CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 31, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (31/12/2011)நில்.கவனி. செல்லாதே:


இவ்வருடம் தமிழில் பரபரப்பை பப்பரப்பே என்று கிளப்பிய 'இளைஞன்' அடுத்த மாதம் ஆந்திராவில் விக்க விக்க அனலை கக்க உள்ளது. தேசானிக்கி ஒக்கடு (நாட்டுக்கு ஒருவனுங்கோ) எனும் பெயரில் அதிரடி ரிலீசுக்கு ரெடி. 'தானே'வில் இருந்து ஆந்திரா மக்களு தப்பித்தாலும் தானைத்லைவனின் தொம்பி பா.விசய்யிடம் இருந்து தப்ப முடியாதண்டி!
.................................................................................................

வெங்காயம்:
தெருவில் காய்கறி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் ஆள் செய்யும் சித்து வேலை குறித்து நேற்றொரு செய்தி கேட்டேன். எடைபோட்ட காய்கறிகளை பையில் போட்ட பின்புபெண்கள் பேசிக்கொண்டு இருக்கையிலோ அல்லது வேறு காய்கறியை எடுத்துக்கொண்டு இருக்கும்போதோபையில் இருந்த நான்கு வெங்காயத்தை எடுத்து மீண்டும் வியாபாரம் செய்கிறாராம் பலே வியாபாரி. அதை உஷாராக பார்த்துவிட்ட பெண்மணி ஒருவர் தெருவுக்கே தமுக்கு அடித்து விட்டார். தலைவர் இனி தெருப்பக்கம் வர 144  போட்டாகிவிட்டது. அதே நேரம் வியாபாரி கொஞ்சம் அசந்தால் இரண்டு தக்காளி/வெங்காயத்தை தன் பையில் போட்டுக்கொள்ளும் ஆண்ட்டிகளும் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு என்ன தண்டனைடெல் மீ
..................................................................................

படிக்காத மேதை:
வருடா வருடம் புத்தக கண்காட்சிக்கு சென்று சேகுவேரா வரலாறு, இருண்ட ஆப்ரிக்கா ஒரு பார்வை என்று வகை வகையாக புத்தகம் வாங்கினாலும் அனைத்தையும் படிக்க நேரமில்லை. ஆனாலும் அதை வாங்குவதற்கு ஒரே காரணம்தான். தெரிந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் யாருமே தராத சுவர்க்கடிகாரம், காபி கப்புகள், பிள்ளையார் படம் போன்ற அதிசய பொருட்களை தராமல் புத்தகங்களை அன்பளிப்பாக தந்துவருகிறேன்

                                                                          
பிரசித்தி பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்னும் சில நாட்களில் களை கட்ட உள்ளது. நேரம் இருந்தால் வாருங்கள். புத்தங்களை கண்டெய்னரில் ஏற்றிச்செல்லுங்கள்.  
....................................................................................

தாம் தூம்: (விருதுகள் 2011)

'1..2...3... நா பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அடி' விருது:
வின்னர் - வேற யாரு. நம்ம பன்மோகன்தான். என்னா அடி!!  

'அந்த 2 லட்சத்த ரூவா பணத்த இந்த வண்டுமுருகன் கிட்டதான் குடுத்து வச்சிருக்கேன்' விருது - வின்னர்: தகத்தாய கதிரவன் ராசா. 

'குத்தாலத்துல இருக்க வேண்டியவன் எல்லாம் இங்க வந்து என் உசுர வாங்கறீங்களேடா' - வின்னர்: (லோக்)சபாநாயகர்  மீரா குமார். 

'மத்யானம் 3 மணிங்கறது என்னோட லஞ்ச் டைம். இந்த நேரத்ல அன்னத்துல கை வப்பனே தவிர யார் கன்னத்லயும்  கை வக்க மாட்டேன்' விருது:
வின்னர்: கேப்டன். 'ஜெ'க்கு எதிரா தவ்வி தவ்வி எப்பதான் பைட் போடுவீங்க?   

முக்கியமான விருது இறுதியில்....
........................................................................................

யுவன் யுவதி:
புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பவரும், சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் நிருபரும் பேசுவது ஆங்கில சேனல்களின் இன்ஸ்பிரஷேன் போல உள்ளது. 'சொல்லுங்க பீர் முகம்மது..டிபன் சாப்டீங்களா? தானே உக்காந்த 'தானே' புயல் நிலவரம் அங்க எப்படி இருக்குது பீர்?'  என மேடம் கேட்க அதற்கு நிருபர் 'இங்க ஒரே பனிமூட்டமா இருக்கு திவ்யா. நீ ஏம்பா இங்க நிக்கரன்னு கேட்டுட்டு ஆ..ஊ..னா மஞ்ச கொடிய தூக்கிட்டு ஆரவாரமா வந்துடறாங்க திவ்யா. நான் குஷ்பு இட்லி ரெண்டு சாப்புட்டேன். நீங்க திவ்யா?' என்கிற ரீதியில் பதில் சொல்கிறார்.

அன்பின் புதிய தலைமுறை ஓனர். செய்தி வாசிப்போர், நிருபர் பெயர்களை எழுத்தில் போட்டால் போதும். அதெல்லாம் முடியாதுன்னா ஒரு ஆளுக்கு ரெண்டு தடவைக்கு மேல இன்னொருத்தர பேர் சொல்லி கூப்புட வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்!!
...........................................................................................

போராளி:
இந்தியா தொடரை வெல்வதை விட சச்சின் 100 அடிப்பாரா என்பதிலேயே ரசிகர்களும், மீடியாவும் குறியாக இருப்பது விடாமல் தொடர்கிறது. அவரும் நூறை தொடாமல் விடுகிறார். ஆஸி அணியை அவர்கள் நாட்டில் வென்று தொடரை இதுவரை கைப்பற்றவில்லை இந்தியா. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது அதை மனதில் கொண்டு துடுப்பை இயக்கினால் மட்டுமே பெருமை சேரும். சச்சினுக்கு பிரஷர் ஏற்றி, ரசிகர்களும் டென்ஷனில் நகத்தாலேயே ஸ்டெப் கட்டிங் செய்து கொண்டால் 'இது ஆவறதில்ல' !
.....................................................................................

மிளகா:

2011 இல் ப்ளாக்கை அளவுக்கு அதிகமாக கலக்கிய வார்த்தை 'பதிவுலகம்'. ஈரேழு உலகத்தின் லொக்கேஷன்களை கூட கூகுள் எர்த்தில் கண்டுபிடித்து விடலாம் போல. இந்த பதிவுலகத்த கண்டு புடிக்க படுற பாடு இருக்கே..!!
.......................................................................................

மௌன குரு:  
2011 ஆம் ஆண்டு வாலிபால் விளையாட்டில் சாதனை புரிந்த கல்லூரி வீரர்களுக்கு விருதளிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தன் பெயரும் அதில் உள்ளதென சென்ற வாரம் என் டெல்லி நண்பன் மகிழ்ச்சியுடன் கூறினான். ஆனால் அவன் பெயரை இறுதி நேரத்தில் நீக்கிவிட்டனர் விழா நடத்தும் வேந்தர்கள். கேட்டதற்கு நேரில் வந்து பரிசு பெறுவோர்களுக்கு மட்டுமே கவுரம் செய்வோம் என்றனர். சில சொந்த காரணங்களுக்காக வர இயலவில்லை என்று நண்பன் கூறியும் பலனில்லை.

பொதுவாக வெற்றி பெற்றவர் அல்லது அவர் சார்பாக யாரேனும் வராவிடினும் கூட அந்த நபரின் பெயரை மேடையில் கூறி விருதுக்கு அவர் பெயர் தேர்வானதை கூறுவதே நாகரீகம். அதையும் செய்யாமல் தவிர்த்த சான்றோர்களுக்கு 'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்' விருது வழங்குவதே சாலச்சிறந்தது. 
..............................................................................

சிவா மனசுல 'சக்தி':
இவ்வாண்டு என் பதிவுகளுக்கு ஊக்கமும், ஆரோக்யமான எதிர்கருத்தும் இட்ட அனைவருக்கும் நன்றி. அயலகம், தமிழகம் என பல இடங்களில் இருந்து நண்பர்களை பெற காரணமாக இருந்த கூகிள் நிறுவனத்திற்கு பெரிய வணக்கம். 2011 ஜனவரியில் சென்னையின் பிரபல பதிவர்களை புத்தக கண்காட்சியில் சந்தித்த நாள் தொடங்கி, சமீபத்தில் ஈரோட்டில் சங்கமித்த தோழர்களை கண்டது வரை எல்லாம் இனிய தருணங்களே. சில நேரங்களில் மனதில் பட்ட சிறு குறைகளை பதிவிட வேண்டி இருந்தது. எதிலும் நாகரீக எல்லை தாண்டாமல் இருந்தேன் என உறுதியாக நம்புகிறேன். நாளையும் நல்லதொரு தொடக்கத்தை அனைவருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

பர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து. குறிப்பாக குடும்ப,அலுவலக விஷயங்களை.ஹாஸ்யமான அல்லது ஆக்கபூர்வமான செயல்களை முன்வைக்க அம்மாதிரி பதிவுகளை வெளியிடுவதில் தவறே இல்லை. ஆனால் நேரில் அல்லது தொலைபேசியில் சொன்னதை வேறுமாதிரி புரிந்து கொண்டு செய்திகளை திரித்து பதிவிட்டால் அது ரசிக்கும் வண்ணம் இருக்காது என நினைக்கிறேன். நம்மைப்போல் அனைவரும் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா என்பது சந்தேகமே. அதனால் சின்ன அலாரம் அடிக்க வேண்டி உள்ளது. என்னை வழக்கம் போல துவைக்கும் 'புரிதல்' உள்ள நண்பர்கள் தாராளமாக வெள்ளாவியில் வைத்து வெளுக்கலாம். :-).

உண்மையை சொல்வதற்கு கூட நமக்கான எல்லையுண்டு. ஆசிரியர்கள், மேனேஜர்கள்...ஏன் பெற்றோர்களிடம் பேசுகையில் கூட நம் மனதில் 'ஆமா..நீ சொல்லித்தான் நாங்க திருந்தனுமா? வேலையப்பாரு' என்று சில பல சமயங்களில் எண்ணிக்கொள்வோம். அது தனி மனித உரிமை. நேரில் தெளிவாக பேசியும் கூட அதை வேறுவிதமாக புரிந்துகொள்ளும் நிலை இருக்கையில், பதிவுகள் மூலம் நம் எண்ணத்தை பிறருக்கு சரியாக புரிய வைப்பதற்குள் நாலு குடம் சோடா குடிக்க வேண்டி இருக்கிறதடா தேவுடா!

# சமீபத்தில் நான் வாங்கிய லேசான சிராய்ப்பு.
......................................................................................

பணமா? பாசமா?

'சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி' விருது:
வின்னர்ஸ்:  மேடம் அண்ட் சின்ன மேடம்.  

