CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, December 19, 2010

விருதகிரி

மெட்ராஸ்பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!

                                                    
                                                        

ஸ்டார்ட்டர்:
எத்தனை நாட்கள் ஆனது கேப்டனை திரையில் பார்த்து. 'சுதேசி' பார்த்ததிற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு நேற்றுதான் விருதகிரி பார்த்தேன். நண்பர்கள் புடைசூழ. டைட்டில் போடுவதற்குள் வரவேண்டும் என சத்யம் வாங்கிக்கொண்டேன் அனைவரிடமும்.  சத்யம் தியேட்டரில் அழகான பெண்கள் வருவார்கள் என சொல்லி நண்பர் ஒருவரை விருதகிரிக்கு வளைத்துப்போட்டேன். அவர் மட்டும் தப்பலாமா. ஸ்டுடியோ - 5  உள்ளே எங்களைப்போலவே கேப்டனின் 'ரத்த வெறி' ரசிகர் கூட்டம் ஒன்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. இன்றுதான் எங்களுக்கு  தீபாவளி என்பது உறுதியானது. அதை சூடாக பகிரவே இந்த அதிகாலை பதிவு. இதுவும் ஒரு பொழப்பு என்று சொன்னாலும் அசர மாட்டேன்.

சாப்பாடு:
இதுவரை இந்தியாவுக்குள் மட்டும் வேட்டையாடிய கேப்டன், இந்த முறை தடாலடியாக உலகம் சுற்றி தீவிரவாதிகளை உதைத்து தள்ளி இருக்கிறார். டைட்டில் முதல் சுபம் வரை ரணகளம்தான்.  டைட்டில் போடும்போது கேப்டன் நடித்த எல்லா படங்களின் ஸ்டில் போட்டு கலக்குகிறார்கள்.  ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ் விருதகிரிக்காக காத்திருக்கும் முதல் காட்சியே டாப் கியரில் எகிற வைக்கிறது. அங்கிருந்து மலேசியா, ஆஸ்திரேலியா என சுழற்றி அடிக்கிறார் டாக்டர். திருநங்கைகள் மற்றும் இந்திய ஆஸ்திரேலிய மாணவர் பிரச்சனைதான் கதையின் மையம்.  திருநங்கைகளை கொன்று உடல் பாகத்தை விற்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்திருக்கக்கூடும் என்றே தெரிகிறது. தன் சொந்தக்கார பெண்ணை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்புகிறார் A.D.G.P கேப்டன். அவளை வெள்ளைக்கார கும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. அவர்களிடம் இருந்து  தலைவர் எப்படி மீட்கிறார் என்பதுடன் (ஒரு வழியாக) முடிகிறது படம்.

இன்டர்வல் முடிந்த பிறகும் கூட ஹீரோயின் வரவில்லையே....என்னடா இது கேப்டன் ரசிகனுக்கு வந்த சோதனை என காத்திருந்தால் கடைசி வரை வரவே இல்லை. நாயகி இருந்தால் ரெண்டு டூயட், சில காதல்(!) காட்சிகள் இடையூறாக இருக்கும். அது வேண்டாம். அதற்கு பதில் கூட பத்து பஞ்ச் டயலாக்கை போட்டு(மக்களை) தாக்குவோம் என்று முடிவே செய்து விட்டார்கள். படம் முழுக்கு பஞ்ச் (கன)மழை. கேப்டன் பேசுவது போதாதென்று, மெயின் வில்லனான வெள்ளைக்கார மொட்டைப்பயல்.... மொட்டைமாடியில் கேப்டனிடமே அரைமணி நேரம் இந்தியா பற்றி புள்ளிவிவரம் சொல்லி பஞ்ச் போட்டு தாக்குகிறான். என்ன தெனாவட்டு, ராஸ்கோல். படத்தில் பல புது முயற்சிகள். வெள்ளையர்கள் எல்லாம் தமிழில் பேசுகிறார்கள். கேப்டன் ஆங்கிலத்தில் அசத்துகிறார். தலைவர் தமிழில் பேசும்போது அதே வார்த்தைகள்  ஆங்கிலத்திலும் அசரீரியாக வந்து பீதியை கிளப்புகின்றன. அல்பேனியா நாட்டு வில்லன் ஒருவனை கூட களத்தில் இறக்கி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அல்பேனிய மொழி கற்க டிக்சனரி வேறு படிக்கிறார் கேப்டன். எப்படி எல்லாம் டெவலப் ஆகி போறாங்க இவிங்க. உலக உருண்டையில் அல்பேனியா எந்த சந்துல இருக்கு என்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது. ஆறாப்பு பாட புக்குல படிச்ச ஞாபகம். ஒலிம்பிக்கில் எல்லா நாட்டு அணியும்  கொடி பிடித்து வருகையில் "அல்பேனியா" என சொல்லும் பெண் குரல் நினைவிற்கு வருகிறது. அல்பேனியா பற்றி இதுதவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே!!


