CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, January 16, 2011

சிறுத்தை

                                                                          

சிறப்பு காலை காட்சிக்கு நம்மைப்போல் இளசுகள்தான் பெரும்பாலும் வருவார்கள் என்று பார்த்தால், குடும்பம் குடும்பமாக வந்து சென்னை தேவி அரங்கை நிரப்பினர் மக்கள். 'ராக்கெட் ராஜா' கார்த்திக் மற்றும் சந்தானம் இருவரும் ஜோடி சேர்ந்து செய்யும் நகைச்சுவையே முதல் பாதி. 'ராஜா ராஜா' எனும் தத்துவ பாடலுடன் நகர ஆரம்பிக்கிறது படம். ரத்னவேல் பாண்டியன் எனும் போலீஸ் அதிகாரியை ஒரு பக்கம் ஆந்திரா வில்லன்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆந்திராவில் உள்ள பாவா மற்றும் பத்ரா எனும் வில்லன் சகோதரர்களை துவம்சம் செய்ய ரத்னவேல் பாண்டியனாக வேடம் தரிக்கிறார் ராக்கெட் ராஜா. இறுதியில் வழக்கம் போல நாம் எதிர்பார்க்கும் கிளைமாக்ஸ்.  இரண்டு வேடங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி. எடிட்டர் வி.டி. விஜயனின் கத்திரியின் கச்சிதத்துடன் நாலு கால் பாய்ச்சலில் பறக்கிறது சிறுத்தை, முதல் பாதியில் மட்டும். இந்த படத்திலும் தன் நகைச்சுவையால் தியேட்டரில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார் சந்தானம். இரண்டாம் பாதியில் வில்லன்களை ஏமாற்றி கிச்சு கிச்சு செய்யும் காட்சிகள் சுமார்தான். சந்தானம் இல்லாத இப்படத்தை பார்க்க பயங்கர துணிச்சல் வேண்டும். அசத்தி இருக்கிறார். அந்த சிரிப்பு சரவெடியில் சில:

"டேய் நீ பெரிய ரௌடியா, கத்தி வாங்க காசு இல்லாம ப்ளேட் வச்சிக்கிட்டு ஜனங்களை மிரட்டி கிடைக்கிற காசுல பீடி குடிக்கிற பில்லக்கா பசங்கதானடா நீங்க"

"என்னடா மச்சான் 300 பருத்தி வீரிங்க நம்மள நோக்கி வர்றாளுங்க. இவளுங்க எல்லாம் குழாயடி சண்டைல கோல்ட் மெடல் வாங்குனவுங்க ஆச்சே.."

"எவன்டா அந்த ஏர்டெல் சூப்பர் சிங்கரு"

                                                               அசத்துறீங்க  பாஸ்!!

"ரத்னவேல் பாண்டியன்"  என ட்ரைலரில் கார்த்தி சொல்லும் டயலாக்கை நம்பி படத்துக்கு போனால், அந்த கேரக்டரை இப்படி சுருக்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் திருடன் ராக்கெட் ராஜாவின் ஆதிக்கமே. தமன்னா எந்த நிற உடை அணிந்தாலும் கச்சிதமாக இருக்கிறார். மேடம் கலர் அப்படி. படத்தில் நடித்த பெண் குழந்தை சில இடங்களில் கண் கலங்க வைக்கிறாள். குட்டி தேவதை. எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. ஒரே உருவ அமைப்பில் இருவர் என்பது சினிமாவில் சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் மசாலா படம் என்றால், வேறு வழி இல்லை. ஆனால், இருவரும் வில்லனிடம் தோற்காத எத்தர்களாக இருப்பது எப்படி?
இப்படி பல கேள்விகள்.

* ரத்னவேல் பாண்டியன் வயிற்றில் மெகா சைஸ் கத்தியை சொருகி எடுக்கிறான் வில்லன். அதையும் மீறி கெட்டவர்களை பொளந்து கட்டுகிறார் ஹீரோ. சலிச்சி போச்சி. மாத்தி யோசிங்க.

* ஆந்திரா மெயின் வில்லன் முதல் அப்ரண்டிஸ் வில்லன் வரை படம் முழுக்க சொல்லும் வார்த்தைகள்...  "ஏய்ய்ய்ய்ய்ய்ய்",  "அவன கொல்லுங்கடா", "வண்டிய எடுங்கடா" .  உங்க இம்சை தாங்கலடா!!

* 'ராக்கெட் ராஜா' தங்கி இருக்கும் இடம் பழைய தியேட்டர். அங்கே அவன் திருடிய பொருட்கள் நிரம்பி உள்ளன. தியேட்டர் ஓனர், வாட்ச்மேன், ஏரியா போலீஸ் எல்லாரும் பொங்கல் லீவ்ல போயிட்டாங்களா டைரெக்டர் சார்???

