CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, January 9, 2011

சென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா!!

கோலாகலமாக சில நாட்களுக்கு முன்பே புத்தக கண்காட்சி சென்னையில் களைகட்ட
துவங்கிவிட்டாலும் இன்றுதான் நேரம் கைகூடியது எனக்கு. பதிவுலக நண்பர் பிரபா காலையிலே வந்துவிட்டார். பார்வையாளன் அவர்கள் காத்திருப்பதாக சொல்ல, சென்னை போக்குவரத்து நெரிசலை தாண்டி ஒரு வழியாக கண்காட்சி அரங்கை சென்றடைந்தேன். என் பெயர் தெரியாதவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள பளீர் மஞ்சள் டீ சர்ட்டுடன் ஆஜர் ஆனேன். இதற்கு முன் பிரபா தவிர வேறு எந்த பதிவரையும் நான் சந்தித்ததில்லை. பார்வையாளன் மற்றும் எல்.கே. ஆகியோரை மட்டுமே சந்திக்க போகிறோம் என்று எண்ணி உள்ளே நுழைந்தால் பார்வையாளன் மற்றும் பிரபா முதலில் கண்ணில் பட்டனர் . இருவரிடமும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஓஷோ புத்தங்கள் இருக்கும் ஸ்டால் வைத்திருந்த என் நண்பன் வினோத் எங்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றான்.
அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் புத்தகமான 'சினிமா வியாபாரம்' விற்கும் ஸ்டாலுக்கு முன்பு ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். சிறிது நேரத்தில் 'கேபிள்' அண்ணன் வருகிறார்..வருகிறார்' என பரபரப்பாக பேசத்தொடங்கினர். நாம் வேறு வளரும்(?????) பதிவராயிற்றே(இந்தியா வளரும் நாடாகவே  பல ஆண்டுகளாக இருப்பது  போல்.....என்று  வளர்ந்த/பிரபல பதிவன் ஆகப்போரனோ..), பிரபல பதிவர் கேபிள் அண்ணன் அவர்கள் நம்மிடம் பேசுவாரோ என்று அதிபயங்கர கவலையுடன் சிந்தித்து கொண்டிருக்க அதிரடியாக என்ட்ரி குடுத்து அனைவரிடமும் சகஜமாக  பேசத்தொடங்கினார். மணிஜீ அவர்களுக்கு ஒரு வணக்கம் சொன்னேன். அவரை பார்த்ததும் உள்ளூர ஒருவித பயம் எட்டிப்பார்த்தது. காரணம் தெரியவில்லை. அவரிடம் அளவளாவ ஒரு நாள் கிடைக்குமென நம்புகிறேன். நேசமித்ரன் அவர்களை பற்றி அறியாமல் "நீங்கள் பதிவு எழுதுகிறீர்களா" என்று கேட்டேன். "மூணு வருசமா எழுதறேன்" என்றார். "சமீபத்தில்தான் பதிவுலகில் நுழைந்தேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். மன்னிக்கவும் சார். காலப்போக்கில் என் எல்லையை விரிவுபடுத்துகிறேன். கார்த்திக் மற்றும் அவர் நண்பர் இன்னொரு கார்த்திக்(lollum-nakkalum), விரைவில் சினிமா நடிகர் ஆகவிருக்கும்  சுரேஷ், டம்பி மேவி விச்சு, யூசுப் ஆகியோரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். சங்கர் ஜெட்லி (nee-kelen) அவர்களுடன் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒரு சில பார்வைகள் மட்டுமே. என்று பேசப்போகிறோம் என்று தெரியவில்லை. சாளரம் கார்க்கி படு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்.


                            இந்த மாதிரி நல்ல போஸ் நீங்க அங்க குடுக்கவே இல்லியே... ஏன்? 


கலாட்டா - 1
யாரிடம் பேசுவது என நான் விழித்துக்கொண்டிருக்க, மனசாட்சியே இல்லாமல் கேபிள் சங்கர் அண்ணனும், விச்சுவும் நட்ட நடு வழியில் பலர் நடமாடும் இடத்தை  மறித்துக்கொண்டு வித விதமான போஸ்களை குடுத்து அலப்பரை செய்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் எந்திரன் ஹிட்டா, மன்மதன் அம்பு ஹிட்டா என சர்ச்சையில் பார்வையாளனும், "ரஜினியின் அதி தீவிர ரசிகர்" கேபிள் அண்ணனும்(நீங்கதான் சொன்னீங்க.எனக்கு தெரியாது.எஸ்கேப்..) இறங்கி வெட்டுகுத்து ரேஞ்சுக்கு சண்டை போடத்துவங்க... அவர்களை விலக்க படாத பாடுபட்டோம். நல்ல வேளை கேபிள் அண்ணன் கையில் அரிவாள் இல்லடா சாமி...!! 