பத்மினி - வைஜயெந்தி மாலா போட்டி போட்டு ஆடும் இப்பாடலை பீட் செய்ய இதுவரை தமிழ்த்திரையில் வேறெந்த நடனக்கலைஞர்களும் வரவில்லை என்றே சொல்லலாம். ஜெ-ச தொண்டர்களுக்கு இப்பாடலை பெருமையுடன் டெடிக்கேட் செய்கிறேன்.                                                   

......................................................................................
         


.............................                                           
My other site:
agsivakumar.com

E-mail:
madrasminnal@gmail.com
............................


Friday, December 30, 2011

உறைந்த நாட்கள்தமிழ்(ச்செல்வன்)...ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். விவரம் தெரிந்த நாள் முதல் எமது மட்டைப்பந்து குழுவின் அங்கமானவன். பந்தை பாய்ந்து பிடிப்பதில் ஜாண்டி ரோட்ஸ். எந்த வீட்டின் மொட்டை மாடியில் பந்து விழுந்தாலும் அதை எடுக்க சுவர் ஏறும் முதல் ஆள் அவனாகத்தான் இருப்பான்.  பள்ளி,கல்லூரி படிப்பை முடித்து அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கையில் அவன் மட்டும் நிரந்தரமாக ஒரு வேலையில் தங்காமல் எங்கள் தெருவோரம் அமர்ந்தவாறு நண்பர்களிடம் அரட்டை அடிப்பான். "சிவா ஏதாச்சும் காசு இருந்தா குடு" என அடிக்கடி அவன் கேட்கையில் சிறிய தொகையை தந்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவற்றை எல்லாம் குடிப்பதற்கே செலவு செய்கிறான் என்று. அன்பாக சொல்லியும் தொடர்ந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை பணி முடிந்து வீட்டருகே வந்துகொண்டிருக்கையில் சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டது.  அது தமிழின் மரண அஞ்சலி செய்தி. செய்வதறியாது திகைத்தேன். ஏனெனில் நான் இழந்த முதல் நண்பன். நான்கு தெருக்கள் தள்ளி அவன் வசித்து வந்த வீட்டை நோக்கி வேகமாக விரைந்தேன். உடலை எடுத்து விட்டனர் என்ற செய்திதான் கிடைத்தது. 'எப்படி இறந்தான்?' எனக்கேட்டதற்கு கிடைத்த பதில் "பள்ளிக்கரணை மைதானத்தில்  விளையாடுகையில் பந்தொன்று கிணற்றில் விழுந்தது. அதை எடுக்க உள்ளே சென்றவன் உள்ளே மூழ்கி இறந்துவிட்டான்" . சிறுவயதில் இருந்தே பந்து எங்கு விழுந்தாலும் பயமின்றி எடுக்கும் ஆர்வம் அன்றும் அவனிடம் இருந்ததால் மரணத்தை தழுவி விட்டான் என எண்ணி  மனம் வருந்தியது.  

வருடா வருடம் வீட்டருகே இருக்கும் சுவரொட்டியில் லேசான புன்னகை உதிர்த்தவாறு என்னைப்பார்க்கும் தமிழிடம் கேட்க விரும்புவது ஒன்றே: "டேய் தமிழு..நீயா கெணத்துல பந்து எடுக்க போயி செத்தியா? இல்ல எவனாவது 'உன்னாலதான் முடியும்'ன்னு  உசுப்பேத்தி கெணத்துல எறக்கி விட்டானா?". ஒருவேளை உசுப்பேற்றப்பட்டு என் நண்பன் 24 வயதில் மரணத்தை தழுவி இருந்தால்...."ஆபத்தான விசயத்த ஒங்களால செய்ய முடியாட்டியும் இன்னொருத்தன உசுப்பேத்தாதீங்கடா டேய்"!!

சில மாதங்களுக்கு முன்பு எம் சொந்தம் ஒருவர் இறப்பை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். நடிகர்களுக்கு ஒப்பனை செய்பவர். 60 வயதை தாண்டியும் தொப்பை இல்லை. சுறுசுறுப்பின் சிகரம். இளவயதில் விருந்தாளி ஒருவரின் வீட்டில் உணவு அருந்தும்போது நேர்ந்த அவமானத்தால் அன்று முதல் இதுவரை எவர் வீட்டிற்கு சென்றாலும் பச்சை தண்ணி கூடி குடிக்க மாட்டார். வெள்ளுடை அவரது கவச குண்டலம். 

இன்னும் ஒரு சில வாரங்களில் அனைவரையும் விட்டு பிரியப்போகிறார். கடந்த வாரம் எங்கள் இல்லத்திற்கு வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் இருந்து துண்டுச்சீண்டு ஒன்றைக்கண்டேன். அதில் 'தங்க மோதிரம் 2, கழுத்தணி, பச்சை கம்மல்' என்று ஆபரணங்கள் பற்றிய குறிப்பு இருந்தது. அவர் சென்றதும் அது குறித்து தாயிடம் கேட்டதற்கு: "தான் இறக்கும் முன் சேர்த்து வைத்தவற்றை சொந்தங்களுக்கு சரியாக பிரித்து தர அவர் போட்ட பட்டியல்" என பதில் கிடைத்தது. மீண்டும் ஒருமுறை அச்சீட்டை வாசித்தேன். இறப்பின் குரூரம் என் மனதிலும் சாரல்களை சத்தமாக தெளித்தது. வாகன விபத்து, இயற்கையின் சீற்றத்தால் நிகழும் மரணம், சக மனிதனால் கொல்லப்படுதல் போன்ற அனைத்தையும் விடக்கொடியது  இன்னும் சில நாட்களில் இறக்கப்போகிறோம் எனத்தெரிந்து நாட்களை நகர்த்துவது. அனுபவிப்பவருக்கே தெரியும் அந்த வலி!

கிரி. தமிழைப்போலவே எங்கள் அணியின் அங்கம். இவன் அண்ணன் தினேஷ் அணித்தலைவன் என்றால், கிரி துணைத்தலைவன். விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை 'நண்பேன்டா'. தி.நகரில் உள்ள தெருவில் நாங்கள் போட்ட ஆட்டத்தில் பந்துபட்டு உடையாத வீட்டுக்கண்ணாடி இல்லை. பெரியோர்கள்  பந்தைத்தராமல் சாபமிடுவது சகஜம். ஆனால் கிரியின் தந்தை மட்டும் எங்களை அரவணைப்பார். சிறிய புன்முறுவலுடன் பந்தை எடுத்து வெளியே போடுவார். எனவே அவர் மீது எமக்கு தனி மரியாதை உண்டு.  

சென்ற ஆண்டு...கிரியிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு: "சிவா, அப்பா எறந்துட்டார்". நண்பர்களை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு விரைந்தேன். சோகத்தில் இருந்த அவனது தாயாரிடம் ஆறுதல் கூறிவிட்டு கிரியின் அருகே அமர்ந்தேன். ஓரடி தள்ளி அமைதியாக படுத்திருந்தார் அவன் தந்தை. "நேத்துல இருந்து தினேஷ் சாப்பிடல. யாராவது அவன சாப்புட சொல்லுங்கப்பா?" என குரல்கள் ஒலித்தன. எத்தனை முறை நாங்கள் சொல்லியும் தினேஷ் ஒப்பவில்லை. தந்தையின் இழப்பு அவனை கோபமாக எம்மை நோக்கி சீறவும் வைத்தது: "அவரப்பத்தி உங்களுக்கு தெரியும்ல? எப்படிடா என்ன சாப்புட சொல்றீங்க?". பதில் சொல்ல முடியாமல் திரும்ப வந்து தந்தையின் உடலருகே அமர்ந்தேன். 

தினேஷின் மகள். வயது நான்கு இருக்கும். தாத்தாவின் காலடியில் சிதறிக்கிடந்த ரோஜா இதழ்களை சட்டென எடுத்து வாயில் போட்டுக்கொண்டு "ரோஜா..வேணுமா?" என்று என்னிடம் கேட்ட அந்த நொடியை வாழ்நாளில் மறக்க முடியாது. மரணம் குழந்தைகளுக்கு கால் தூசா? அவளின் செய்கையில் பொதிந்திருக்கும் நிஜமென்ன? எதை உணர்த்த நினைக்கிறது காலம்? இன்றுவரை புலப்படவில்லை. 

நண்பனிடம் கேட்டேன்: "கிரி என்னடா நடந்தது?"

"நேத்து காத்தால மூணு மணி இருக்கும். திடீர்னு நெஞ்சு வலிக்கறதா சொன்னார். தண்ணி தந்துட்டு, வீட்டு கிட்ட இருக்ற மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு உடனே வந்து உதவி செய்ய சொல்லி கேட்டேன். யாரும் வரல. கேட்டா 'மருத்துவர்கள் நோயாளியின் வீட்டுக்கு வந்து வைத்தியம் செய்ய முடியாது.  கொஞ்ச வருஷமா இதுதான் நிலை. வேணும்னா அவரை இங்க கொண்டு வாங்க.  ஆனாலும் பெரிய மருத்துவர் காலை ஏழு மணிக்குதான் வருவார்". என்ன செய்வது என கிரி பதறிய நேரத்தில் அவன் மடியிலேயே மரணத்தை தழுவினார் தந்தை. எத்தனை பணம் தரவும் தயாராக இருந்தும், நோயாளி உங்கள் பகுதிக்கு அருகில் இருந்தும்..கடமை ஆற்றாத மருத்துவர்களே வாழ்வாங்கு வாழ்க உங்கள் புகழ்!!
.......................................................................................

...............................
My other site:
..............................

Thursday, December 29, 2011

திரை விரு(ந்)து 2011 - பாகம் 2எல்லா திரைப்படம்/டாகுமெண்டரி போன்றவற்றை பார்த்தோம், மறந்தோம் என்று இருந்துவிட முடியாது. செங்கல் சைசுக்கு உள்ள புத்தகத்தை படித்து ஒரு விஷயத்தை மனதில் ஏற்றிக்கொள்ள சிரமப்படும் சாமான்யர்களுக்கு  படச்சுருள் மூலம் சினிமா படைப்பாளிகளால் அந்த விஷயங்களை எளிதாகவும், ஆழமாகவும் தர இயலும் என்பதை முற்றிலும் மறுக்க முடியாது. அதுபோல 2008 ஆம் ஆண்டு உலகையே சுழற்றி அடித்த பொருளாதார பேரிடி குறித்து சில ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தாலும், அந்நிகழ்வு குறித்த அருமையான முழுத்தொகுப்பை தந்தது ஒரு டாகுமெண்டரி படம். பெயர் இன்சைட் ஜாப்.  

அயல்தேசங்களில் 2010 ஆண்டே வெளியாகி ஆஸ்கர் விருதையும் வென்ற இந்த படம் இந்தியாவில் பிப்ரவரி மாதம்தான் ரிலீஸ் ஆனது. உலகம் முழுக்க அதிர்வுகளை உண்டாக்கி பலபேரை வேலையின்றி தெருவில் நிறுத்திய பொருளாதார பூகம்பத்தின் ஆரம்ப புள்ளியான ஐஸ்லாந்தில் ஆரம்பிக்கிறது முதல் காட்சி. அதன் பின் ஒவ்வொரு காட்சியிலும் உலகின் பல்வேறு மூலைகளில் இருப்பவர்களிடம் எடுத்த பேட்டி, நீதிமன்ற நடவடிக்கை என  வீடியோ ஆதாரங்களுடன் உண்மைகளை நமக்கு எடுத்து சொல்கிறது இன்சைட் ஜாப். கண்டிப்பாக பாருங்கள்.

