CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 11, 2010

'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'

மெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி!


ஸ்டார்ட்டர்:
சமீபகாலமாக ஹிந்தி திரை உலகில் டிசம்பர் மாதம் வரும் படங்கள்தான் அந்த ஆண்டின் சிறந்த படங்களாக இருக்கின்றன. உதாரணம் பா, த்ரீ இடியட்ஸ், தாரே ஜமீன் பர்  மற்றும் பல. அந்த வரிசையில் இந்த வருடம் வந்துள்ள படம்தான் 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'.  மனினி சாட்டர்ஜி எழுதிய Do and Die  புத்தகத்தை அடிப்பையாக கொண்டது எடுக்கப்பட்டுள்ளது. அபிசேக் பச்சன் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க பதிவாகும். லகான் மற்றும் ஜோதா அக்பர் படங்களை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் இந்திய சினிமாவிற்கு தந்துள்ள பெருமைமிகு படைப்பு. சென்ற வாரம்  'எஸ்கேப்' (சென்னை) திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். ஒரு சில படங்கள் திரைக்கு வரும் முன்பு கொடுக்கும் ஸ்டில் மற்றும் செய்திகள் ஆகியவற்றை பார்க்கையில், எனக்கு அந்த படங்களை முதல் மூன்று நாட்களுக்குள் பார்க்க தூண்டும்.  எந்த விமர்சனத்திற்கும் காத்திராமல் நான்(நாம்)  பார்க்கும் படங்கள் ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  'கேலே ஹம் ஜீ ஜான் ஸே' அந்த வரிசையில் சேரும் என நம்புகிறேன். 1930 ஆம் ஆண்டு சிட்டகாங் (இன்றைய பங்களாதேஷ் நாட்டின் அங்கம்) எனும் ஊரில் நடந்த உண்மை சம்பவம்தான் இந்த படம். பாரதம் சுதந்திரம் பெற போராடிய வீர்களின் கதை. வெளி உலக  வெளிச்சத்திற்கு வராத ஒரு உன்னத வரலாறு. 
                                                  


 சாப்பாடு:
அது 1930 ஆம் வருடம். பள்ளி சிறுவர்கள் சிலர் மைதானத்தில் கால்பந்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர். அங்கே வரும் ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முகாம் அமைக்கின்றனர். சிறுவர்கள் ஆத்திரம் கொள்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பல ஆண்டுகளாக விளையாடி வந்த மைதானம் கை விட்டு போகிறதே என கவலை. சுர்ஜ்யா சென்(அபிசேக் பச்சன்) எனும் ஆசிரியரை சந்தித்து பேசலாம் என முடிவு எடுக்கின்றனர் அனைவரும். சுர்ஜ்யா சென் புரட்சித்தலைவனும் கூட. இந்தியன் ரிபப்ளிக் ஆர்மி எனும் சிறு குழுவுடன் தேச விடுதலைக்கு போராடும் சுர்ஜ்யாவின் தேசப்பற்றை கண்டு அந்த சிறுவர்களும் அவருடன் இணைகிறார்கள். முக்கிய இடங்களில் புரட்சி செய்து ஆங்கில அரசை அதிர வைக்க 64 பேர் கொண்ட குழு தயாராகிறது. அந்த போராட்டத்தின் முடிவு என்ன? திரையில் காண்க. 

                                                              இயக்குனர் அசுதோஷ் 

இந்த படத்தில் தீபிகா படுகோனே என்றதும் எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது. கனவுக்கன்னி புரட்சி வீராங்கனை பாத்திரத்தில் பொருந்துவாரா என்று? ஆனால் நன்றாகவே நடித்திருந்தார். குரு திரைப்படத்தில் என்னை கவர்ந்த அபிஷேக் இந்த படத்தில் மீண்டும் தன் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செயல்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் நடித்திருந்தால் சத்தியமாக இப்படி அடக்கி வாசித்து இருக்க மாட்டார்கள் என்பதை அடித்து சொல்வேன். இந்த பதிவின் முக்கிய நோக்கமே 'தி ஹிந்து' நாளிதழ்(Dec 5, Cinema Plus)இப்படம் பற்றி விமர்சித்ததை பற்றி தங்களுடன் பகிர்தலே. அந்த விமர்சனத்தை ஹிந்துவில் எழுதிய புண்ணியவான் சுதீஷ் காமத். 

