CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, December 28, 2010

2010 திரைவிரு(ந்)து பாகம் - 6>>> சிறந்த நடிகர்... ஒரு பார்வை
சிறந்த நடிகர் விருது என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது தாரே ஜாமீன் பர் படத்தில் நடித்த சிறுவன் தர்ஷீல். 2007 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது அவனுக்கு வழங்கப்பட்ட போது அவன் அதை வாங்க மறுத்தான். அவ்வாண்டு சிறந்த நடிகராக ''சக் தே இந்தியா"வில் நடித்த ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்படார். ஏன் நான் சிறந்த நடிகன் விருதுக்கு தகுதியற்றவனா என தர்ஷீல் கேட்டதை கண்டு வாயடைத்து போனது திரையுலகம். நியாயமான கேள்வி. ஒரு வழியாக அவனுடைய குரு ஆமிர்கான் சமாதானம் செய்ததும் சாந்தம் அடைந்தான். 

 பொதுவாக சிறந்த நடிகர் விருது ஒரு திரைப்படத்தின் நாயகனுக்குத்தான் வழங்கப்படுகிறது. அந்த நடிகர் குறிப்பிட்ட திரைப்படத்தில் அதிக காட்சிகள் தோன்றி இருப்பார். ஆனாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்க மாட்டார். அப்படி இருந்தும் சில சமயங்களில் அவருக்கு அவ்விருது வழங்கப்படும். என்னைப்பொருத்தவரை சிறந்த நடிகர் என்பவர் நாயகனாக இருக்க வேண்டிய அவசியமோ அல்லது திரையை ஆக்கிரமித்து இருத்தலோ முக்கியமில்லை. அவர் திரையில் வந்து சென்ற தருணங்கள் நம் மனதில் பலகாலம் நிலைத்திருக்க வேண்டும். விருது பெற தகுதியான நடிப்பு அவ்வருடத்தில் எவருக்கும் இல்லையெனில் 'சிறந்த நடிகர்' எனும் விருதை தரமால் இருப்பதால் ஒன்றும் நட்டமில்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்து பிரிவுக்கும் பொருந்தும் என்பதும் என் எண்ணம்.


>>> சிறந்த நடிகர் விருதுவெங்கடேஷ்:


                
                                                  
வெங்கடேஷ் இப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று எவரும் நினைத்திருக்க மாட்டோம். சூப்பர்வைசர் கருங்காலி வேடத்தில் கனகச்சிதமாக பொருந்தி, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அங்காடி தெருவில் அவர் தோன்றும் காட்சிகளில் நமக்கு உள்ளூர ஏற்பட்ட ஒருவித பயம் ஒன்றே போதும். வசந்தபாலனின் மிகச்சரியான தேர்வு. வெங்கடேஷ் அவர்களுக்கு இவ்விருது தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!!


>>> சிறந்த நடிகை... ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த நடிகைகள் வந்து கொண்டே இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. சாவித்திரி, மனோரமா முதல், சுஜாதா, ஷோபா, சரிதா போன்றவர்களை தொடர்ந்து ஜோதிகா வரை. ஆனால் சில ஆண்டுகளாக சிறந்த நடிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதையும் பார்த்து வருகிறோம். இனி எப்படி என்பதை பொருது இருந்து பார்ப்போம். 


>>> சிறந்த நடிகை.. அஞ்சலி:


                                                                      
அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த அஞ்சலி இவ்விருதை பெற முற்றிலும் தகுதி உடையவர் என்பது பெரும்பான்மையான மக்களின் கருத்து. வரும் காலங்களில் இன்னும் பல விருதுகளை பெறும் தகுதி உள்ளவர் என்பதில் ஐயமில்லை. படம் பார்த்த அனைவருக்கும் அவருடைய நடிப்புத்திறன் பற்றி தெரியும் என்பதால் நான் புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. 


>>> சிறந்த நகைச்சுவை நடிகர்... ஒரு பார்வை:

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நகைச்சுவை மிகச்சிறந்த கலைஞர்களை நாம் பார்த்து வருகிறோம். இந்திய சினிமாவில் வேறெந்த மொழியிலும் இத்தனை சிறந்த கலைஞர்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறிவோம். வரும் காலங்களில் இத்துறையில் நல்ல நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்படாது இருத்தல் வேண்டும் எனபது அவா.