கலாட்டா - 2
கேபிள் அண்ணனின் 'சினிமா வியாபாரம்' புத்தகத்தை வாங்கிய கையுடன் அவருடைய கையெழுத்தையும் அதில் கேட்டு வாங்கிக்கொண்டேன். "ரொம்ப நேரம் பேசியாச்சி, வாங்கப்பா ஜூஸ் சாப்டுவோம்" என அவர் அழைக்க அனைவரும் அவரை பின் தொடர்ந்தோம். அங்கு அவரிடம் சிக்கினான் ஜூஸ் கடைக்காரன். "என்ன ஜூஸ் இது...ஐஸே இல்ல..தண்ணியாவது இருக்கா" என்றார். அதுவும் இல்லை என்றதும் கடுப்பாகி கேபிள் சங்கர், கே.ஆர்.பீ. செந்தில், எல்.கே. மற்றும் பார்வையாளன்  அண்ணன்கள்  தலைமையில் நிர்வாகத்திடம் பெரிய புரட்சியில் ஈடுபட்டோம். வெகுண்டெழுந்த கேபிள் அண்ணன் அங்கு இருந்த செச்யுரிடியிடம்  "உள்ளே எங்கயும் தண்ணி இல்ல. நாங்க வெளிலே போய் குடிச்சிட்டு வர்றோம். ஆனா திரும்ப உள்ள வரும்போது இன்னொரு டிக்கட் வாங்க மாட்டோம்" என சொல்ல,  அந்த நபரும் எதிர்வாதம் செய்ய களம் சூடுபிடித்தது. அதிகாரிகளிடம் புகார் செய்ய புறப்பட்டது எங்கள் புரட்சிப்படை. நாங்கள் சற்று தூரம் சென்றதும் அந்த செக்யூரிட்டி சற்று கோபமாக சில வார்த்தைகளை உதிர்க்க அதை காதில் வாங்கிய ஒற்றன்(நான்தான்) அதையும் சேர்த்து நிர்வாகத்திடம் பற்ற வைத்தேன். அவர்கள் எங்களுடன் வந்து செக்யூரிட்டியை வெளுத்து வாங்கினர். அவர்களிடம் கேபிள் அண்ணன் கேட்ட கேள்வி "அவசரமா உச்சா போகணும் சார். அதுக்கு கூட வெளிய விடமாட்டாங்களா? நாங்க யாரும் திரும்ப வரும்போது டிக்கட் எடுக்க மாட்டோம்" என வெடிக்க, "ஒண்ணும் பிரச்னை இல்ல சார். நீங்க போயிட்டு வாங்க என்று" வெள்ளைக்கொடி காட்டினர். ஒருவழியாக எங்களுக்கு 'தண்ணி காட்டாமல்' தண்ணி இருக்கும் இடத்தை காட்டினர்.  


கலாட்டா - 3
அரங்கின் வெளியே மேடையில் வாலி, பழனிபாரதி உள்ளிட்டோர் பேசிக்கொண்டு இருக்க, சற்று தொலைவில் அண்ணன் கே. ஆர். பீ. செந்தில் அவர்களுடன் மணிக்கணக்கில் பல விசயங்களை நான் பேசிக்கொண்டிருக்க, நண்பர் பிரபா கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பொறுமையை வெகுவாக சோதித்தோம். ஒருவழியாக மேடைப்பேச்சு முடிந்து கவிஞர் வாலி அவர்கள் பல அதிகாரிகள் புடைசூழ கீழே வந்துகொண்டிருந்தார். அப்போது நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் ஒரு தடாலடி கேள்வியை அண்ணன் கே. ஆர். பீ. செந்தில், வாலியை நோக்கி கேட்டார் . மறைந்திருந்து ராமன் வாலியை தாக்கிய தூரத்தை விட சற்று அருகில் இருந்து வீசப்பட்ட துணிச்சலான கேள்விக்கணை அது.  நல்ல வேளை அந்த அம்பு  வாலி காதில்  விழவில்லை. அதை செந்தில் அண்ணனே அவர் பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன். மீண்டும் நான் எஸ்கேப்...
  
கலாட்டா - 4 
இரவு நெருங்க நெருங்க ஒவ்வொருவராக விடைபெறத்துவங்கினர். பலருடைய தொலை பேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டேன். பார்வையாளன் மற்றும் எல்.கே. இருவரும் சில ஆலோசனைகளை எனக்கு தந்தனர். அவர்களும் கிளம்ப.. அண்ணன் கே. ஆர். பீ. செந்தில், பிரபா மற்றும் நான் பேசிக்கொண்டிருக்க ...மீண்டும் சூறாவளியாக வந்து நின்றார் கேபிள் அண்ணன். "ஆறு தடவை கால் பண்ணி இருக்கேன். ஏன் எடுக்கல" என செந்தில் அண்ணனை அவர் கேட்க அதற்கு செந்தில் அண்ணன் சொன்ன பதில்.... அய்யய்யோ எனக்கு மறந்து போச்சி...அவரிடமே கேட்கவும். சரி கிளம்பலாம் என எண்ணியபோது ஜாக்கி சேகர் அவர்கள் வருவது தெரிந்ததும் காத்திருந்தோம். அவரிடமும் பேச போதுமான நேரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. 