இதோ அந்த விமர்சனத்திற்கு என் எதிர் கருத்து

சுதீஷ்:  Inglorious Bastards ஞாபகம் வருகிறது
நான்: "இது முற்றிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதற்கான ஆதாரங்கள் இயக்குனர் அசுதோஷ் பெருமளவு வைத்துள்ளார். உங்களுக்கு எப்படி Inglorious Bastards நினைவிற்கு வந்தது என்று தெரியவில்லை".

சுதீஷ்: துப்பாக்கி சண்டை  காட்சிகள் நீளமாக உள்ளன. Inglorious Bastards படத்தில் வெறும் 20 நிமிட சண்டை காட்சிதான்.
நான்: மேலே சொன்ன பதில்தான்.

சுதீஷ்: லகான் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இது 'போர்' அடிக்கிறது. 
நான்: போலி சம்பவங்களின் தொகுப்பான லகான் உங்களுக்கு விறுவிறுப்பாகத்தான் இருக்கும். கிரிக்கெட் இருந்ததால் லகான் பிழைத்தது. யதார்த்த சினிமா சில இடங்களில் சற்று மெதுவாகத்தான் செல்லும். ஆனால் இப்படத்தை அரங்கில் பார்த்தவர்கள் யாரும் தங்கள் கருத்திற்கு உடன்பட்டு 'போர்' என்று சொல்லவில்லை.

சுதீஷ்:  Don't get me wrong, the film is a must-watch.
நான்: ஒரு நல்ல தேசப்பற்றுள்ள படத்தை மட்டமாக விமர்சித்து விட்டு, மஸ்ட் வாட்ச் என்றும் கூறி குழப்பிய உங்களை என்னவென்று சொல்ல?


சுதீஷ்: சுர்ஜ்யா சென் எனும் புரட்சி தலைவனின் வாழ்க்கை இப்படத்தில் சரியாக பதிவு செய்யப்படவே இல்லை. இது ஒரு கிரிமினல் தனம். 
நான்: அட ஆண்டவா...இது சுர்ஜ்யா சென்னின் வாழ்க்கை வரலாறு அல்ல நண்பரே. நாட்டிற்காக போராடிய 64 வீரர்களின் தியாக தொகுப்பு. சுர்ஜ்யா சென்னின் வாழ்க்கை பற்றி எடுத்தால் மற்றவர்களை பற்றியோ அல்லது சம்பவங்கள் பற்றியோ பெரிதாக படத்தில் இல்லை என்று எகிறி குதிப்பீர்கள். கொடுமை..

சுதீஷ்: ஒரு Riveting த்ரில்லரை இயக்குனர் எடுக்கவில்லை. இரண்டாம் பாதியில் புரட்சி வீரர்கள் அடிபட்டி இறக்கும் காட்சிகள் நிறைய.
நான்: அது சரி. உண்மையாகவே இறந்த வீரர்களின் சரித்திர படத்தில் வேறு எதை காட்ட முடியும். த்ரில்லிங்காக இல்லை என்று ஆதங்கம் வேறு. உங்களை டிபார்ட்மெண்டில் யாரோ தவறாக எடுத்திருக்கிறார்கள். 

சுதீஷ்: நிஜ வாழ்வில் சுர்ஜ்யா சென் பால் விற்பது, விவசாயம் செய்வது போன்றவற்றை பதிவு செய்யவில்லை.
நான்: ஐந்தாவது கேள்விக்கான பதில்தான்.


இந்த படத்தில் பலரை நெகிழ வைத்த ஒரு காட்சி:

புரட்சிப்படைக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்கையில் சுர்ஜ்யா(அபிசேக்) ஒரு சிறுவனிடம் கேட்கும் கேள்வி:
இப்போராட்டத்தில் நீ மரணம் அடையக்கூடும். உனக்கு சம்மதமா? 

சிறுவன்: "அது நடக்காது" 

சுர்ஜ்யா: "எப்படி சொல்கிறாய்?" 
சிறுவன்: "நம் தேசம் விடுதலை பெறுவதை காணாமல் நான் எப்படி இறப்பேன்?"

ஆனால் அதையும் நக்கல் செய்துள்ளார்.......
சுதீஷ்: இந்த ஒரு காட்சிதான் நமக்கு மிச்சம்.
நான்:  மட்டரக விமர்சனத்தின் உச்சம். 

