CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 24, 2010

2010 திரை விரு(ந்)து - பாகம் 1

                                                                                   

                                                     
      
மெட்ராஸ் பவனுக்கு வருகை தரும் அன்புள்ள பதிவுலக இதயங்களை பணிவுடன் வரவேற்கிறேன்! பல்வேறு ஊடகங்கள் ஒவ்வொரு வருடமும் திரைவிருதுகளை அறிவிக்கையில் நாம் எண்ணிய படங்கள் சில அவற்றை வெல்லும். மற்ற சில அவற்றை தவறவிடும். "இந்த படத்திற்கு தராமல் விட்டுவிட்டார்களே. நான் குழுவில் இருந்தால் அந்த படத்தையோ/கலைஞரையோ தெரிவு செய்து இருப்பேன்" என சினிமா பிரியர்கள் நினைப்பதுண்டு. நானும் அப்படி என்னும் ஒருவன்தான். சினிமா பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு உள்ள தகவல் அறிவுடன்..முக்கியமாக மனசாட்சிப்படி நடுநிலையுடன் இவ்விருது பட்டியலை வெளியிடுகிறேன்.  இசை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் நுட்பமான சிந்தனை இல்லாதவன் என்பதால், அப்பிரிவுகளில் இதயம் தொட்ட மற்றும் மனதில் பட்ட படங்களுக்கு/கலைஞர்களுக்கு  விருது தந்துள்ளேன்.  அவற்றை வரும் பதிவுகளில் விரைவில் வெளியிடுகிறேன். இன்று முதல் துவங்கும் 'விருதுகள் 2010' தொடர் பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னித்தருள்க! 


இந்த விருது லோகோ டிசைனில் நான் ப்ரூஸ் லீ படம் மற்றும் பைட் மாஸ்டர்ஸ் என்ற வார்த்தையை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் உண்டு. திரை உலகில் எத்தனை கலைஞர்கள் இருப்பினும் தம் உயிரை பணயம் வைத்து அன்றாடம் செத்து பிழைக்கும் சண்டைக்கலை வீரர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அக்கலையில் உலகம் முழுதும் பட்டித்தொட்டி வரை அனைவரும் அறிந்த ப்ரூஸ் லீ இந்த லோகோவில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில் 33 வயதிலேயே மர்மமாய் இறந்த இந்த மாவீரன் வெறும் சண்டைக்கலைஞன் மட்டுமல்ல. இயக்குனர், தயாரிப்பாளர், நாயகர், கதாசிரியர்......குறிப்பாக மாபெரும் தத்துவ ஞானி.  எனவே அவருக்கு என்னாலான மரியாதையை செலுத்தி உள்ளேன்.! இன்று விருது வழங்குதலின் முதல் பாகத்தை தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக மேலும் சில பாகங்களை வழங்க உள்ளேன். தங்கள் மேன்மையான கருத்துகளை ஆவலுடன்  எதிர்பார்க்கிறேன். 


இனி விருதுகள்:

தமிழ் திரையில் சாதனை புரிந்த பெருங்கலைஞர்கள் பலருண்டு. அதில் இவ்வருடம் இருவருக்கு இவ்விருதை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


>>> வாழ்நாள் சாதனையாளர் விருது-1  நடிகர் திலகம் 
                                                        

                                                          
                                                     
ஏற்காத வேடங்களா, பேசாத வசனங்களா...இந்த மகா கலைஞனை பற்றி சொல்ல எத்தனை பதிவு போட்டாலும் சலிக்காது. ஒரு தேசிய விருது கூட தர மனது வரவில்லை மத்திய அரசுக்கு. பல்லாண்டு காலம் கலை உலகில் கோலோச்சிய ஒரு கலைஞன் மனம் எப்படி ரணமாகி இருக்கும் என்பது சக கலைஞனுக்குத்தான் நன்கு தெரியும். ஓவர் ஆக்டிங் என்று சிவாஜியை ஏளனம் செய்தவர்கள் உண்டு. அதற்கு தகுந்த பதிலை அவர் தன் சுயசரிதை புத்தகத்திலேயே தந்திருக்கிறார். ஒன்றும் தெரியாதவன் அடிக்கடி ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், எல்லாம் தெரிந்தவன் சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. இயல்பான நடிப்பில் சிவாஜி நடித்த ஹரிச்சந்திரா, முதல் மரியாதை  போன்ற பல படங்களே அதற்கு சாட்சி. அரசு விருது தராவிடினும், அதை விட பல நூறு மடங்கு உயர்ந்த விருதை தன் இறுதி ஊர்வலத்தில் வாங்கிவிட்டுத்தான் இறைவனடி சேர்ந்தார் சிம்மக்குரலோன் சிவாஜி.