இவ்வாண்டு பார்த்த(அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி) என்னை கவர்ந்த திரைப்படம்/டாகுமெண்டரி இதுதான்.

பிடித்த படம் - இன்சைட் ஜாப்
                                                                 
பிடித்த நடிகர்கள் - பார்த்தோ, சலீம் 

                                                                       
நான் கண்ட 2011 சினிமாக்களில் பிடித்த தமிழ் நடிகர் என்றால் தனுஷ். எல்லா மொழிப்படங்களையும் சேர்த்துப் பார்த்தால், தனுஷை தவிர மேலும் இருவர் உள்ளனர். முதல் நபர் ஸ்டான்லி கா டப்பாவில் நடித்த மகா நடிகன் பார்த்தோ.இந்தியத்திரைப்படங்களில் வாண்டுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. தாரே ஜாமீன் பர், தெய்வத்திருமகள், வாகை சூட வா இப்படி பலவற்றை பட்டியலிடலாம். அவ்வரிசையில் பார்த்தோ மிகவும் ஸ்பெஷல். எத்தனை வகை முகபாவங்கள்! கேமரா முன்பு நடித்தது போல இல்லாமல் அசத்தி எடுத்து விட்டான்ர் நடிப்பில். 

                                                                       
அடுத்து சலீம். நகைச்சுவை நடிகராக மலையாள படங்களில் பிரசித்து பெற்று இருந்த இவரை சில இயக்குனர்கள் சீரியஸ் நடிகராக மாற்றி வெற்றியும் கண்டனர். அதில் ஆதமிண்டே மகன் அபு திரைப்படம் ஒரு மைல்கல். 43 வயதே நிரம்பிய சலீம் 70 வயதுள்ள கேரக்டரில் வாழ்ந்திருப்பார். ஹாட்ஸ் ஆப் சலீம்.

ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்தப்படம். முடிவு தெரிய இன்னும் சில வாரங்கள் காத்திருப்போம். 
...........................................................

சிறப்பு விருதுகள்:

'தமிழன் உணர்வை உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கு' விருது:

வின்னர்: ஏழாம் அறிவு படக்குழு.

'அது வேற வாய். இது நாரை வாய் விருது' விருது:

வின்னர்: கார்த்திக்  

தமிழ்ப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு வேறு மாநிலம் சென்று தமிழனுக்கு ஆப்பு வைக்கும் நடிகர்கள் வரிசையில் அண்ணன் கார்த்திக் இணைந்ததில் ஆச்சர்யமில்லை. 'டெபநெட்டுகா தெலுகு ஆடியன்சே' பிடிக்கும் என்று அங்கே சொல்லிவிட்டு, வழக்கம்போல இங்கே வந்து 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டினார் இவரும். கேக்கறவன் கேனையனா இருந்தா கொக்க கோலாவில் கொத்தமல்லி சட்னி கெடக்குமாம்.                          
                                                        


'இனமானத்தமிழர்கள்' விருது:

படத்தில் பொங்கிவிட்டு கேரவனுக்குள் ஓய்வெடுக்கும் அசகாய சூரர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில், களத்தில் இறங்கி தம்மாலான செயல்களை செய்த சேரன், பாரதிராஜா, தங்கர் பச்சான், கௌதமன், சீமான், கவிஞர் தாமரை, அமீர் மற்றும் அனைத்து தமிழ் திரையுலக உள்ளங்களுக்கும் இதயபூர்வ நன்றிகள். 

'நல்லவனுக்கு நல்லவன்' விருது: 

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ராகவேந்திரா மண்டபத்தை ஒதுக்கி தந்த நடிகர் ரஜினிகாந்திற்கு சல்யூட். 
...................................................................................         
  
தமிழில் பிடித்த.....

தயாரிப்பாளர்: பிரகாஷ்ராஜ்(பயணம்).
இயக்குனர்: எம். சரவணன்(எங்கேயும் எப்போதும்).  
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் (கோ). 
எடிட்டிங்: ராஜா முகம்மது (மௌன குரு).
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்(ஆடுகளம், மயக்கம் என்ன).
வசனம்: ஞானவேல்(பயணம்)  
அணி: எங்கேயும் எப்போதும்.
பின்னணி இசை: ஜி.வி.பிரகாஷ்.  
கலை இயக்குனர்:  கதிர்(பயணம்)  

குறிப்பு: மேலே உள்ள சில தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் குறித்த ஞானம் இல்லாதவன் எனினும், மனதிற்கு பிடித்து இருந்ததால் விருது குடுத்தே தீருவேன் என்பதை அமெரிக்க பேரரசிற்கும், ரஷ்ய ஏகாதிபத்யத்திற்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

FIND OF THE YEAR: இயக்குனர் சாந்தகுமார்(மௌனகுரு)   

    

சிறந்த உடை, ஒப்பனை, திரைக்கதை என குடுத்த காசுக்கு மேல் கூவினால் குமுற குமுற அடிப்பீர்கள் என்பதால்....இத்துடன் விருதளிப்பு விழா இனிதே நிறைவு பெறுகிறது. 
......................................................................................                                                                  

............................
My other site:
..........................Tuesday, December 27, 2011

திரை விரு(ந்)து 2011இவ்வாண்டு வெளியான தமிழ்ப்படங்களில் ஒரு சிலவற்றை பார்த்துவிட்டு அதன் பின் அவை சுட்ட படம் என்று அறிந்ததும் கடுப்பானதுண்டு. பதிவர்கள் சிலர் எப்படியோ கண்டுபிடித்து சுட்டிக்காட்டுவர். அவர்களுக்கு சலாம். அப்படி நொந்ததில் ஒன்று தெய்வத்திருமகள். முரண், மௌனகுரு போன்ற படங்கள் முறையே Strangers on a train, Fargo படங்களின் 'அலேக்' என பதிவர்கள் வாயிலாக கேள்விப்பட்டேன். 

தமிழில் இரண்டு படங்கள் மிகவும் கவர்ந்தன. பயணம்,எங்கேயும் எப்போதும். இரண்டு படங்களிலும் முன்னணி தமிழ் நாயகர்கள் இல்லை. இறுதிவரை  பார்க்க தூண்டின. நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடிப்பு பயணத்தில் சிறப்பாக அமைந்தன. சில லாஜிக் விஷயங்கள் இடித்தாலும் பயணம் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். ராதா மோகனிடம் இருந்து இப்படி ஒரு முயற்சி எதிர்பாராதது. ஆனால் அதை விட எங்கேயும் எப்போதும் ஓரடி முன்னால் நின்றது என்பது என் கருத்து. தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் வண்டியை பத்திரமாக ஓட்ட வேண்டுமென மனது அடித்துக்கொண்டது என்று  பலர் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம். இறுதிக்காட்சியில் பிரசங்கம் செய்யாமல் சொல்ல வந்ததை குறிப்பில் உணர்த்தியது பிடித்திருந்தது.

ஆடுகளம், மயக்கம் என்ன போன்றவை சிறந்த படத்திற்கான வலுவான அடித்தளத்தை வைத்திருந்தாலும் இறுதிக்காட்சிகள் தொய்வாக இருந்ததது மைனசாக படுகிறது.

பிடித்த படம்: எங்கேயும் எப்போதும்மகா மொக்கை: ராஜபாட்டை

லத்திகா உள்ளிட்ட பல படங்களை பார்க்காமல் எகிறி ஓடினாலும் அவன் இவன், வெடி, வெப்பம், ஏழாம் அறிவு, வேங்கை போன்ற படங்களிடம் இருந்து தப்ப முடியாமல் சிக்கினேன்.ஆனால் என் வாழ்நாளில் பார்த்த படுமொக்கையான படங்களில் விக்ரம் நடித்த 'கிங்'கை மறக்க முடியாது. அதில் வடிவேலு இருந்ததால் கொஞ்சம் சிரிக்க முடிந்தது. ராஜபாட்டை..தீக்ஸாவை நம்பி மட்டுமே போனாலும் அவரையும் சில காட்சிகளில் மட்டுமே காட்டி கடுப்பேற்றினர். வாழ்நாளில் பார்த்த கொடுமையான படம் கிங். இவ்வருடம் பார்த்தது ராஜபாட்டை. இரண்டிலும் விக்ரம்(பம்). இரண்டு பட டைட்டிலிலும் 'ராஜா' ஒளிஞ்சிருக்கு. 'எதுக்கு இதுக்கு ராஜபட்டைன்னு பேர் வச்சாங்க' என்று தியேட்டரில் நண்பர்கள் பலர்  புலம்பினர். எதுக்கு சார் இதுக்கு இந்த பேர வச்சீங்கோ?...முடியல..!
.........................................................................................

பிடித்த நடிகை: சாரா

                                                                   
சிறந்த நடிகர், நடிகை விருதை ஏன் பெரியவர்களுக்கு மட்டுமே தர வேண்டும். அவர்களை விட சுட்டிகள் நன்றாக நடித்திருந்தால் குழந்தை நட்சத்திரம் என்று தனிவிருது தராமல் சிறந்த நடிகர்/நடிகை விருதை தரலாமே என நான் எண்ணியதுண்டு. தாரே ஜாமீன் பர் படத்தில் நடித்த தர்ஷீல் கூட இப்படி ஒரு கேள்வியை எழுப்பி சண்டை போட்டான். கடைசியில் அமீர் கான் சமாதானம் செய்த பிறகே அமைதி ஆனான். அது போல் தெய்வத்திருமகளில் சாராவின் நடிப்பு, குறிப்பாக நீதிமன்றத்தின் உள்ளே விக்ரமை பார்த்து சமிஞ்ஞை செய்யும் போது நம் கண்களை கலங்கடித்து விட்டாள். அண்ணன் தரும் சிறுவிருதை ஏற்றுக்கொள்ளடி என் செல்ல தங்கச்சி!!
.......................................................................................

பிடித்த நடிகர்: தனுஷ்

                                                             
"நாங்கல்லாம் மாசு. எங்களுக்கு விருது எல்லாம் வேண்டாம்' (யாரும் தரப்போறதா சொல்லவே இல்லியே) என்று ஒரு அணி(விசய், சிம்பு..). சிறந்த வாலிபால் வீரர் விருது குடுத்தால் கூட அதையும் கைப்பற்றியே தீரனும் எனும் ஆர்வக்கோளாறில் ஒவ்வொரு படத்திலும் மாறுவேடப்போட்டி நடத்தி மண்டை காய வைப்போர் மறு அணி(கமல், விக்ரம், சூர்யா..). இரண்டிற்கும் நடுவில் தனி ரோடு போட்டு ஹைவேஸில் பறக்கிறார் தனுஷ். ஆடுகளத்தில் அமர்க்களமான நடிப்பு. பெரியவரை மீறி தனியாக சேவல் சண்டைக்கு செல்லும்போதும், ஒத்த கண்ணால ஆடும்போதும்..செம!

