CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, January 28, 2011

127 HOURS


                                                         நிஜ நாயகன் - ஆரோன்!

பல நாள் காத்திருப்பு. ஒரு வழியாக புதன் கிழமை ரிலீஸ் ஆனது. நேற்று படத்தை பார்த்தேன்.  இந்த படம் முற்றிலும் ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டதால், நிஜ நாயகன் ஆரோன் எழுதிய புத்தகத்தில் உள்ள சம்பவங்களை ஏற்கனவே சென்ற வருடம் இந்த வலைப்பூவில் பகிர்ந்து இருந்தேன். அதற்கான லிங்க்:  ஆரோன் .  அந்த பதிவிலேயே கிட்டத்தட்ட மொத்த செய்தியும் இருப்பதால் இங்கு ஒரு சில விசயங்களை மட்டும் சொல்ல நினைக்கிறேன்.  டான்னி பாய்ல் மற்றும் ரஹ்மான் இருவரும் ஒரு உன்னத படத்தில் பணியாற்றிய புகழை பெற்றுள்ளனர். ஆனால் இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ரஹ்மான் சொன்னது "இந்த வருடம் ஆஸ்கார் கிடைப்பது சந்தேகமே". ஆம். இந்த படத்தின் களத்திற்கு பெருமளவில் இசை தேவைப்படாததால், ஆங்காங்கே சில மாஜிக் மட்டும் செய்திருக்கிறார் ரஹ்மான். இன்சப்சன், சோசியல் நெட்வொர்க் மற்றும் சில படங்களின் இசை பிரமாதமாக இருந்ததால் ரஹ்மான் வெற்றி பெறுவது சந்தேகமே. ஆனால், ஆஸ்கார் கமிட்டி சில சமயம் மற்ற அமைப்புகளில் இருந்து வேறுபட்டு எதிர்பாராத படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது குடுப்பார்கள் என்பதால் எதுவும் நடக்கலாம். அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.   

படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த வசனம்:
பாறையில் சிக்கிய தன் வலது கையை சிறிய கத்தியால் அறுக்க நினைக்கிறான் ஆரோன். ஆனால் கத்தி மொக்கையாக உள்ளதை கண்டு அவன் பேசும் வசனம் "சீப்பான சீனா கத்தியை வாங்கினால் இதுதான் நடக்கும்". 

127 HOURS - போராட்டங்களை எதிர்கொள்ள நினைக்கும் அனைவருக்கும். DONT MISS.


தியேட்டர் நொறுக்ஸ்:
தியேட்டரில் என் முன் வரிசையில் படத்தை மும்முரமாக பார்த்துகொண்டிருந்தார் ரசிகர் ஒருவர். அடிக்கடி திரையை மறைத்துக்கொண்டு.  இப்படிப்பட்ட படங்கள்  ஒரு ரசிகனை இந்த அளவுக்கு ஈர்ப்பதே அதன் வெற்றி. என்னால் சில காட்சிகளை சரியாக பார்க்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. இன்னொரு முறை பார்க்கலாம். ஏன் அதே அரங்கில் தரையில் உட்கார்ந்து கூட பார்ப்பதில் கூட எனக்கு பிரச்னை இல்லை. தொடர்ந்து வெல்லட்டும் நல்ல திரைப்படங்கள். சினிமா சமூகத்திற்கு கேடு என்று ஆளாளுக்கு சாபம் விடும் ஒரு தரப்பு மக்களே. இந்த படத்தை நீங்கள்தான் முதலில் பார்க்க வேண்டும்.
.............................................................................
                                                                     


இன்று ஆனந்த விகடனில் இயக்குனர் பாலாவின் நெத்தியடி பேட்டி.. சில துளிகள்:

"அறியாமையை அறிந்து விடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையோ?"
பாலா - "கண்டுபிடுச்சிட்டியே ராசா".

"உலக சினிமாவை தமிழ் சினிமாவோடு ஒப்பிட முடியுமா?'
பாலா - "நாங்க மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா படம் எடுக்கிறோம்".

