணன் லுக் விட, மீதிப்பணத்தை செட்டில் செய்தோம். ஐயப்பனுக்கு விழுந்த அடியை வாழ்நாளில் மறந்திருக்கு மாட்டான்.

நயா பைசா இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்தோம். சிலரிடம் பஸ்சுக்கு காசு கேட்டோம். தரவில்லை. ஒருவழியாக ஒரு ஜென்டில்மேன் சிக்கினார். நிலையை விளக்கி பணத்தை வாங்கிக்கொண்டு வீடு போய் சேர்ந்தோம். காலங்கள் கடந்தாலும் இன்று வரை தொடர்கிறது அந்த சென்னை நண்பர்களின் நட்பு. ஆனால் பீச் போலாமா என்றால் மட்டும் போனை கட் செய்து விடுகிறார்கள். விட மாட்டேன். ஒருத்தனும் தப்ப முடியாது. விரைவில் மீண்டும் ஒரு மெகா சந்திப்பு மெரினாவில்தான் நடத்த வேண்டும் என முடிவு செய்து விட்டேன். கண்டிப்பாக கோன் ஐஸ் உண்டு.

அனுபவங்கள் தொடரும்.
.....................................................
Photos: google.
My other site: nanbendaa.blogspot.com
.....................................................

32 comments:

சக்தி கல்வி மையம் said...

super

Madurai pandi said...

Good experiance

! சிவகுமார் ! said...

Thanks sakthi and pandi!!

Unknown said...

இப்பவும் யூத்துதா?

Unknown said...

நல்ல அனுபவம் . அந்த பால் மேட்டர் டோட்டலா டபுள் மீனிங்கா இருக்கே

! சிவகுமார் ! said...

//இப்பவும் யூத்துதா?.//

Definitely..

Unknown said...

hi hi நல்ல அனுபவங்கள்

pichaikaaran said...

super

pichaikaaran said...

இதுவும் நல்லா இருக்கு

! சிவகுமார் ! said...

>>> தமிழ் தெரியாத தோழன் பேசியது மணி.

! சிவகுமார் ! said...

>>> பார்வையாளன் மற்றும் இரவுவானம்..படித்ததற்கு நன்றி!

Prabu M said...

:-))))

! சிவகுமார் ! said...

பிரபு, சிம்பல் போட்டு சிம்பிள் கம்மன்ட். Thank you.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீண்டும் பீச்சில் போய் தர்ம அடி வாங்க வாழ்த்துகிறேன்

! சிவகுமார் ! said...

@ரமேஷ்
>>> நம்ம அந்த விசயத்துல என்னைக்குமே எஸ்கேப் தான்.

அஞ்சா சிங்கம் said...

மெரீனா பீச்சில் எனக்கும் ஐஸ் வாங்கி தின்ற அனுபவம் உண்டு ...
அதே நாதாரிதான் ஒன்னு அம்பது பைசா என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட உடன் மூணு அம்பது என்று சண்டைக்கு வருவான் .....

செங்கோவி said...

அனுபவம் அருமை..பீச் சூப்பர்.

Chitra said...

Good ones. :-)

ஆமினா said...

சின்ன வயசு அனுபவங்கள் ரசித்தேன்

Philosophy Prabhakaran said...

புத்தக சந்தை னுபவங்கள் எப்போ...?

! சிவகுமார் ! said...

@அஞ்சா சிங்கம்

>>> சிங்கமே, நீங்களும் நம்ம ஆள்தானா??

! சிவகுமார் ! said...

>>> செங்கோவி,சித்ரா,ஆமினா தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி!!

! சிவகுமார் ! said...

>>> விரைவில் எழுதுவேன் பிரபா. ஏற்கனவே ஒன்று எழுதினேன். சினிமா விமர்சனம் எழுதுவதால் நேரம் கைகூடவில்லை.

அந்நியன் 2 said...

//அடிக்கடி சினிமா பற்றியே எழுதுகிறீர்களே, வேறு சில விசயங்களையும் எழுதுங்கள் என நண்பர்கள் கேட்க தொடங்கிவிட்டனர்//

நல்லவேளை வெருங்கைய்யோடு கேட்க்க தொடங்கினார்கள்,என்னை அருவாளை எடுத்துட்டு வந்து சினிமாவை பத்தி எழுதுவியா என்று மிரட்டி விட்டு போனார்கள் பாஸ்.சில நல்ல தகவல்கள் பலரை நல வழிப் படுத்தும்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணத்துல இணைச்சு ஓட்டு போட்டிருக்கேன் .. கவனிச்சு டிப்ஸ் தரவும்

சி.பி.செந்தில்குமார் said...

>>>"சிரிப்பு போலீஸ்" ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா) இரண்டு நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் என்னை பார்த்தபோது அதைத்தான் சொன்னார்.

அவரு கம்முன்னே இருக்க மாட்டாரே..

! சிவகுமார் ! said...

என் தளத்திற்கு வருகை தந்த செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் மணம் குறித்து எனக்கு சில விவரங்கள் தேவைப்படுவதால், ‘பிலாசபி’ பிரபாவிடம் கேட்க உள்ளேன்.
//அவரு கம்முன்னே இருக்க மாட்டாரே//
நான் பார்த்தபோது அநியாயத்திற்கு கம்முனு இருந்தார் ரமேஷ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த்ச் சிரிப்பு போலீசுதான் உங்களையும் கெளப்பி விட்டிருக்காரா? அவருக்கு எங்கே போனாலும் இதே வேலையாப் போச்சுய்யா! பட் அவரு சொன்னதையும் நம்பி நீங்க எல்லா உண்மையவும் சொன்னீங்க பாருங்க, அந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!

! சிவகுமார் ! said...

>>>ஆஹா.. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் என் கடை பக்கமா. மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் நிஜப்பெயர் என்ன என்று தெரியவில்லை. அடிக்கடி ரவுசு கம்மன்ட் போட்டு ‘லொள்ளு’ செய்றார் தலைவா இந்த ரமேஷ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சிவகுமார் ! said...
>>>ஆஹா.. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் என் கடை பக்கமா. மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் நிஜப்பெயர் என்ன என்று தெரியவில்லை. அடிக்கடி ரவுசு கம்மன்ட் போட்டு ‘லொள்ளு’ செய்றார் தலைவா இந்த ரமேஷ்!//////

நான் வந்துட்டேன்ல, இனி சிரிப்பு போலீசுக்கு பேஸ்மெண்ட்டு எப்பிடி ஒதறுதுன்னு பாருங்கப்பு!

! சிவகுமார் ! said...

அந்நியன் – 2 said
//என்னை அருவாளை எடுத்துட்டு வந்து சினிமாவை பத்தி எழுதுவியா என்று மிரட்டி விட்டு போனார்கள் பாஸ்//
>>> அருவாளா? அதுக்கெல்லாம் பயந்...தா.. தொழில்.....இருங்க வரேன்.

! சிவகுமார் ! said...

>>> ரைட்டு...ஆட்டம் ஆரம்பிக்கட்டும். ஸ்டார்ட் மியுசிக்!!

Related Posts Plugin for WordPress, Blogger...