மயக்கம் என்ன படத்தில் சீனியர் ஒருவர் தன் புகைப்படத்தை திருடியது கண்டு அதை தட்டி கேட்க போட்டோ சூட் நடக்கும் இடத்திற்கு செல்வார். அங்கு தனுஷை துரத்திவிடுவார்கள். அப்போது இவர் காட்டும் முகபாவம்...தேசிய விருதுக்கு 100% தகுதியான ஆள்யா நீரு.
...........................................................................................

பிடித்த வில்லன்: ஜான் விஜய்


என்ன ஒரு வில்லத்தனம்! 'மௌனகுரு'வில் போலீசாக பின்னி பெடல் எடுத்து இருப்பார். கண்ணா அது. கத்தி. பதட்டம், கோபம், நக்கல் என சுழற்றி அடித்த இவர், பச்சையாக பேசுவதை கொஞ்சம் குறைக்கலாம் என்பது என் கருத்து. சுருக்கமாக சொன்னால் தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷம். .                                                                              
......................................

பிடித்த நகைச்சுவை நடிகர்(கள்): சாம்ஸ் மற்றும் பப்லு

                                                           
பயணத்தில் இவர்கள் செய்த அலப்பறையை மறக்க முடியுமா? தியேட்டர் குலுங்கியது. மாஸ் ஹீரோக்களை ரவுசு விடுவதில் இது ஒரு தனி ரகமாக இருந்தது. பெரிய வெளிச்சம் படாத ஆனால் திறமையுள்ள சாம்சுக்கு அருமையான களம் அமைத்து தந்த ராதாமோகன், பிரகாஷ்ராஜ் இருவரையும் பாராட்ட வேண்டும். சாம்சின் நக்கலுக்கு ஷைனிங் ஸ்டாராக வரும் பப்லு குடுக்கும் ரியாக்ஷன் சூப்பர்ப். அட்டகாசமான பயணம்!!

திரைவிரு(ந்)து 2011. தொடரும்.

..............................................................

..................................
My other site:
agsivakumar.com
.................................
                                                  
                                                    

Monday, December 26, 2011

2011 பிடித்த படங்கள்2011 இல் எனக்குப்பிடித்த, என்னைப்பிடித்து ஆட்டிய படங்கள் ஒரு பார்வை

பிற மொழிப்படங்களில் மனதை கவர்ந்தவை:

                                                                Stanley ka Dabba

ஹிந்தி:

ஜிந்தகி நா மிலேகி தோபாரா - வித்யாசமான முயற்சி. நல்ல பொழுதுபோக்கு.

ஸ்டான்லி கா டப்பா, ஐ ஆம் கலாம் - குட்டி நாயகர்களின் சுட்டி நடிப்பு.  

ஆங்கிலம்:

X-மென் பர்ஸ்ட் க்ளாஸ், சோர்ஸ் கோட், தி ஹாங் ஓவர் - 2, டாங்க்ள்ட். நான்குமே அசத்தலான படங்கள். 
.........................................................................................
  
அபவ் ஆவரேஜ்:
                                                                         
                                                             ஒரிஜினல் ஒஸ்திஆங்கிலம்: ரியோ, குங் பூ பாண்டா, ரைஸ் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்,  புஸ் இன் த பூட்ஸ், ஹாப்பி பீட் - 2, டின் டின், 127 ஹவர்ஸ்,       
....................................................................................

சுமார் ரகம்:ஆங்கிலம்: தோர், எம் ஐ - 4
..........................................................................

பார்த்து நொந்தவை. நொந்தே பார்த்தவை:  

அவன் இவன், வெப்பம், வெடி, வேங்கைஏழாம் அறிவு, ரா ஒன், ஓ மை பிரண்ட்(தெலுங்கு), தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்(ஹிந்தி)

பார்க்க வேண்டாமென ஒதுக்கியவை:

                                "எம் படம் பாக்காம ஒனக்கு சோறா கேக்குது" பா.விசய்        


இளைஞன் -  ஐயா வசனம். பா.விஜய் பஞ்ச். ஒடம்பு தாங்காது. 

யுத்தம் செய் - மிஷ்கின்...நமக்கு கொஞ்சம் அலர்ஜி.

நடுநிசி நாய்கள் - ட்ரெயிலர் பார்த்தேன். படம் தவிர்த்தேன். 

லத்திகா - காரணம் சொல்லணுமா?

ஆரண்ய காண்டம் - கலீஜ், எனக்கு ஒலக சினிமா ஞானமில்லை.

மங்காத்தா, வேலாயுதம்,ஒஸ்தி - மாஸ் ஹீரோன்னா பாத்தே தீரணுமா?

தம்பி வெட்டோத்தி சுந்தரம், பாலை - பதிவர்கள் குடுத்த ஓவர் பில்ட் அப். 

வானம் - நல்ல படம் என அறிந்தேன். சிம்பு..அதனால நான் எஸ்கேப்.

ஹிந்தி:

பாடிகார்ட், ரெடி - காரணம் இல்லை.பார்க்க தோன்றவில்லை.
................................................................................................  

தவறவிட்ட படங்கள்:

                                                                          
வர்ணம், மைதானம், வெங்காயம், காஞ்சனா.

ஹிந்தி: ஐ ஆம், சாஹேப் பிவி அவுர் கேங்க்ஸ்டர்    

ஆங்கிலம்: தி கிங்க்ஸ் ஸ்பீச், மனி பால் மற்றும் சில.

விரைவில் பார்த்தாக வேண்டும். பார்க்க வேண்டிய படங்கள் 2011 இல் மேலும் வந்திருந்தால் தெரிவியுங்கள். 
..........................................................................

மொழிபேதமின்றி என்னை மிகவும் ரசிக்கவைத்த மற்றும் வெறியேற்றிய நம்பர் ஒன் படங்கள், நடிகர்கள் - விரைவில்.
..........................................................................

...................................
My other site:
agsivakumar.com
...................................

.................................................
சமீபத்தில் எழுதியது:

மனுஷ்யபுத்திரனின் நூல் வெளியீட்டு விழாவில்..!

ராஜபாட்டை - வெமர்சனம்
.................................................Sunday, December 25, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (25/12/11)உலகம் சுற்றும் வாலிபன்:

 
"ஏக் காவ் மே ஏக் பி.எம். ரஹ தாத்தா. சியர்சு"

"நக்கலா. அதையும் இதுல ஊத்துங்க பாஸ். அணை, அணு உலை, ஈழம், மீனவன் பிரச்னைன்னு இந்த டமிலனுங்க டார்ச்சர் தாங்கல"
...................................................................................

தர்மம் தலைகாக்கும்: 
(அன்னா ஹஜாரே)

பசி உசுர வாங்குதுன்னு
சோறு கேட்டா எவனும்
உதவாத தேசம்.

பசிலயே உசுரு போவட்டும்
அனுமதி தாங்கன்னு கேட்டாலும்
கண்டுக்காதது மோசம்.
......................................................................................


நீங்களும் ஹீரோதான்:

செய்தி: லோக்பால் குழுவில் இட ஒதுக்கீடு வேண்டும். தலைவர்கள் முடிவு.

மகளிர் மசோதா தாக்கல் செய்யும்போதும் இதே மாதிரி குட்டைய கொளப்பி அதை வரவிடாம செஞ்சீங்க. இப்ப இங்கயுமா? லோக்பால்ல எல்லா மதத்து ஆளுங்களும் அங்கம் வகிச்சிட்டா நாங்க எங்க போறது? எங்களுக்கும் இட ஒதுக்கீடு தந்தே தீரனும். இல்ல..சபாநாயகர் மைக்க கடிச்சி தின்னுபுடுவோம். 
 # நாத்திகர்ஸ்.
........................................................................................

திருவிழா:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆபீசில் அமர்க்களப்பட்டன. வாரம் முழுக்க நடந்த நிகழ்ச்சிகளில் இறுதியாக மற்ற அணியில் இருந்த தேவதைகளை அழைத்து வந்து பாட வைத்தார்கள். பத்து மைனாக்கள் கோரசாக பாடுவதை நேரடியாக கேட்டது இதுதான் முதல் முறை. அருமை. அருமை.

.............................................................................................

நேபாளி: 
காலைல 11 மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும்போது மாசம் ஒரு தபா கதவ தட்டி "சாப். கூர்க்கா சாப்"ன்னு ஒருத்தன் வந்து நிக்கறான். ''தூங்குற சிங்கத்த சொரண்டாத. போயிடு''ன்னு ரொம்ப வாட்டி சொல்லி இருக்கேன். நேத்து பொங்கிட்டேன் "என்னது கூர்க்காவா? நான் ரொம்ப நாளா ராத்திரில இதே தெருவுலதான் நடந்து வர்றேன். நிம்பள ஒரு நாள் கூட பாத்தது இல்லையே? யாரு கிட்டே காது குத்ரே?"ன்னு கேட்டதுக்கு என்னைய லேசா மொறச்சிட்டு போயிட்டான். நாளை பின்ன ராத்திரில ரோட்ல எப்படி நடப்பேன்...வெரட்டி வெரட்டி வெரைட்டியா வெட்டுவானோ? பாட்டி சொல்லி இருக்கு "இது ஓடற பாம்ப(பாம்பு ஓடுமா?) மிதிக்கற வயசு"ன்னு. பதறாத. த..கி..ரி..ய..மா போடா சூனா பானா.   

................................................................................................


ஜித்தன்:
வேலை செய்ற இடத்துல புதுசா ஒரு உணவகம் திறந்துருக்காங்க. உண்டு களிப்போம்னு போயி "ஒரு பரோட்டா" கேட்டுட்டு சகலைங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.  அடுத்த நிமிஷமே போட்டு கொடுத்தான். என்ன வேகம்டா. இனிமே இங்கதான் திங்கம்னு முடிவு செஞ்சேன். அடுத்து ஒரு நண்பர் பரோட்டா கேட்டாரு. ப்ரிட்ஜுல காலைல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த பரோட்டாவை எடுத்து கல்லுல போட்டு சூடு பண்ணாரு மாஸ்டரு. திகில் ஆகி நான் மாஸ்டர் கிட்ட சொன்னது: "அண்ணே, இந்த பரோட்டாவ செரமமே இல்லாமே டக்குனு பிச்சி கொடுங்க. அப்பறம் திங்கறேன்". வெக்கப்பட்டு சிரிச்சாரு மாஸ்டரு. எப்படி எல்லாம் டெவெலப் ஆகி போறாய்ங்க......

........................................................................................


மகா நடிகன்: 
கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லிவிட்டு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் விடுமுறை தின வாழ்த்து சொல்லும் கலைஞரே. பெரியார் 'சமத்துவ'புரத்தில் உங்களுக்கு ஒரு வீடு கன்பர்ம்.
........................................................................................