இறுதியாக சுதீஷ் சொல்வது: ஒரு படைப்பாளியாக இயக்குனர் அசுதோஷ் தோற்றுவிட்டார். 
நான்: கற்பனை படமான லகானை விட புரட்சி வீரர்களின் வெளிவராத தியாகத்தை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டியதன் மூலம் திரைவரலாற்றில் நிலை பெற்று விட்டார் அசுதோஷ். 
.......
                                                    புரட்சித்தலைவன் - சுர்ஜ்யா சென்

இத்திரைப்படம் முடிந்ததும் இறுதியில் தேசபக்தி பாடலுடன்,  நம் புரட்சி வீரர்கள் அனைவரின் நிஜ படங்களையும் திரையில் போட்டுக்காட்டினார்கள். இப்போராட்டத்தில் வெள்ளையனிடம் அடிபட்டு இறந்த பலரின் புகைப்படங்கள் கண்களை குளமாக்கியது. ஆனால் இப்படி ஒரு உன்னத படத்தை இவ்வளவு மட்டமாக 'அறிவாளிகள்' விமர்சித்தது அதிர்ச்சியாக உள்ளது. சுதீசின் விமர்சனத்தை படித்து விட்டு பலர் படம் பார்க்காமல் தவிர்த்து இருப்பார்கள். சமீப காலமாக நான் என் மனதில் படும் படங்களுக்கு மட்டுமே செல்கிறேன். முன்னணி ஊடகங்கள் இப்படி விமர்சனம் செய்யும் வரை காத்திருத்தல் முற்றிலும் தவறு என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஆனந்த விகடன் விமர்சனத்திற்கும் ஒரு கும்பிடு. 'நந்தலாலா' விமர்சனத்தில் மிஷ்கினை முதல் சில வரிகளில் 'கிகுஜிரோ' பார்த்து ஏன் எடுத்தீர்கள் என்று விளாசிவிட்டு கடைசியில் 45 மார்க் அள்ளி வழங்கினார்களே..இது அல்லவா முரண்பாட்டின் உச்சம். 

போதும். இனி பதிவுலகில் நடுநிலையுடன் மனதில் பட்டதை விமர்சிக்கும் பதிவர்களின் விமர்சனங்களை  படித்து விட்டு செல்வதுதான் சரிப்பட்டு வரும். நல்லா எழுதுராங்கய்யா பத்திரிக்கை விமர்சனம்..

                                                                          
 சக பதிவர்களுக்கு நான் பரிந்துரை செய்யம் படங்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  'கேலே ஹம் ஜீ ஜான் ஸே ' அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். ஹிந்தி தெரியவேண்டும் என்று அவசியமில்லை. தேசப்பற்று ஒன்று போதும். இயக்குனர் தங்களை ஒரு உணர்ச்சிபூர்வமான கால கட்டத்திற்கு அழைத்து செல்வார். 1930 ஆண்டு சில மணிநேரம் வாழ்ந்த அனுபவத்தையும், தேச உணர்ச்சியையும் தூண்டும் படமாக இது இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. படம் முடிந்ததும் இயக்குனருக்கு மனப்பூர்வமாக கைதட்டி பெருமைப்படுத்திய மக்களுடன் படம் பார்த்ததில் பெருமை கொள்கிறேன்.  காணத்தவறாதீர்!  

டிரைலர்:


http://www.youtube.com/watch?v=NP3BYhDJ_Ik&feature=related

சென்னையில் 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே ':
பீ.வீ. ஆர்(ஸ்கை வாக்)  - மாலை 6  மணி காட்சி . 

இப்பதிவை வாசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றி! மீண்டும் சந்திப்போம்!


என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com
  
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
                                      
                        


27 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க உங்க விமர்சனம், எங்க ஊருல கண்டிப்பா வராது, ஆனா நல்லா இருக்கும் போல இருக்கு, ஆமா இண்ட்லில இணைக்கலியா? ஓட்டு போட முடியல

Unknown said...

ஓட்டு போட்டுட்டேன்

! சிவகுமார் ! said...

என் பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்து இடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, இரவு வானம்!

Prabu M said...

விம‌ர்ச‌ன‌ம் என்ப‌து திரைப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி அல‌சுவ‌த‌ல்ல‌....
விம‌ர்ச‌க‌ரின் மேதாவித்த‌ன‌த்தைக் காட்டுவ‌துதான்...