அன்னை இல்லத்தில் இருந்து அவர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகையில் எங்கிருந்தோ ஒரு சராசரி ரசிகனின் கதறல் குரல்தான் அவர் பெற்ற உயரிய விருது.

அது..... "இருந்தது ஒரே ஒரு நடிகன். அவரும் போய்விட்டாரே"

இதோ, நடிகர் திலகம் ஒரே டேக்கில் தெள்ளுத்தமிழ் பேசி சாதனை செய்த வசனம் உங்கள் பார்வைக்கு: படம் - ராஜா ராணி. 
>>> வாழ்நாள் சாதனையாளர் விருது-2  நடிகையர் திலகம் 


                                                                
சோகம், மகிழ்ச்சி, வெகுளித்தனம், காதல், குறும்பு...எத்தனை முகபாவங்கள். நடிப்பில் சாவித்திரியுடன் போட்டி போட்டு சக நடிகர்கள் தோற்ற கதை பல உண்டு. நடிகர் திலகமே கூட "இந்த பெண்ணிடம் உஷாராக இருக்க வேண்டும். இல்லாவிடில் நடிப்பில் நம்மை ஏப்பம் விட்டு சென்று விடுவாள்" என்று கூறுவாராம். மிஸ்ஸியம்மா, மாயாபஜார், நவராத்திரி எத்தனை படங்கள். அந்த மகா நடிகைக்கு என்னால் ஆனா சிறு சமர்ப்பணமே இவ்விருது. 


இதோ நடிகர் திலகத்துடன் சரி சமமாக நடித்து அசத்திய நடிகையர் திலகத்தின் பிரபலமான காட்சி: படம் - நவராத்திரி. 
பல விருது வழங்கும் விழாக்களில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற பெருங்கலைஞர்கள் மேடையேருகையில் கீழே உள்ளே சில நல்லவர்கள் தொகுப்பாளர் சொன்னால்தான் எழுந்து நிற்கின்றனர். இந்நிலை என்று மாறுமோ?முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே: 


...........................................................
Photo/videos:
Thanks to youtube & Google.


© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
Photo Courtesy: Google

என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com11 comments:

ஆமினா said...

அவ்வளவு தானா???

ஆனா விளக்கம் மெய்சிலிக்க வைத்துவிட்டது

செங்கோவி said...

//ஒன்றும் தெரியாதவன் அடிக்கடி ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், எல்லாம் தெரிந்தவன் சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும் வேறுபாடு உண்டு.//..நச் பதில்..

! சிவகுமார் ! said...

>>> ஆமினா...விருது பற்றிய தொடர் பதிவு அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். ருசியான உணவை பரிமாறும் வேலையில் மெட்ராஸ்பவன் இறங்கியுள்ளது.

>>> செங்கோவி மற்றும் இரவுவானம் இருவருக்கும் மனமார்ந்த நன்றி!!

! சிவகுமார் ! said...

>>> நண்பர் இரவுவானம், என்ன காரணம் என்று தெரியவில்லை தாங்கள் இட்ட கருத்து மறைந்து விட்டது. நடிகர் திலகம், மற்றும் ப்ரூஸ் லீ பற்றி அபிப்ராயம் சொன்னதற்கு நன்றி. இன்ட்லியில் இணைத்துவிட்டேன் இப்பதிவை.

Unknown said...

ஸ்பேம்மில் போட்டு விட்டீர்களா? பரவாயில்லை, ஓட்டு போட்டு விட்டேன் நண்பா

அஞ்சா சிங்கம் said...

வாவ் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ..............

அஞ்சா சிங்கம் said...

வாவ் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ..............

எப்பூடி.. said...

தேவர்மகன் சிவாஜியையும் நினைவு கூறுங்கள். விரு(ந்)து சிறப்பாக உள்ளது, தொடருங்கள்.

! சிவகுமார் ! said...

>>> வாசித்த இதயங்கள் ஜீவா, அஞ்சாசிங்கம், இரவுவானம் ஆகியோருக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

நீங்கள் விருதுக்கான லோகோ பற்றி கொடுத்த விளக்கம் சூப்பர்... அதிலிருந்தே உங்களுடைய dedication புரிகிறது...

! சிவகுமார் ! said...

Thanks Praba!!

Related Posts Plugin for WordPress, Blogger...