சினிமா பற்றி பல கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொண்ட கேபிள் சங்கர் அண்ணன், ஆன்மிகம், வியாபாரம் மற்றும் பல விசயங்களை மணிக்கணக்கில் என்னிடம் பேசியதோடு மட்டுமின்றி, பதிவு குறித்து பல ஆலோசனைகள் வழங்கிய கே.ஆர்.பீ. செந்தில் அண்ணன் அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே தீர வேண்டும். வயதில் சிறியவன் என்று பாராமல் மிகவும் சகஜமாக உரையாடிய ஜாக்கி சேகர், எல்.கே. மற்றும் பார்வையாளன் ஆகியோரின் அறிமுகமும் மகிழ்ச்சி அளித்தது. எவரிடமும் போலி எண்ணங்கள் இல்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக என்னிடம் பேசினர். முதன் முறை சந்தித்த பொடிப்பயலான  என்னிடம் பிரபல பதிவர்கள் பழகிய விதம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. முதல் சந்திப்பே எனக்கு வெற்றிகரமாக அமைந்தது. நன்றி பிரபா. நீங்கள் தான் அதற்கு காரணம்.  

அங்கு நடந்த காட்சிகளை வளைத்து வளைத்து படம் பிடித்தது எங்கள் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பார்வையாளன் அவர்கள். அந்த காட்சிகளை காண பின் வரும் லிங்க்கை அழுத்தவும்:


ஆக மொத்தத்தில் புத்தக கண்காட்சியின் முதல் நாள் இந்த சந்திப்புடன் நிறைவடைந்தது. புத்தகங்கள் வாங்கும் வாய்ப்பு கிட்டவில்லை. நாளை புத்தக கண்காட்சிக்கு மீண்டும் செல்லவிருப்பதால் புத்தகங்கள் மற்றும் அங்கு நான் கண்ட அனுபவங்கள் குறித்தும் எழுதுகிறேன். பதிவை வாசித்த உள்ளங்களுக்கு நன்றி!!!
........................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
........................................................................................

                                 
                                      
மீண்டும் சந்திப்போம்!!                                         
15 comments:

pichaikaaran said...

மறக்காமல் அனைத்தையும் எழுதி விட்டீர்களே , சூப்பர்

! சிவகுமார் ! said...

>>> மறக்க முடியாத சந்திப்பு சார்!!

மேவி... said...

இந்த பிளாக்யோட சொந்தகாரர் நீங்க தானா ???? உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோசம். கால் வலி போயிருச்சா ????

(டம்பி மேவி என்று சொன்னாலே போதுமுங்க ..... )

Unknown said...

கடைசியாக ஒரு ஹீரோ போட்டோ இருக்கே அது யாரு சார் . ஹி ஹி ஹி

செங்கோவி said...

நாங்களும் உடன் வந்து பார்த்த உணர்வு..நன்றி.

எஸ்.கே said...

இனிய சந்திப்பு! மகிழ்ச்சியான தருணங்கள்! வாழ்த்துக்கள்!

! சிவகுமார் ! said...

>>> விச்சு....இன்றும் உடல்நிலை சரி இல்லாததால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கண்காட்சியில் நேரம் செலவிடவில்லை. அடுத்த சனி, ஞாயிறு அங்கே டென்ட் போட்டு விடுவேன்.

! சிவகுமார் ! said...

>>> மணி...படத்தில் இருப்பது கேப்டன் தம்பி வைஸ் கேப்டன்.

! சிவகுமார் ! said...

>>> நண்பர்கள் செங்கோவி மற்றும் எஸ்.கே இருவருக்கும் நன்றி!

Madurai pandi said...

நல்லதொரு சந்திப்பு!!! வளர்ந்த பதிவர் ஆக வாழ்த்துக்கள்!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

இப்பத்தாங்க மொதமொதலா உங்களை பார்க்கிறேன், நல்ல பகிர்வுங்க

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

எப்பூடி.. said...

உங்கள் ஒற்றுமை தழைத்திருக்க வாழ்த்துக்கள்

Suresh Shanmugam said...

nice siva, review on kaavalan was good.

will watch soon.

Suresh
TQA

Suresh Shanmugam said...

NICE REVIEW ON KAAVALAN

Related Posts Plugin for WordPress, Blogger...