மயக்கம் என்ன 
'ஈரோடு பதிவர் சந்திப்பு பத்தி பதிவு போடுறதை இன்னும் சிறப்பா எப்படி கொண்டு போகலாம்'என்று 12 பேர் கொண்ட செயற்குழு ஆலோசித்ததில் சில முத்தான யோசனைகள் முன் வைக்கப்பட்டன. 'பதிவர் சந்திப்பிற்கு வெளியூர்  செல்லும் எண்ணம் உருவான விதம்' பற்றிய நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது சிறந்த யோசனையாக தெரிகிறது. பண்ணிடுவோம்.
................................................................................

சதுரங்கம்:

                                                           கொனேரு ஹம்பி

துருக்கியில் நடக்கும் உலக மகளிர் சதுரங்க போட்டியில் இந்தியா வெற்றிகளை குவித்து வருகிறது. முன்னணி வீராங்கனை கொனேரு ஹம்பி அனைத்து ஆட்டத்திலும் வென்று வருகிறார். இதுவரை சீனா, இந்தியா முறையே முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. சீனா 12, இந்தியா 9 புள்ளிகள் பெற்றுள்ளன. வரும் செவ்வாய் இறுதி சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. வெல்க இந்திய மகளிரே!

சதுரங்க போட்டிகளில் உலகில் உயர்ந்த இடத்தை அடைந்து இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக பெருமை தேடித்தந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பாரத ரத்னா கிடைக்குமா என ஊடகங்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து கேட்டதற்கு வழக்கம்போல அமைதியாக பதில் அளித்துள்ளார் ஆனந்த் "சரியான முடிவை அரசே எடுக்கும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை".

என்னதான் கத்தினாலும் பல விளையாட்டுகளில் அளப்பரிய சாதனைகள் பல புரிந்தவர்களை புறக்கணித்துவிட்டு சச்சினுக்கு முதலில் பாரத ரத்னாவை  தந்துவிட்டுதான் தூங்குவார்கள் நம்ம ஆட்கள் என்பது நாடறிந்தது. நடத்துங்க ராசா!
..................................................................................................
                                           
ஒஸ்தி:
சமீபத்தில் சுகா'சினி' மேடம் அளித்த பேட்டி: "டாம் க்ரூஸ் கொஞ்ச நாளைக்கு முன்ன இந்தியா வந்தப்ப என்ன பாக்கனும்னு சொன்னார். ஆனா நான் ரொம்ப பிசி. பாக்கறது கஷ்டம்னு சொல்லிட்டேன்".

 # லேடன்ட்ட பேசறியா. பின் லேடன்.
....................................................................................

சாணக்யா: 
தமிழ்நாட்டை கண்டுக்காம நாடு நாடா சுத்தராறு பி.எம். வடநாட்டு பெரிய கட்சி எதுவும் எட்டிக்கூட பாக்கல. பக்கத்து மாநிலக்காரன் எல்லாம் முஸ்டிய தூக்கிட்டு நிக்கறான். எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ்தான் காரணம். இதுக்கு மேலயும் பொறுக்க முடியாது. சூப்பர் சுருளியின் திட்டத்த ஒடனே அமல்படுத்த அரசு முடிவெடுக்கணும்.


............................................................................................

கடலோரக்கவிதைகள்:
புரட்சித்தலைவரின் கலக்கலான பாடல்களில் இதற்கு தனி இடமுண்டு. டி.எம்.எஸ்...சிம்மக்குரலோன். இப்பாடல் குறித்து ஒரு முறை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி: "சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தேன். ஒரு நாள் அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அதில் ஒரு வசனம் பேசுவார் துணை நடிகர் "காற்று வாங்கப்போனேன்..அருமையான பாடல்" என்று. அதற்கு நான் "காத்து வாங்கப்போனவர் அத வாங்காம எதுக்கு கவிதை வாங்கிட்டு வந்தார்" என்று சொன்னேன். அனைவரும் சிரித்தனர். நாடகம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எங்களைக்காண வந்து கொண்டிருந்தார். கூட இருந்தவர்கள் "டேய்..பொடியா. என்ன தைரியம் இருந்தா தலைவர் முன்னாலேயே இப்படி வசனம் பேசி இருப்ப. தீந்த போ" என்று பயமுறுத்தினர். ஆனால் என்னருகே வந்த எம்.ஜி.ஆர் "நல்ல நகைச்சுவை உணர்வு" எனக்கூறி வாழ்த்தி விட்டு சென்றார்". மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் உன் பேச்சிருக்கும்.  

...................................................................................

.............................
My other site:
agsivakumar.com
.............................

......................................................
சமீபத்தில் எழுதியது:
........................................................

                                                                  

Friday, December 23, 2011

2011 பிடித்த பாடல்கள்தமிழில் எந்தப்பாடலை யார் பாடினர் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஆண்டுதோறும் புதுப்புது அறிமுகங்கள். 'என்னம்மா பாடறாங்க. யாருன்னு தெரியலியே' என யூகிக்க முடியாமல் சில நாட்கள் இருந்துவிட்டு இணையத்தில் பார்த்த பின்பே அவர்களின் பெயர் பரிச்சயம் ஆகிறது இப்போதெல்லாம். 'கண்கள் இரண்டால்' பாடலுக்கு பிறகு என்னை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் எதுவும் வரவில்லை. ஆனால் அபிமான பாடல்களுக்கு பஞ்சமில்லை. இவ்வாண்டு நான் பார்த்த படங்களில் பிடித்த பாடல்களை பகிர்வதில் மகிழ்ச்சி: 

பிறமொழிப்படங்களில் எனது அபிமான பாடல்கள் ஐந்து. ஹிந்தியில் தில்லி தில்லி(நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா), டப்பா(ஸ்டான்லி கா டப்பா) ஆகிய படங்களின் பாடல்கள். முதலில் சொன்ன படத்தில் தில்லி நகரை மையமாக வைத்து டைட்டில் சாங்கை பரபரப்பாக பாடியும், படமாக்கியும் இருப்பார்கள். அடுத்த பாடல் பள்ளிப்பிள்ளைகளின் டிபன் பாக்சை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கும். காட்சிகளும் சுவாரஸ்யம்.

படம்: நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா
குரல்: டோசி ரைனா,ஸ்ரீராம்.  
                                                   


படம்: ஸ்டான்லி கா டப்பா
குரல்: சுக்விந்தர் சிங் 

....................................................................................

மலையாளத்தில் இரண்டு படங்களின் பாடல்கள் அருமையாக இருந்தன.
         
படம்: இண்டியன் ருபீ. குரல்: சுஜாதா,ஸ்ரீகுமார்
                 

     
படம்: ஆதமிண்டே மகன் அபு
குரல்: சங்கர் மகாதேவன், ரமேஷ் நாராயண்                                   
                                              

........................................................................

படம்: ஸ்ரீ ராமராஜ்யம்(தெலுங்கு) இசை: இளையராஜா. 
குரல்: எஸ்.பி.பி., ஸ்ரேயா கோஷல்  


.............................................................................

தமிழ்ப்படங்களில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு  படத்தில் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பும். அப்படி சென்ற ஆண்டு அசத்தியது 'பையா'. யுவனின் இசையில். சில வருடங்களாக ஹிட் ஆல்பம் தருவதில் ஹாரிஸ் முன்னணியில் இருந்தார். ஆனால் இம்முறை கோ,ஏழாம் அறிவு போன்றவற்றில் ஓரிரு மேஜிக்குகள் மட்டும் தந்தால் போதுமென இருந்துவிட்டார் போல. இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த ஐந்து பாடல்கள்:

5. என்னமோ ஏதோ - நெருடாத இசை. அழகிய வரிகள்.
   

4. அமளி துமளி - அட்டகாசமான லொக்கேஷனில் எடுக்கப்பட்ட பாடல். 
    கார்த்திகா அக்காவின் முகபாவம் பாடலுக்கு திருஷ்டி.  
                               


3. ரசிக்க வைக்கும் காட்சிகள். நகைச்சுவையான வரிகள். சென்னை மக்களிடம் அனன்யா படும் பாடு. எல்லாம் அருமை. மிகவும் பிடித்த வரி 'ட்ரெயிலர் போல முடிந்திடுவாளோ.ட்ரெயினை போல தொடர்ந்திடுவாளோ'.விஜய் பிரகாஷ்..குரல் அரசன்யா நீரு.                        


2. சாதாரண ஆள் காதலை எப்படி கொண்டாடுவான் என்பதை ஏகப்பட்ட தமிழ்  படங்களில் காட்டியிருப்பினும், தனுஷ் மற்றும்  தினேஷ் மாஸ்டர் இணைந்து தூள் கிளப்பிய இப்பாடல்தான் என்னைப்பொறுத்தவரை பெஸ்ட். ஜி.வி.யின் சிறந்த  இசையும், வேல்முருகனின் நாட்டுவெடி குரலும் அமோகம். 


................................................................................................................................................

1. இவ்வாண்டு வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் வாகை சூட வா படத்தில் இருந்து 'செங்க சூளக்காரா'. அனிதாவின் அசர வைக்கும் வாய்ஸ். என்ன ஒரு ஏற்ற இறக்கம்!!

கவிஞர் வைரமுத்துவின் 'மை'யாட்சியில் அனைத்து வரிகளும் தீப்பொறி. குறிப்பாக இறுதி வரியான 'வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா'. .........................................
விரைவில்: 
பிடித்த படங்கள் 2011 
.........................................
.............................
My other site:
............................

............................................................
சமீபத்தில் எழுதியது:

............................................................


Monday, December 19, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு 2011 - மனதில் பட்டவைஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும் யுடான்ஸ் சிறுகதை பரிசளிப்பு விழா இரண்டையும் ஒரே நாளில் நடத்தியதால் எதை அட்டன்ட் செய்வது என்பதில் சென்னை பதிவர்களுக்கு லேசான குழப்பம். சென்னை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு சற்று தாமதமாக வந்ததால் ஈரோடு செல்லும் ட்ரெயினில் பறந்தோம். ஈரோட்டிற்கு இரவு சென்று சேர்ந்ததுமே பதிவர்கள் தங்க அறைகளை ஏற்பாடு செய்திருந்தனர். நண்பர் சங்கவி எம்மை சிறப்பாக கவனித்தது மகிழ்ச்சி அளித்தது. 'ரூம் பில்லை நான்தான் கட்டுவேன்'. 'இல்லை நான்தான் கட்டுவேன்.'என்று கேஆர்பியும், சங்கவியும் கொஞ்சிக்கொண்டார்கள். 'சாவகாசமா கொஞ்சிக்கங்க.  எந்த ரூம்னு சொன்னா புண்ணியமா போகும்' என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். அருகில் மோகன்குமார், பிரபாகரன், ஆரூர் முனா செந்தில், ரமேஷ்(கேஆர்பி தம்பி). ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து ரூமுக்கு சென்றோம்.  