                                                          

சண்டைக்காட்சி....... சிறப்பு போனஸ் விமர்சனம்:

* முதல் சண்டை காட்சியில் சில வெள்ளையர்கள் காலில் ஸ்டூல் உயர ஸ்டீல் கட்டிக்கொண்டு வானத்தில் பறந்து பறந்து கேப்டனை வம்புக்கு இழுக்கிறார்கள். சர்க்கஸ்  பார்த்த எபக்ட். குத்தாலத்துல இருக்க வேண்டிய அப்ரண்டிஸ் பயலுவ!

* வெள்ளை ரவுடிகளிடம் ஒரு பெரிய பங்களாவில் 'டுப்பாக்கி'  சண்டை போடுகிறார் கேப்டன். அப்போது நீளமான இரும்பு குழாயை பற்றிக்கொண்டு மாடியின் ஒரு மூலையில் மற்றொரு மூலைக்கு ஜம்ப் செய்யும் கேப்பில் கூட பலரை சுட்டு தள்ளுகிறார்.  நடத்துங்க!

* ஒரு கட்டத்தில் நான்கு ஆஜானுபாகுவான வெள்ளை வில்லன்கள் கேப்டனை வளைத்து புஜபல பராக்கிரமத்தை காட்டி மிரட்டுகிறார்கள். எந்த பக்கம் ஓடுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பது போல் முகபாவம் காட்டினாலும், நம்மை ஏமாற்றாமல்  அவர்களை துவம்சம் செய்கிறார் தலைவர். சிங்கம்டா!!

* இது போதாது என்று மொட்டை பாஸ் கேப்டனை அடித்து படுக்க வைக்கிறான் ஒரு காட்சியில். அப்போது தன் இரு கையையும் தரையில் வைத்து உடலை மேலே தூக்கி கேப்டன் நிற்கும் காட்சி கைதட்டலை அள்ளுகிறது. அது!!

* விருதகிரி உங்களக்கு எதுக்கு விருது..பேர்லயே அது இருக்கே என்று ஒரு டயலாக். யாருக்கு விருது கொடுக்கிறீர்களோ இல்லையோ. படம் முழுக்க வேலை செய்த இரு அணிக்கு விருது தர வேண்டும். ஒன்று, கேப்டனுக்கு முதல் முதல் இறுதி சண்டை காட்சி வரை ரோப் கட்டி இழுத்த ஸ்டண்ட் டீம். அடுத்து, ஓயாமால் "ஓய்..ஏய்....ஆவ்.." என தொண்டை வலிக்க கத்திய பின்னணி குரல் டீம். நிஜமாக சொல்கிறேன். படம் பார்த்தால் தெரியும்.


சீரியசாக சில வரிகள்:
பேரரசு படத்திற்கு பிறகு ஓரளவு விறுவிறுப்பான படம் விருதகிரி என்பது உண்மை. ஏகப்பட்ட பஞ்ச், எக்கச்சக்க கேப்டன் க்ளோஸ் அப் ஷாட்கள், காது ஜவ்வை பதம் பார்க்கும் பின்னணி இசை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை எப்படி எதிர்பார்க்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், ஆள்வோரை நேரடியாகவே போட்டு துவைக்கிறார் கேப்டன். மன்மதன் அம்பு வருவதற்குள் விருதகிரி வசூலை தேற்றிவிடும் என்றே தெரிகிறது.


விருதகிரி... ஈசனை பின்னுக்கு தள்ளி வசூல் ரேசில் வெற்றிக்கொடி கட்டும்!!


                                                            

- இப்பதிவை படித்த இதயங்களுக்கு நன்றி!! மீண்டும் சந்திப்போம்.


இப்படிக்கு,
வைஸ் கேப்டன்!
("நமக்கு நாமே" பட்டமளிப்பு விழாவில் கேட்டு வாங்கிக்கொண்டது)
..................................


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
Photo Courtesy: google images


'ஈசன்' விமர்சனம் படிக்க வருக: 
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com
                           

25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் நேத்து பாத்தனே. பஞ்ச டயலாக் பஞ்சு பஞ்சா பறக்குது.ஹிஹி

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...>>> நானும் நேத்து பாத்தனே. பஞ்ச டயலாக் பஞ்சு பஞ்சா பறக்குது.

