
>>> சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துகுமார்(அங்காடித்தெரு, பையா)
>>> சிறந்த பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.
தமிழ் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை இவரது பாடல்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தை பிடித்து வருவதை அறிவோம். திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர். பட்டர்பிளை எனும் ஐ.டி. வைத்திருப்பார். அப்போது எனக்கு தெரியாது இவர் தன் பேனா மூலம் தமிழ் திரையை ஆளப்போகிறார் என்று. பட்டர்பிளை என்பதுதான் வண்ணத்துப்பூச்சி எனும் நூல்வடிவாக மாறியது. செல்வராகவன்-யுவன் மற்றும் முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றன என்பதை அறிவோம். இவ்வருடம் வந்த பாடல்களும் அவ்வாறே. அங்காடித்தெருவில் வரும் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல் அவர் எழுதிய பாடல்களில் சிறப்பான ஒன்று. பெண்களை தேவதை, மலர் என ஒரு காலத்தில் வர்ணித்து வந்த தமிழ் கவிகள், சமீபகாலமாக சரக்கு, கட்டை என வர்ணிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். ஆனால், சாதாரண தோற்றமுள்ள பெண்களை பற்றி ஒரு பாடல் எழுதி அவர்களை ஆராதித்துள்ள முத்துகுமாரின் இப்பாடல் வரிகள் அனைத்தும் இனிமை. 'அவள் அப்படி ஒன்றும் கலரில்லை' என எழுதியதற்கு தமிழ் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனராம், கலர் எனும் ஆங்கில சொல்லை பயன்படுத்தியதற்கு. யதார்த்த வாழ்க்கையில் ஒரு இளைஞன் 'நிறமில்லை' என்பதற்கு பதில் 'கலரில்லை' எனும் வார்த்தையைத்தான் பிரயோகிப்பான். அதைத்தான் அவர் அப்பாடலில் கையாண்டுள்ளார் என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் 'நா. முத்துகுமார்' எனும் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.
>>> சிறந்த இசையமைப்பாளர்: யுவன் (பையா)
சிறந்த சினிமா பாடல் ஆல்பம் சில வருடங்களாக ஹாரிஸ் ஜெயராஜிடம் இருந்தே வந்து கொண்டிருந்த நேரத்தில், இவ்வருடம் அவ்விடத்தை 'பையா' மூலம் கைப்பற்றியுள்ளார் யுவன். அனைத்து பாடல்களுமே அசத்தல் ஹிட். எனக்கு மிகவும் பிடித்த பாடல்......
இவ்வாண்டின் சிறந்த ஆண்/பெண் பாடகர் ஆகியோர் பற்றி எழுத இயலவில்லை. நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்த இவ்வருடத்தில் அவற்றில் சிறந்த குரலை தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இவ்வருடம் வெளியான நான் கடவுள் படத்தில் வரும் 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' எனும் பாடலைப்பாடிய மது அவர்களின் குரல் சிறப்பாக இருந்தது. ஆனால், நான் கடவுள் சென்றே ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு, பல உயரிய விருதுகளை பெற்றதால்..இவ்வாண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.
>>> சிறந்த திரை அரங்கம்(சென்னை மட்டும்) : சத்யம்.
சத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது. பெங்களூரில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் வெற்றி பெற்ற கால கட்டத்தில் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் அந்த முயற்சியில் இறங்கவில்லை. அந்த என்ணத்தை மாற்றி சத்யம் அரங்கை மல்டிப்ளெக்ஸ் ஆக மாற்ற அதன் உரிமையாளர் எத்தனிக்கையில் பலர் அவரிடம் "இம்முயற்சி பலன் தராது.. சென்னை மக்கள் பெரும்பாலும் தமிழ் படங்களை மட்டுமே விரும்புவர், அதிகபட்சம் ஒரு சில ஆங்கில படங்கள். ஏனைய மொழிப்படங்கள் இங்கே வரவேற்பை பெறுவது சந்தேகமே" எனக்கூறினராம். ஆனால், அதை ஏற்காமால் துணிந்து அம்முயற்சியை தொடங்கி இன்று சென்னையில் மட்டுமல்லை, இந்தியாவில் குறிப்பிடத்தக்க திரை அரங்குகளில் ஒன்றாக சத்யத்தை மாற்றினார் அவர். அதற்கு அவரின் தொலைநோக்கு பார்வையே காரணம். சென்னை ஐ.டி துறையில் பெரும் வளர்ச்சி காண தொடங்கிய சமயத்தில் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கு குடிபுகுவர் அல்லது அடிக்கடி வந்து செல்வர். அதை உணர்ந்ததன் விளைவே இந்த வெற்றியின் ரகசியம். இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற திரை அரங்கம் சத்யம் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பாக சிறந்த திரை அரங்கம் விருதை ஆல்பர்ட் தியேட்டர் வென்று வந்ததாக பத்திரிக்கைகளில் படித்தேன்.
எஸ்கேப் அரங்கம் (எக்ஸ்பிரஸ் அவென்யு)
இந்த வருடம் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது சத்யம் குழுமம்...கோடிகளை இறைத்து... எஸ்கேப் எனும் அதிநவீன திரையரங்கை தொடங்கியதன் மூலம். உணவுப்பொருட்களின் விலை பணக்காரர்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். ஒரு வெஜ் சமோசா அறுபது ரூபாய். சர்வதேச தரத்திலான RDX ஒலி அமைப்பு, தெள்ளத்தெளிவான திரை, உயர்தர இருக்கைகள், ரசிகர்களின் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் டிக்கட் பதிவு முறைகள், பன்மொழி திரைப்படங்கள், மாதம் ஒரு முறை வெளியாகும் 'சிம்ப்லி சத்யம்' எனும் இதழ், உணவு விடுதிகள், கேம் ஜோன், அரங்கிற்கு வரும் ரசிகர்களை மரியாதையுடன் நடத்தும் விதம், டிக்கட்டை நாமே எடுத்துக்கொள்ள டச்ஸ்க்ரீன் வசதி என பல்வேறு சிறப்புகளின் மூலம் அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது சத்யம்.
எஸ்கேப்.. இருக்கைகள்
தரமான அரங்கங்கள் இது தவிர பல உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி தனக்கென உள்ள சினிமா ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது சத்யம்.
....................................................
பாகம் - 6 விரைவில்....
Pics and Videos: Thanks to Google & Youtube.
...................................................
முந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:
பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4
..................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com
4 comments:
ந்ல்ல எழுத்து... அடுத்த பாகம் எப்போது ?
// திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர் //
என்னது இன்டர்நெட் செண்டர் வைத்திருக்கிறீர்களா... சொல்லவே இல்லை... இதுபற்றி உங்களிடம் பேச வேண்டுமே...
// சத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது //
புதிய தகவல்...
யுவனும், முத்துகுமாரும் சிறந்த தெரிவு.
உங்களுடைய சினிமா பற்றிய அனைத்து தகவல்களும் அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment