CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 24, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 3

                                          

                                          
                                                       ஹிந்தி திரைப்படங்கள்

அவ்வப்போது சில ஹிந்தி படங்கள் பார்க்கும் வழக்கம் உள்ளவன் நான். பில்ம்பேர் போன்ற பிரபல விழாக்களில் சிறந்த படம் விருது பெற ராஜ்நீதி, மை நேம் இஸ் கான், பீப்ளி லைவ், லவ், செக்ஸ் அவுர் தோகா, கேலே ஹம் ஜீ ஜான் ஸே  போன்ற படங்கள் போட்டியிடும் என கருதுகிறேன்.  நான் பார்த்த படங்களை பற்றி சிறு அலசல்..உங்கள் பார்வைக்கு:

>>> சிறந்த திரைப்படம் மை நேம் இஸ் கான் 
>>> சிறந்த நடிகர் ஷாருக்கான் 

                                                                  
சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வெகுசிறப்பாக நடித்திருந்தார் ஷாருக்கான். செப்டெம்பர் 9/11 - க்கு பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களை எப்படி தவறாக கையாண்டது  என்பதை விரிவாக சொன்ன படம். சக் தே இந்தியா, மை நேம் இஸ் கான் போன்ற படங்களை தமிழில் எடுத்தால், இங்குள்ள முன்னணி நாயகர்கள் ஷாருக் போன்று ஆர்ப்பாட்டமின்றி நடிப்பார்கள் என்பது சாத்தியமே இல்லை. மேக் அப்பிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு மாறுவேடம் போட்டு நடிப்பதை விட, எத்தகைய பூச்சும்  இன்றி நடிப்பை முகத்தில் வெளிப்படுத்தும் திறமை வெகு சிலருக்கே உண்டு. அவர்களில் ஷாருக் குறிப்பிடத்தக்கவர் என்பதை அறிவோம். படத்தில் இயக்குனர் கரண் ஜோகர் சறுக்கிய இடம் என்று சொல்லப்போனால், இறுதிக்காட்சியில் ஷாருக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் காட்சி. தேவையற்ற ஹீரோயிசம். அதை தவிர்த்து பார்த்தால் இது இவ்வாண்டின் சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை.                                                          
                                                         

http://www.youtube.com/watch?v=xihYMq_oRfw&feature=related


>>> பீப்ளி லைவ்

                                                                  
அமீர்கானின் தயாரிப்பு என்ற ஒரே காரணத்திற்காக படம் பார்க்க சென்றேன். வறுமையின் பிடியில் விவசாயிகள் இருக்கும் கிராமம்தான் பீப்ளி. வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான் ஒரு விவசாயி. அதன் மூலம் அரசாங்கம் தரும் பணம் தன் குடும்பத்திற்காவது உதவட்டுமே என்று. ஆனால் இந்த விஷயம் அரசாங்கம், பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் என பலருக்கு தெரிய வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவன் தற்கொலை செய்து கொண்டால் ஆளும் கட்சி தோற்க வாய்ப்பு இருப்பதால் அதை தடுக்க நினைக்கிறது அரசாங்கம். ஆனால் எதிர்க்கட்சி அவன் இறப்பதையே விரும்புகிறது.

இவர்களின் அன்புத்தொல்லையால் வீட்டில் இலவச பொருட்கள்  ஒரு புறமும், தொலைக்காட்சி  நிறுவனங்கள் பேட்டி  எடுக்க  மறுபுறமும்  குவிகின்றன. இறுதியில்  அவன்  என்ன ஆனான் என்பதே கதை. இது மிகவும் சீரியஸ் ஆன படம் என்று எண்ணிப்போனால் படம் முழுக்க நகைச்சுவையாக இருந்தது. நாட்டின் முதுகெலும்பான விவசாயியின் வாழ்வை இப்படி எடுத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. வழக்கம்போல், அரசாங்கம் அமீர்கான் படம் என்றே ஒரே காரணத்திற்காக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுவும் கடும் போட்டியை தந்த அங்காடித்தெருவை ஓரம் கட்டிவிட்டு. வடக்கு வாழ தெற்கு தேய்தல் புதிதல்லவே... லகான், தாரே ஜமீன் பர்(அற்புதமான படம்தான்) ஆஸ்காருக்கு சென்று 'பல்ப்' வாங்கிக்கொண்டு வந்தன. அமீர்கானும் விடுவதாய் இல்லை. கிடைத்தாலும் கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

 >>> தபங்

                                                                
மூன்று 'கான்'களில் இவ்வாண்டு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த கான் சந்தேகமே இன்றி சல்மான்கான்தான். 'தபங்' எனும் மசாலா படம் மூலம் வசூலை அள்ளிக்குவித்தது அவரின் குடும்ப தயாரிப்பு நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு செம மாஸ் படம். நானும் களத்தில் இருக்கிறேன் என மற்ற இரு 'கான்'களுக்கும் இப்படத்தின் பெரும் வெற்றியின் மூலம் நிரூபித்து இருக்கிறார் சல்மான்.

தபங் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'..... தபங் 

>>> கேலே ஹம் ஜீ ஜான் ஸே

                                                      

இந்த வருடம் நான் பார்த்த ஹிந்தி படங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு படம். 1930 - ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய புரட்சி வீரர்களின் உண்மைக்கதை. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் மற்றும் கலை அமைப்பு கொண்ட படம்.

 இப்படம் பற்றி நான் முன்பு இட்ட பதிவை காண 'கிளிக்குங்கள்'...

 கேலே ஹம் ஜீ ஜான் ஸே

இவ்வளவுதான் எனக்குத்தெரிந்த 2010 ஹிந்தி படம் பற்றிய விஷயம். பல்வேறு பிரிவுகளில் அரசும், பிரபல ஊடகங்களும் தரப்போகும் விருதினை பொறுத்திருந்து பார்ப்போம். பதிவை வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றி, தோழர்களே!
..................................................................
photos & videos: Thanks to Google & Youtube.


முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே: 

பாகம் - 1

பாகம் - 2 

பாகம் - 4 
.....................................


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com                        
                                                  8 comments:

Philosophy Prabhakaran said...

// சக் தே இந்தியா, மை நேம் இஸ் கான் போன்ற படங்களை தமிழில் எடுத்தால், இங்குள்ள முன்னணி நாயகர்கள் ஷாருக் போன்று ஆர்ப்பாட்டமின்றி நடிப்பார்கள் என்பது சாத்தியமே இல்லை //

சக் தே இந்தியா படத்தை தமிழில் எடுத்தால் நிச்சயம் கமல் அல்லது அஜித் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்துவார்கள் என்றும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது... மை நேம் இஸ் கான் படம் பார்த்ததில்லை...

Philosophy Prabhakaran said...

சிவா.... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... அட்வைஸ் செய்வதற்கு மன்னிக்கவும்.... ஆனால் என்னால் சொல்லாமல் இருக்கிறது.... நல்லதொரு பதிவுத்தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள்... ஆனால் ஒரே நாளில் மூன்று பாகங்களையும் வெளியிட்டது ஏன்... இதனால் உங்களுடைய உழைப்பு அநியாயத்திற்கு வீண் போயிருப்பது எனக்கு தெரிகிறது... இதை இரு தினங்களுக்கு ஒரு பாகமாக வெளியிட்டால் சிறப்பாக இருந்திருக்கும்...

pichaikaaran said...

பிரபாவின் கருத்து தவறு. கமல் நடித்தால் படத்தை கெடுத்துவிடுவார்

பிராபாவின் கருத்து சரி . ஒவ்வொரு பதிவாக இடைவெளி விட்டு வெளியிடுங்கள்

Unknown said...

நல்ல உழைப்பு தெரிகிறது, நானும் பார்வையாளன் கருத்துகளை வழிமொழிகிறேன்

! சிவகுமார் ! said...

>>> பிரபா, பார்வையாளன் மற்றும் இரவுவானம்.....கண்டிப்பாக இனி வரும் நாட்களில் கால இடைவெளி விட்டு பதிவிட முயல்கிறேன்.

ஆமினா said...

//நாட்டின் முதுகெலும்பான விவசாயியின் வாழ்வை இப்படி எடுத்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை//

இன்னைக்கு நாட்டுல பல பேரு அப்படி தானே இருக்காங்க சகோ...

ஆமினா said...

கண்டிப்பா கமல் கெடுத்துடுவார்!!!!

! சிவகுமார் ! said...

>>> வணிக நிர்பந்தங்களுக்கு அடிபணிவதால் இந்நிலை ஏற்படுகிறது எனக்கருதுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...