சனி அன்று இரவு பதிவர் சந்திப்பு நடக்கும் ரோட்டரி சிடி ஹாலில் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். முட்டை தோசை, குஷ்பு இட்லி, கார மற்றும் தேங்காய் சட்னி என மெனு. சாம்பார் மட்டும் நஹி. பெரிய தலைகள் பலர் வந்து கொண்டே இருந்தனர். 'தமிழ்வாசி வந்தாச்சா?' 'விந்தை மனிதன் எங்க?' 'ரகசிய குரங்கு இங்க' என்று ஆங்காங்கே டோன் ஒலித்தது. பிரகாஷ், ராஜாராமன் இப்படி கூப்புடாம வித விதமான பெயர்களில் அழைத்தது கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. நடுநாக்கில் குஷ்பு(இட்லி) நர்த்தனம் ஆடியதால் வாய் விட்டு சிரிக்க முடியவில்லை. 

ஞாயிறு காலை மறுபடியும் உணவு உபசரிப்பில் அசத்தினர் ஈரோட்டு நண்பர்கள். சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று முன்னறிவிப்பு செய்தது போல 10.30 மணிக்கு டான் என நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. யாதுமாகி குறும்படம், தமிழ் வணக்கம், சிறப்பு பேச்சாளர்களின் உரை, சிறந்த 15 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மரியாதை, அந்த 15 பேர் குறித்தும் சிறிய திரையில் தெளிவான அறிமுகம் என அற்புதமாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி குறித்து திட்டமிட குறுகிய நாட்களே இருந்ததென சங்கவி கூறி இருந்தார். பதிவர்களுக்கு தங்கும் இடம், வேளை தவறாமல் அன்பான உணவு உபசரிப்பு,இனிமையான வரவேற்பு போன்றவற்றை செய்த ஈரோட்டு இதயங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. கிட்டத்தட்ட அனைத்து பிரபல பதிவர்களையும் திரட்டி அசத்தி விட்டனர். இனி இப்படி ஒரு நிகழ்வு நடப்பது ஆச்சர்யம்தான். முதன்முறை பல பதிவர்களை கண்டு மனமார பேச ஏற்பாடு ஈரோடு வலைப்பதிவர் குழும நண்பர்களுக்கு மிக்க நன்றி. 

அதே நேரத்தில் ஒரு சில குறைகளை மட்டும் களைந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவை என்ன என நண்பர் சங்கவியிடம் தனிமையில் பேசுகையில் கூறினேன். அவை பின்வருமாறு: சமூகத்திற்கும், பதிவுலகிற்கும் தம் சிறப்பான பங்கை ஆற்றிய 15 பேர் குறித்த அழகிய தொகுப்பை திரையில் காட்டினர். அதை பார்க்க பலரால் முடியவில்லை. மேடையில் இருப்போரை போட்டோ எடுக்க அந்த திரையை மறைத்தவாறு நண்பர்கள் நின்று கொண்டு இருந்ததால் பரிசு பெறும் நண்பர்கள் குறித்த முழுமையான தகவல்களை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் இதை சரி செய்து இருக்கலாம். 

சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடமான ரோட்டரி சிடி ஹாலில் உணவு அருந்த அழைத்திருந்தனர். முதல் மாடியில் பதிவர்கள் இருந்தது அறிந்து மேலே சென்றோம். பிரபல சீனியர் பதிவர்கள் சுவற்றோரம் இருந்த டேபிளில் கெம்பீரமாக வீற்றிருந்த சரக்கை ஏற்றிக்கொண்டு இருந்தனர். சவுண்டும் சற்று ஜாஸ்தியே. வாடை அதனினும் தூக்கல். ஈரோடு சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் சற்று தள்ளி நின்றவாறு இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். குடிப்பது சரி தவறு என்று சொல்ல நான் பிரச்சார பீரங்கி அல்ல என்றாலும், உற்சாகபான பிரியர்களுக்கு தனியாக அறை அமைத்து மகிழ்ச்சியை  பீறிட பீரிட வைத்திருக்கலாம் என்பது என் கருத்து.  வலைப்பதிவர்கள் நினைத்தால் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று சிறப்பு பேச்சாளர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் இந்நிகழ்வுகளை குறும்படமாக போட்டிருந்தால்? ஈரோடு கதிர் அவர்களே பதிவுலகம் புதியவர்கள் மற்றும் மொக்கைப்பதிவர்கள் ஆகியோரை விட இம்மாதிரி நிகழ்வுகளால் அளவுக்கு அதிகமாகவே 'நீர்'த்துப்போய்க்கொண்டு இருக்கிறது என்பதையும் மேடையில் சொல்லி இருக்கலாம். தங்களிடம் தனியாக பேச வேண்டுமென கூறினேன். ஆனால் நீங்கள் பிசியாக இருந்ததால் சங்கவியிடம் என் கருத்தை தெரிவித்தேன். 

நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திலேயே இவற்றை அரங்கேற செய்தது கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியது. நிகழ்ச்சி நடைபெறும்போது ஆரஞ்ச் ஜூஸ், இரவோடு இரவாக உற்சாக பானம். ஏன் இந்த முரண் என்பதே கேள்வி? பதிவர் சந்திப்பிற்கு எங்களையும் அழைத்து சென்றிருக்கலாம் என சில பதிவர்களின் இல்லத்தில் இருக்கும் பெண்கள் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  அப்படி அவர்கள் வந்திருந்தால் இத்தகு நிகழ்வுகளைக்கண்டு வருந்தி இருப்பர் என்பதை நீங்கள் ஏன் யோசிக்கவில்லை விழாக்குழுவினர்களே? 

ஞாயிறு அன்று நடந்த நிகழ்ச்சியில் முதலில் குறும்படம்,  சிறப்பு பேச்சாளர்கள் உரை, சமூகம் சார்ந்த விஷயங்களை சிறப்பாக செய்த நண்பர்களுக்கு பரிசளிப்பு...நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிந்தே போனது. மேடை காலி. கீழே இருந்த பாதி பேர் வெளியேறிவிட்டனர். 'இனி புதிய பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்' என்று அறிவிப்பு. புதிய பதிவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பதிவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதை கேட்க அரங்கில் பாதி  மட்டுமே எஞ்சி இருந்தனர். கணிசமான அளவில் பெரிய தலைகள் எஸ்கேப்.

முதலில் புதிய பதிவர்கள் அறிமுகம், பிறகு சிறப்பு பேச்சாளர்கள் உரை, சிறந்த சேவை செய்தோருக்கு பரிசளிப்பு, இறுதியில் குறும்படம் என வரிசைப்படுத்தி இருக்கலாம். 'இப்பல்லாம் எவன்டா ஒழுங்கா ப்ளாக் எழுதறான். குப்பைதான் ஜாஸ்தி. நம்மல்லாம் அந்த காலத்துல..' என்று தொடர்குரல் அவ்வப்போது பிரபல பதிவர்களிடமிருந்து ஒலிப்பதை கண்டு வருகிறோம். புதியவர்களுக்கு கணிசமான வாய்ப்பை அளிக்காமல் இதே மாதிரி நிகழ்ச்சிகள் தொடர்வது நியாயமா? புதிய பதிவர்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு மேடையில் இருந்த சிறப்பு பேச்சாளர்களை வழியனுப்பியது சரியாக படவில்லை. 

வெளிநாட்டில்/வெளியூரில் இருந்து கொண்டு இந்த சந்திப்பு குறித்து நேரடியாக ஆர்வத்துடன் தொலைபேசியில் கேட்டறிந்த நண்பர்கள் பலர். அதில் சிலர் தொலைபேசி வாயிலாக மைக்கில் பேச ஆசைப்பட்டனர். புதிய பதிவர்கள் பலர் சீனியர் பதிவர்களிடம் பரிச்சயம் இல்லாதால் சங்கோஜப்பட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தனர். இவர்களை முன்னிலைப்படுத்தி முதலில் நிகழ்ச்சி நிரலை அமைத்து இருக்கலாம். ஆளுக்கு இரண்டு நிமிடம் ஒதுக்கி இருக்கலாம். 

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ததால் சிலவற்றை செய்ய இயலவில்லை என சங்கவி கூறினார். மேற்சொன்ன குறைகளை வரும் பதிவர் சந்திப்புகளில் களையுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். கண்டிப்பாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்த அவருக்கு நன்றி. 

பதிவர் சந்திப்புகள் கலந்து கொள்ள இயலாத வெளிநாடு/வெளியூர் பதிவர்கள் தொலைபேசி வாயிலாக மைக்கில் பேச முதல் உரிமை, அதன் பின் புதிய பதிவர்கள் அறிமுகம், பிறகு மற்ற நிகழ்ச்சிகள், இறுதியாக குறும்படம். இந்த வரிசையில் வருங்கால பதிவர் சந்திப்புகளை நடத்துமாறு பதிவுலக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். 

இவை நடக்காமல் பதிவுலகம் நீர்த்துப்போய்க்கொண்டே இருந்தால் அதற்கு எவ்வகையிலும் அப்ரண்டிஸ் பதிவர்கள் பொறுப்பேற்க இயலாது என்பது மட்டுமே மறுக்க முடியாத நிதர்சனம். 

மற்றபடி நிறைய பொருட்செலவு செய்து விழாவை ஏற்பாடு செய்த அனைவரின் உழைப்பையும் பாராட்டியே தீர வேண்டும். ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அறக்கட்டளையாக மாறவிருப்பது மகிழ்ச்சியான செய்தி. உங்க ஊர், எங்க ஊர் என்று ஈகோ பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பதிவர்களும் கலந்து கொண்டு ஒற்றுமையை நிலைநாட்டி இருந்தது ஈரோடு பதிவர் சந்திப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 
   
வாழ்த்துகள்
சிவகுமார்.

.......................................................................................
சமீபத்தில் எழுதியது:
ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள்
.......................................................................................


Sunday, December 11, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (11/12/11)பலே பாண்டியா, சபாஷ் மீனா:
                                                   

(கல்லூரி பட வசனம் ரீமிக்ஸ்)


"தமிழ்நாட் - கேரளா இஸ்யூ சீரியஸ் ஆகுது. சமாதானமா போக சொல்லுங்க"

"நீங்கதான கட்சிய நடத்தறீங்க. நீங்க சொல்லுங்க"

"என்ன இருந்தாலும் நீங்க பி.எம். நீங்க சொல்லுங்க"

மக்கள்:  "ரெண்டு பேரும் எதுவும் செய்ய வேணாம். இங்க வரவே வராதீங்க"

"உங்களைத்தான் சொல்றாங்க. நீங்க போகாதீங்க."

"இல்ல. உங்களைத்தான் சொல்றார். நீங்க போகாதீங்க"
........................................................................................

கொண்டாட்டம்: 

ஒரே நேரத்தில் மூன்று பதிவர் திருவிழா பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன. யுடான்ஸ் ஆதி-பரிசல் நடத்திய சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா விரைவில் சென்னையில் நடக்க உள்ளது.  யூத்(அவ்வ்) கேபிளாரின் கொத்து பரோட்டாவை உத்து பார்த்துக்கொண்டே இருக்கவும். 

டெர்ரர்கும்மி வலைப்பூவின் ஓராண்டு நிறைவை ஒட்டி பதிவர்களுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. பரிசுத்தொகை ரூ.10,000. சொக்கா, என்ன வேடிக்கை. உடனே களத்தில் இறங்குங்கள்!!