>>> எல்லாருமே ஒரு முடிவோடதான் இருக்கோம்.

! சிவகுமார் ! said...

//பஞ்ச டயலாக்//

>>> அது என்ன 'பஞ்ச' டயலாக் ரமேஷ். உங்களுக்கு அல்பேனியா டிக்சனரி அனுப்பி வச்சிருவேன்.

Chitra said...

ரைட்டு! :-))

வைகை said...

விமர்சனம் காமெடி படம் பாத்தா மாதிரி இருக்கு சிவா!!

மாணவன் said...

விமர்சனம் அருமை,

பகிர்வுக்கு நன்றி

! சிவகுமார் ! said...

>>> வாங்க மேடம்..சித்ரா!

>>> வைகை..படம் பாருங்க. பாக்காம இருந்தா என்கிட்டே பேசாதீங்க. சொல்லிபுட்டேன்!

>>> மிக்க நன்றி, மாணவன்!!

pichaikaaran said...

இதற்கெல்லாம் விமர்சனமா ?

Unknown said...

//ஈசனை பின்னுக்கு தள்ளி வசூல் ரேசில் வெற்றிக்கொடி கட்டும்!!//
ரிசல்ட் சொன்னவிதம் அற்புதங்க...

! சிவகுமார் ! said...

>>> என்ன பார்வையாளன் இப்படி சொல்லிவிட்டீர்கள். அய்யகோ!

>>> பாரதி,தங்கள் கருத்திற்கு என் நன்றி!

ஆமினா said...

இதை காலைலையே படிச்சு மயக்கம் போட்டு விழுந்தவ தான். இப்ப தான் எந்துருக்கிறேன்.......
ம்
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.....

! சிவகுமார் ! said...

>>> படிச்சதுக்கே இப்டியா..அப்ப பாத்த எங்க நிலைமை எப்டின்னு நெனச்சி பாருங்க,ஆமினா!

Philosophy Prabhakaran said...

// சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், ஆள்வோரை நேரடியாகவே போட்டு துவைக்கிறார் கேப்டன் //

இதைத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம்... இந்த கருத்துக்கள் நாலு பேரை சென்றடைந்தாலே போதும்...

எப்பூடி.. said...

விமர்சனம் பசிச்ச எங்களுக்கே தல சுத்துதே, உங்களால எப்பிடி இவளவு விசயத்தையும் படம் பார்க்கும்போதே ஞாபகம் வச்சிருக்க முடிஞ்சுது? :-)

இருந்தாலும் உங்க ஒரே மன தைரியத்தை பாராட்டி 'மூக்குத்தி முத்தழகு' பாடலில் நம்ம கேப்டன் கட்டிய வேஷ்டியை பரிசாக தருகிறேன். :-)

Unknown said...

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேணாமா? இது என்ன இவ்வளவு சின்ன விமர்சனம், அதுவும் கேப்டனுக்கு?

Anonymous said...

நேர்மையான நியாமான உண்மையான விமர்சனம்!
நன்றி சகோதரரே!
நான் ஒரு கேப்டன் ரசிகன் .. இன்று முதல் உமது blog ரசிகன் ஆகவும் ஆகிவிட்டேன்!!

Unknown said...

ஓட்டு போட்டாச்சு

Madurai pandi said...

kalakkal vimarsanam.. padathai vida , ungal comedy nandragave irukiradhu... Enaku oru doubt.. edharkaga irandu blog vaithu irukireenga? Voted..

இக்பால் செல்வன் said...

அடபாவிகளே !!! இன்னும் விருதகிரிய விடலையா சாமி !!!!!!!!

R.Gopi said...

ஓவரா பன்ச் அடிச்சு, காது எல்லாம் கிழிஞ்சு ரத்தம் கொட்டுதாமே!!!

prasanna said...

the movie from interval is completely TAKEN from the English movie TAKEN. Please download and watch this movie though you watched varutha kari. It is really intresting and treat to watch.

பாரதசாரி said...

:-) நல்ல பதிவு :-)
இவண்,
ஐம்பத்திரண்டாம் Follower

! சிவகுமார் ! said...

>>> ஜீவா, பிரபா, இரவுவானம், கெட்ச், மதுரை பாண்டி, இக்பால், கோபி, பிரசன்னா அனைவரின் கருத்துக்கும் நன்றி!!

! சிவகுமார் ! said...

>>> ஜெயேந்திரன்...மனமார வரவேற்கிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...