>>> சிறந்த நகைச்சுவை நடிகர் சந்தானம்


                       
                                             
வடிவேலு, விவேக் இருவரின் ஆதிக்கம் இறங்கு முகத்தில் இருக்கும் சமயம் மளமளவென முன்னேறி இன்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார் சந்தானம். பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன், வட்டார வழக்கு போன்ற பல தகுதிகளை கஷ்டப்பட்டு வளர்த்துக்கொண்டு முன்னணி இடத்தை பிடித்தனர் நகைச்சுவை முன்னோடிகள். சந்தானம் புதிதாக என்ன செய்ய போகிறார் என எண்ணினர் சினிமா ரசிகர்கள். சாமர்த்தியமாக அவர் செய்தவற்றில் குறிப்பிடத்தக்கவை:  தனி ட்ராக்கை தவிர்த்து கதையுடன் நகரும் நகைச்சுவை, அதிக வசன ஜாலங்கள் இன்றி, அன்றாடம் நாம் பேசும் வார்த்தைகளை பிரயோகித்தல் போன்ற அஸ்திரங்களை தேர்ந்து எடுத்து சரியாக இலக்கை தொடுகிறார் சந்தானம். பாஸ் என்கிற பாஸ்கரனில் எனக்குப்பிடித்த வசனங்கள் : "டேய், நீங்க ரெண்டு பேரும் அரியர்ஸ் எழுதுற மக்கு பசங்கதானடா".   "என்ன அண்ணே என் குடும்பம் நடு தெருவுக்கு வர்றத, ஏதோ கும்பகோணம் எக்ஸ்ப்ரஸ் நாலாவது பிளாட்பாரத்துக்கு வர்ற மாதிரி அடிக்கடி சொல்றீங்க".  சிரிப்பு எனும் அற்புத மருந்தால் மக்களுக்கு வைத்தியம் செய்யும் சந்தானம் மேலும் வளர வாழ்த்துகள்!! இரட்டை அர்த்த வசனங்கள், கவுண்டமணி வசனங்கள் இரண்டையும் பெருமளவு தவிர்த்தால்....சில வருடங்களுக்கு தமிழ் திரையில் உங்கள் ஆட்சிதான்....தலதளபதி!!  


>>> சிறந்த துணை நடிகர்: ரமேஷ் அரவிந்த் (மன்மதன் அம்பு) 


        
                                                             
கமலின் திரைப்படங்களில் அவ்வப்போது தலைகாட்டும் ரமேஷ் அரவிந்த், மன்மதன் அம்பு திரைப்படத்தில் சதிலீலாவதியில் நடித்ததற்கு நேர் எதிர் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என் எதிர்பாக்கவில்லை. நோயாளியாக ஓரிரு காட்சியில் வந்தாலும் பாராட்டும்படியாக இருந்தது அவருடைய நடிப்பு. 


........................................


பாகம் - 7 விரைவில்....

Photo Courtesy: Google.
.............................................................................................                         
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.


மன்மதன் அம்பு விமர்சனம் படிக்க....
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com

6 comments:

Unknown said...

அஞ்சலியும், சந்தானமும் என்னோட பேவரைட் :-)

சக்தி கல்வி மையம் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்

http://sakthistudycentre.blogspot.com

Philosophy Prabhakaran said...

தர்ஷீல் பற்றி எழுதியிருந்த பத்தி அருமை...

எப்பூடி.. said...

//சிறந்த நடிகர் விருது என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது தாரே ஜாமீன் பர் படத்தில் நடித்த சிறுவன் தர்ஷீல்//

எனக்கும் தர்ஷீல் உடைய நடிப்பு மிகவும் பிடித்திருந்தது, எதற்காக 2010 விருதுகளில் இல் அவருக்கு விருது என்றுதான் புரியவில்லை :-)

எப்பூடி.. said...

மன்மதன் அம்பு விமர்சனம் எழுதிட்டு எதுக்கு போஸ்ட் பண்ணாம வச்சிருக்கிறீங்க, சீக்கிரமே ரிலீஸ் பண்ணுங்க :-)

! சிவகுமார் ! said...

>>> இரவுவானம், சக்தி, பிரபா வருகைக்கு நன்றி!!

>>> ஜீவா, 2010 விருதுக்காக தர்ஷீலை குறிப்பிடவில்லை. சிறந்த நடிகன் ஒரு பார்வை எனும் தலைப்பின் கீழ்தான் அவனை பற்றி குறிப்பிட்டுள்ளேன். மன்மதன் அம்பு விமர்சனம் பற்றி இப்பதிவின் கடைசி வரியில் பார்க்க..

Related Posts Plugin for WordPress, Blogger...