ஈரோடு நகரம் களைகட்ட தயாராகிவிட்டது. பதிவர் சந்திப்பை வரும் 18 ஆம் தேதி காலை நடத்துகிறார்கள். அலைகடல் என அணிதிரள்க, மேலும் விவரம் அறிய: ஈரோடு பதிவர் சந்திப்பு 2011
..........................................................................................

இணைந்த கைகள்:

வலையில் எழுதுவோருக்கு கத்திரி போட மேதகு.கபில் சிபல் சாரு முடிவு செய்திருக்கிறாராம். மெட்ரிக் உஸ்கோல் ஸ்ட்ரிக்ட் வாத்தியார் மாதிரி சவுண்ட் விட்ற அவரப்பாத்தா ஊரே கிடுகிடுன்னு ஆடுது. அது குறித்து நமது மதிப்பிற்குரிய புலவர் சா.இராமாநுசம் ஐயா ஒரு யோசனை கூறி உள்ளார். படித்து பாருங்கள்: புலவர்குரல்.
..............................................................................................  
     
மௌனகுரு:

நாங்க கதறுனா வாயே தொறக்க மாட்டீங்க? உங்களுக்கெல்லாம் அண்ணா ஹஜாரேதான் லாயக்கு. எப்படி உக்காந்தாரு பாருங்க உண்ணாவிரத பந்தல்ல. இப்ப வாய ஓப்பின் பண்ணியே ஆகணும். ஒண்ணு நீரு சன லோக்குபாலுல கையெழுத்தை போடும். இல்ல அண்ணா சார்.. நீரு மேடைய விட்டு ஓடும். இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 'எதையுமே சொல்லிடாதீங்க' விரதமும், 'புவ்வா வேண்டாம்' விரதமும் இருந்தா எனக்கு வெறி ஏறிடும். மைன்ட் இட் ஹை!
..........................................................................................................  

தர்மம் எங்கே? 

இன்று மகாகவி பாரதி பிறந்தநாளாக இருப்பினும், நாளை வரப்போகும் ரசினி பர்த்டேவுக்காக இன்று காலை முதலே காலில் சலங்கை கட்டி ஆடும் விசய் டி.வி. பத்தி ஒரு நீயா நானா எபிசோட் வைக்குமாறு கோட் கோபியை கொஞ்சி கேட்டுக்கொள்கிறோம். கேரளால எத்தனை தமிழன் செத்தா நமக்கென்ன. நாளைக்கி தீயா வேலை செய்யணும் நல்லதம்பி. பால்கொடம், கட் அவுட்டு எல்லாம் பட்டைய கெளப்பனும். கெளம்பு. விடா முயற்சி. விஸ்வரூப வெற்றி!
...........................................................................

மஞ்சள் மகிமை: 

                                                               
நியூசிலாந்தில் இன்று நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி இறுதிப்போட்டியில் ஆஸி அணி ஸ்பெயினை 1-0 என வீழ்த்தி தொடர்ந்து நான்காம் முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஹாக்கி வரலாற்றில் இது ஒரு சாதனை. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தகுதி பெறவே அடிக்கடி இந்தியா தள்ளாடும். ஆனால் இதுவரை 14 முறை தொடர்ந்து இப்போட்டிக்கு தகுதி பெற்று ஹாக்கியில் என்றுமே கில்லி என ஆஸி நிரூபித்துள்ளது. 
.........................................................................................

பார்த்தாலே பரவசம்:

மனைவியை ஊருக்கு பேக் அப் செய்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டம் போடணுமா? ஷாப்பிங் மால்ல பையை தூக்கிட்டு மேடம் பின்னால அந்து நொந்து போயிட்டு இருக்கீங்களா? கூல் டவுன் புருஷன்ஸ். பாரினில் மக்கள் கூடுற எடத்துல கலக்கிய பிளாஷ் டான்ஸ் இப்போது மும்பைக்கும் வந்தாச்சி. பப்ளிக் ப்ளேஸ்ல டயர்டா இருக்குறவங்களுக்கு செம எனர்ஜி டானிக். கசாப் மும்பைல பலபேரை சுட்டுக்கொன்ன அதே சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன்லதான் இந்த பிளாஸ் டான்ஸ் நடந்தது. நீ எத்தன பேர கொன்னு குவிச்சாலும்..பருப்பு வேகாது. திஸ் இஸ் இந்தியா மச்சி:
                                                        
...........................................................................................

எல்லாம் அவன் செயல்: 

நம்ம நாட்லயே வாழ சிறந்த நகரம் அகமதாபாத்தான்னு டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட் சொல்லுது. சென்னை சிட்டி 7 வது எடத்ல தொங்கிக்கிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ்தான் காரணம். அனுமார் சஞ்சீவி மலைய தூக்குன மாதிரி சென்னையை அந்தப்பக்கம் கொண்டு போயிட்டா சரியாயிடும். அதுபத்தி இப்பதான் இவங்ககிட்ட பேசிட்டு வந்தேன். டோன்ட் வொர்ரி. 
..............................................................................................

 எங்கள் அண்ணா:

                                                           
முல்லைப்பெரியார் அணை பிரச்னையில் வரும் 14 ஆம் தேதி  கேரளாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கேப்டன் முடிவு செய்தே விட்டார். இப்பதாண்டா ஆட்டமே ஆரம்பம். நம்ம மாநில பார்டர்ல நின்னு அவனுங்கள கண்ணு செவ செவக்க குறு குறுன்னு பாத்து 'மெட்ராஸ் ஐ'ய பரப்புனா மட்டும் பத்தாது கேப்டன். சண்ட போட வர்ற பயலுகள அப்படியே பிழிஞ்சி மத்யான சோத்துக்கு ரசமாக்கி தின்னுடுங்க தலைவா.
....................................................................................

தேன்மழை:

'சமுத்திரம் பெரிதா? தேன்துளி பெரிதா? தேன்தான் அது நான்தான்' என தன் குயிலினும் இனிய குரலால் பாரதியின் பாட்டை பாடி இருக்கிறாள் சகோதரி. ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பாடினாலும்..தேனாய் இனிக்கிறது: 


.........................................................................................

.................................................
சமீபத்தில் எழுதியது:

எடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா

ரியல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து!
....................................................

............................
My other site:
agsivakumar.com
............................

                                                                   

Saturday, December 10, 2011

எடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா


இங்கே:

மவனே இதுக்கு மேலயும் பொறுக்க கூடாது. அதுவும் இந்த சான்சை விடவே கூடாது. கூடங்குளம், ஐசு அக்காக்கு கொய்ந்த பொறந்து மேட்ரு எல்லாம் பழசாயிருச்சி. அப்பப்ப இந்த கேரளாக்காரன் கூட ஒரசல் இருந்தாலும் ஏழடி ஆழம், எட்டடி அகலம், ஆயிரம் அடி நீளத்துக்கு பப்பரப்பேனு ஒரு விரிசல இன்னைக்கி உண்டாகியே ஆவணும். கூடங்குளம் அணுஉலை ரொம்ப சேப் ஆனதுன்னு ஆயிரம் பேர் சொன்னாலும் நம்பக்கூடாது. 'திடீர்னு கதிரு செதறி எதுனா ஆயிட்டா போன உசுர நீயா குடுப்ப'ன்னு சண்ட போட்டு, அவனுங்க நடு மூக்குலயே நச்சுனு குத்தனும். 'அப்படி ஒரு ஆபத்து நடக்காதுன்னு உறுதி தர நீ என்ன யாகவா முனிவரா'ன்னு விஞ்ஞானிகளை கலாய்க்கனும். அங்க இருந்து பொடிநடையா நடந்து நடந்து நடந்து போயி கேரளா பார்டர்ல நின்னு 'முல்லைப்பெரியார் பாதுகாப்பானது. தரம். நிரந்தரம்'ன்னு சொல்லணும். 'எடோ (வை) கோபி. ஈ அணை பாதுகாப்பா இல்லா. அது ஒடஞ்சி எங்களுக்கு எதுனா ஆயிருச்சின்னா?'..இப்படி கேரளி கேட்டா அவனை அல்லாக்க தூக்கி மல்லாக்க போடணும். 'செம சேப் ஆன அணை. இன்னும் 999 வருஷம் தாங்கும்னு சொல்ல நீ என்ன சிவசங்கர் பாபாவா' ன்னு சேட்டன் கேப்பான். அப்ப வெறிகொண்டு அவனை பாத்து இப்படி கொதிக்கனும்:  'யூ DAM(N) இடியட். ஷட் அப் அண்ட் பிரிங் மீ ய கப் ஆப் டீ' !!  
  
மெய்னா இந்த நாயர் கடைங்கள அடிச்சி நொறுக்கனும். எங்க ஏரியா சேட்டன் கடைல வேற 400 ஓவா பாக்கி. அவன் கடைய அடிக்கிற அடில ஓட்டம் புடிக்கணும். அந்த ஏழு நாட்கள் டி.வி.டி. விக்கிற கடைங்கள எல்லாம் அடுத்த எழுநூறு நாட்களுக்கு தடை பண்ணனும். இதுல எவன் நல்லவன், கெட்டவன்னு நியாய தர்மம் எல்லாம் பாக்கக்கூடாது. ஒரே அப்பு. மவனே செவுலு அவுலு வுட்டுக்கணும். மானம் ரோஷம் இருக்கறவனா இருந்தா பரங்கிமலை ஜோதி பக்கம் நம்ம ஆளுங்க மலையாள படம் பாக்க போகவே கூடாது.  'ஐயய்யோ..இதவிட மோசமான எமோஷனல் ப்ளாக்மெயில் எதுவும் இல்ல'அப்டின்னு ஷகிலாதாசர்கள் அழப்படாது.  கொஞ்சம் அடக்குங்க/அடங்குங்க. ஒண்ணா மட்டும் கைகோத்துகிட்டு போஸ் தர்ற பாதக செயல செய்யவே கூடாது. தனித்தனியா போராட்டம் பண்ணி தமிழன் பெறுமைய செங்குத்தா நிலைநாட்டனும். ஏழாம் அறிவு, பாலை மாதிரி நமக்கு குளுக்கோஸ் ஏத்துற அளவுக்கு முல்லை பெரியார் பெரிய மேட்டர் இல்லைன்னாலும்..'அடிடா அவன. ஒதடா அவன' ட்யூனை மட்டும் கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு மிச்சம் இருக்குற நேரத்துல வால்யூம் ஏத்தி கத்தனும்.

அங்கே: 

'அணை ஒடஞ்சி தண்ணி வந்தாலும் கேரளாக்கு பிரச்சன இல்லா. இடுக்கில அந்த தண்ணிய ஒடுக்கிறலாம்'ன்னு அயல்காரனுக்கு சப்போட் செய்ற ஈ மாநில வ்யக்தியான ரெவினியூ மினிஸ்டர் ராதாக்ரிஷணனை வாயை மூட சொல்லடா கோபி.  சபரி மலை வர்ற தமிழ் ஆள்களை விரட்டி அடி. மம்முட்டி, மோகன்லாலு மாதிரி ஓல்ட் ஸ்டார் எல்லாம் வேண்டாம். கேரளாலே இப்போ கலக்குற விஜய்,சூர்யா மாதிரி ஆளுங்களுக்கு அடிமையா கெடக்குற யூத் சேட்டன்களை அள்ளிப்போட்டு பெரியார் அணைகிட்ட நிறுத்து. அவனுக அடிக்கற விசில் சத்ததுலையே அந்த டாம் டமார்னு பொளந்துக்கும். பழியை தூக்கி இளிச்சவாய் தமிழன் மேல போடடா கோபி. எப்பிடி ஐடியா? ஈ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆளு உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்!! 