உங்க‌ள் ம‌ன‌து சொல்லும் ப‌ட‌த்தை ம‌ட்டும்தானே பார்க்கிறீர்க‌ள்...
அதையே தொட‌ருங்க‌ள்...

! சிவகுமார் ! said...

>>> கருத்துக்கு நன்றி, பிரபு!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. விரிவான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.. :-)

! சிவகுமார் ! said...

>>> முதல் முறை வருகை புரியும் ஆனந்தி அவர்களுக்கு நன்றி!

Philosophy Prabhakaran said...

இது நீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த படமாச்சே...

Philosophy Prabhakaran said...

யாருங்க அந்த மாற்றுக்கருத்து சுதீஷ்...

ஆமினா said...

//இந்த படத்தில் தீபிகா படுகோனே என்றதும் எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது//

எங்களுக்கும் தான். ஆனால் கச்சிதமாக நடிச்சுருக்கார்ன்னு தான் சொல்லணும். ஓம் சாந்தி ஓம் க்கு அடுத்து பெரிய ஹிட் கொடுக்க கூடிய படம் தீபிகாக்கு இது

pichaikaaran said...

உங்கள் ரசனையும், திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் காட்டும் சிரத்தையும் ரசிக்கத்தக்கவை...

விரைவில் நம் பொது குழு கூட்டத்தை கூட்டிவிடலாம் ... கால் செய்கிறேன்

ஆமினா said...

தேசபற்று படத்தில் கமர்ஷியல் டான்ஸ்,காமெடி எதிர்பார்த்தால் முடியுமா?

அழகான விமர்சனம்+எதிர் பதில்

கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் !!!

எப்பூடி.. said...

உங்க விமர்சனம் நல்லாயிருக்கு, கேலே ஹம் ஜீ ஜான் ஸே பார்ப்பதற்கு இங்கு வழியில்லை, vcd வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் :-(

! சிவகுமார் ! said...

>>> ஜீவா,ஆமினா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி! >>>

! சிவகுமார் ! said...

>>> பொதுக்குழு கூட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்,பார்வையாளரே! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! பிரபா தயாராகவும்! >>>

a said...

நல்ல விமர்சனம்.......

Unknown said...

ஒரு வித்யாசமான விமர்சனம் நண்பரே .அருமை . இது மாதிரியான படங்களை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்கிற ஆதங்கம் உங்கள் எழுத்திலும் "நான்"பதிலிலும் தெரிகிறது . ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி .தங்களின் ஊக்கத்திற்காக சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம் .

Unknown said...

உங்கள் வ்லைப்பதிவுக்கு முதன் முறையாக வருகிறோம். முகப்பு அருமையாக வடிவமைத்துள்ளீர்கள். வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..

Unknown said...

ஓட்டு போட்டுட்டேன்

! சிவகுமார் ! said...

>>> மிக்க நன்றி மணி! முதன் முறை என் பதிவிற்கு கருத்திடும் யோகேஷ் மற்றும் பாரத் இருவருக்கும் என் நன்றி!

செங்கோவி said...

பா, தாரே ஜமீன் பர் வரிசையில் சேரும்னு சொல்லீட்டீங்க..பார்துருவோம்..அப்புறம், குத்தீட்டன் எஜமான்..

அந்நியன் 2 said...

நானும் உங்களை மாதுரித்தான் சிவகுமார் நானும் இனைந்து விட்டேன் உங்கள் கூட்டணியில், வலை பூ சிறக்க வாழ்த்துக்கள், மிகத் திறமையாக எழுதும் நீங்கள் அனேகமாக முழு வெற்றி அடைவிர்கள்.

Anonymous said...

அருமை
நல்லா இருக்குங்க உங்க விமர்சனம்....
வாழ்த்துக்கள்.

! சிவகுமார் ! said...

>>> செங்கோவி,கல்பனா,அந்நியன்....அன்புடன் வரவேற்கிறேன்!

Anonymous said...

http://kalpanarajendran.blogspot.com/2010/12/blog-post_04.html
முடிந்தால் இதை பார்க்கவும்

! சிவகுமார் ! said...

இனிய நண்பர் மணி...கருத்துக்கு மிக்க நன்றி!

! சிவகுமார் ! said...

//இது நீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த படமாச்சே//. ஆம் பிரபா, பதிவிட ஒரு வாரம் தாமதமானது.

Related Posts Plugin for WordPress, Blogger...