"ஏன் ஒரு படம் எடுக்க உங்களுக்கு  வருடக்கணக்கில் ஆகிறது?"
பாலா - 'தினம் காலையில் "ஐயோ பாலா படம் இன்னிக்கும் வரலியே" என்று யாராவது
"பட்டினி கிடக்கிறார்களா என்ன?"

"நீங்கள் ஏன் நடிக்கக்கூடாது?"
பாலா - மேடம் என்னை கலாய்க்கிராங்கலாம்.

இப்படி பேட்டி முழுக்க பட்டையை கிளப்பி இருக்கிறார் பாலா. அவன் - இவன் படத்தில் சிரிப்பு சரவெடிகளை கொளுத்தி போட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. தவறாமல் இப்பேட்டியை படியுங்கள்.
..........................................................................
Pics: Google.
My other site: nanbendaa.blogspot.com
                                          

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஆனந்த விகடனில் பாலாவின் தொடரை படிச்சிருக்கேன்...
சூப்பரா இருக்கும்..........

செங்கோவி said...

விமர்சனத்தை எதிர்பார்த்தேன்..ஏற்கனவே ஆரோன் எழுதியிருந்தாலும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முன்னாடி வெள்ளிகிழமை காலைல எந்திச்சதும் ஆனந்த விகடன் வாங்க ஓடுவேன். இப்போ பிளாக் வந்த பிறகு அதை தேடுறதே இல்லை..

Philosophy Prabhakaran said...

இப்பல்லாம் வாராவாரம் என்னை ஆனந்த விகடன் வாங்க வைக்குறதே நீங்கதான்னு நினைக்கிறேன்... இந்த வாரமும் வாங்கிடுறேன்...

Unknown said...

படம் தமிழ் டப்பிங்கா இல்ல ஆங்கிலத்திலே இருக்கா , எனக்கு இங்கிலிஷு புரியாது

! சிவகுமார் ! said...

>>> நானும் படித்தேன் மனோ சார். நன்றாக இருந்தது!

! சிவகுமார் ! said...

>>> கேபிள் சங்கர் அவர்கள் விமர்சனம் நன்றாக உள்ளது செங்கோவி.

! சிவகுமார் ! said...

>>> ரமேஷ், பிரபா... அவ்வப்போது ஆனந்த விகடன் பார்க்கவும். சுவாரஸ்யமான செய்திகள் வருகின்றன.

! சிவகுமார் ! said...

>>> இங்கிலீஷ் படம்.. ஆனாலும் இங்கிலீஷ் சப் டைட்டில் போடுகிறார்கள், மணி.

Unknown said...

வணக்கம் தம்பி, இன்னைக்குதான் உங்க பக்கம் வர முடிந்தது... நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் ...

! சிவகுமார் ! said...

>>> செந்தில் அண்ணா, தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. கூடுமானவரை நன்றாக எழுத முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

kanagu said...

படம் இன்னும் பாக்கல... வரும் வாராத்திற்கு அடுத்த வாரம் பாக்கலாம்-னு இருக்கேன் :) :) நல்ல விமர்சனம்..

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரிஜினல் பாடலுக்கு ஆஸ்கார் கிடைக்கலாம்.. :)

நானும் பாலா-வின் பதிலை படித்தேன்... நன்றாக இருந்த்தது :)

இப்போது எங்கேனும் ‘இவன் தான் பாலா’ புத்தகம் கிடைக்கிறதா??? நிறுத்திவிட்டதாக சொன்னார்கள் :( :(

! சிவகுமார் ! said...

>>> பாலாவின் புத்தகம் பற்றி விசாரித்து சொல்கிறேன், கனகு!

Madurai pandi said...

நானும் இந்த படத்தை பார்த்து விட்டேன்.. நல்லா படம்.. ஆனா சில பேருக்கு இது பிடிக்கலை... ஏன்னு தெரியலை..

Related Posts Plugin for WordPress, Blogger...