சென்றலு கொவர்மெண்டு இடுக்கில புதிய அணை கட்ட சத்யம் செய்ற வரை நீர் வளத்துறை அமைச்சர் ஜோசப் சாகும் வரை ஊனு கழியா விரதம் இருக்க முடிவு செய்தல்லோ. அவனை இறுக்க 'அணை'ச்சி உம்மா தந்து, புது அணை கட்ட புனுகுப்பூனை வாயன் பன்மோகன் சம்மதம் தெரிவிக்க வேணுமடா கோபி. அதுவரை ஈ கிச்சுதானந்தன் பாத்ரூமில் பிறந்த மேனியாயிட்டு நிக்கும். நீ எவ்விட எங்கும் போயால் கொன்னு களையும். அவன் சட்டைய நீ கிழி. உன் சட்டையை அவன் கிழிக்கட்டும். எவனும் நிம்மதியா இருக்கக்கூடாது. நீ பாட்டு படிக்கோடா கோபி 'ஒனக்கும். ஆஹா ஒனக்கும் எனக்கும்தான் பொருத்தம்.இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்.

நீ மட்டும் ஏனடா தமிழா சும்மா இருக்க. நீயும் பாடு 'நான் வாத்து நான் வாத்து'!!
.................................................................................................................. 

..............................
My other site:
agsivakumar.com
.............................

.................................................................................................
சமீபத்தில் எழுதியது:

ரியல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து!  
.................................................................................................


Monday, December 5, 2011

தங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்


                                                                                                                                             
நண்பர்களே, நேற்று வெளியான வாரமலரில் ஒரு செய்தி பார்த்தேன். அது இணையத்திலும் தினமலரால் பகிரப்பட்டு உள்ளது. அதற்கான லிங்க்: கை கொடுப்போமா. தந்தையின் குடிவெறியால் கையை இழந்த சிறுமி இவர். பெயர் தனலட்சுமி. செயற்கை கை அமைக்க உதவி கோரி இருந்தார். நேற்று நள்ளிரவில்தான் வாரமலர் படிக்க நேர்ந்தது. இன்று காலை இவருடைய ஆசிரியரும், கார்டியனுமாகிய செபாஸ்டியன் அவர்களிடம் பேசினேன். நேற்றே செயற்கை கை பொறுத்த உதவி கிடைத்து விட்டதாக கூறினார். உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி. 

வேறு ஏதேனும் உதவி, குறிப்பாக அப்பெண்ணின் கல்விக்கு உதவி தேவையா என்று கேட்டபொழுது "ஆம். உதவி செய்யுங்கள்"என்றார். "ராமநாதபுரத்தில் நண்பர்கள் உள்ளனாரா என்று பார்க்கிறேன். அப்படி இருப்பின் அவரை உங்களிடம் நேரில் பேச வைக்க முயற்சிக்கிறேன்" என்றேன். அதன் பின் பதிவுலக நண்பர் ரஹீம் கசாலியிடம் கேட்டபோது, தனக்கு தெரிந்த ராமநாதபுரப்பதிவர் பன்னிக்குட்டி ராமசாமி மட்டுமே என்று சொன்னார். ஆனால் அவர் அயல் தேசத்தில் இருப்பதால் நேரில் சென்று ஆசிரியர் செபாஸ்டியனை காண இயலாது என நினைக்கிறேன். ராமநாதபுரத்தை சேர்ந்த பதிவர் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். செபாஸ்டியன் அவர்களிடம் நண்பர் பேசிவிட்டு வந்ததும் அதைப்பொருத்து நம்மாலான உதவியை செய்யலாம் என்பது என் கருத்து. 

தொடர்புக்கு:
செபாஸ்டியன்: 94420 48565
சதானந்தம்: 97867 13264  

இன்னும் எத்தனை சகோதர சகோதரிகளை காவு வாங்க காத்திருக்கிறது இந்த மது எனும் அரக்கன்?


Sunday, December 4, 2011

போராளி


     
'நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன்' அணியான சசி - (சமுத்திரக்)கனி, கஞ்சாகருப்பு, நமோ நாராயணா, ஞானவேல், ஸ்வாதி மீண்டும் இணைந்து போர்க்களம் கண்டுள்ளனர். அல்லாரி நரேஷ் மற்றும் 'பரோட்டா' சூரி ஆகியோர் அணியில் புதிது. சசி இயக்கத்தில் கனி, கனி இயக்கத்தில் சசி என டீலிங் போட்டு நடித்து வரும் படங்களில் என்னுடைய பேவரிட் என்றால் 'நாடோடிகள்'தான். மற்ற படங்களில் அதிகமாகவே ரத்தம் சிந்தப்பட்டது. நாடோடிகளுக்கும், ஈசனுக்கும் இடையே இருப்பவன்தான் இந்தப்போராளி. 

ஈசனில் சென்னை குறித்த தனது பார்வையை சற்று அமெச்சூர்தனமாக காட்டிய  சசியை விட கனி மேலும் நுணுக்கமாக சொல்லி இருக்கிறார். குடித்தனம் இருப்பவர்கள் கேரக்டர்களை அழகாக கையாண்டிருப்பதன் மூலம். வழக்கம்போல நண்பர்களால் சிக்கிக்கொள்ளும் ரோலில் கஞ்சா கருப்பு. இருப்பினும் சிரிக்க வைத்தது விடுகிறார். சசி, நரேஷை சென்னையில் சிலர் துரத்துகையில் கஞ்சா கருப்பு ஓடிக்கொண்டே 'எதுக்கு ஒடறீங்கன்னு சொல்லிட்டாவது ஓடுங்கடா' வசனம் தூள். 'அவன்(சசி) பின்னால அவ போறாளே(ஸ்வாதி)..அதனால அவன்தான் பெருமாளு. நீ?' என்று நரேஷை நையாண்டி செய்வது என முதல் பாதியில் 'கல கல' கருப்பு. ஆனால் இதே மாதிரி பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தால் அது எவ்வளவு தூரம் ரசிக்கப்படும் என்று தெரியவில்லை. நரேஷ் தமிழ் பேச முயற்சி செய்கிறார். ஸ்வாதி நல்லவேளை பெரிதாக நடிக்காவிடிலும், எரிச்சல் மூட்டவில்லை. ஞானசம்பந்தம், ஞானவேல் ஆகியோர் சொன்னதை சரியாக செய்துவிட்டு போகிறார்கள். 

படவா கோபி...இவரை ஏன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை தமிழ் சினிமா என்று எண்ணத்தோன்றுகிறது. மயில்சாமியைப்போல் இவரையும் ஒரு சில காட்சிகளுடன் நடிக்க வைக்காமல் முன்னணி நகைச்சுவை நடிகருக்கான ஸ்கோப்பை இயக்குனர்கள் உருவாக்கித்தரவேண்டும். நமோ நாராயணா நாடோடிகளுக்கு பிறகு ஈசன், போராளி ஆகியவற்றில் வந்து மட்டும் போகிறார். அடுத்தமுறை உங்கள் நண்பருக்கு பேசப்படும் கேரக்டரை தாங்க ச அண்ட் ச.  

முதல் பாதி சிரிப்பொலிகளுடன்  வேகமாக நகர்கிறது. அதன் பின் 'பரோட்டா' சூரி நகைக்க வைக்கிறார். 'கேட்டுக்க', 'நாங்க இப்பயே இந்த மாதிரி' ஆகிய வசனங்களை அடிக்கடி வராமல் தவிர்த்து இருக்கலாம்.  இன்டர்வலுக்கு பின் சசியை எதிரிகள் துரத்த, அவர்களை சசி அடித்து நொறுக்க...திடுதிப்பென கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது. பரபரப்பான காட்சிகளில் சுந்தர் சி. பாபுவின் இசைக்கருவிகள் பல பரிமாணத்தில் திரிந்தாலும், காட்சிகளை பார்ப்பவர்கள் பெரிதாக விறுவிறுக்கவில்லை.   


வெடி போடு பாடல் மட்டும் தேறுகிறது. தன் உழைப்பை விடை லுங்கி ராசியால்தான் தேசிய விருது கிடைத்தது என நடன இயக்குனர் தினேஷ் அழுத்தமாக நம்பிவிட்டார் போலும். இங்கும் லுங்கியாட்டம். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர்கள் பலர் ஹீரோக்கள் ஆன பொழுது கிடைத்த வரவேற்பை இனி தக்கவைத்துக்கொள்வார்களா என்பதில் சந்தேகம் வரத்துவங்கி உள்ளது. சகட்டு மேனிக்கு அனைவரையும் சசி பொளப்பதை கண்டு அரங்கில் கிண்டல் சத்தம் கேட்கிறது. பாத்துக்கங்க சசி.

வசுந்தரா 'போ. அவனை கொத்து பொரோட்டா போடு' என்று சொன்னபிறகு லெங்த் ஆன கூந்தலை சிலுப்பிக்கொண்டு சண்டைக்கோழியாகிறார் சசி. இன்னொரு சீனில் ஸ்வாதி உசுப்பேற்றி விட்டபிறகுதான் 'நான் ஒரு போராளி' என பல்லாவரம் பிரிட்ஜில் பைக்கில் பறந்து கொண்டே உணர்கிறார் சசி. இதையேத்தான் பரபரப்பு இசை இல்லாமல் விக்ரமன் எடுத்தார். அவரை 'லா லா' பாடி பேக் ஆப் செய்துவிட்டோம்.ஆனால் ஹரி(சூர்யாவுக்கு அனுஷ்கா அட்வைஸ்), செல்வராகவன்(தனுசுக்கு சோனியா, ரிச்சா அட்வைஸ்), போராளியில் கனி ஆகியோர் செய்தால் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ரசிகர்கள்.    

                                                                         
மயக்கம் என்ன..எதிர்மறையான சிந்தனை, கதாபாத்திரங்கள் என்று நாம் நினைத்தாலும், இவை யதார்த்தமும் கூட  என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் பாசிடிவ் எண்ணங்களை கொண்ட 'போராளி' சசி போன்ற கேரக்டர்களைத்தான் எனக்குப்பிடிக்கிறது. மனதில் நிற்கும் வண்ணம் போராடாத போராளியாக இருப்பினும், Bore அடிக்காமல் பொழுது போக வைக்கிறான். 

போராளி - ஜாலி பாதி. துரத்தல் மீதி. 
...................................................................................
 
.............................................
சமீபத்தில் எழுதியது:

மிக்சர் கடை (04/12/11)
..............................................
.............................
My other site:
..............................     

                                                             

Related Posts Plugin for WordPress, Blogger...