* சில இடங்களில் காமெடி எனும் பெயரில் சிவாஜி, சரோஜா தேவி, வி.எஸ். ராகவன் என மூத்த கலைஞர்களை பகடி செய்கின்றனர். போதும் புளித்து விட்டது.

* படத்தில் அதிக கைதட்டலை வாங்கியவர் நம்ம மனோபாலா. ஆந்திரா வில்லன் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருக்கையில் கடுப்பாகி தியேட்டரை விட்டு ஓடிவிடலாமா என நான் எண்ணிய சமயம் மனோபாலா பேசிய வசனம் "ஏய்.. ஏய்..அப்டின்னு கத்துரத நிறுத்துங்க. செத்து போன ரத்னவேல் சமாதில இருந்து எழுந்திரிச்சி  வந்துட போறான்". செம ரகளை.

* பத்ரா எனும் பெயருடன் துவைக்காத போர்வை ஒன்றை மாட்டிக்கொண்டு பரட்டை தலை, புலிப்பல்(????) செய்னை மாட்டிகொண்டு அடிக்கடி கர்ஜனை செய்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஒரு அண்ணாத்தை. வில்லனின் தம்பியாம். அவரை பார்த்து கார்த்தியோ, படம் பார்க்கும் மக்களோ பயந்த மாதிரி தெரியவில்லை. பக்கத்துக்கு சீட்டில் இருந்த குழந்தை அவரைப்பார்த்து கை தட்டி சிரித்துக்கொண்டு இருந்தது.

* முதல் பாதியில் ஒரு 'மூக்குத்தி' வில்லன் அழுக்கு சட்டையுடன் கார்த்தியை தேடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்தி அவன் கையில் சிக்குகிறார். கார்த்தியை வயிற்றில் குத்திவிட்டு ஒரு 'உம்மா' தருகிறார்  'மூக்குத்தி' வில்லன். ஆனாலும் அசராத கார்த்தி மற்ற உப வில்லன்களை பொளந்துவிட்டு கடைசியில் 'மூக்குத்தி' அண்ணனை கொல்கிறார். அதற்கு முன் கார்த்தியும் வில்லனுக்கு ஒரு 'உம்மா' தருகிறார். நல்லாதான் யோசிக்கறாங்க.

* பெரிய வில்லனை பாம் வைத்ததாக சொல்லி டம்மி பீஸ் ஆக்குகிறார் கார்த்தி. ஆரம்பத்தில் அதிரடியாக வரும்  வில்லன்களை கடைசியில் மக்கு பசங்களாக இன்னும் எத்தனை காலம்தான் காட்டுவார்களோ..!!

* இந்த ஆந்திரா மசாலா படங்களில் சண்டை காட்சி நடக்கும்போது யூஸ் பண்ணுற ஆயுதங்கள டிசைன் செய்ற சிற்பி யாருன்னு தெரியணும். ரக ரகமா கண்டு புடிச்சி களத்துல இறக்குறாங்க.

* ஸ்க்ரீனை விட்டு வெகுதூரம் தள்ளி 'A' வரிசையில் படம் பார்த்த எனக்கே இரண்டாம் பாதியில் வில்லன், ஹீரோ போடும் சத்தம் காதை கிழித்ததே. முதல் வரிசையில் படம் பார்த்தவங்க....ஐயோ பாவம்!! தமன்னா வேறு அழுக்கு போர்வை அண்ணாத்தையுடன் கிளைமாக்சில் ஒரு பஞ்ச் டயலாக் பேசுகிறார். வித்யாசாகர் சார்..நீங்கதான் இசையா.... ஆந்திரா "மசாலா" ரீமேக் படத்தில் நீங்கள் மட்டுமல்ல, வேறு எவராலும் என்ன செய்ய முடியும். காது சரியாக இன்னும் ரெண்டு நாள் ஆகும்.

* மயில்சாமி எனும் சிறந்த நகைச்சுவை நடிகரை பெரும்பாலும் ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே உபயோகிக்கும் நிலை என்று மாறுமோ..

* கார்த்தியின் அசத்தல் இரட்டை வேட நடிப்பிற்கு கைகுலுக்கியே ஆக வேண்டும். அண்ணனுக்கு சிங்கம் என்றால் தம்பிக்கு சிறுத்தை. ரஜினி, கமலுக்கு பிறகு அஜித்,விஜய், விக்ரம், சிம்பு என எண்ணுவது தவறு என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்கள் சூர்யாவும், கார்த்தியும். இனி சில வருடங்களுக்கு இவங்க ராஜ்யம்தான் போல. மற்றவர்களுக்கு அலாரம் அடித்துவிட்டார்கள். இவர்களுடன் நானும் இருக்கிறேன் என ஆடுகளம் மூலம் அடித்து சொல்லி இருக்கிறார் "என் வழி தனி வழி' என கலக்கும் தனுஷ். பொங்கல் படங்களில் காவலன் முந்துவதாக தெரிகிறது. விஜய் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகலாம்.

சிறுத்தை - ஹைதராபாத் தம் பிரியாணி. இரண்டாம் பாதி சத்தத்தை சகித்துக்கொள்ளும்   தில் இருந்தா தைரியமா பாக்கலாம்!
......................
Photos: Google
My other site: nanbendaa.blogspot.com


                                  

14 comments:

Ram said...

//* இந்த ஆந்திரா மசாலா படங்களில் சண்டை காட்சி நடக்கும்போது யூஸ் பண்ணுற ஆயுதங்கள டிசைன் செய்ற சிற்பி யாருன்னு தெரியணும். ரக ரகமா கண்டு புடிச்சி களத்துல இறக்குறாங்க.
//

ஹா ஹா.. நல்லா கொடுக்குறாங்கய்யா டீடெய்லு...

Anonymous said...

yes kavalan & aadukalam is the mega hit film of this year because the script of both films are very strong.

ஆமினா said...

//தியேட்டர் ஓனர், வாட்ச்மேன், ஏரியா போலீஸ் எல்லாரும் பொங்கல் லீவ்ல போயிட்டாங்களா டைரெக்டர் சார்???//

இதே தான் நானும் கேட்க நினைச்சேன் ;)

விமர்சனம் அருமை

pichaikaaran said...

ஜினி, கமலுக்கு பிறகு அஜித்,விஜய், விக்ரம், சிம்பு என எண்ணுவது தவறு என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்கள் சூர்யாவும், கார்த்தியும்

உண்மைதான்..

ஆனால் தலைக்கனம் அதிகமாகி பஞ்ச் டயலாக் , அரசியல் என ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்...

இந்த தெளிவு இருந்தால் இவர்களை யாரும் அசைக்க முடியாது

Anonymous said...

எங்க தளபதிக்கு இந்த் வருடம் முதல் படம் தோல்வி அடைய மலையாள நாய் சித்திக் தான் காரணம்
அடுத்த படம் வேலாயுதம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகி எங்கள் தளபதி தொடர் தோல்விக்கு பதில் தருவார்

"காவலன் படம் மூலம் தோல்வி படம் தந்து எங்கள் தளபதியை கேவலபடுதிய மலையாள நாயிகள் பட்டிகள் நாசமாக போவர்கர்கள்

எங்கள் தளபதிக்கு காவலன் படம் தோல்வி அடைந்தாலும் வேலாயுதம் சூப்பர் ஹிட் ஆகும்

Madurai pandi said...

அட யாருப்பா இந்த அனானி !!! சம்பந்தம் இல்லாம இங்க வந்து பதிவுக்கு சம்பந்தம் இல்லாம கமெண்ட் போடுறது!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

ok

! சிவகுமார் ! said...

தம்பி கூர்மதியன் said...
ஹா ஹா.. நல்லா கொடுக்குறாங்கய்யா டீடெய்லு.

>>> கலைதாகம் பொங்கும்போது இப்படி ஆயிடுது நண்பரே!!

! சிவகுமார் ! said...

Anonymous said...
yes kavalan & aadukalam is the mega hit film

>>> காவலன் மெகாஹிட் ஆகும் வாய்ப்பு குறைவு. ஓரளவு ஓடும் தோழா.

! சிவகுமார் ! said...

பார்வையாளன் said...
ஆனால் தலைக்கனம் அதிகமாகி டயலாக் , அரசியல் என ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்...

>>> பஞ்ச் பேசினால் மக்கள் இனி பஞ்சர் ஆக்கி விடுவார்கள் என நம்புகிறேன் சார்!

! சிவகுமார் ! said...

>>> வருகைக்கு நன்றி விக்கி அவர்களே!!

! சிவகுமார் ! said...

Anonymous said...
எங்க தளபதிக்கு இந்த் வருடம் முதல் படம் தோல்வி அடைய மலையாள நாய் சித்திக் தான் காரணம்

>>> நண்பரே, தாங்கள் விஜய் ரசிகன் என்று தெரிகிறது. சித்திக் தடுமாறியது உண்மைதான். ஆனால் “மலையாள நாய்” என்றெல்லாம் சொல்ல வேண்டாம். மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என இரண்டே ஜாதிதான். விஜய் நன்றாகவே நடித்திருந்தார்.

! சிவகுமார் ! said...

>>> நண்பர் யாரென்று தெரியவில்லை பாண்டி. விஜய்யின் தீவிர ரசிகர் என்று மட்டும் தெரிகிறது.

Anonymous said...

Superb well said...

Related Posts Plugin for WordPress, Blogger...